Tuesday, November 4, 2014

போட்டி முடிவுகள் - அக்டோபர் 2014

5 comments:
 
முதல் சுற்று வரை வந்து இங்கே தேர்வாகாத படங்களில் பெரிய குறைகள் ஏதும் இல்லை. அவற்றை விடவும் வென்ற படங்கள் எப்படிக் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்துள்ளன எனப் பார்ப்போம்.

மூன்றாமிடம்:

மூன்றாம் இடத்தைப் பங்கிட்டுக் கொள்கின்றன கீழ்வரும் இரு படங்கள். இரண்டுமே சற்று டைட் ஃப்ரேமிங் ஆக அமைந்து போனது சின்னக் குறை.

# Sureshkumar
பச்சைப் பின்னணி நல்ல காண்ட்ராஸ்ட். மழை (அ) பனித்துளியினூடாக பிரதிபலிப்பைக் காட்டியிருப்பதும் பாராட்ட வைக்கிறது.

# Siva
கனியொன்றும் காயொன்றுமாக காட்டியிருப்பது கவருகிறது.

இரண்டாமிடம்:

# Winsen
பிஞ்சோடு பலா. காயை இரட்டை இலைகள் தாங்கிப் பிடிக்கிற மாதிரியான கோணம். அழகான bokeh.


 முதலிடம்:

#Arun Jose

தனித்தொரு பாகல்! ‘நச்’ என்றிருக்கிறது. அருமையான படம்.

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!

கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.  இம்மாதப் போட்டிக்கான அறிவிப்புடன் விரைவில் உங்களைச் சந்திக்க இருக்கிறார் Anton Croos.
***




5 comments:

  1. நான் மூன்றாம் இடத்தை பிடித்ததில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி!

    ReplyDelete
  2. அருமையான படங்கள்.

    பாகற்காய் படம் மிக அருமை.

    ReplyDelete
  3. அருமை.
    வாழ்த்துகள்.

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff