Wednesday, November 19, 2014

e-புத்தக‌ங்களை கணினியில் திறப்பது எப்படி?

1 comment:
 
 வணக்கம் பிட் மக்கா நலம்தானா?

***இன்றைய கட்டுரை e-publishing தொடர்பான கட்டுரையாகும். 'என்னது? புகைப்படக் கலைக்கும் e-publishing_க்கும் என்ன தொடர்பு?' ன்னு உங்களுக்குள் ஒரு கேள்வி எழுவது நியாயம்தான்:)!  மேலே வாசியுங்க, புரியும் மக்கா..**

நீங்கள் புகைப்படக்கலை குறித்தோ அல்லது போட்டோஷாப் குறித்தோ இணையத்தில் இலவசமாகவோ அல்லது விலைகொடுத்து e-புத்தகங்களை வாங்கும் போது அதனை கணினியில் திறக்கமுடியாமல் அவதிப்படும்போது இக்கட்டுரை உங்களுக்குப் பயனளிக்கும்.

சமீபத்தில என்னோட நண்பர் ஒருவர் இணையத்தில் Flash Photography குறித்த ஒரு புத்தகத்த விலைகொடுத்து வாங்கியிருக்கிறார். அதாவது பதிவிறக்கியிருக்கிறார், பதிவிறக்கம் (download) முடிந்ததும் அதனை கணினியில் திறக்க முற்படும்போது கணினியில் அந்த கோப்பு திறக்கப்படவில்லை. இத்தனைக்கும் அவரது கணினியில் விண்டோஸ் 8 தொகுப்பினையே பயன்படுத்துவதாக கூறினார். பின்னர் அவரது samsung tab இல் முயற்சி செய்திருக்கிறார், அதிலும் திறக்கவில்லை என்றதும், சுமார் 40 டாலர்களுக்கு வாங்கிய புத்தகம் அவ்ளோதானானு நினைத்து என்னை தொடர்புகொண்டார்.

அதாவது இணைய‌த்தில் விற்கப்படும் புத்தகங்கள் அனைத்தும் pdf கோப்பாகத்தான் விற்கப்படுகிறது என நீங்கள் நினைத்தால் அது தவறு, தற்சமயம் சந்தையில் விற்பனைசெய்யப்படும் பெரும்பாலான புத்தகங்கள் ebook அல்லது epub என்ற பார்மேட்டில் விற்பனைசெய்யப்படுகிறது.

உதாரணமாக நீங்கள் Amazon.com இல் e-புத்தகங்கள் வாங்கினால் அவர்களே amazon kindle என்ற மென்பொருளை பரிந்துரை செய்வார்கள்,ஆனால் பிறதளங்களிலிருந்தோ அல்லது உங்களுடைய நண்பர்கள் வாங்கிய புத்தகங்களை உங்களிடம் பகிர்ந்துகொள்ள உங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்ட இவ்வகையான e-books களை கணினியில் நேரடியாக திறக்கமுடியாது என்பதனை நினைவில் கொள்ளவும்.

இதுமட்டுமில்லாமல் நம்மில் பலரும் pdf reader இருந்தாலே e-புத்தகங்களை படித்துவிடலாம் என நினைக்கின்றனர் ஆனால் ebook,epub போன்ற பைல் பார்மேட்டுகளை பொதுவாக எல்லா pdf ரீடர்களும் திறக்காது.

அதெல்லாம் சரி தீர்வு என்னென்னு சொல்லனுமில்லையா?

ஒரு சில இலவச மென்பொருட்கள் மூலமாக‌ உங்களது e- புத்தகங்களை திறந்துகொள்ளலாம்.

எனக்கு இந்த epub கோப்பை கணினியில் படித்தாலே போதும் மேற்படி எந்த ஆப்ஷனும் எனக்கு தேவையில்லை கணினியிலும் அதிக இடம்பிடிக்காமல் லைட் வையிட்டா இருந்தாலே போதும்னு நினைக்கிறவங்க Adobe Digital Editions பதிவிறக்கம் செய்து கணினியில் பயன்படுத்திக்கொள்ளவும்.

எனக்கு இந்த epub  கோப்பை நான் வேறொரு பார்மேட்டுக்கு கன்வர்ட் செய்யபோகிறேன் அப்படின்னு நீங்க நினைச்சா நீங்க Calibre வை பயன்படுத்துங்கள்.

எனக்கு இத தனியா ஒரு அப்ளிகேஷனா நிறுவாமா என்னோட pdf reader மூலமாகவே இந்த கோப்புகளை படித்தால் போதும்னு நீங்க நினைச்சா நீங்க sumatra pdf reader பயன்படுத்துங்கள் அல்லது foxit reader  பயன்படுத்தலாம்.


இப்போது பாருங்கள் திறக்கமுடியாமல் சிரமப்பட்ட நண்பரது e-book ஆனது adobe digital editions மூலமாக திறக்கப்பட்டதை காணலாம்.


குறிப்பு: 

இதே கோப்புகளை உங்களது ஆன்ட்ராய்டு அலைபேசியிலோ அல்லது ஆன்ட்ராய்டு டேபளட்களிலோ திறக்க வேண்டுமென்றால் Sumatra pdf reader Foxit Reader இன் ஆன்ட்ராய்ட் பதிப்புகளை உங்களது அலைபேசியிலோ அல்லது டேப்ளட்டிலோ நிறுவிக்கொள்ளுங்கள்.

நன்றி
என்றும் அன்புடன்,
நித்தி ஆனந்த்



1 comment:

  1. E-புத்தக‌ங்களை கணினியில் திறப்பது எப்படி? = நீங்கள் புகைப்படக்கலை குறித்தோ அல்லது போட்டோஷாப் குறித்தோ இணையத்தில் இலவசமாகவோ அல்லது விலைகொடுத்து e-புத்தகங்களை வாங்கும் போது அதனை கணினியில் திறக்கமுடியாமல் அவதிப்படும்போது இக்கட்டுரை உங்களுக்குப் பயனளிக்கும்.= PiT - தமிழில் புகைப்படக்கலை = எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி PiT - தமிழில் புகைப்படக்கலை

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff