** "பிட்" தளத்தின் மூலமாகவும் மற்றும் தனிப்பட்ட முறையில் என்னைத்தொடர்பு கொண்டு கேட்கப்பட்ட கேள்விகளில் இதுவும் ஒன்று "தமிழில் வாட்டர்மார்க் இடுவது எப்படி"?
பொதுவாக தமிழ் தட்டச்சு தெரிந்தவர்கள் தமிழ் எழுத்துருக்களைக்கொண்டு
எளிமையாக டிசைன் செய்துகொள்வார்கள் ஆனால் தமிழ் தட்டச்சு தெரியாதவர்கள். போட்டோஷாப்பில்
தமிழில் தட்டச்சு செய்வது சற்று சிரமம்தான். எனினும் இக்கட்டுரை வெறும் "வாட்டர்மார்க்"
தயார் செய்ய மட்டும் தான் என்பதால் எளிதாக தட்டச்சு செய்யும் முறையை பார்க்கலாம்.
முதலில் நமக்கு போட்டோஷாப்பில் பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக தமிழ்
எழுத்துருக்களை நாம் முதலில் கணினியில் நிறுவவேண்டும்.
இக்கட்டுரைக்காக நான் இலவசமாக
தமிழ் எழுத்துருக்களை வழங்கிடும் அழகி எழுத்துருக்களை பரிந்துரை செய்கிறேன்.
இலவசமாக அவர்கள் அளித்திடும் இந்த எழுத்துருக்களுக்கு “பிட்” தளம்
சார்பாக நன்றியையும் அவர்களுக்கு இக்கட்டுரை மூலமாக தெரிவித்துக்கொள்ளலாம்.
முதலில் அழகி தளம் சென்று அவர்கள் அளித்திடும் இலவச தமிழ் எழுத்துருக்களை
பதிவிறக்கம் செய்துகொண்டு அவைகளை
Zip or Rar சாப்ட்வேர்களைக்கொண்டு extract செய்துகொண்டு பின் அவைகளை C:\\windows\Fonts போல்டரில்
பேஸ்ட் செய்துகொள்ளுங்கள்.
இப்போது உங்களது விசைப்பலகையில் இருக்கும் விண்டோஸ் கீயையும்+R
ஐயும் அழுத்த Run டயலாக் பாக்ஸ் திறக்கும்.
இப்போது charmap என்று தட்டச்சு செய்து என்டர் கீயை அழுத்த character
mapதிறக்கும்.
நீங்கள் விண்டோஸ் 8 அல்லது 8.1 தொகுப்பை பயன்படுத்தினால் நேரடியாக
search ஆப்ஷனில் தட்டச்சு செய்து character
map ஐ திறந்துகொள்ளலாம்.
இப்போது character mapஇல் நீங்கள் பதிவிறக்கம் செய்து கணினியில்
நிறுவிய ஏதாவது ஒரு எழுத்துருவை தேர்வு செய்யவும் இக்கட்டுரைக்காக நான் “பட்டினத்தார்”
என்பதனை தேர்வு செய்திருக்கிறேன்.
இப்போது உங்களுக்கு தேவையான எழுத்துகளை இருமுறை மவுஸால் கிளிக்
செய்யவும் அவ்வளவே.
தமிழில் எழுத்துக்களை தட்டச்சு செய்தப்பின், copy என்பதனை கிளிக்
செய்யவும்.
இப்போது மீண்டும் போடோஷாப்பிற்கு வரவும்,லேயர் பேலட்டில் புதிய
லேயர் ஒன்றை உருவாக்கவும்,பின்னர் text டூலை தேர்வுசெய்துகொள்ளவும் பின்னர் போட்டோஷாப்
எழுத்துருவில் நீங்கள் character mapல் தேர்ந்தெடுத்த அதே எழுத்துருவை தேர்ந்தெடுக்கவும்
இக்கட்டுரையில் நான் பயன்படுத்தியிருப்பது “பட்டினத்தார்” எழுத்துருவாகும், எனவே நான்
அதனை தேர்வுசெய்துகொள்கிறேன்,
எந்த நிறத்தில் வாட்டர்மார்க் இருக்கவேண்டும் என்பதனையும் தேர்வு
செய்துகொள்ளவும்.
இப்போது Edit menu சென்று பேஸ்ட் செய்ய புதிய லேயரில் தமிழ் எழுத்துரு
பேஸ்ட் செய்யப்பட்டிருக்கும்.
இப்போது உங்களுக்கு வாட்டர்மார்க் எந்த அளவில் தேவையோ அந்த அளவிற்க்கு
எழுத்துருவின் அளவை அட்ஜெஸ்ட் செய்து கொள்ளவும். அதேபோல் வாட்டர் மார்கின் opacityயையும்
உங்களுக்கு பிடித்த அளவில் செட் செய்துகொள்ளலாம்.
அவ்வளவுதாங்க தமிழில் எளிமையாக வாட்டர் மார்க் போட கத்துகிட்டீங்களா??
குறிப்பு : ஒவ்வொரு முறையும் இப்படி சென்று என்னால் தட்டச்சு செய்ய
இயலாதுன்னு நினைக்கிறவங்க நான் ஏற்கனவே “பிட் “தளத்தில் பகிர்ந்திருக்கும் வாட்டர்
மார்க்கை பிரஷ் ஆக மாற்றுவது எப்படி என்ற கட்டுரையை படித்து வாட்டர் மார்க்கை பிரஷ்
ஆக மாற்றி எளிமையாக பயன்படுத்திக்கொள்ளலாம்.
நன்றி,
என்றும் அன்புடன்,
நித்தி ஆனந்த்
nhm writer மூலமாக தான் நான் செய்தேன்...எளிமையாகவும் இருக்கின்றது..
ReplyDelete