Wednesday, June 3, 2020

மீண்டும் சந்திப்போம்..

3 comments:
 
வணக்கம் நண்பர்களே,

அனைவரும் நலமா? 

ஆசிரியர் குழுவினரைச் சேர்ந்த அனைவரும் காலத்தோடு ஓட வேண்டிய கட்டாயத்தால் ஏற்பட்ட நீண்ட இடைவெளிக்குப் பிறகு, பிட் தளம் மீண்டும் இயங்க உள்ளது. அதுவும் வளர்ந்து விட்ட தொழில்நுட்பங்களை வரவேற்று.. காணொளிப் பாடங்களாக.. 

வழங்கவிருப்பவர் புதிதாக ஆசிரியர் குழுவில் இணைந்திருக்கும் நண்பர்
 திரு. சரவணவேல். 

புதிதாக இணைந்திருந்தாலும் நம் PiT உறுப்பினர்களுக்கு நன்கு அறிமுகமானவரே. நம் தளம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் ‘குசும்பன்’ என்ற பெயரில், PiT நடத்திய பல போட்டிகளில் ஆர்வமுடன் பங்கெடுத்திருக்கிறார். அப்போது துபாயில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தார். புகைப்படக்கலையில் அதீத ஆர்வம் கொண்டிருந்தவர், படிப்படியாகக் கற்றுத் தேர்ந்து, துபாயில் பல முன்னணி நிறுவனங்களுக்கு ‘ப்ராடெக்ட் போட்டோகிராபராக’ இருந்திருக்கிறார். பிறகு வேலையை விட்டுவிட்டு சென்னை வந்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக www.thei2studio.com  என்கிற ஒரு ஸ்டுடியோவை ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார். திருமணம் மற்றும் குடும்ப விழாக்களுக்குப் படங்கள் எடுத்துக் கொடுக்கிறார் ஆயினும், “குழந்தைகள் போட்டோகிராஃபி” சரவணவேலின் ஸ்பெஷாலிட்டி.

லாக் டவுன் நாட்களில் இவர் யூ ட்யூபில் ஆரம்பித்த  www.youtube.com/thei2studioclassroom என்கிற ஃபோட்டோகிராஃபி சேனலில் எளிய டிப்ஸில் இனிய தமிழில் இவர் ஃபோட்டோகிராஃபி கற்றுக்கொடுக்கும் வீடியோக்களுக்கு வெகுவான வரவேற்பு! குழந்தைகளுக்கும் புரியும் வகையில் ஃபோட்டோகிராப்பி & போட்டோஷாப்பை கற்றுக் கொடுத்து வருகிறார். இந்தப் பாடங்கள் இனி நமது தளத்திலும் வெளியாகும். பார்த்துப் பயனுறுங்கள்!
**

3 comments:

  1. இந்த தளம் மீண்டும் இயங்கப் போவது மிக நல்ல விஷயம். நன்றி. யூட்யூப் சேனலையும் பார்த்தேன். சிறப்பாக இருக்கிறது.

    ReplyDelete
  2. வாழ்த்துகள்.. மிக்க மகிழ்ச்சி 🙂

    ReplyDelete
  3. மிக்க நன்றி ராமலக்ஷ்மி!

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff