போட்டியின்னு வந்துபுட்டா சிங்கம்ன்னு சொல்லி ஆளாளுக்கு வழக்கம் போல கலக்கிட்டீங்க. களத்துல குதிச்ச எல்லாருக்கும் நன்றீங்க.
ஒவ்வொரு போட்டியிலயும் படங்களோட தரம் கூடிகிட்டே இருந்தாலும் சில படங்கள்ல இன்னமும் அந்த classic mistakes இருக்குங்க. முதலாவது, போட்டிக்கான தலைப்போட பொருந்தாத படங்கள். போட்டியோட தலைப்பு சாலைகள். ஆனா ஏதோ ஒரு மூலைல ரோடு இருக்குங்கற காரணத்துக்காக ஒரு படம் இந்த தலைப்புல வராது இல்லைங்களா? எங்களோட முதல் சுற்றுலயே சில படங்கள் இந்த காரணத்துனால out. அடுத்து, பிற்தயாரிப்பு. ஐஸ்வர்யா ராய் எவ்வளவு அழகா இருந்தாலும் பவுடர் பூசிட்டுதான கேமரா முன்னாடி வராங்க? பிற்தயாரிப்புங்கறதும் அது போலதாங்க. என்னதான் படம் அழகாயிருந்தாலும், அத Picasa மாதிரியான சாப்ட்வேர் வெச்சி பவுடர் பூசிவிட்டாக்க, சும்மா திருவிழாக்கு வந்த முத்தழகு மாதிரி மின்னும். அடுத்த போட்டிக்கு படங்களை அனுப்பறதுக்கு முன்னாடி இத முயற்சி பண்ணி பாருங்க.
மெயின் மேட்டருக்கு வருவோம். ஒரு சில படங்கள விட்டுட்டு பார்த்தா மீதி எல்லாமே கலக்கல் தான்ங்க. எல்லா படங்களையும் தனித்தனியா/ஒரே சாய்ல்ல இருக்கறத குரூப்பா/மொத்தமா பார்த்து ரவுண்டு கட்டி எடுத்ததுல இந்த பத்து படம் வந்து இருக்கு.

இதுல எது பரிசு வாங்கும்ன்னு உங்கள மாதிரியே எங்களுக்கும் தெரியல. ரெண்டு மூனு நாள்ல முடிவு பண்ணிடுவோம். பரிசு வாங்கப்போறவங்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள் :-)
| Share | Tweet |
|
|



13 comments:
Nice analysis and selection!!!
கடைசி முடிவுகளுக்கு ஆவலுடன் வெயிட்டிங்!!
வாழ்த்துக்கள்!! :-)
தேற்வு செய்த எல்லா படத்துக்கும் நூத்துக்கு நூத்திப்பத்து மார்க்.. கலக்குங்க
geththaana photos thaan... waiting for rejults
தேர்வானவர்களுக்கு வாழ்த்துக்கள் முதல் பத்து இடங்களுக்கு கடுமையான போட்டி இருந்திருக்கும், முடிவுகள் எப்படியிருந்தாலும், இந்த பத்து பேரும் வெற்றியாளர்கள்தான்.
Good...
kadaisiyila vanthu sundar kalakkittarulla!! anaivarukkum valthukkal.arumaiyaana padangalai paarkumpothu aakaa ithu namba makkalaannu santhoshamaa irukku! thodarnthu ellorum edukkanum.. kalanthukkanum! vazhthukkal anaivarukkum!
முதல் வரிசையில் மூன்றும் நம்ம மனசுக்குள்ள நினைச்சது.வாழ்த்துக்கள் முதல் பத்துக்கும்.
good selection.all the photos are good.congratulation to all .
உண்மையில் இந்த முறை போட்டி மிக அதிகம். முதல் சுற்று படங்கள் தேர்வ் செய்வது மிக மிக கடினமாய் இருக்கும் என்று நினைத்தேன். இனி இதில் இருந்து தேர்வு செய்வது இன்னும் கடினமாய் இருக்கும் போல :-) பார்க்கலாம், என் கணிப்பு சரியா என்று.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்
பத்துக்குள் ஒன்றான எனக்கும் மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள். :)
excellent pick!
அருமையான தேர்வுகள். பத்துமே முத்துக்கள். முடிவை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.
முதல் சுற்றில் வென்றவர்களுக்கு வாழ்த்துக்கள் !!
முதல் முறை போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு.. எமது படத்தை பத்தில் ஒன்றாக தேர்வு செய்த நடுவர்களுக்கு நன்றி.. மற்ற அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்..
முதல் மூன்று இடங்களை பிடித்த நான்கு சகாக்களுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
Post a Comment
பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி