நண்பர்கள் என்னிடம் தன் படங்களை காட்டும் போதும்,மற்றும் போட்டிக்கு வரும் படங்களை பார்க்கும் போதும்,எனக்கு தோன்றும் முதல் விஷயம்,இதில் சற்றே பிற்தயாரிப்பு(post production) செய்தால் படம் எவ்வளவு அழகாக வரும் என்பதுதான்!
என்னிடத்தில் யார் ஏதாவது படம் காட்டினாலும்,அதில் சிறிது அங்கே இங்கே அழகு படுத்த முயல்வது எனது நெடு நாளைய பழக்கம்.அப்படி செய்து விட்டு இதே போல் எல்லோரும் செய்தால் நன்றாக இருக்குமே என்று நான் நினைக்காத நாள் இல்லை.
பிற்தயாரிப்பு பற்றி பல பதிவுகளை நாங்கள் இந்த வலைப்பூவில் போட்டிருந்தால் கூட வாசகர்களுக்கு இந்த பழக்கத்தை தொடக்கிவிட ஒரு சிறிய ஒளிப்பதிவு முயன்றிருக்கிறேன்.நான் வழக்கமாக செய்யும் சில அடிப்படை பிற்தாயாரிப்பு வேலகளை பதிவு செய்திருக்கிறேன்.
ஆங்காங்கே குரலில்/சத்தத்தில் தொய்வு தெரியலாம்,அதுவுமில்லாமல் காட்சிக்கு ஏற்ற வர்ணனை இல்லாமல் குரல் சற்றே தாமதமாக வரலாம். இவை இரண்டும் நான் கவனித்த சில குறைபாடுகள்.இவை தவிர ஏதாவது குறைபாடுகள் இருந்தால் தெரிவிக்கவும்,அடுத்த முறை சரி செய்ய முயற்சிக்கிறேன்.
இது ஒரு அறிமுக பதிவு மட்டுமே,மென்பொருட்களை எப்படி பயன்படுத்துவதென்றோ,அதில் இருக்கும் பல்வேறு பயன்பாடுகள்,அவற்றை இயக்கும் விதம் எல்லாம் முழுமையாக இதில் காட்ட முயற்சிக்க வில்லை.ஆனால் பிற்தயாரிப்பினால் ஒரு படம் எந்த அளவுக்கு மாறுகிறது என்பதை உங்களுக்கு காட்டவும்,பிற்தயாரிப்பு செய்யும் பழக்கத்தை உங்களிடம் அறிமுகப்படுத்துவதே இந்த பதிவின் நோக்கம்.
பி.கு: படத்தை முழு திரைக்கு பெரிதாகி பார்த்தால் நல்லது!! :-)
நண்பர்கள் சொன்னதால் குரல் செம்மை படுத்தப்பட்டுள்ளது ! :-)
தொடர்புள்ள பதிவுகள்:
பிக்காசாவும் பிற்தயாரிப்பு நுணுக்கங்களும்
ரசம் + தர்பூசணி = மாடர்ன் ஆர்ட்!
புகைப்பட போட்டியில் பரிசு பெறுவது எப்படி??
உங்கள் போட்டிப் புகைப்படங்கள் -என் பார்வையில்!
புகைப்பட போட்டி முடிவுகள் - ஜூலை படம்

மிகவும் பயனுள்ள பதிவு, CVR. இதை பயனை இனிமேல் தான் முழுசா பயன்படுத்தபோறேன்
ReplyDeleteவந்துட்டொம்ல, நன்றி நன்றி நன்றி
ReplyDeletemakkale..
ReplyDeleteromba porumaiyaa azhagaa explain panni irukeenga...kalakkal effort!!
beautifully done. இதற்கு முன் வந்த போட்களிலே பிற் தாயரிப்பு சரியாக பயன்படுத்தபடுமானால் பல படங்கள் வெற்றி பெற்றிருக்கவோ வரிசை மாறியிருக்கவோ கூடும். இதை செய்து பார்த்தாலே பல விஷயங்கள் தெரியவரும் இதை ஊக்கப்படுத்த அடுத்த போட்டி பிற்தாயரிப்பிலே வைக்கலாமே.
ReplyDeleteபதிவிற்கு நன்றி.
@கார்த்தி
ReplyDeleteசூப்பரு!
இனி நீங்களும் பிற்தயாரிப்பு செய்து பட்டைய கிளப்புங்க! :-)
@இம்சை
வாங்க வாங்க!
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி! :-)
@ப்ரியா
நன்றி ப்ரியா! :-)
@ஒப்பாரி
படங்கள் எதுவாக இருந்தாலும் அதில் பிற்தயாரிப்பு செய்ய வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள்.சாதாரண பிற்தயாரிப்பே பலர் செய்யாத போது,பிற்தயாரிப்புக்கு தனி போட்டி வைப்பது சற்று சிரமம்!
எல்லோரும் இதில் நிறைய கற்றுக்கொண்டு தங்கள் படங்களுக்கு அடிக்கடி பயன்படுத்த ஆரம்பித்தவுடன் அப்படிப்பட்ட தலைப்பு வைக்கலாம் என்று நினைக்கிறேன்.
கருத்துக்கு மிக்க நன்றி ஒப்பாரி! :-)
நன்றி CVR. Whether we will be able to do Resizing in picasa ?
ReplyDeleteபார்த்துக்கிட்டே இருந்தப்ப,திடீருன்னு, ஆமாம் எப்படிங்க பார்டர் போடறதுன்னு? கேட்கலாம் நினைச்சிக்கிட்டிருக்கும்போதே வந்துடுச்சி எனக்கு தேவையான பதில்
ReplyDeleteநன்றிகளுடன்....
nathas
ReplyDeleteOne way is
export -> this opens a dialog box
in image size options give the size you want.
Thanks "A n&" for the tip.
ReplyDeleteஐயா, தங்களது இந்த புகைப்பட அழகூட்டுச் செயலியின் செய்முறை விளக்குமுறை மிகவும் அருமையாக தகவல்கள் நிறைந்ததாக இருக்கிறது. தங்கள் கருத்துகளை இனிமேல் புகைப்படங்களில் முயற்சி செய்து பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை உண்டாக்கியிருக்கிறது என்றால் மிகையில்லை என்பதை மட்டும் தற்போதைக்குச் சொல்லிக் கொண்டு விடைபெற விரும்புகிறேன் என்பதைத் தாழ்மையுடம் தெரிவித்துக் கொள்கிறேன்.
ReplyDeleteIndha YOUTUBE idea romba nalla iruku. :)
ReplyDeleteKalakunga...
IE iladhapo tamil padhivugala padika mudiyadhu... but indha post miss panama iruken.
Cheers,
Marutham.
ரொம்ப நல்லா explain பண்ணியிருக்கீங்க... Thanks.
ReplyDeleteவணக்கம் வாத்தியாரய்யா!பயனுள்ள பதிவு.கூடவே படத்தை துள்ளியமா செய்வது எப்படிங்கிறதயும் சொல்லுங்க.மேலும் படத்தை முன்னோட்டமாக 25 சதவீதத்தில் பார்க்கும் போது கொஞ்சம் தெளிவாகவும் அதையே 100 சதவீதத்தில் பார்க்கும் போது சத்தம் வருகிறதே.இதில் 25 சரியா அல்லது 100 சரியா?வாத்தியாரய்யா துள்ளியத்தை எப்படி கணக்கிடுகிறீர்கள்?
ReplyDeleteவாழ்த்தளித்த அனைவருக்கும் மிக்க நன்றி!!
ReplyDelete@நட்டு
தயவு செய்து என்னை வாத்தியாரய்யா அப்படின்னு எல்லாம் கூப்பிடாதீங்க அண்ணாச்சி!!கேக்கறதுக்கே ஒரு மாதிரி இருக்கு!! :-)
எனக்கு உண்மையாவே ஒன்னும் தெரியாது!! கன்னா பின்னான்னு தெரிஞ்சு வெச்சிக்கிட்டு இருக்கற நிறைய பேர் சத்தம் போடாம இருக்காங்க! நான் சும்மா சும்மா பதிவு போடுறேன் அவ்வளவு தான்!!
//.மேலும் படத்தை முன்னோட்டமாக 25 சதவீதத்தில் பார்க்கும் போது கொஞ்சம் தெளிவாகவும் அதையே 100 சதவீதத்தில் பார்க்கும் போது சத்தம் வருகிறதே.இதில் 25 சரியா அல்லது 100 சரியா?வாத்தியாரய்யா துள்ளியத்தை எப்படி கணக்கிடுகிறீர்கள்?/////
ஒரு படத்தை முழு திரையில் பார்த்தால் எவ்வளவு துல்லியமாக தெரிகிறதோ அதுதான் என்னை பொருத்த வரை முக்கியம்!!! 25%,45% எல்லாம் முக்கியம் அல்ல!
சில படங்கள் 100% ஆக்கினால் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப பெரியதாக இருக்கும்!!அந்த நிலையில் அதை யாரும் பார்க்க மாட்டார்கள்!!அந்த நிலையில் அந்த படத்தில் புள்ளி புள்ளியாக தெரிந்தால் பிரச்சினை இல்லை என்பதே என் கருத்து!! :-)
//தயவு செய்து என்னை வாத்தியாரய்யா அப்படின்னு எல்லாம் கூப்பிடாதீங்க அண்ணாச்சி!!கேக்கறதுக்கே ஒரு மாதிரி இருக்கு!! :-)//
ReplyDeleteபயனுள்ள விசயமா எத்தனை பேருக்கு கற்றுக் கொடுக்கிறீர்கள்.இதில் சங்கோஜத்துக்கு என்ன இருக்குதுஙக? இதுவரை வந்த போட்டி படங்களைக் கண்டாலே பயமாயிருக்குது.இருந்தாலும் நாளை நமது படம் தமிழில் புகைப் படக்கலைக்கு வரும்.உங்களின் 100 சதவீத தகவலுக்கு நன்றி.
அட! இந்த பதிவு முன்பே கண்ணில் படாமல் போயிற்றே!!
ReplyDeleteஅதான் நீங்க கையை வச்சிட்டீங்களே! :-)
சுட்டி கொடுத்ததற்கு மிக்க நன்றி.
மிகப்பயனுள்ள பதிவு.பிற்தயாரிப்புப் பற்றி அறிந்து கொண்டேன்...
ReplyDeleteஇனிக்கலக்கலாம்ல... :)
நன்றி நண்பரே..!
பிக்காஸா டவுன்லோட் பண்ணிட்டேன்.
ஜிம்ப் எங்கே டவுன்லோட் பண்ணனும்..?
லின்க் தரமுடியுமா?
@ரிஷான்
ReplyDeleteஜிம்ப் டவுண்லோடு செய்ய
http://gimp.org/
என்ற இணையத்தளத்தில் கிடைக்கும்!! :-)
இப்பொழுதுள்ள latest version 2.4.4 நான் இந்த வீடியோவில் பயன்படுத்திய வெர்ஷனை விட வித்தியாசமானது!!
அதனால் சில மெனுக்கள் மாறுபடலாம்! :-)
good site for tamil makkal.
ReplyDeleteThanks For work.
nan last one month ah pit pakkuren .
ReplyDeletesolla pona pit pathathuku apparam nan puthusa oru camera vangi nanum nalla nalla photo edukanum nu aasa patten ippa vangiten ...
fujifilm s2950 vangiruken ,photo edukuren, nalla varuthu aana inga irukkura photos pakum pothu enakum antha mathiri edukanum nu aasaya irkku ..
konjam solli kodutha nanum nalla photo eduppen ..yaravathu help panna mudiuma frndz...