Sunday, August 17, 2008

Panning என்றால் என்ன??

14 comments:
 
அனைவருக்கும் என் அன்பார்ந்த வணக்கங்கள்!
எல்லோரும் எப்படி இருக்கீங்க?? முதல் கட்டப்போட்டியின் முடிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறீர்களா?? :-)
சரி விஷயத்துக்க வரேன்.
சமீபத்தில் எனது ப்ளிக்கர் வலைத்தளத்தில் இரு படங்கள் போட்டிருந்தேன்....





இந்த இரண்டு படங்களையும் பாத்தீங்களா ?? படத்தில் கருப்பொருளின் மீது மட்டும் கவனம் செல்லும்படி போகஸ் கருப்பொருளின் மீது மட்டுமிருக்க பின்னணியில் உள்ளவை எல்லாம் தேய்ந்தாற்போல் உள்ளது அல்லவா! அதாவது கருப்பொருள் வேகமாக செல்வது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்துகின்றன அல்லவா!! இதற்கு பெயர் தான் panning shots.
ஆஹா!! சுவாரஸ்யமா இருக்கே!!
இதை எப்படி எடுக்கனும்??

Panning படங்களின் அடிப்படை நோக்கம் என்னவென்றால் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு நகர்ந்துக்கொண்டிருக்கும் கருப்பொருள் மீது போகஸை வைத்திருக்க வேண்டும்.அதனால் அந்த சமயத்தில் போகசில் இல்லா பின்னணி தேய்ந்து போனாற்போல் ஆகி விடும்.

இதை எப்படி ஏற்படுத்துவது??
முதலில் உங்கள் கேமராவை Shutter speed மோடிற்கு மாற்றிக்கொள்ளுங்கள். பின்னர் உங்கள் கேமராவின் shutter speed-ஐ 1/25 - 1/30 வாக்கில் வைத்துக்கொள்ளுங்கள்(அப்பொழுதுதான் கருப்பொருள் நகரும்வரை பின்னணி தேயும்வரை ஷட்டர் திறந்திருக்கும்). இப்பொழுது நகர்ந்துக்கொண்டிருக்கும் ஏதாவது கருப்பொருளை தேர்ந்தெடுங்கள்.ரோட்டில் ஓடும் வாகனங்கள் இந்த முயற்சிகளுக்கு நல்ல தேர்வு.
இப்பொழுது வாகங்கள் நகரும் போது அதன் மேல் கேமராவை போகஸ் செய்து அதனோடு வ்யூ பைண்டரில் பார்த்துக்கொண்டே வாருங்கள்.சற்று நேரம் கழித்து ஷட்டர் பொத்தானை அழுத்துங்கள். இப்பொழுது நீங்கள் உங்கள் கருப்பொருள் கூடவே கேமராவோடு தொடர்ந்து வந்ததால் ஷட்டர் திறந்திருந்த சமயத்தில் அது மட்டும் நல்ல தெளிவாகவும் பின்னணியில் உள்ள பொருட்கள் தேய்ந்து போயும் காணப்படும்.

மற்ற எல்லா நுணுக்கங்களையும் போலவும் இந்த நுணுக்கத்திற்கும் நிறைய பயிற்சி வேண்டும்.பல சமயங்களில் கருப்பொருளோடு நம்மால் முழுமையாக தொடர முடியாமல் எல்லாமே தெளிவில்லாமல் இருக்கும்!!
ஆனால் panning-இல் இதெல்லாம் சகஜமப்பா...
திரும்ப திரும்ப முயன்று பாருங்கள்.ஆனால் ஒழுங்காக அமைந்துவிட்டால் Action shots எனப்படும் செயல் படங்கள்(செயலினை உணர்ந்த்தும் படங்கள்) வரிசையில் இந்த panning shots ஒரு இன்றியமையாத வகை.

என்னங்க panning shots-னா என்னன்னு தெரிஞ்சுதா??

படம் எடுக்கும்போது உங்களுக்கோ மற்றவருக்கோ ஏதும் அடிபடாமலும் ,போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாமலும் படம் எடுப்பது உங்கள் பொறுப்பு!!
வரட்டா?? :-)

14 comments:

  1. ஓடுற ஒன்னையும் இனி விட்டுவைக்க மாட்டோம்ல :)
    மிக்க நன்றி.

    ReplyDelete
  2. குருவே,
    சூப்பரா விளக்கிட்டிங்க.. SLRஆக இருந்தால் இது சரி.. அதுவே point & shootஆக இருந்தால், manualஆக மாற்றி shutter speedஜ மாற்ற வேண்டுமா? இல்ல shoot button மீது கை வைத்து அழுத்தி அப்படியே focus செய்து பின்னர் shoot buttonஜ விடு வித்தால் இது மாதிரி வருமா?

    ReplyDelete
  3. ம்ம்ம்..........
    புரிஞ்சாப்பலதான் இருக்கு. எடுத்து பாக்கலாம்.

    ReplyDelete
  4. ஆட்டோ அனுப்பலாம்ன்னு இருந்தேன். அதுக்குள்ள போஸ்ட்டாவே போட்டுட்டீங்க. நன்றி CVR.
    அடுத்து ரோட்டோரமா கேமராவும் கையுமா பாக்கலாம் :P

    ReplyDelete
  5. @சந்தோஷ்
    முதல் வேலையாக உங்கள் ஷ்ட்டர் ஸ்பீடை மாற்றிக்கொள்ளுங்கள்.அதை மாற்றும் செயல்முறை ஒவ்வொரு கேமராவிற்கும் மாறுபடும்.
    பொத்தானை அழுத்துவது நீங்கள் வழக்கமாக படம் எடுக்கும்போது செய்வதுதான்.
    point and shoot இல் shutter lag அதிகமாக இருக்கும் என்பதால் இந்த முறை படம் எடுக்கும் போது சற்றே அதிக கவனம் செலுத்த வேண்டும்..

    ReplyDelete
  6. இங்கே ஓடுற வண்டிகளின் வேகத்துக்கு இதெல்லாம் சரிப்பட்டு வருமான்னு தெரியலே.நேரத்துக்கு நானே 140 கி.மீ பெட்ரோல் கொடுக்கிறேன்.போதாதுக்கு 45 டிகிரில சூடு வேற.இரண்டாவது சுற்றுக்கு தலைப்பும் கிடைத்த மாதிரி இருக்குது.நன்றி:)

    ReplyDelete
  7. இதுதான் மேட்டரா.

    கலக்கல் கான்ஸெப்ட்!

    ReplyDelete
  8. Super Shots Thambi... Hope An& can tell a motion blur enhancement to create this feel in an another post! Cheers for the two great shots!

    Osai Chella as anony

    ReplyDelete
  9. உங்கள் அறிவுரையின் படி முயற்சி செய்து பார்த்ததில் அருமையாக வந்துள்ளது.

    http://pmtibrm.blogspot.com/2008/08/panning.html

    ReplyDelete
  10. ஒன்னுக்கும் உதவாத அரை வேக்காட்டுத்தனமான இன்னொரு CVR பதிவு. எடுத்துக்காட்டு படங்கள், தேறவே தேறாது, நீங்க சொல்லிக் கொடுமை படுத்தாம, உங்க பானிய்லே பாத்ரூம் கத்வு, அம்பது பைசா காசுன்னு படம் போடலாமே .
    வந்துட்டான்டா, சொல்லிக் கொடுக்க..

    ReplyDelete
  11. அனானி,

    ரொம்ப அல்ப்பத்தனமான உங்க கமெண்ட்டுக்கு என்ன பதில் சொல்றதுன்னே தெரியல.

    criticize பண்றது நல்லதுதான், ஆனா, இந்தப் பதிவுக்கு நீங்க சொல்லியிருக்கரது ரொம்ப ""அரைவேக்காட்டுத்தனமான""" கருத்தா இருக்கு.
    அதுவும், 'அவன்' 'இவன்' என்ற ஏக வசனங்கள் வேறு. என்ன கொடுமைங்க இது?

    Panningனு ஒரு கேமரா மூலமா செய்யக்கூடிய டெக்னிக் இருக்கரது, எனக்கு இந்த பதிவு படிச்சப்பரம்தான் தெரியும். இது நாள் வரை இது ஒரு பிற்தயாரிப்பு வித்தைன்னு நெனச்சிட்டு இருந்தேன்.

    யோசிச்சு தட்டச்சுங்க!

    ReplyDelete
  12. நானும் இந்த ஷாட் முயற்சி பண்ணிருக்கேன்
    நன்றி CVR

    ReplyDelete
  13. cool... thanx CVR that was really good.. i will give a try...

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff