Thursday, November 6, 2008

Light Science & Magic - அறிமுகம்

5 comments:
 
புகைப்படமெடுப்பதை நான் இரண்டு பகுதிகளாய் பார்க்கிறேன். புகைப்படக்"கலை"யில் உள்ள கலைப்பகுதி, மற்றது, ஒளியை கட்டுப்படுத்தும் திறன்.
கலைக் கண்ணோடு பிறக்கும் பாக்கியவான்கள் பலர். என்னைப் போன்ற கலைக்கண் குருடர்கள் பலர்.
கலைப் பகுதியை கற்றுக் கொள்ள முயல்வது எவ்வளது எளிது என்று தெரியாது, ஆனால் ஒளிப் பற்றிய அறிவியல் தெரிந்துக் கொள்வது எளிது.
அதன் முதல் முயற்சி, இந்தப் புத்தகம்.


Light Science and Magic - Fil Hunter & Paul Fuqua
இரண்டுப் பதிப்பாக, முதலில் தொண்ணுறிகளின் பிற்பகுதியிலும், புதிய பதிப்பு இந்த ஆண்டும் வெளிவந்து இருக்கிறது.

Reflection (பிரதிபலிப்பு), Refraction (ஒளிவிலக்கம்). Angle of incidence (படுகோணம்) ,Family of angles (கோணத் தொகுப்பு ??) என்று நடுநிலைப் பள்ளிகளில் படித்த
இயற்பியல் பாடங்களை நினைவுப் படுத்தி தொடங்குகிறது இந்தப் புத்தகம்.

3 ரோஸஸ் டீப் போல நிறம் , மணம், திடம் கொண்ட ஒளியை எப்படி அறிவது, எப்படி மாற்றுவது, கட்டுப்படுத்துவது, எப்படி நமது தேவைகளுக்கு உபயோகிப்பது என்று பல அருமையான எடுத்துக் காட்டுகள் உள்ளன.

அமலின் இந்த அருமையான படத்தையும்,


அது எடுத்த விதம் பற்றிய இந்த இடுகையும் படித்து இருப்பீர்கள்.

கோப்பை, கோப்பையில் தெறிக்கும் செர்ரி, ஆரஞ்சு சுளை, இவை கலைப் பகுதி, வோட்க்கா பாட்டிலை பட்மெடுக்கும் முறை, பிண்ணியை முழுவதும் கருப்பாகும் முறை, பாட்டிலில் இருக்கும் எழுத்துக்களை தெளிவாக காட்டுவது, பாட்டிலின் வடிவத்தை, அதை பிண்ணனியில் இருந்து வேறுப்படுத்துக் காட்டுவது ஓளிப் பகுதி.


திரவம் நிரம்பிய வட்டமான கண்ணாடிப் பொருள் ஒரு லென்ஸ் போல செயல் படும் என்பது இதில் கவனிக்க வேண்டிய ஒளி அறிவியல் விஷயம். மற்றது எந்தக் கோணத்தில் ஒளி படுகிறதோ அதே கோணத்தில் அது பிரதிப்பலிக்கும் என்பதும் பள்ளியில் படித்து இருப்பீர்கள். படத்தை உற்று நோக்கினால, பாட்டிலில் அந்த அறை முழுவதும் பிரதிப்பலித்து இருப்பதை பார்க்கலாம் (மேற்கூரையில் உள்ள இரண்டு ட்யூப்லைட் தெரிகிறதா ?).

இந்தப் புத்தகத்தில் இவற்றை எவ்வாறு தவிற்பது பற்றி எடுத்துக் காட்டுடன் விளக்கங்கள் இருக்கின்றன. கருப்பு கருப்பொருள் கருப்பு பிண்ணனியில், வெள்ளை கருப்பொருள் வெள்ளைப் பிண்ணனியில், முகங்கள், கண்ணாடி அணிந்த முகங்கள், உலோகங்கள் என்று பலவிதமான விளக்கங்கள் உள்ளன.இது ப்ளாஷ், ஸ்டூடியோ லைட்டிங்க் பற்றிய புத்தகம் இல்லை.

ஓளியின் செயல் பாடுகள் ஒன்றுதான், கடவுள் உருவாக்கிய சூரிய வெளிச்சமானாலும், மனிதன் உருவாக்கும் செயற்கை வெளிச்சமானலும்.

சுருங்க சொல்ல வேண்டுமெனில்.
Learn Light and Science , the Magic will happen !!!!

படித்துப் பாருங்கள் .

கூகுள் புத்தகப் பிரிவில் இங்கே !

5 comments:

  1. //என்னைப் போன்ற கலைக்கண் குருடர்கள் பலர்.
    //

    ஆஹா. ரொம்பவே, ஹம்பிளறீங்களே ;)

    இந்த புக்கு, கூகிள் புக்ஸில் கிருக்கு.
    இங்கே

    ReplyDelete
  2. கூகிள் புத்தகமா இருந்து என்ன பிரயோசனம்? இருக்கிற 10 பக்கங்கள்லே உள்ளடக்க டேபிள் மட்டும்தான் இருக்கு.
    வலையிலே நிறைய டுடோரியல் இருக்குமே? அதுல நல்லதா சுட்டி கொடுத்தா நல்லது.

    ReplyDelete
  3. என்கிட்ட சிறு புள்ளத்தனமா ஒரு புக் இருக்கு. அதுல லைட்டிங்க் பத்தி இருக்கிறத [இருந்தா] அத ஸ்கான் பண்ணி ப்லாக்றேன். ப்லாகிட்டு சொல்றேன்.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. //அதுல லைட்டிங்க் பத்தி இருக்கிறத [இருந்தா] அத ஸ்கான் பண்ணி ப்லாக்றேன். ப்லாகிட்டு சொல்றேன்.
    //

    If it is against copyrights of the book please don't do it :D

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff