Wednesday, November 19, 2008

அட இது நியூட்டனின் மூன்றாவது விதி இல்லைங்க, புகைப்பட காட்சி அமைப்பின் முப்பகுதி கோட்பாடு . படம் எடுக்கும் போதே , இந்த முறையில் எடுத்தால் வேலை மிச்சம். இல்லாவிட்டாலும் பராவாயில்லை, கிம்ப் ஆண்டவரின் துணையோடு சரி செய்து விடலாம்.


முதலில் படத்தை கிம்பில் திறவுங்கள்.

Crop தேர்ந்துஎடுங்கள். . பின்னர் படத்தில் குறிப்படவாறு , Rule of Third தேர்ந்து எடுத்துக் கொள்ளுங்கள்.



படத்தின் மீது எலிக்குட்டியை கிளிக்கி இழுத்தால் (click & drag) 4 x 4 அளவில் கோடுகள் தெரியத் தொடங்கும்.



தேவைக்கு ஏற்ப பெரியதாய்/சிறியதாய்,



படத்தின் தேவையான பகுதிக்கு மாற்றி கொள்ளுங்கள்.




Enter அமுக்கினால் படம் ரெடி.



Tuesday, November 11, 2008

Paint With Light , (non destructive ) Dodge and Burn என்று பல பெயரில் அழைக்கப்படும் இந்த பிற்சேர்க்கை முறை, மிக மிக எளியது அதே சமயம் மிகவும் பயனுள்ள முறை. அதைப்பற்றி இங்கே பார்ப்போம்..










வழமைப் போல படத்தை கிம்பில் திறவுங்கள்.


முண்ணனி வண்ணமாக 50 % பழுப்பு வண்ணத்தை தேர்ந்து எடுத்துக் கொள்ளுங்கள்.





ஒரு புதிய லேயரை உருவாக்கி அதை முண்ணனி வண்ணத்தால் நிரப்புங்கள்.




Mode -> Overlay என்று மாற்றிக் கொள்ளுங்கள்.



முண்ணனி/பிண்ணனி வண்ணத்தை கருப்பு/வெள்ளைக்கு மாற்றிக் கொள்ளுங்கள்.



இனி மிக குறைந்த opacity ( 10- 15 ) கருப்பு பிரஷ் கொண்டு படத்தில் எந்தப் பகுதியில் வெளிச்சம் குறைய வேண்டுமோ, அங்கே தீட்ட ஆரம்பியுங்கள்.





உதாரணத்திற்கு, நீல வானப் பகுதி. opacity குறைக்கப்பட்டு இருப்பதால் , நிறைய முறை தீட்ட வேண்டி இருக்கும். இதன் மூலம், நமக்குத் தேவையான அளவிறகு வண்ணத்தை தீட்டிக் கொள்ளலாம்.


அடுத்து வெள்ளை பிரஷ் கொண்டு, வெளிச்சம் வேண்டிய பகுதியில் தீட்ட ஆரம்பியு்ங்கள் .


( உதாரணதிற்கு, முன்னால் இருக்கும் சுவர், கோயில் கோபுரங்கள், மரங்கள் முதலியன. ) நிறைய முறை தீட்ட வேண்டி இருக்கும். தேவையான அளவிற்கு மீண்டும் மீண்டும் தீட்டிக் கொள்ளுங்கள்.




அவ்வளவுதான். உங்களின் கற்பனைக்கு ஏற்ப படம் தயார்.

முன்னர்



பின்னர்







சில குறிப்புகள்.




  • எடுத்துக்காட்டுக்காக, இந்த விளைவுகளை நான் மிகைப்படுத்திக் காட்டி இருக்கிறேன். உங்களின் இரசனைக்கு ஏற்ப குறைத்துக்கொள்ளுங்கள்.


  • Mode Soft light அல்லது Hard light என்று மாற்றிப் பாருங்கள்.
  • கருப்பு வெள்ளை மட்டுமல்ல எந்த வண்ணம் வேண்டுமானாலும் இந்த முறையில் உபயோக்கிக்கலாம்.


  • படங்களை தந்து உதவிய தனித்துவமான இளவஞ்சி அண்ணாச்சிக்கு மிக்க நன்னி.


  • Animated GIF உங்க உலாவியில் சரியாகத் தெரிகிறதா ?


இன்னொரு உதாரணம்

Thursday, November 6, 2008

புகைப்படமெடுப்பதை நான் இரண்டு பகுதிகளாய் பார்க்கிறேன். புகைப்படக்"கலை"யில் உள்ள கலைப்பகுதி, மற்றது, ஒளியை கட்டுப்படுத்தும் திறன்.
கலைக் கண்ணோடு பிறக்கும் பாக்கியவான்கள் பலர். என்னைப் போன்ற கலைக்கண் குருடர்கள் பலர்.
கலைப் பகுதியை கற்றுக் கொள்ள முயல்வது எவ்வளது எளிது என்று தெரியாது, ஆனால் ஒளிப் பற்றிய அறிவியல் தெரிந்துக் கொள்வது எளிது.
அதன் முதல் முயற்சி, இந்தப் புத்தகம்.


Light Science and Magic - Fil Hunter & Paul Fuqua
இரண்டுப் பதிப்பாக, முதலில் தொண்ணுறிகளின் பிற்பகுதியிலும், புதிய பதிப்பு இந்த ஆண்டும் வெளிவந்து இருக்கிறது.

Reflection (பிரதிபலிப்பு), Refraction (ஒளிவிலக்கம்). Angle of incidence (படுகோணம்) ,Family of angles (கோணத் தொகுப்பு ??) என்று நடுநிலைப் பள்ளிகளில் படித்த
இயற்பியல் பாடங்களை நினைவுப் படுத்தி தொடங்குகிறது இந்தப் புத்தகம்.

3 ரோஸஸ் டீப் போல நிறம் , மணம், திடம் கொண்ட ஒளியை எப்படி அறிவது, எப்படி மாற்றுவது, கட்டுப்படுத்துவது, எப்படி நமது தேவைகளுக்கு உபயோகிப்பது என்று பல அருமையான எடுத்துக் காட்டுகள் உள்ளன.

அமலின் இந்த அருமையான படத்தையும்,


அது எடுத்த விதம் பற்றிய இந்த இடுகையும் படித்து இருப்பீர்கள்.

கோப்பை, கோப்பையில் தெறிக்கும் செர்ரி, ஆரஞ்சு சுளை, இவை கலைப் பகுதி, வோட்க்கா பாட்டிலை பட்மெடுக்கும் முறை, பிண்ணியை முழுவதும் கருப்பாகும் முறை, பாட்டிலில் இருக்கும் எழுத்துக்களை தெளிவாக காட்டுவது, பாட்டிலின் வடிவத்தை, அதை பிண்ணனியில் இருந்து வேறுப்படுத்துக் காட்டுவது ஓளிப் பகுதி.


திரவம் நிரம்பிய வட்டமான கண்ணாடிப் பொருள் ஒரு லென்ஸ் போல செயல் படும் என்பது இதில் கவனிக்க வேண்டிய ஒளி அறிவியல் விஷயம். மற்றது எந்தக் கோணத்தில் ஒளி படுகிறதோ அதே கோணத்தில் அது பிரதிப்பலிக்கும் என்பதும் பள்ளியில் படித்து இருப்பீர்கள். படத்தை உற்று நோக்கினால, பாட்டிலில் அந்த அறை முழுவதும் பிரதிப்பலித்து இருப்பதை பார்க்கலாம் (மேற்கூரையில் உள்ள இரண்டு ட்யூப்லைட் தெரிகிறதா ?).

இந்தப் புத்தகத்தில் இவற்றை எவ்வாறு தவிற்பது பற்றி எடுத்துக் காட்டுடன் விளக்கங்கள் இருக்கின்றன. கருப்பு கருப்பொருள் கருப்பு பிண்ணனியில், வெள்ளை கருப்பொருள் வெள்ளைப் பிண்ணனியில், முகங்கள், கண்ணாடி அணிந்த முகங்கள், உலோகங்கள் என்று பலவிதமான விளக்கங்கள் உள்ளன.இது ப்ளாஷ், ஸ்டூடியோ லைட்டிங்க் பற்றிய புத்தகம் இல்லை.

ஓளியின் செயல் பாடுகள் ஒன்றுதான், கடவுள் உருவாக்கிய சூரிய வெளிச்சமானாலும், மனிதன் உருவாக்கும் செயற்கை வெளிச்சமானலும்.

சுருங்க சொல்ல வேண்டுமெனில்.
Learn Light and Science , the Magic will happen !!!!

படித்துப் பாருங்கள் .

கூகுள் புத்தகப் பிரிவில் இங்கே !

Tuesday, November 4, 2008

PiT போட்டியின் வெற்றிப் படத்தை க்ளிக்கியவர்கள், அந்தப் படத்தை எப்படி எடுத்த்தார்கள் என்று சிறு குறிப்பு வரையச் சொல்லியிருந்தோம்.
அந்த வரிசையில், சென்ற மாத போட்டியில் வெற்றி பெற்ற, அமல், தனது 'விளம்பர' புகைப்படம் எடுக்கப்பட்ட முறையை கீழ சொல்லியிருக்காரு.

அவர் பக்கத்தில் வெளியிடப்பட்ட பாடத்தின் மீள் பதிவு இது.

-------- ~~~~~~~~~~ -------- ~~~~~~~~~~ -------- ~~~~~~~~~~
இந்த மாத போட்டி அறிவிப்பு வந்த உடனேயே, நம்ம விளம்பர மாடல் மது பாட்டில்தான் என்று முடிவாகிருச்சு. இந்த வகை விளம்பரங்கள் அனைத்துமே diffused lighting பயன்படுத்தித்தான் எடுப்பாங்க, ஆனால் அந்த மாதிரி சமாச்சாரம் எதுவும் நம்ம கிட்ட இல்ல. என்ன பண்ணலாம்னு வலையில் மேய்ந்ததில் சில பயனுள்ள தகவல்கள் கிடைத்தது. கடைசியாக bounce lighting பயன்படுத்தலாம் என்று ஒரு வெள்ளை அட்டையை build-in flash-ற்கு முன்னால் 45 டிகிரி கோணத்தில் பிடித்து எடுத்ததால் lighting நன்றாகவே diffuse ஆகி வந்தது. அது மட்டும் இல்லாமல் அறையின் ஓர் மூலையில் படம் எடுத்ததால் சுவர்களில் ஒளி நன்றாக bounce ஆனது.


ஒரு மேசையை சுவற்றிலிருந்து 4 அடி தள்ளி நகர்த்தி, கறுப்பு நிற விரிப்பு விரித்து, அதன்மேல் ஒரு கண்ணாடி பலகையை வைத்து (அப்படித்தான் அனைத்துச்சாமான்களின் பிரதிபலிப்பு கீழே கிடைத்தது), மது பாட்டில், மார்ட்டினி க்ளாஸ், ஆரஞ்சு, செர்ரி, ஐஸ்கட்டிகள் எல்லாவற்றையும் நோக்கத்திற்கு பரப்பி வச்சாச்சு. கீழே இருக்கின்ற வரைபடத்தில் உள்ளதுபோல், கறுப்புப் பின்னணிக்கு இரண்டு கறுப்பு பனியன்களைத் தொங்கவிட்டாச்சு.



இப்பப் படம் எடுத்துப் பார்த்தா ஏதோ குறையிற மாதிரி ஒரு எண்ணம். அதனால் செர்ரிய மேலே இருந்து தூக்கிப்போட ஆள் தயார் செய்து தூக்கிப்போட சொல்லிகிட்டே இருக்கவேண்டியதுதான். நீங்க செர்ரி நீரைத்தொடும் கணத்தில் க்ளிக்கிகிட்டே இருக்க வேண்டியதுதான். Multiple Exposure கூட பயன்படுத்தலாம். என்ன ஒரு விசயம்னா, நமக்கு வேண்டிய நீர்த்தெறிப்பு முதல் ஷாட்டிலயும் வரலாம் இல்ல கொஞ்சம் நேரங்கழிச்சும் வரலாம். எனக்கு ஒரு 4 மணி நேரம் கிடைத்து வந்தது:-)

அதில் சில.



முதலில் வோட்கா என்றதும் அதன் நிறம் இல்லாத தன்மை நினைவிற்கு வந்ததால் வெள்ளைப் பின்னணியில் எடுக்கலாம் என்று ஆரம்பித்து கடைசியில் கறுப்புப் பின்னணியாகிவிட்டது. போட்டிக்கு அளித்த படம் எடுத்ததிலேயே கடைசி படம்.

-------- ~~~~~~~~~~ -------- ~~~~~~~~~~ -------- ~~~~~~~~~~

நீங்களும், உங்கள் PiT வெற்றிப் படத்தின், செய்முறையை, பதிவேற்றினால், பலருக்கும் பயனுடையதாய் இருக்கும். நன்றி.

அமல், பாடத்துக்கு நன்றி!
 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff