Sunday, February 1, 2009

ஆக்‌ஷன் படங்கள் எடுப்பது எப்படி??

13 comments:
 
வணக்கம் மக்களே,
இந்த மாதத்திற்கான போட்டி தலைப்பு ”ஆக்‌ஷன் படங்கள்” என்று உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.பதிவில் இருக்கற உதாரண படங்கள் பாத்துட்டு ஆக்‌ஷன் படங்கள் எப்படி எடுக்கலாம் என்று நீங்கள் எல்லாம் யோசித்துக்கொண்டிருக்கலாம். உங்களுக்கு உதவக்கூடிய சில குறிப்புகள் இதோ....


TV Mode: ஆக்‌ஷன் படங்கள் என்றவுடனே கண்டிப்பாக அதிவேக ஷட்டர் ஸ்பீடு தேவைப்படும் என்று நீங்களே கணித்திருப்பீர்கள்.அதனால் உங்களின் ஷட்டர் ஸ்பீடை நீங்களே தீர்மானித்துக்கொள்வதற்கு வசதியாக உங்களின் கேமராவை Tv Mode-இற்கு மாற்றிக்கொள்ளுங்கள்.இது உங்களுக்கே தெரிந்திருக்கலாம்,ஆனால் இது மிக அடிப்படையான குறிப்பு என்பதால் முதலில் சேர்த்துள்ளேன். ஷட்டர் ஸ்பீடு என்றால் என்ன என்று தெரிந்துக்கொள்ள இங்கே க்ளிக்குங்கள், Tv mode பற்றி தெரிந்துக்கொள்ள இங்கே க்ளிக்குங்கள்.




ஷட்டர் வேகம்: இது எந்தளவு வைக்க வேண்டும் என்பது  அந்தந்த இடத்தின் ஒளி அமைப்பை பொருத்தது.ஒரு அடிப்படை புரிதல் என்ன்வென்றால் ஷட்டர் ஸ்பீடு என்பது ஒன்றன் கீழ்  உங்கள் லென்ஸின் குவிய தூரம் என்ற அளவில் இருக்க வேண்டும் என்பதே.

Shutter speed = 1/Focal length

நிச்சயமாக உங்களின் ஷட்டர் ஸ்பீiடு இந்த அளவை விட அதிகமாகத்தான் தேவைப்படும்.நான் பார்த்தவரை இரவில் சில நிகழ்ச்சிகளை படம் பிடிக்க சென்ற போது குறைந்த பட்சம் 1/160 ஆவது தேவை பட்டது. 1/250 முதல் 1/400 வரை இருந்தால் சரியாக இருக்கும் என்று தோன்றியது.சமீபத்தில் ஒரு நண்பர் ஒரு தும்பி பறந்துக்கொண்டிருப்பதை படம் பிடித்திருந்தார்.அந்தப்படத்திற்கு ஷட்டர் ஸ்பீடு 1/1000 ஆக செட் செய்யப்பட்டிருந்தது.இப்படி இடம் பொருள் ஏவலை பொருத்து நீங்கள் செட் செய்ய வேண்டிய அளவு மாறுபடும். கூடவே இது மாதிரியான படங்களை ஒரே ஷாட்டில் எடுப்பது மிகவும் அரிது.பல முறை எடுத்து பார்த்து அதற்கு ஏற்றார்போல் ஷட்டரின் வேகத்தை அதிகமாகவோ,கம்மியாகவோ ஆக்கிக்கொள்ளலாம்.


ISO:ஷட்டர் வேகம் கூட்டிக்கொண்டே போனால் கேமராவிற்குள் வரக்கூடிய ஒளியின் அளவு குறைந்துக்கொண்டே போகும்,அபெர்ச்சரை  முடிந்தவரை பெரிதாக்கிக்கொண்டே போக வேண்டியதுதான். ஆனால் அதுவும் ஒரு அளவுக்கு தான்.உங்கள் லென்ஸின் அதிகபட்ச விட்டத்தை அடைந்த பிறகு என்ன செய்ய முடியும்?? உங்கள் ISO-வை அதிகப்படுத்த வேண்டியது தான்.எப்பவும்போல் அதிகப்படியான ISO-வினால் ஏற்படும் noise ஒரு பெரும் பிரச்சினைதான்.இதில் கேனான் கேமராவை விட நிக்கான் கேமராவில் noise பிரச்சினை கம்மியாக இருப்பதாக தெரிகிறது.சமீபத்தில் ஒரு தடவை, நான் எனது Canon Rebel XTi(400D)வில் யோசிக்காமல் ISO 1600-விற்கு ஏற்றிவிட்டு க்ளிக்கித்தள்ளிக்கொண்டிருக்க,எனது நண்பர் 200-400-ஐ தாண்டவே தயங்கிக்கொண்டிருந்தார்.
பொதுவாக noise பற்றி கவலை படாமல் படம் எடுத்துவிட்டு பின்னால் Noiseware போன்ற மென்பொருட்களால் சரி செய்துக்கொள்ளலாம்.


ப்ளாஷ் : பொதுவாகவே எனக்கு ப்ளாஷ் உபயோகிப்பது முற்றிலும் பிடிக்காத செயல்.முடிந்தவரை இயற்கையான ஒளியில் படம் எடுக்கதான் முயற்சி செய்வேன்.ஆனால் ஆக்‌ஷன் படங்கள் என்று வந்துவிட்டால் ப்ளாஷ் உபயோகிப்பது மிக பிரபலமாக கையாளப்படும் உத்தி.அதுவும் இரவு நேரங்களில் எடுக்கப்படும் ஆக்‌ஷன் படங்களுக்கு ப்ளாஷ் மிக உபயோகமான வரப்பிரசாதம்.ISO-வை மிக அதிகமாக ஏற்றுவதற்கு பதிலாக ப்ளாஷ் சற்றே கம்மியான ISO-வில் படம் எடுக்க உதவும்.


தயாராக இருங்க: ஆங்கிலத்தில் சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் Preparation and Anticipation என்று சொல்லலாம். பொதுவாகவே இந்த வகையான படங்கள் எடுக்க நிறைய முன்னேற்பாடுகள் செய்ய வேண்டி இருக்கும்.நீங்கள் வீட்டிற்குள் எடுக்க நினைக்கும் ஆக்‌ஷன் ஷாட்டாக இருந்தாலும் சரி,அல்லது ஏதாவது பொது இடத்தில் நடக்கும் நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி,உங்களை தயார் படுத்திக்கொள்வதற்கு போதுமான நேரம் ஒதுக்கிக்கொள்ளுங்கள். வீட்டுனுள் எடுக்க வேண்டிய படம் என்றால் ஒளி அமைப்பு சரியாக வருவதற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்ய நேரம் தேவை. வெளியில் நடக்கும் நிகழ்ச்சி என்றால் முன்பாகவே அந்த இடத்திற்கு சென்று ஒழுங்கான இடம் பார்த்து பிடித்து,சரியான ஒளி அமைப்பு உள்ள கோணத்தை யோசித்து வைத்து என பல விஷயங்கள் உள்ளன.


சரியான தருணத்திற்கு காத்திருங்கள்.நான் முன்னமே சொன்னது போல anticipation அல்லது எதிர்பார்த்திருத்தல் இந்த மாதிரி படங்கள் எடுப்பதற்கு மிக மிக மிக அவசியம்.எப்பொழுது ஆக்‌ஷன் நடக்கப்போகிறது என்று ஷட்டரை அழுத்த மிகத்தயாராக இருக்க வேண்டும்.அதற்கு நீங்கள் படம் எடுத்துக்கொண்டிருக்கும் விஷயம் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்.ரன் எடுக்கும் போது தான் ரன் அவுட் நடக்கலாம் என்று தெரிந்தால் தான்,அவுட் செய்யும் போது படம் எடுக்க முடியும்.அதே போல் ஆட்டம் பாட்டம் ஏதாவது படம் எடுத்தால் ஆடுபவரை கூர்ந்து கவனித்து வந்தால் எப்பொழுது என்ன செய்வார் என்று கணித்து அதற்கேற்றார்போல் கிளிக்கலாம்.கேமராவில் உள்ள burst mode-ஐ  உபயோகித்தால் தொடர்ந்து ப்டங்களை எடுத்து அதிலிருந்து சிறப்பான படம் ஒன்றை பெறலாம்.
சாதாரண் point and shoot கேமராவில் ஷட்டரை அழுத்திய ஒரு சில நொடிகள் கழித்து தான் படம் எடுக்கப்படும்.இதற்கு shutter lag என்று பெயர். அதனால் இது போன்ற கேமராவில் ஷட்டரை பாதி அமுக்கி,focus lock செய்து காத்திருப்பது மிக அவசியம்.இதை பற்றி சர்வேசனின் பதிவு இதோ .



பதிவு ஏற்கெனவே பெரிசாகிப்போச்சுன்னு நெனைக்கறேன்.அதனால் இத்தோட நிறுத்திக்கறேன். உங்களிடம் ஏதேனும் கருத்துக்களோ அல்லது சந்தேகங்களோ இருந்தால் பின்னூட்டமிடுங்கள்.
கலந்துரையாடலாம்...
வரட்டா :)

13 comments:

  1. அட இதுல இவ்வளோ இருக்கா..? மிக பயனுள்ள பாடம்.
    என் தேடலுக்கான விடை இங்கே கிடைத்துக் கொண்டிருப்பதில் மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
  2. மிக்க நன்றி தல

    ReplyDelete
  3. Good post CVR. What about zoom burst ;)

    ReplyDelete
  4. @வெண்ணிலா மீரான் மற்றும் கார்த்திக்
    நன்றி!! :-)

    @ஜீவ்ஸ்
    அது தனிப்பதிவாவே போட வேண்டிய அளவுக்கு பெரிய மேட்டர் ஆச்சே அண்ணாச்சி....
    அதான் அது பத்தி ஆரம்பிக்காம விட்டுட்டேன்.
    :)

    ReplyDelete
  5. நல்ல பாடம்..

    நன்றி CVR

    ReplyDelete
  6. 1. blur இருக்கணுமா? அதுதானே ஆக்ஷனை காட்டும்?
    2. இல்லை இம்பென்டிங்க் ஆக்ஷன்னு தோன்றினா போதுமா?

    ReplyDelete
  7. கோபால் எடுத்த படம் ஒன்றைப் போட்டிக்கு அவர்பெயரிலேயே அனுப்பிவிட்டேன்.

    ReplyDelete
  8. @ஆ! இதழ்கள்
    நன்றி :)

    @திவா
    இருக்க வேண்டும்,இருக்கக்கூடாது என்றெல்லாம் உறிதியாக எதுவும் இல்லை. நீங்கள் சொல்ல வரும் விஷயத்திற்கு பக்கபலமாக இருக்கும் வரை எதுவும் சரியே..
    :)

    @துளசி கோபால்
    கெடச்சாச்சு டீச்சர்.. :)

    ReplyDelete
  9. மற்றவர் எடுத்த படத்தை அவர் பெயரிலேயே போட்டிக்கு அனுப்பலாமா? துளசி அனுப்பிய மாதிரி..தயவு செய்து சொல்லவும்.

    ReplyDelete
  10. மற்றவர் எடுத்த படமாக இருந்தால் அவர்களின் முழு அனுமதி பெற்றிருந்தால் அவர்களின் பெயரிலேயே அனுப்பலாம்..
    படத்தின் உரிமையாளர் எதிர்ப்பு தெரிவிக்கும் பட்சத்தில் போட்டியில் இருந்து படம் நீக்கப்படும்..
    :)

    ReplyDelete
  11. உங்கள் விளக்கங்களுக்கு நன்றி .இன்னும் சுலபமாக புரிகின்ற வகையில் ஒரே போட்டோவை வெவேறு iso shutter speed வைத்து எடுத்தால் எப்படி இருக்கும் என்று visual ஆக விளக்கம் அளிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன் .இப்படி விரைவில் உங்களிடமிருந்து எதிர் பார்க்கிறேன் . எழில் மாறன்- பெங்களூர்

    ReplyDelete
  12. தகவலுக்கு மிக்க நன்றி!!!

    ReplyDelete
  13. அருமையான படங்கள். இந்த நிலைமைக்கு நான் எப்போ வருவேனோ ஈசா!!!!!!
    காமிரா மாத்த வேண்டியதுதான். நன்றி சிவிஆர்,ஜீவ்ஸ்.

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff