Thursday, August 9, 2007

கம்பிகளுக்குப் பின்னால் இருப்பதைப் படம் பிடிக்க ஒரு சூட்சமம்

22 comments:
 
அண்ணா கண்ணன் பதிவில் ஒரு வெள்ளை மயிலின் புகைப்படம் போட்டிருந்தார்.
கீழே உள்ளதை க்ளிக்கி பெருசா பாருங்க.


மயில் ஃபோகஸ் ஆகாம, மயிலை அடைத்து வைத்துள்ள வலைக் கம்பி ஃபோகஸ் ஆனதால், படம் சரியா வராம போயிடுச்சு.

அண்ணா கண்ணனிடம், இதைப் பற்றி கேட்டதர்க்கு, அவர் சொன்னது -
//////// ///////
சர்வேசன்,
முன்னால் இருந்த கம்பி வலை, பின்னால் உள்ளதைத் தடுக்கிறது; படம் எடுக்கும்போதே கவனித்தேன். ஆனால், என் படக் கருவி, வளையின் துளைக்குள் செல்லும் அளவு சிறிதாக இல்லை.
அடுத்து, இந்த இரண்டு மயில்களும் முன்னும் பின்னும் நடந்துகொண்டே இருந்தன. நான் எடுக்கும் நொடியில் அவை தலையைத் திருப்பிக்கொண்டு விடுகின்றன.
அசையாக் காட்சியைவிட அசையும் காட்சியை எடுப்பது, பெரிய சவாலாய் உள்ளது.////
////// /////////

சோ, இதை தவிர்ப்பது எப்படி?
மயிலை அழகா தெரியர மாதிரி எடுக்கணும்னா என்ன பண்ணனும்?

அதுக்கு முதலில் ஆட்டோ-ஃபோகஸ் கேமரா எப்படி வேலை செய்யுதுன்னு தெரிஞ்சுக்கணும்.

ஆட்டோ-ஃபோகஸ் செய்ய பல வகையில் கேமராக்கள் வேலை செய்யும்.
இது, கேமராவின் மாடலை பொறுத்து வேறுபடம்.

சிலவகைகள், infrared (தமிழ்?) கதிரை பாய்ச்சி, முன்னால் இருக்கும் பொருளின் தூரத்தைக் கணித்து, கேமராவின் லென்ஸை ஃபோகஸ் செய்யும்.

சிலவகைகள், ஒலியை எழுப்பி, திரும்பக் கேட்க்கும் எதிரொலியை வைத்து தூரத்தைக் கணிக்கும்.

இன்றைய பெரும்பான்மை கேமராக்கள், கணிப்பொறியின் துணை கொண்டு (CCD - charge coupled device எனப்படும் sensorல் பதியும் படத்தை ஆராய்ந்து), நீங்கள் படம் பிடிக்க நினைக்கும் பிம்பம் துல்லியமாய் இருக்கிறதா என்று கணக்கிடும். அதற்கேற்றார் போல், லென்ஸை தானாக அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும்.

சரி, கேமராதான் தானாவே படம் துல்லியமா வர மாதிரி பாத்துக்குமே? ஆனா, அப்படியும் அண்ணா கண்ணன் படம் ஏன் துல்லியமா வரல?

கேமரா வெறும் கருவிதான். அதுக்கு, நாம வலைய எடுக்க நினைக்கறோமா, அதுக்கு பின்னாடி அழகான மயிலை படம் புடிக்க நெனைக்கறோமான்னு நம் மனசை படிச்சு நடந்துக்க தெரியாது :)

நீங்க வலையை பாத்து கேமராவ புடிச்சு டப்புன்னு க்ளிக்கரை அழுத்துனீங்கன்னா, அந்த நேரத்துல, உங்க கேமரா கையாளும் infrared/soundwave/ccd analysis ல் எது முதலில் அதுக்கு கண்ணில் படுகிறதோ, அதை ஃபோகஸ் செய்யும்.
மயில் போன்ற அசையும் பொருளை ஃபோகஸ் செய்யும் போது, அது அசைந்து கொண்டே இருந்தால், அவ்வளவு எளிதில் அதை ஆட்டோ-ஃபோகஸ் செய்ய முடியாது.

சோ, மயிலப் புடிக்க என்ன பண்ணலாம்?

இதுக்குதான் half-pressனு (அரை அமுக்கு?) ஒரு டெக்னிக் இருக்கு.

view-finderல் ஒரு காட்ச்சியை பார்க்கும்போது, உங்கள் க்ளிக்கரை முழுவதுமாக அமுத்தாமல், அதை பாதி வரை அமுத்த வேண்டும். பாதி அமுத்தினாலே, கேமராவின் ஆட்டோ-ஃபோகஸ் செய்கை உயிர்பெற்று, நீங்கள் பார்க்கும் காட்சி ஃபோகஸ் லாக் செய்யப் படும்.
க்ளிக்கரை அரை-அமுக்கு நிலையிலேயே வைத்திருங்கள்.
view-finderல் ஃபோகஸ் ஆகியிருப்பது, வலையா, மயிலா?

வலையாக இருப்பின், க்ளிக்கரில் இருந்து கையை எடுத்து விடுங்கள். இப்பொழுது, சில மில்லிமீட்டர் கேமராவை திருப்பி, திரும்ப அரை-அமுக்கு அமுக்குங்கள்.
view-finderல் ஃபோகஸ் ஆகியிருப்பது, வலையா, மயிலா?
வலையா? ரிப்பீட்டு அரை அமுக்கு.

அழகான மயிலா? க்ளிக்கரை, முழுவதுமாக க்ளிக்கி படத்தை எடுங்கள்.

இதைப் பத்தி படங்களுடன் விளக்கங்கள் இங்கே. படித்து பயன் பெறுங்கள்.

அரை-அமுக்கு டெக்னிக்கில் சுலபமாய் செய்யக் கூடிய மேலும் சில பட வகைகள்:

1) Zooல் கம்பிக்குப் பின்னால் இருக்கும் மிருகங்கள்.


2) குழந்தைகளை எடுப்பது. குழந்தை சிரிக்கும்போது எடுக்க நினைப்பவர்கள், முதலில் குழந்தையை அரை-அமுக்கு அமுக்கி ஃபோகஸ் லாக் செய்து கொள்ளவும். அப்பறம் விழித் திரையில் குழந்தையை பார்த்துக் கொண்டே இருங்கள். சிரிக்கும்போது, மீதிப் பாதியும் க்ளிக்கினால், சிரிக்கும் குழந்தை துல்லியமாய் வரும்.


3) பொருளை படத்தின் நடுவில் இல்லாமல் ஓரத்தில் வைத்து எடுப்பத். உதாரணம், உங்கள் நண்பர் இயற்கையை ரசிக்கும் காட்சி. படத்தில் உங்கள் ஓரத்தில் இருக்கணும். சும்மா உங்கள் நண்பரை ஓரத்தில் நிற்க வைத்து க்ளிக்கினால், நடுவில் இருக்கும் மற்ற காட்சிகள் ஃபோகஸ் ஆகி, நண்பர் ஃபோகஸுக்கு வெளியே போயிடுவார் ( out of focus :) ). சோ, நண்பரின் முகத்தை அரை-அமுக்கு செய்து, கேமராவை அரை-அமுக்கு நிலையிலேயே சற்று நகர்த்தி, நண்பரை மூலையில் தள்ளி, முழுவதுமாக க்ளிக்கணும். இதோ இப்படி சொதப்பாம எடுக்கலாம்:
(படத்தை களிக்கி முழு விவரம் படிங்க)


ஓ.கேவா? இந்த நுட்பத்தை உபயோகித்து, நீங்க எடுத்துள்ள படத்தைப் போடுங்க.
இதுல வேற எக்ஸ்ட்ரா டெக்னிக்கிருந்தா தெரிஞ்சவங்க சொல்லிட்டும் போங்க.

பி.கு:
half-press - அரை-அமுக்கு? :)
focus - போகஸ்?
clicker - பொத்தான்? :)
view finder - வ்யூ பைண்டர் ?

இதுக்கெல்லாம் தமிழ்ல நல்ல வாக்கு சொல்லுங்க.

வர்டா,
-சர்வேசன் :)

பி.கு: ஆகஸ்ட் போட்டிக்கு படம் அனுப்ப கடைசி நாள் ஆகஸ்ட் 10. அட்டகாசமான பல படங்கள் வந்துள்ளன இதுவரை.

22 comments:

  1. நல்ல பதிவு.
    எனக்குத் தெரிந்த சில தமிழாக்கம்

    Infrared ray - அகச்சிவப்பு கதிர்.
    focus - குவியம்.

    ReplyDelete
  2. நானும் இக்காலத் தலைமுறைக்கு கடினம் தான்என்று நினைப்பவன், இந்த ஆட்டோ போகஸ் பல இடங்களில் சுதந்திரத்தை பறிக்கும் தானே!

    ReplyDelete
  3. இது கொஞ்ச்ம் எடுத்து எடுத்து பழக்கத்தில் வந்து விட்டது..
    விளக்கமா எழுதி இருக்கீங்க...

    ReplyDelete
  4. சர்வேசன்,

    விளக்கத்திற்கு நன்றி. நான் வைத்திருப்பது, கனான் நிறுவனத்தின் எணினி (டிஜிட்டல்) புகைப்படக் கருவி. இதில் நீங்கள் சொல்லும் அரை அமுக்கு உண்டா?

    //half-press - அரை-அமுக்கு? :)
    focus - போகஸ்?
    clicker - பொத்தான்? :)
    view finder - வ்யூ பைண்டர் ?//


    சில சொற்களுக்கு என் தமிழாக்கம்:

    half-press - அரை-அழுத்தம்
    focus - குவியம்
    clicker - குமிழ்
    view finder - காட்சி நோக்கி
    ஆட்டோ-ஃபோகஸ் - தற்குவியம்
    ஃபோகஸ் லாக் - குவியக் கட்டு (அ) குவியப் பூட்டு
    out of focus - குவியத்திற்கு வெளியே
    infrared - அகச்சிவப்பு கதிர்
    லென்ஸ் - ஆடி

    ReplyDelete
  5. அட்டகாசமான பதிவு!!
    இதை பற்றி நானே சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன்!!
    சமீபகால சோம்பேரித்தனத்தால் ஒன்றும் செய்யவில்லை!!

    நீங்கள் நன்றாக விளக்கியிருக்கிறீர்கள்!!

    நன்றி!! :-)

    ReplyDelete
  6. நானும் போட்டிக்கு இரண்டு படங்கள்
    அனுப்பியிருக்கிறேன். பாத்துட்டு சொல்லவும்.

    ReplyDelete
  7. அனானி, தமிழ் விளக்கங்களுக்கு நன்னி. குவியம், நல்லா இருக்கு.

    செல்லா, ஆட்டோ ஃபோகஸ் தொல்லை தான், சில இடங்களில் அவசரத்துக்கு கை கொடுக்கும்.

    முத்துலெட்சுமி, பழகிக் கொள்ள வேண்டிய டெக்னிக் இது. இல்லன்னா, பல படங்கள் தேறாமல் போய்விடும்.

    அண்ணாகண்ணன், கேனான் இல்லாத வசதியா. கண்டிப்பா இருக்கும். ரொம்ப சீப் பாய்ன்ட் & ஷூட்டிலும்,யூஸ் & த்ரோவிலும் இருக்காது. ட்ரை பண்ணிட்டு படங்களை அனுப்புங்கள் :)
    அருமையான தமிழ் வார்த்தைகள். அபீஷியல் ஆக்கிடலாம் ;)

    CVR,Deepa, நன்றி!

    நானானி, உங்க பள்ளிக்கூடத் தோழிப் புகைப்படம் அருமை. அந்தப் பயலின் படமும் நல்லா இருந்தது. நடுவர்கள் என்னா பண்றாங்கன்னு பாப்போம்.

    ReplyDelete
  8. ejample yen panguku.. avlo sariya varatiyum.. oru jample..

    http://www.flickr.com/photos/rowdy/848992673/in/set-72157600894599107/

    ReplyDelete
  9. சர்வேசன், Half shutter ஏற்க்கனவே தெரிந்த விஷயம் தான் என்றாலும், technical'ஆக நிறைய தெரிந்து கொள்ள உங்களின் பதிவு உதவியது. நன்றி.
    BTW, என்னிடம் இருப்பது Sony DSC-H5. அதன் manual'ல் கூட half shutter பற்றிப் போட்டிருக்கிறார்கள். ஆனால் எனது camera'வில் என்னவெல்லாமோ செய்தும், வேலை செய்ய மாட்டேன்கிறது. இது இந்த model camera எல்லாவற்றிலும் உள்ள பிழையா, அல்லது எனது camera'வில் மட்டும் உள்ள பிழையா?

    ReplyDelete
  10. என்னிடம் இப்படி கம்பிக்கு பின்னால் இருக்கும் பறவை படம்
    உள்ளது. தற்போது ஸ்கேன் செய்ய நேரம் இல்லை. Widest
    Aperture set பண்ணி Manual Mode இல் பறவையை focus செய்து
    எடுத்தால் கம்பி blur ஆகிவிடும் பறவை மட்டும் சூப்பராக தெரியும்.

    ReplyDelete
  11. இதன் concept இங்கே படியுங்கள்
    http://en.wikipedia.org/wiki/Depth_of_field

    ReplyDelete
  12. athi,
    DSC-H5ல மேலும் சிலருக்கு இதே ப்ரச்சனை இருக்குன்னு கூகிள் ஆண்டவர் சொல்றாரு. இங்கப் பாருங்க.

    http://www.photographyblog.com/index.php/weblog/comments/sony_dsc_h5_and_sony_dsc_h2/

    ஆட்டோ-ஃபோகஸ் வேலை செய்யுதா? manual modeல இருக்கும்போது, half-press வேலை செய்யாது. பாத்துக்கங்க.

    ReplyDelete
  13. aathirai,

    ஸ்கேன் பண்ணி அனுப்புங்க. பார்க்க ஆவலாக உள்ளோம்.

    ReplyDelete
  14. வெட்டி, நன்றி.

    என்ன? மத்த க்ளாஸுக்கெல்லாம் வராம பங்க் பண்ணிட்டீங்க?

    ReplyDelete
  15. netru meendum indha murayil eduththu paarthen.

    http://ullal.blogspot.com/2007/08/blog-post_13.html

    ReplyDelete
  16. சர்வேசன்... மறுமொழிக்கு நன்றி. ஒரு நல்ல விசயம், camera'வை இங்கு சென்னையில் தான் வாங்கினேன். எனவே warranty இருக்கிறது. :-)

    ம். Auto focus'ல் எந்த பிரச்சினையும் இல்லை. மேலும், manual mode'ல் Flexispot focus என்ற option உள்ளதால், half press'ஆல் பெரிய இம்சை இல்லை. :-)

    ReplyDelete
  17. parakkum paravaiyai eppadi focus seiya vendum. oru pathivu thevai

    ReplyDelete
  18. New comer ---- Very very very useful -. Keep going A request From a beginner/Hobbiyst

    ReplyDelete
  19. இதுக்கு manual focus தான் சரி என்னுடைய click "( https://www.facebook.com/SanchayanPhotography/photos/a.269508503209021.1073741869.132705300222676/269508559875682/?type=1&theater ) எப்பிடி இருக்கு?? கூட்டுக்குள்ள இருந்த love birds.

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff