Friday, August 17, 2007

வெற்றிப்படங்கள் .. ஒரு பார்வை - 01

11 comments:
 
மிக்க நன்றி முதலில்... எங்கள் முன் உங்கள் படைப்புகளை வெளியிட்டதற்கு. நான் இந்த படங்களை வைத்தே ஒரு போர்ட்ராய்ட் தொடரை எழுத இருக்கிறேன். நாங்கள் அனைத்து படங்களையும் ஸ்டாம்ப் சைஸ் ஆக்கி ஒரே படமாக collage ஆக மாற்றினோம். 90 படங்களுக்கு மாற்றவே ஒரு 4 மணி நேரம் ஆனது! பின் அவற்றீன் மீது புள்ளிகள் வைத்து நன்றாக இருந்தவற்றை பொறுக்கினோம். மொத்தம் 11 படங்கள் தேர்வு செய்யப்பட்டன. பின் இந்த பதினொண்ரையும் ஓடவிட்டோம். இங்கு தான் போட்டியின் கடுமை புரிந்தது. உதாரணமாக பக்கத்தில் இருக்கும் புகைப்படத்தை பாருங்கள். பதிவர் பாரதிய நவீன இளவரசன் அவர்களின் ஒரு படத்தை நான் கைவத்தபோது ஒரு க்ளாசிக் போர்ட்ராய்ட் மறைந்திருப்பது தெரிந்தது! பொதுவாகவே இவரது இரு படங்களும் மற்றும் சுந்தரின் இரு படங்களும் மிக அற்புதமான லைட்டிங் சென்ஸோடு எடுக்கப்பட்ட படங்கள் தான். ஆனால் ஒப்பாரி முன்னேறியது எதனால்...

டெக்னிகள் விசயங்கள் இருந்தாலும் அழகு ஒன்று உள்ளது. அதுஎந்த விதிக்கும் கட்டுப்படாத ஒன்று. அந்த மாதிரியான ஒரு அழகான இயல்பான எளிமையான சிரிப்பு (Expression and timing of the image!) மிகவும் சூப்பர். எனவே தான் அது மூன்றாம் இடம் பிடித்தது. இதற்கும் வேரொரு போட்டி இல்லாமல் இல்லை ... அது ஹரன் அனுப்பிய அழகுச் சிரிப்பு... ஆனால் சில விசயங்கள்.. ஒன்று அதன் கருப்பு பிண்ணணி.. டெக்சர் ஏதும் இல்லாமல்.. மேலும் கழுத்துக்கு கீழே இடதுபுறம் (பையனுக்கு) தோள்பட்டை சரியாகத் தெரியாமல் பேலன்ஸ் இல்லாமல் (கையே தெரியாமல் ஒரு தோற்றம்) . இருந்தாலும் ஹரனுக்கும் என் வாழ்த்துக்கள்! கடும் போட்டி கொடுத்துள்ளீர்கள்.

மற்றவை அடுத்த பார்வையில் .. ( அலுவலக வேளை நிறைய சேர்ந்து விட்டது!)

பிகு: மேலே உள்ள நவீன இளவரசனின் படத்தில் (பெரிதாக்கிப் பார்க்க) என்ன வித்தியாசம் காண்கிறீர்கள்? என்ன மென்பொருள் எபெக்ட் சேர்க்கப்பட்டுள்ளது என்று தெரிந்தால் சொல்லுங்களேன்! ( crop, contrast தவிர்த்து!)

Related Posts

11 comments:

  1. cool.. start of good analysis.. do carry on as your time permits.. btw.. which are those 11 entries ?!

    ReplyDelete
  2. இந்த போட்டியின் மூலமும் Croppimng,Contrast adjustment மற்றும் framing செய்வதால் ஒரு படம் எந்த அளவுக்கு அழகாகிறது என்பதை திரும்பவும் தெரிந்து கொள்கிறோம்!! :-)
    இனிமேல் வரும் போட்டிகளுக்கு அனுப்பும் முன் மக்கள் கொஞ்சம் நேரம் செலவழித்து Croppimng,Contrast adjustment மற்றும் framing ஆகிய விஷயங்களை செய்தால் படங்கள் இன்னும் சிறப்புரும்!!
    Cropping மற்றும் contrast adjustments செய்ய ஒரு எளிமையான மற்றும் இலவசமான மென்பொருளைஇ பற்றி இந்த பதிவில் காணலாம்.

    ஹரனின் இரண்டாவது படம் மிக அழகு!! ஆனால் போட்டி என்று வந்து விட்டால் சிறு சிறு விஷயங்கள் கூட நடுவர்கள் பார்க்க வேண்டிய கட்டாயம் என்று தெரிகிறது!!
    என்ன செய்வது!!!
    Tuff luck Haran!!
    Better luck next time!! :-)

    ReplyDelete
  3. Framing பற்றி மேலதிகத் தகவல்கள் தர முடியுமா? பிக்காஸாவில் Framing செய்ய முடியுமா?

    நன்றி.

    ReplyDelete
  4. எனக்கு தெரிந்தவரையில் picasa-வில் framing / adding borders செய்ய முடியாது!!

    ஆனால் Gimp எனப்படும் இலவச மென்பொருளை கொண்டு basic bordering மற்றும் framing செய்யலாம்.
    என் சமீப கால படங்களில் நான் இதை கொண்டு தான் framing செய்கிறேன்.

    Gimp-இல் borders சேர்ப்பது பற்றி தனி பதிவு வேண்டுமென்றால் போடுகிறேன்!! :-)

    Photoshop-இல் செய்யக்கூடிய பல விஷயங்களை Gimp-இலும் செய்ய முடியும்!!
    இந்த மென்பொருள் பற்றி நம் AN& அங்கிலத்தில் ஒரு தனி வலைப்பதிவே வைத்துள்ளார்!! :-)

    ReplyDelete
  5. நன்றி CVR. I will jump on gimp rightaway! :-)

    ReplyDelete
  6. Sharpness கூடியுள்ளது. Lighting effect பளிச்சென்று படத்திற்கு அழகு சேர்த்துள்ளது.

    ReplyDelete
  7. jesila.. konjam "add noise" உபயோகப்படுத்தியுள்ளேன். asa 400 film உபயோகித்தவர்கள் அதை ரசிக்கமுடியும்!

    ReplyDelete
  8. சுந்தர் சார் ( நினைவில் இருக்கிறதா என்பெயர் :D )
    instant photo effect அப்படின்னு ஒரு செயலி இருக்கு டிரை பண்ணி பாருங்க. ரொம்ப நல்லா இருக்கும்.


    லினக்ஸ் உபயோகிப்பாளர்களுக்கு http://www.digikam.org/ -- உபயோகிச்சு பாருங்க


    வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்

    -- ஐயப்பன்.

    ReplyDelete
  9. செல்லா,
    இதைத்தான் நான் உங்க பார்வையை சொல்லுங்க என்று சொன்னேன். மிக்க நன்றி. தொடரை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். படங்கள் அனைத்தும் அட்டகாசம். நந்தாவின் பிளிக்கர் போட்டோ காலரி பாத்தீங்களா? நந்தா மாதிரி ஆளுங்களெல்லாம் இந்த மாதிரி அமச்சூர் போட்டிக்கல்லாம் வரது பத்தி அவர்தான் யோசிக்கணும். அவரோட படத்தை பத்தி உங்க பார்வையை எதிர்ப்பார்கிறேன். கடும் பணினால யாருக்கும் பின்னூட்டமும் நன்றி கூட சொல்லமுடியலை. பின்பு ஆற அமர வரேன்.

    ReplyDelete
  10. முன்பு போட்ட பின்னூட்டத்தில் நாதனை நந்தா என்று விளித்துவிட்டேன். நாதன் மன்னிப்பாராக!!

    ReplyDelete
  11. you do only half job :( photos 1 - 15 there .. where are the rest ? and what about vetri padangal oru parvai second part ?

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff