Thursday, February 19, 2009

சேனல் மிக்ஸர்

12 comments:
 
இது டீவி சேனல் மிக்ஸர் இல்லைங்க, கிம்பில் இருக்கும் வண்ணங்களை கட்டுப்படுத்தும்/மட்டுப்படுத்தும் ஒரு நீட்சி. இதன் பெரிய பலம் வண்ணப் படங்களை கருப்பு/வெள்ளைக்கு மாற்றும் போது கிடைக்கும் கட்டுப்பாடுகள்.


வண்ணப்படங்கள் RedGreenBlue என்ற மூன்று பகுதிகளாக இருக்கும் என்பது தெரிந்ததுதான்.
இந்த வண்ணங்களை தனித்தனியாக தேவையான அளவிற்கு சேர்ப்பது/குறைப்பதின் மூலம் வேண்டிய முறையில் கருப்பு வெள்ளைப்படங்களைப் பெற முடியும்.


உதாரணதிற்கு திரிஷாவின் இந்தப் படத்தை எடுத்துக் கொள்வோம்.



சேனல் மிகஸ்ர் கிம்பில் Colors-> Components-> Channel Mixer பகுதியில் இருக்கு.

MononChrome , Preserve Luminosity இரண்டும் தேர்ந்து எடுத்துக் கொள்ளவேண்டும். முதலில் Red 100 Green 0 Blue 0 என்று சிவப்புப் பகுதிமட்டும்.






சிவப்புப் பகுதியில் Contrast அதிகமாக இருக்கும். முகத்தின்/தோலின் குறைகள் தெரியாது.


இனி அடுத்து Red 0 Green 100 Blue 0 . பச்சைப் பகுதியில் விவரங்கள் தெளிவாய் தெரியும்.


அடுத்து Red 0 Green Blue 100 . நீல பகுதியில் இரைச்சல்கள் அதிகமாய் இருக்கும். முகத்தில்/தோலில் இருக்கும் அனைத்து குறைகளும் தெளிவாய் தெரியும்.



இது போன்ற Portrait படங்களுக்கு பச்சை பகுதியும், சிவப்பு பகுதியும் நிறைய இருக்கவேண்டும். நீலப் பகுதியை அறவே தவிர்க்கலாம். நான் இந்த படத்தில் பச்சை 70 சிவப்பு 57.8 சேர்த்துள்ளேன்.



படம் இப்படி கருப்பு வெள்ளைக்கு மாறிவிட்டது.



சரி , அடுத்து இயற்கை காட்சி படங்களுக்கு என்ன மாதிரி அளவில் வண்ணக் கலவை இருக்க வேண்டும் ?

இந்தப் படத்தில்



இது சிவப்பு மட்டும் ( Red 100 Green 0 Blue 0 )




இது பச்சை மட்டும் ( Red 0 Green 100 Blue 0 )



இது நீலம் மட்டும் ( Red 0 Green 0 Blue 100 )




மரங்கள் நீலப் பகுதியில் அழகாகவும், நீல வானம் சிவப்புப் பகுதியில் தெளிவாகவும் தெரியும். உங்களின் விருப்பத்திற்கு ஏற்ப விளையாட வேண்டியதுதான்.

நான் இந்த படத்திற்கு இந்த விகிதத்தில் சேர்த்துக் கொண்டேன்.



படம் இப்படி மாறியது.



பழகிப் பாருங்கள். கூடிய விரைவில் PiTல் பிட்டுப் போட உதவக் கூடும் .

12 comments:

  1. WOW!!!
    ரொம்ப உபயோகமான தகவல் தல!!

    //உதாரணதிற்கு திரிஷாவின் இந்தப் படத்தை எடுத்துக் கொள்வோம்.//

    நல்ல உதாரணம்தான்!! :P

    ReplyDelete
  2. நன்றி CVR,

    //நல்ல உதாரணம்தான்!! :P
    ஏதோ கொஞ்சம் யூத்தா (???? ) ஆகலாம்னு தான்.

    ReplyDelete
  3. :)) - unga comment kku
    wow - unga post kku

    ReplyDelete
  4. Nicely written, thanks

    ReplyDelete
  5. எங்களை எல்லாம் கலர் போட்டோ எடுத்தாலும் பிளாக் & வெயிட்டாகதான் தெரிவோம்:)

    ReplyDelete
  6. அட கருப்பு வெள்ளை படத்துல இவ்ளோ செய்ய முடியுமா ... அருமையா எடுத்துக்காட்டுகளுடன் சொல்லியமைக்கு மிக்க நன்றி ...

    ReplyDelete
  7. an eye-opener! excellent post!

    ReplyDelete
  8. Nice post,thank you!

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff