Monday, May 4, 2009

கட்டடங்கள் சாய்வதில்லை

5 comments:
 
உசரமான கட்டங்கள் புகைப்படத்தில் கொஞ்சம் கவனமாக எடுக்காவிட்டால் பெரும்பாலும் சாய்ந்து காணப்படும். அதை கிம்பில்( GIMP) சரி செய்ய ஒரு முயற்சி இங்கே.
உதாரணத்திற்கு நாதஸ் அண்ணாச்சியின் இந்த பச்சை ஆறு படம்.
இதை

இப்படி மாத்தப் போறோம்.






படத்தை கிம்பில் திறந்து , லேயரை நகலெடுத்துக் கொள்ளுங்கள்.






Shift + p அமுக்கினால் Perspective Tool திறக்கும். படத்தில் உள்ளவாறு மேலே இருக்கும் இரண்டு மூலைகளயும் வெளி நோக்கி இழுத்து, உங்களுக்குத் தேவையான கட்டடம் நேரே இருக்குமாறு மாற்றிக் கொள்ளுங்கள்.




கிட்டத்தட்ட 99% இதுவே போதுமானதாய் இருக்கும். சில சமயங்களில் கட்டடம் நேராகி மற்றப்பகுதிகள் நசுங்கினால் போல தோன்றக் கூடும்.உதாரணதிற்கு, இந்தப்படத்தில் ஆற்றை ஒட்டி இருக்கும் பாதைகளும் மரங்களும் சரியாக இல்லாதது போல எனக்குத் தோன்றியது.

அதை சரி செய்ய. முதலில் படத்தின் நீளத்தை Image ->Canvas size மூலம்



கொஞ்சம் அதிகப்படுத்திக் கொள்ளுங்கள்.



படத்தின் கீழே இந்த மாதிரி வெற்றிடம் வந்து இருக்கும்.








அடுத்து shift + t அமுக்கினால Scale tool வரும். படத்தின் மையப்பகுதி மற்றும் கீழ் பகுதிகளை உங்களின் வசதிக்கு ஏற்ப நேராக வரும்படியும், நசுங்கினது தெரியாமலும் மாற்றிக் கொள்ளுங்கள்.



கடைசியில் Crop Tool கொண்டு உங்களுக்குத் தேவையானப் பகுதியை மட்டும் கத்தரித்துக் கொள்ளுங்கள்.



அவ்வளவுத்தான்.




5 comments:

  1. இதே போல் ரிவர்ஸாக செய்து சாதாரண ஷாட்டை வைட் ஆங்கில் லென்ஸ் ஷாட் போல் காண்பிக்க முடியுமா? (like a horizon looking curved)

    ReplyDelete
  2. இதே முறைதான். எப்படி வேண்டுமானலும் மாற்றிக்கொள்ளலாம்.

    ReplyDelete
  3. Nice and simple :)

    there is a Perspective correction tool - Lemme try finding it and update here. ( But still i prefer GIMP - the magic wand tool )

    ReplyDelete
  4. I tried...

    I think this is also good

    Filters > distorts > lens distortion

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff