Tuesday, January 26, 2010

ஜனவரி 2010 - போட்டி முடிவுகள்

16 comments:
 
வழக்கம் போல் இல்லாமல், கொஞ்சம் வித்யாசமாய், ஏதாவது ஒரு சிறுகதைக்கு அந்தக் கதையின் கருவின் முன்னிறுத்தி ஒரு புகைப்படம் அனுப்பணும்னு இம்மாதப் போட்டியில் தெரிவித்திருந்தோம். புதிய முயற்சி என்பதாலோ, அல்லது, எனக்கு வேலை சுலபமாக இருக்கட்டும் என்ற நல்ல மனமோ, அல்லது, எல்லாரும் லீவெல்லாம் முடிஞ்சு இன்னும் சுறுசுறுப்பாய் வருடத்தைத் துவங்க ஆரம்பிக்காததாலோ தெரியவில்லை, இந்த மாசம் கொஞ்சம் பேருதான் கோதால இறங்கியிருக்காங்க. மொத்தம் பனிரெண்டு படங்கள், போட்டியில், அதில், ஹோம் வொர்க் (ஸ்ரீதேவி), கதைக்கு ஒரு படமும் வெள்ளை உருவத்தில் ஓர் வில்லன் (பின்னோக்கி) என்ற கதைக்கு நாலும்,
கடைசி இரவு (ராம்குமார் அமுதன்) என்ற கதைக்கு மூன்று படங்களும்,
கறுப்பு ஞாபகம் (ஆதிமூலகிருஷ்ணன்), என்ற கதைக்கு ஒரு படமும் நெல்லி மரம் (சதங்கா) கதைக்கு ஒரு படமும், சட்டை (முரளிகண்னன்), கதைக்கு இரண்டு படங்களும்,
நல்லாருக்குல்ல படங்களெல்லாம்? கதையின் கருவை உள்வாங்கி, அதற்கேற்றாற்போல் படத்தை எடுத்து அனுப்பிய அனைவருக்கும் நன்றிகளும் பாராட்டுகளும். பாதி கிணறு அங்கையே தாண்டியாச்சு. சிறுகதைக்கு படம் எடுத்தா, வெறும் படம் எடுத்ததோடு வேலையை முடித்துவிட முடியாது. அது பத்திரிகையிலோ இணையதளத்திலோ அரங்கேற்றணும்னா, கொஞ்சமா பிற்தயாரிப்பும், பிற்சேர்க்கைகளும் சேக்கணும். குறைந்த பட்சம், கதையின் பெயரையாவது இணைத்தல், படத்துக்கு கூடுதல் பஞ்ச் தந்துவிடுகிறது. முக்கால் வாசி கிணறு இப்படித் தாண்டலாம். இன்னும், கால்வாசிதான? இதை உங்கள் தனித்துவத்தை நிலைநாட்டும் விதத்தில், புதிய வித்யாசமான கோணத்தில், இதுவரை யாரும் அதிகமாக புழக்கத்தில் கொண்டுவராத விஷயத்தை சப்ஜெக்ட்டாக்கி க்ளிக்குவதுதான், ஒரு வெற்றிப் படத்தை உருவாக்கும். இப்படி, முழுக்கிணறும் தாண்டியது யாரு?(ஸ்ஸ்ஸ், அப்பாடி, கணக்கு சரியா வந்தாச்சு ஒரு வழியா) மேலே உள்ள படங்களை ஒரு முறை மேலிருந்து கீழாக பார்த்தாலே, உங்களுக்குத் தெரிந்துவிடும். ஜனவரி 2010 PiT போட்டியின், முதல் இடத்தைப் பெறுபவர் - T.Jay. 'கறுப்பு ஞாபகம்', போதையில் தன்னை மறந்து குழம்பும் ஹீரோவின் கதை. கதைக்குத் தேவையான மது பாட்டிலும்; கம்ப்யூட்டர் மானிட்டரை பொத்துக் கொண்டு வந்து சொட்டும் wineம், உடைந்த கோப்பையும், ஹீரோவின் பிம்பமும், ஒரு கீறலான படத்தின் அமைப்பும், அருமையாக படத்துக்கு வலுவூட்டுகிறது. வாழ்த்துக்கள் T.Jay. ரொம்ப சிரத்தை எடுத்து செதுக்கியதற்க்கு நன்றியும் பாராட்டுக்களும்!2 இரண்டாவது இடத்தை தேர்ந்தெடுப்பதில் சிறு குழப்பம். அவரா, இதுவா என்ற குழப்பம். இரண்டுக்கும் கிட்டத்தட்ட ஒரே மார்க்குதான் என்றாலும். சப்ஜெக்ட்டில், அவரை விட, அது இருப்பது, ஃபோட்டோகிராஃபரின் பொறுமையை ஒரு இன்ச் அதிகம் காட்டுகிறது. படத்துக்கும் ஒரு இன்ச் மதிப்பை அதிகம் கூட்டுகிறது. so, 'வெள்ளை உருவத்தில் ஓர் வில்லன்' கதைக்கு அருமையா நீலக் கலர் கண்ணுடன் முறைக்கும் வெள்ளைப் பூனையாரை க்ளிக்கிய Kamalன் படத்துக்கு இரண்டாவது இடம். சிறப்பு கவனத்தைப் பெறுபவர், நம்ம ஒப்பாரி. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் நன்றீஸ். பி.கு: குழுப்போட்டியாளர்கள், என்ன பண்றீங்கன்னு, அப்பப்ப தகவல்களை பகிர்ந்த வண்ணம் இருத்தல் நலம். நன்றி.

16 comments:

  1. நல்லாயிருக்குங்க.

    கதைப் படி பார்த்தால் ஒரு ஆள் இருப்பதைப் போன்ற படத்தையே நான் விரும்புகிறேன். ஏனென்றால், அது சஸ்பென்ஸை வெளிப்படுத்தாததால்.

    ReplyDelete
  2. மூன்றும் அருமையான தேர்வு. வெற்றி பெற்றவருக்கு என் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள்..::))

    ReplyDelete
  5. வெற்றி பெற்றவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. அனைத்துமே அருமை,..

    ReplyDelete
  7. 1வது இடத்தை பிடித்த T.Jay க்கும்
    சிறப்பு கவனத்தை பெற்ற ஒப்பாரிக்கும் வாழ்த்துக்கள்...

    2வது இடத்தில் நானும்... நம்ப முடியவில்லை...
    இதற்காக பல மாதங்கள் காத்திருத்திருந்தேன். பல வகையில் தேடினேன். பார்க்கும் இடம் எல்லவற்றையும் கட்டம் கட்டி பார்த்திருக்கிறேன். எண்ணம் செயல் சிந்தனை அனைத்தில் போட்டி பற்றியே ஓடிக்கொண்டிருந்தது.
    அப்பாடா நானும் 2வது இடத்தை பெற்றுவிட்டேன் என்று நினைக்கும் போது மனம் ஒன்று மட்டும் தோன்றுகிறது.
    இன்னும் இன்னும் கற்க வேண்டும் இந்த புகைப்படக்கலையை என்று...

    நன்றிகள் :

    முதலில் PiTக்கு இணையில்லா இணையதளத்திற்கும்
    இங்கேதான் புகைப்படக்கலையின் ஆதி முதல் அந்தம் வரை கற்றுக் கொண்டேன்.
    Kamal Photography என்று உருவாக மிக முக்கிய காரணம் இங்கு பயின்ற பாடம்தான்.
    ஆனாலும் முழுதாக இன்னும் படிக்கவில்லை என்பதே உண்மை.

    PiTயின் உறுப்பினர்கள் ஜீவ்ஸ் மற்றும் நாதஸ் அவர்களுக்கும்
    இருவரும் என்னை தேற்றினார்கள், கேட்ட சந்தேகங்களுக்கு உடனுக்குடன் பதில் அளித்து, என்னை முழு நேர புகைப்படகாரனாக மற்றியவர்கள்.

    PiT இந்த மாத தேர்வு குழுவினருக்கும்

    எனது துணைவியாருக்கும்
    இந்த புகைப்படம் எடுக்க அதிகாலையில் தயராக எனக்கு முன் எழுந்து இன்னும் கிளம்பளையா என்று எனக்கு முன் எழுந்து என்னை தட்டி எழுப்பிய தேவதை. எனது படைப்புகளை முதலில் விமர்சிக்கும் ஆர்வலர். என்னுள் இருக்கும் திறமைகளை வெளிகொணர்பவர். எனது (-)களை எல்லாம் (+)களாக மாற்றியர் அவரே.

    எனது முன்னால் நண்பருக்கும்
    என்னால் முடியுமா என்று எனது புகைப்படக்கலையின் ஆர்வத்தை தீ போல தூண்டிவிட்ட அவருக்கு.

    பாராட்டிய அனைவருக்கும்

    ReplyDelete
  8. @ கமலக்கண்ணன்,

    உங்கள் தேவதைக்கும், ஊக்கம் தந்த நண்பர்களுக்கும் அப்புறமாக உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்:)! தொடருங்கள்!

    ReplyDelete
  9. நன்றி ராமலெஷ்மி

    உங்களின் வாழ்த்து எனக்கு மட்டும் அல்ல என் தேவதைக்கும் நல்ல புத்துணர்ச்சி அளிக்கிறது

    அள்ளித் தந்தமைக்கு மிக்க நன்றி...

    ReplyDelete
  10. பின்னோக்கி, உங்க கருத்து கரீட்டு.

    லேசான குழப்பத்துக்கு அதுவும் காரணமாயிருந்தது. ஆனா, அளவுகோலில், 'நச்'சுக்கு மார்க் போடலை ;)

    ReplyDelete
  11. கமலகண்ணன், செய்முறையை பதிவாப் போட்டீங்கன்னா எல்லாருக்கும் உதவியா இருக்கும்.

    நன்றீஸ். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. அதை நானும் யோசித்து கொண்டிருந்தேன். தற்போது வீட்டில் கணனியில் சற்று கோளாறாக இருப்பதால் சற்றே தாமதம். விரைந்து அனுப்புகிறேன். ஏன்னென்றால் நான் கற்றவையை மற்றவர்களும் கற்ற வேண்டும் என்ற ஆர்வம் உண்டு எனக்கு... விரைவில் செய்முறையுடன் வருகிறேன்.

    ReplyDelete
  13. கதைப்போட்டியில்தான் பல்பு கிடைத்தது. ஹிஹி.. இங்கே என் கதைக்காக சின்சியராக உருவாக்கப்பட்ட பொருத்தமான படத்துக்கு முதல் பரிசு கிடைத்தது என் கதைக்கே கிடைத்தது மாதிரி ஒரு பெரிய மகிழ்ச்சி. நன்றியும் வாழ்த்துகளும் தோழர் டி.ஜேவுக்கு.! கமலக்கண்ணன், ஒப்பாரி மற்றும் கலந்துகொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.!

    ReplyDelete
  14. //நல்லாருக்குல்ல படங்களெல்லாம்?//
    நீங்க என்ன சொல்ல வரீங்கன்னு புரியுது:)

    வெற்றி பெற்ற இரண்டு படமும் அருமை! எத்தனை நல்ல படங்கள் வந்திருந்தாலும் அந்த முதல் படத்தை அசைக்க முடியாது! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  15. மூன்றும் அருமையான தேர்வு. வெற்றி பெற்றவருக்கு என் வாழ்த்துக்கள்!

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff