Tuesday, April 27, 2010

ஏப்ரல் போட்டி - தண்ணீர் - வெற்றி பெற்ற படங்கள்

20 comments:
 
ஏப்ரல் போட்டிக்கு தண்ணி காட்டச் சொலியிருந்தோம். தண்ணி காட்டியவர்களில் அம்சமாய் காட்டிய பத்து பேரின் படங்களை பார்த்திருப்பீர்கள். இனி, வெற்றி பெற்ற முதல் மூன்று படங்களைப் பாத்திடலாம். எனக்கு தெரிஞ்சது ரொம்பக் கம்மி. ஸோ, ரொம்ப டெக்னிக்கல் அம்சங்கள் எல்லாம் பாக்கலை. எது, என்னை இழுத்தது என்பதே அளவுகோல். பத்து படங்களையும் மேலையும் கீழையும் பாத்தா, கொஞ்சம் கொழப்பமாத்தான் இருந்தது. எதை எடுப்பது எதை விடுப்பதுன்னு சட்டுனு புரியல்ல. ஆனால், முதல் பரிசு எதுக்குங்கரது, ரெண்டு மூணு தடவை மேலையும் கீழையும் மேஞ்சதும் மனசுக்கு பட்டுடுச்சு. இரண்டாம் இடத்துக்கும் மூன்றாம் இடத்துக்கும், ரெண்டு படங்கள், நானா நீயான்னு, இழுபறி பண்ணிச்சு. அப்பரம், லேப் டாப்பை தூர வச்சு, வேர வேர ஏங்கிளில் பாத்து, 'வாவ்'னு, அதிகமாய் வசீகரிச்சதை, கட்டம் கட்டியிருக்கேன். மூன்றாம் இடத்தில், mervinanto. சரியான வெளிச்சத்தில், சரியான நேரத்தில், நச்னு ஷாட். நல்ல வண்ணங்களின் வெளிப்பாடும். அருமை.
இந்த இடத்துக்கான கவனம் பெற்ற இன்னொரு படம், Amalன் தண்ணி டார்ச்சு. என்னத்தச் சொல்ல? பின்னியிருக்காரு மனுஷன். தண்ணி பிரதானமாய் இருந்தும், பிரதானமாய் எனக்கு சட்டுனு படாததால், ஜஸ்ட்ல மிஸ்ஸாயிடுச்சு. ஆனா, பிரமாதமான படம்.
இரண்டாம் இடத்தில், meenatchisundaram. நீர்வீழ்ச்சியை, இப்படி படம் படிக்கரதுக்குத்தான் எல்லாரும் ஆசைப்படுவோம். அருமையா வந்திருக்கு. ஒரு சில படங்களை பாத்தா, பெருமூச் வரும். எப்படா இந்த எடத்துக்கு போகப் போறோம்னு. அப்படி ஒரு படம். தொபுக்கடீர்னு குதிக்கலாம் போலருக்கு. அருமையான ஏங்கிள். இடதுபுறத்தில் கொட்டும் நீரை இன்னும் முழுசா காட்ட முயற்சி பண்ணினா இப்படி ஒரு பஞ்ச் வந்திருக்காது. அளவான, கட்டம். சூப்பரு!
கவனம் பெற்ற இன்னொரு அருவிப் படம் Karthikero. நன்றாக க்ளிக்கப்பட்டிருந்தாலும், கொஞ்சம் பளிச் கம்மி. பின்னாலிருக்கும் இருண்ட மரங்களும் கைகொடுக்கலை.
முதலாம் இடத்தை பெறும் படம் S.M.Anbu Anandன் சொட்டு நீர். நல்லா போஸ்ட்டர் போட்டு விக்கலாம். அவ்ளோ நல்லா வந்திருக்கு. இதன் பன்ச் கூடக் காரணம், படம் எடுக்கப்பட்ட கோணம்னு நெனைக்கறேன். பாதி படம் நீலமாவும், மீதிப் பாதி நிறம் கம்மியாவும் செஞ்சிருக்காரு. ஆனா, அதுவும் ஒரு அழகாவே தெரியுது. முழுக்க நீலமா இருந்தாலும், ஓவராயிருந்திருக்கும். நீலம் இல்லாமல் இருந்தால், டல்லா இருந்திருக்கும். அளவா, அம்சமா வந்திருக்கு. வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள், வெற்றி பெற்றவர்கள் அனைவருக்கும். பங்கு பெற்ற அனைவருக்கும், நன்றீஸ்!

20 comments:

  1. முத்தான தேர்வுகள்.

    மூவருக்கும் வாழ்த்துக்கள்.

    அமலுக்கும் கார்த்திக்கும் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. வெற்றிப் படங்களை எப்போதும் இப்படிப் பெரிய அளவிலே பதியக் கேட்டுக் கொள்கிறேன்:)!

    ReplyDelete
  3. வெற்றி பெற்றவர்கள் & பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. pangu petra anaivarukkum vaalthukkal. :)

    matra padangal meethaana ungal karuthukkalai pagirveerkalaa? chumma kurai niraikalaith therinjukkalaamnuthaan :)

    ReplyDelete
  5. ஆத்தா நான் பாஸாயிட்டேன் :-))

    நன்றி

    வெற்றிபெற்ற அனைவருக்கும் வாழ்துக்கள் :-))

    ReplyDelete
  6. கடைசி படம் / க்ளாஸ்

    ReplyDelete
  7. வெற்றிபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. மூவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. வெற்றிபெற்ற அனைவருக்கும் வாழ்துக்கள்!

    ReplyDelete
  10. Thanks to all. I took 300 pictures of drops but this is one of the best out of 300.
    After lot of confusion I selected this one because this drop seems like one hand lifting the globe from water.
    Picture details: Aperture: f/7.1; Shutter speed: 1/4000; EV:-1; day light and the background is black T shirt

    ReplyDelete
  11. என் படம் தேர்வானதில் இன்ப அதிர்ச்சி :) போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
    படம் குறித்து:
    குளிர் காலம் முடியும் தருவாயில் எடுத்த படம், தண்ணீர் கடும் குளிராக இருந்தது. மற்ற படங்கள் இங்கே:
    http://www.flickr.com/search/?q=natural%20falls&w=74643187@N00

    அன்புடன்,
    மீனாட்சி சுந்தரம்

    ReplyDelete
  12. வெற்றியாளர்களுக்கும், பங்குபெற்றவர்களுக்கும் வாழ்த்துகள்!!!

    ReplyDelete
  13. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.

    (என் படம் டாப் 10லதான் வரலை, டாப் 3லயாவது வந்திருக்கான்னு பாக்க வந்தேன். ஹிஹி..)

    ReplyDelete
  14. ehd; Gjpjhf Nghl;Nlh vLf;f fw;Wf;nfhs;s cs;Nsd;.XU Nfkuh &.10>000f;Fs; thq;f cs;Nsd;.vij thq;fyhk;? jaTnra;J MNyhrid toq;fTk;

    ReplyDelete
  15. வெற்றிபெற்ற அனைவருக்கும் வாழ்துக்கள்!
    கார்த்திக் / Amal AS WELL.

    TJay

    ReplyDelete
  16. @ஆதி

    நான் அனுப்பாத படம் தேர்வாகி இருக்கான்னு பாக்க வந்தேன். ஹி... ஹி.. ஹி...

    ReplyDelete
  17. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  18. வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். படங்கள் உண்மையிலியே பிரமாதமா எடுத்திருக்காங்க. கண்ணுக்கு அழகான விருந்து.

    ReplyDelete
  19. மூன்று படங்களுமே முதல் பரிசுக்கு தகுதியானவை.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  20. விதூஷ், //matra padangal meethaana ungal karuthukkalai pagirveerkalaa? chumma kurai niraikalaith therinjukkalaamnuthaan :)///

    இந்த வாட்டி கொஞ்சம் கஷ்டம்தான். நீங்க கேட்டதால், உங்க படத்தை தேடி கருத்ஸ் சொல்லிடறேன் :)

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff