Thursday, June 24, 2010

2010 ஜூன் போட்டி - விமர்சனம்

6 comments:
 
வணக்கம் மக்கா, இந்த முறை போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் நன்றி. முதல் சுற்றில் தேர்வு செய்ய படாத படங்களை பற்றிய சின்ன அலசல் கீழே, அமைதிச்சாரல் அழகான படம். இந்த படத்தில் குழந்தையின் கால்கள் விடுபட்டுள்ளது. மற்றும் பின்னணில கொஞ்சம் டிஸ்டர்பன்ஸ் இருக்கு. கோபி இது ஒரு நல்ல குரூப் போர்ட்ரைட் ஷாட். ஆனா தலைப்புக்கு ஏற்ற மகிழ்ச்சி குறைவு. பூபதி நல்ல டோன். முன்னாடி இருக்கும் சிறுமி கொஞ்சம் கவனமா பாக்குற மாதிரி இருக்கு. ஹேமா நெருக்கமா frame செய்யப்பட்ட படமா இருக்கு. இடது பக்கம் கொஞ்சம் இடைவெளி விட்டு இருக்கலாம். ஹேமா குழந்தையின் முகத்திற்கு நேராக படம் எடுத்திருந்தால் நன்றாக இருந்து இருக்கும். வள்ளி சிம்ஹன் விதவிதமான வாண்டுகள். ஒரு குழந்தையை தவிர வேற யாரும் சிரிக்க கூட இல்லை கார்த்திகேயன் சிறுவனை மட்டும் frame பண்ணியிருந்தால் அருமையாக இருந்து இருக்கும். கார்த்திகேயன் நல்ல ஒளியமைப்பு. போட்டோவுக்கு போஸ் குடுக்கும் போது சிரிக்கற மாதிரி இருக்கு. நித்தி கிளிக்ஸ் கொஞ்சம் ஹார்ஷ் லைட். சாதாரண காட்சி அமைப்பு. அவரின் கையும் சிறிதளவு விடுபட்டுள்ளது செந்தில் நல்லா இருக்கு. ஆனா தலைப்புக்கு சம்பந்தம் இல்லாமல் இருக்கு கமல் Forced Smile நந்தகுமார் ஆடும், பசங்களும் நல்லா போஸ் குடுக்குறாங்க. ஆனா காட்சி அமைப்பு சாதாரணமா இருக்கு PMT இப்ராஹிம் பையன் போட்டோவுக்கு சிரிக்கிற மாதிரி இருக்கு. பிரியன் சாதாரணமான காட்சி அமைப்பு. வலது பக்கம் கொஞ்சம் இடம் விட்டு இருக்கலாம். ராஜேஷ் நல்ல முயற்சி. சிலருடைய முகம் சரியாக தெரியலை. Light is bit uneven. ராமலக்ஷ்மி நல்ல product ஷாட். மகிழ்ச்சி கொஞ்சம் குறைவு தனுஷ் பசங்க சந்தோஷமா இருக்காங்க. இதுலயும் காட்சி அமைப்பு சாதாரணமா இருக்கு வெங்கட்ராமன் நல்ல போர்ட்ரைட் ஷாட். அவர் கண்ணாடியில் பிளாஷ் பிரதிபலிப்பு சிறிது டிஸ்டர்ப் பண்ணுது. சுகந்தி அந்த glow effect நீக்கினால் இந்த படம் இன்னும் நல்லா இருக்கறமாதிரி தோணுது. glow effect நீக்கிய படம் கீழே. ஆதவா போட்டோவுக்கான சிரிப்பு மாதிரி இருக்கு. Not Spontaneous வின்சென்- நல்ல portrait ஷாட். ஆ.ஞானசேகரன் இதுவும் நல்ல portrait ஷாட். இதிலும் போட்டோவுக்கு சிரிக்கிற மாதிரி இருக்கு. S.M. அன்பு ஆனந்த் க்யுட்டான குழந்தை. நல்ல காட்சி அமைப்பு. சத்யா பையனோட முகத்தில் க்யுட்டான எக்ஸ்ப்ரெஷன். அருண் சக்ரவர்த்தி கொஞ்சம் ஓவர் எக்ஸ்போஸ். கீழே உள்ள பெண் குழந்தையை முழுவதுமாக காட்சி படுத்தி இருக்கலாம். வினோத் பிரசன்னா அழகான சிரிப்பு. மிக அருகில் எடுப்பட்ட படம் போல இருக்கு. கொஞ்சம் distortion இருக்கு. சாய் கார்த்திக் அருமையான காட்சி அமைப்பு. நல்ல ஒளி. அழகான குழந்தை. மகிழ்ச்சியை விட குழந்தை ஆர்வமா காமிராவ பாக்குற மாதிரி இருக்கு. அன்டன் கருப்பு வெள்ளையில் அழகான படம். Nicely Framed. இதிலும் குழந்தை ஆர்வமா காமிராவ பாக்குற மாதிரி இருக்கு. ராஜா செம க்யுட்டான பாப்பு. என்ன பார்வை. ஆனா மகிழ்ச்சி காணோம். மேலும் பாப்பாவின் கைகள் முழுவதுமாக விடுபடாமல் இருந்து இருக்கலாம். மேலே கூற பட்டுள்ள குறைகளில் சில, முன்னேறிய முதல் பத்து படங்களிலும் உள்ளது. அவற்றின் விமர்சனம் மற்றும் முதல் மூன்று படங்களை அடுத்த பதிவில் பார்ப்போம்

6 comments:

  1. சத்யா,சாய்கார்த்திக் , அண்டன் இவர்களோட போட்டோஸ் செம ஷார்ப்...

    ReplyDelete
  2. விமர்சனத்துக்கு நன்றி. பிகாஸாவில் பிற்சேர்க்கை செய்வது எப்படி என்று ஒரு பாடம் நடத்துங்களேன். உபயோகமா இருக்கும்.

    ReplyDelete
  3. thanks for the explanation. very apt.

    ////அந்த glow effect நீக்கினால் ////
    without the glow effect, that picture looks cute, and was a candidate for top10, in my view :)

    ReplyDelete
  4. ///பிகாஸாவில் பிற்சேர்க்கை செய்வது எப்படி என்று ஒரு பாடம் நடத்துங்களேன். உபயோகமா இருக்கும்///

    will find out who can do this and try and get a post done.
    any picasa experts? i know we have Gimp and photoshop experts inhouse.

    ReplyDelete
  5. I remember CVR is a Picasa expert, as seen from his metadata in flickr. Is CVR still on board?

    ReplyDelete
  6. ஆஹா ,என் போட்டோவுக்கு விமர்சனம் வந்து விட்டது. நன்றிங்கோவ்:))
    உண்மைதான் அந்தப் பெண்மட்டும்தான் என்னைப் பார்த்துச் சிரித்தது. அதுவும் கொஞ்சம் வெட்கத்தோடு!!

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff