Sunday, October 31, 2010

புகைப் பட அனுபவங்கள் (2) மையப் புள்ளிகள்

6 comments:
 
திரு கல்பட்டு நடராஜன் அவர்களின் அனுபவங்களின் தொடர்ச்சி (பாகம்1).சாதாரணமாக படங்கள் எல்லாமே நீள்சதுர (Rectangle) வடிவில்தான் இருக்கும்.

படங்களில் மையப் புள்ளிகள் (Focal points) என்று ஒன்று உண்டு. பார்ப்பவரின் கண்கள் அந்தப் புள்ளிகள் இருக்கும் இடத்திற்ககுதான் அதிகமாக இழுத்துச் செல்லப்ப் படும். ஒரு நீள் சதுரத்தில் மேலிருந்து கீழாகவும், இடமிருந்து வலமாகவும் இரண்டு இரண்டு கோடுகள் கிழித்து சம பாகங்களாக வெட்டும் போது அந்த நான்கு கொடுகளும் சந்திக்கும் இடங்களான ஏ,பீ,சீ,டீ. தான் மையப் புள்ளிகள். கீழே உள்ள படத்தைப் பாருங்கள்.



நீங்கள் எடுக்கும் படங்களில் எந்த ஒரு பொருளுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்க நினைக்கிறீர்களோ அதை இந்த நான்கு புள்ளிகளில் ஒன்றின் அருகில் வைத்தால் அது படம் பார்ப்பவரின் கவனத்தை உடனே ஈர்க்கும். அந்த நான்கு புள்ளிகளில் எதன் பக்கத்தில் வைப்பது என்பதை இனி பார்க்கலாம்.

நீங்கள் ஒருவரது இடுப்பிற்கு மேலான படம் (Bust) எடுப்பதாக வைத்துக் கொள்ளுவோம், அதுவும் சிறிதளவு ஒரு பக்கம் திரும்பினாற்போல. அந்தப் படம் அதில் உள்ளவரின் குணாதிசயத்தினை வெளிக் கொணற வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள். அப்போது என்ன செய்ய வேண்டும்?

ஒருவரது முகத்தில் எந்த உறுப்பு அவரை அடையாளம் காட்டும்? கண்கள்தானே? ஆங்கிலத்தில் சொல்வதுண்டு “Your eyes are the most expressive part of your body” என்று. ஆக கண்கள் மையப் புள்ளிகள் இருக்குமிடத்தில் வைத்தால் படம் கவர்ச்சியாக இருக்கும்.

மேற் சொன்ன படத்தின் கண்கள் வலது பாதியில் மேல் புள்ளியின் அருகே வருமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் அவர் தன் வலப்புறம் திரும்பிப் பார்த்திருந்தால். அப்படிச் செய்வதால் படத்தில் உள்ளவரின் முகமோ கண்களோ பார்ப்பதற்கு இடம் இருக்கும். அப்படி இல்லாமல் இடது பாதியின் மேல் புள்ளியின் அருகேவோ, அல்லது கீழ் புள்ளிகள் அருகேவோ கண்கள் வருமாறு வைத்தால் படம் அதன் அழகை இழந்து விடும். படத்தில் இருப்பவர் கண்களோடு, பார்ப்பவரின் கண்களும் படத்தை விட்டு வெளியே போய் விடும். படத்தில் உள்ளவர் அவரது இடது புறமாகத் திரும்பிப் பார்த்து இருப்பாராகில் அவரது கண்கள் பார்ப்பதற்க் ஏதுவாக படத்தின் வலப்புறத்தில் இடம் வரும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

இந்தப் படத்தைப் பாருங்கள்.

(படம் எடுத்தது நடராஜன் கல்பட்டு)

இந்த விதி தனி மனிதர்களின் படங்களுக்கு மட்டும்தான் என்று இல்லை. எல்லாப் படங்களுக்குமே ஓரளவு பொருந்தும்.

இந்த விதிக்கு மேலும் ஒரு விளக்கம் அடுத்த மடலில் தர முயற்சி செய்கிறேன்.

-கல்பட்டு நடராஜன்

6 comments:

  1. வணக்கம்,
    கல்பட்டு நடராஜன் அய்யாவின் கட்டுரை முன்பு CVR எழுதிய rule of thirds பதிவுடன் முரண்படுவதாக தோன்றுகிறதே? பிட் நண்பர்கள் விளக்கினால் நன்றாக இருக்கும்.
    இந்த மாதப்போட்டி என்னாயிற்று நண்பர்களே?

    ReplyDelete
  2. அருமையான பகிர்வு. நன்றி.

    ReplyDelete
  3. வானம்
    எனக்கு வித்தியாசம் ஏதும் இருப்பதாய் தெரியவில்லை.

    என்ன வித்தியாசத்தை உணர்ந்தீர்கள்.


    படத்தின் முக்கிய கரு, இந்த நான்கு புள்ளிகளில் இருக்க வேண்டும் என்பதுதான் நோக்கம்.

    ReplyDelete
  4. @ ab&amp,
    தற்போதைய கட்டுரை subject மையப்புள்ளிக்கு நடுவில் வரச்சொல்வது போலத்தோன்றுகிறது. Rule of thirds மையப்பகுதியை விட்டு சற்றே விலகியிருப்பதை ஆதரித்தது. அதுதான் எனக்கு குழப்பம்.
    பிறகு,
    இந்த மாதப்போட்டி...........??

    ReplyDelete
  5. @வானம்.. இந்த மாதப்போட்டி அறிவிப்பு விரைவில் வெளிவரும்..

    ReplyDelete
  6. sir i bought d300s. but coolfixla vantha result onnu kuda ithula varala,i am vexed sir.i studied all lessons but still waiting for improvement.

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff