Sunday, October 16, 2011

மாதாந்திரப் போட்டியின் முக்கிய விதிமுறை

2 comments:
 
ஒவ்வொரு மாத போட்டி அறிவிப்பின் போது விதிமுறைகளுக்கான லிங்க் கொடுக்கப்படுகிறது. அதில் முதல் விதியே “படங்கள் நீங்களே எடுத்த, உங்களின் சொந்தப் படமாக இருக்க வேண்டும்” என்பதுதான். சென்ற மாதப் போட்டியில் முதல் பரிசாக அறிவிக்கப்பட்ட தினேஷின் படம் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டிருப்பதைப் பின்னூட்டத்தில் விஜய் சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து அப்படம் நீக்கப்பட்டு முறையே விஸ்வநாதனின் படம் முதலாமிடத்தையும், சூர்யாவின் இடம் இரண்டாவது இடத்தையும் பெறுகின்றன. வாழ்த்துக்கள் விஸ்வநாதன், சூர்யா! [திருத்தப்பட்ட பதிவு இங்கே.] அக்கறையுடன் சுட்டிக் காட்டிய விஜய்க்கு நன்றி.

தினேஷ் இதை தெரிந்து செய்திருப்பாரானால் பிட் குழுமம் தன் கடுமையான கண்டனங்களை இங்கு பதிவு செய்கிறது. அறியாது செய்திருப்பின் எச்சரிக்கிறது. ஜூன் போட்டியிலும் ஒருவர் இப்படிக் கொடுத்திருந்ததாக விஜய் குறிப்பிட்டிருந்தார். பிட் குழுமம் வாசகர்கள் மேல் நம்பிக்கை கொண்டே போட்டிகளை நடத்துகிறது. அவை உங்களின் திறமையை ஊக்குவிக்க என்பதை மனதில் கொண்டு இது போன்ற தவறுகள் இனியும் நேராமலிருக்க ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

2 comments:

  1. இந்த மாதம் மட்டுமல்ல.. ஒவ்வொரு மாதமும் நிறைய போட்டோக்கள் இப்படித்தான் வருகின்றன..
    கடந்த 4 மாதங்களில் பிட் போட்டியில் தேரந்தெடுக்கப்பட்ட படங்களும் நல்ல தீர்வு இல்லை என்பதே என் கருத்து ...

    ReplyDelete
  2. நாங்கள் அறிந்து பல வருடங்களாக ஆர்வத்துடன் போட்டிகளில் பங்கு பெற்று பிட் ஒரு குடும்பம் என சொல்லத் தக்க வகையில் வாசகர் ஒத்துழைப்பு இருந்தே வருகிறது. எப்போதேனும் ஓரிருவர் இப்படி இருந்திருக்கலாம். தவறு நேருகையில் தங்களுக்குத் தெரிய வரும் பட்சத்தில் ஆதாரத்துடன் எங்கள் கவனத்துக்குக் கொண்டு வரலாம்.

    மற்றபடி போட்டி முடிவு அந்தந்த மாத நடுவரின் தனிப்பட்ட ரசனையைச் சார்ந்ததே என்பதைப் பலமுறை சொல்லி விட்டுள்ளோம்.

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff