Monday, September 26, 2011

செப்டம்பர்'11 - போட்டி முடிவுகள்

20 comments:
 
எல்லாருக்கும் வணக்கம்.


ஒரு வழியா இந்த மாதப் போட்டி முடிவுக்கு வந்தாச்சு. எதிர்பார்த்ததை விட நல்ல படங்கள் நிறைய இந்த மாத போட்டிக்கு வந்திருந்தன. இந்த மாதம் பதினைந்தாம் தேதி வரை எல்லாருக்கும் கண்ணில் காண்பதெல்லாம் எழுத்து வடிவத்திலும் எண் வடிவத்திலும் தெரிந்திருக்கும். காணும் பொருட்களை ஒரு புதிய பரிணாமத்தில் கண்டிருப்பீர்கள். போட்டி முடிந்தாலும் அது போல் காண்பவற்றை அழகாகப் படமாக்க முயலுங்கள்.

சரி... இனி முடிவுக்கு வருவோம்.

[முதலிடம் பெற்றதாக அறிவிக்கப்பட்ட தினேஷின் படம் விஜய் அக்கறையுடன் சுட்டிக்காட்டிய பின்னூட்டத்தின் பேரில் நீக்கப்படுகிறது. நன்றி விஜய்.]

புதிய வரிசைப்படி:
முதலிடம் - விஸ்வநாதன் (e)

ஆஹா சுப்பர்... சிறிய எழுத்து 'e'-ஐ அழகாகப் படமாக்கியிருக்கிறார். அந்த shallow DOF படத்தை மிக அழகாக்கி காட்டுகிறது. அதில் மெலிதாக தெரியும் அந்த கோடுகள் அழகு. வாழ்த்துகள் விஸ்வநாதன்.இரண்டாமிடம் - சூர்யா (X)
-------------------------------------

சூர்யாவின் இந்த படம் பார்த்தவுடனே எனக்கு பிடித்து விட்டது. நேர்த்தியாக படம்பிடிப்பது கொஞ்சம் கடினம்தான்... இருந்தாலும் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார். வாழ்த்துகள். அதில் தெரியும் X என்னவோ சிறிய அளவில் இருந்தாலும் அதுவே கருப்பொருள், நம் கண்கள் அதைத் தவிர வேறெங்கும் செல்வதில்லை. மேலேயும் கீழேயும் கொஞ்சம் க்ராப் செய்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.மூன்றாமிடம் - நித்தி(A)

பாரிஸ் நகரின் இந்த பிரபல கோபுரத்தை நேர்த்தியாக படம் பிடித்து அதில் 'A' என்ற எழுத்தை தெளிவாகப் பதிவாக்கியிருக்கிறார். கருப்பு வெள்ளை நல்ல தேர்வு. பின்னால் தெரியும் கட்டிடம் சிறிய அளவில் கவனச்சிதறல் ஏற்படுத்துகிறது. இருந்தாலும் அருமை. வாழ்த்துகள் நித்தி.சிறப்புக் கவனம் பெற்ற படங்கள்:

ரவி (O)
மேலே வெட்டுப்பட்டுள்ள வளையங்களும் முழுமையாகஇருந்திருந்தால் நிச்சயம் முதல் முன்றில் வந்திருக்கும்.


சதீஷ் (O)
இன்னும் ஷார்ப்பா இருந்திருக்கலாம்.

போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.மற்ற படங்களின் மீதான எனது கருத்துகளை போட்டிக்கான ஆல்பத்தில் பதிந்துள்ளேன். கருத்துகள் யாவும் எனது மனதில்அந்த கணத்தில் தோன்றியவையே.

நன்றி.

20 comments:

 1. Congrats to the winners. Nice selection!

  ReplyDelete
 2. வெற்றி பெற்ற அனைவருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!!

  ReplyDelete
 3. Can you please give your comments for all the photographs? Would be a learning experience for us.

  Congrats to all the winners!!!!

  ReplyDelete
 4. Thanks a lot...congrats to the other winners :)

  ReplyDelete
 5. வெற்றி பெற்ற & சிறப்பு கவனம் பெற்ற‌ சக நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...என்னுடைய படத்தை மூன்றாவதாக‌ தேர்ந்தெடுத்த நடுவர் அவர்களுக்கும் என்னுடைய நன்றி....வாழ்த்து தெரிவித்த என்னுடைய FLICKR நண்பர்களுக்கும் நன்றி...

  ReplyDelete
 6. Congrats to all the winners :-)

  வாழ்த்துக்கள் ஆனந்த் :-)

  ReplyDelete
 7. Congrats to winners! Good selection Naufal!

  ReplyDelete
 8. PIT தள நண்பர்களுக்கு வணக்கம். இந்த பின்னூட்டம் இந்தத் தலைப்பிற்கானதல்ல என்பதை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன்.
  புகைப்படக்கலை குறித்து பலரிடம் எனது சந்தேகங்களை கேட்டபோது மேலும் கீழுமான பார்வையைத் தவிர வேறெர்ன்றும் கிடைக்கவில்லை.
  ஆனால் நமது PIT தளம் எவ்வளவு தகவல்களை என்போன்ற கத்துக்குட்டிகளுக்குக் கற்றுத்தருகிறது. தனக்குத்தெரிந்துவிட்ட ஒன்றைக்கூட
  மற்றவர்களுக்குச் சிறிதும் சொல்லித்தர விரும்பாத நபர்களுக்கு மத்தியில் PIT தள நண்பர்களை நான் பாராட்டுவதால் மட்டும்
  என் மனது நிறைந்துவிடப்போவதில்லை,

  எனது தற்போதைய சூழலில் PIT தள நண்பர்களின் வழிகாட்டுதல் தேவைப்படுகிறது. நான் புதிதாக SLR கேமரா வாங்க திட்டமிட்டுள்ளேன். NIKON D40 என்ற
  கேமரா குறைந்த விலையிலான கேமரா என்றும் சிறப்பபானதும் என்றும் நமது தளத்தில் கூறப்பட்டிருந்தது. விசாரித்ததில் அந்த
  மாடல் கேமரா தற்போது வருவதில்லை என்று கூறுகிறார்கள். அதற்கு இணையாக NIKON D3100 என்ற மாடல் கேமராவைக் குறிப்பிடுகிறார்கள்.
  அந்த மாடல் கேமராவை வாங்கலாமா?. சுருங்கக் கேட்டால் PITன் பார்வையில் NIKON D3100...?
  //
  சிவராஜன்

  ReplyDelete
 9. @siva rajan.. மிக்க நன்றி...

  உண்மை தான் nikon d40 தற்போது வருவதில்லை... அது பழையது ஆகிவிட்டது... இதற்கப்புறம் பல மாடல்கள் வந்து போய் விட்டது..

  இப்போதைக்கு அதற்கு இனையாக d3100 என்பதும் சரி தான்.. நீங்கள் தாராளமாக இதையே வாங்கவும்... மிக நல்ல கேமரா..nikon d40 ஐ விட nikon d3100 பல வகைகளில் முன்னேற்றம் உள்ள கேமரா தான்..

  nikon 3100 ஐ தைரியமாக வாங்கலாம்.. வாழ்த்துக்கள்.

  -கருவாயன்

  ReplyDelete
 10. @siva rajan.. மிக்க நன்றி...

  உண்மை தான் nikon d40 தற்போது வருவதில்லை... அது பழையது ஆகிவிட்டது... இதற்கப்புறம் பல மாடல்கள் வந்து போய் விட்டது..

  இப்போதைக்கு அதற்கு இனையாக d3100 என்பதும் சரி தான்.. நீங்கள் தாராளமாக இதையே வாங்கவும்... மிக நல்ல கேமரா..nikon d40 ஐ விட nikon d3100 பல வகைகளில் முன்னேற்றம் உள்ள கேமரா தான்..

  nikon 3100 ஐ தைரியமாக வாங்கலாம்.. வாழ்த்துக்கள்.

  -கருவாயன்

  ReplyDelete
 11. http://www.dpreview.com/reviews/nikond3100/page19.asp

  ReplyDelete
 12. கருவாயன் அவர்களுக்கும் வருன் ஷங்கர் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். விரைவில் ஒரு குழந்தை கேமராவை கையில் வைத்துக்கொண்டு ஏகப்பட்ட கேள்விகளைக் கேட்டு உங்களை தொந்தரவு செய்யப்போகிறது... PIT என்னும் நடைவண்டியின் துணைகொண்டு...

  ReplyDelete
 13. நீண்ட நாட்களுக்குப் பின்னர் PIT வலைப்பக்கம் வந்தேன்... முதல் பரிசு பெற்றிருக்கும் நாய்க்குட்டியைப் பார்த்ததும் இதே புகைப்படத்தை முன்னர் எங்கோ பார்த்தது போலிருந்தது... www.tineye.com இலும் Google images இலும் தேடிப் பார்த்தபோது சந்தேகம் உறுதிப்பட்டது.
  இதோ உதாரணத்திட்கு ஒரு சுட்டி: http://www.fonds-decran.com/wallpapers/vodafone-pug-dog-2-669.html
  Pug dog என்று Google images இல் தேடிப் பார்த்தால் இதே புகைப்படம் நிறைய வலைப்பக்கங்களில் இருக்கும்.

  ReplyDelete
 14. @ Vijay,
  அக்கறையுடன் சுட்டிக் காட்டியிருப்பதற்கு மிக்க நன்றி. போட்டி முடிவு மாற்றப்பட்டு விட்டது. பிட் குழுமம் தன் வாசகர்கள் மேல் நம்பிக்கை கொண்டே போட்டிகளை நடத்துகிறது. நடந்திருக்கும் செயல் மிகுந்த வருத்தம் தருகிறது. குழுமம் இந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்த தினேஷ் மீது கடுமையான கண்டனங்களை பதிவதுடன் விரைவில் அதைத் தனிப்பதிவிலும் தெரிவிக்கும்.

  ReplyDelete
 15. நன்றி விஜய்.

  தினேஷ்,

  இது நீங்கள் எடுக்காத படம் என்ற போதில், இது அப்பட்டமான மோசடி அல்லவா ? அப்படியாயின் உங்கள் செயல் மிகவும் கண்டிக்கத் தக்கது. பக்கத்து வீட்டுக் குழந்தையை எடுத்து கையில் வைத்துக் கொண்டு தன் குழந்தை என்னும் செயல் போன்றது.

  ReplyDelete
 16. இப்படியான கீழ்த்தரமான செயல்கள் கண்டிக்கப்பட வேண்டியதே.
  இதற்கு முன்னரும் ஒருவர் ஜூன் 2011 போட்டியிற்கு இணையத்தில் சுட்ட புகைப்படத்தை அனுப்பியிருந்தார் (வானமே எல்லை(குணா)). அப்போது நல்லவேளையாக தீர்ப்பு வழங்கப்பட முன்னர் கண்டுபிடிக்கப்பட்டது.
  EXIF தகவல் இல்லாது வரும் புகைப்படங்களைப் பரிசிற்கு தெரிவு செய்ய நேர்ந்தால் ஒருமுறை tineye.com இல் தேடிப் பார்க்கலாமோ?

  ReplyDelete
 17. @Vijay, tineye.com பற்றிய தகவல் மிகவும் பயனுள்ளது..
  tineye Chrome extension பயன்படுத்துவதற்கு இன்னும் சுலபம் https://chrome.google.com/webstore/detail/haebnnbpedcbhciplfhjjkbafijpncjl

  ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff