Thursday, September 8, 2011

‘ஒளி’ வருவதும் போவதும்.. - Knowing Light - கார முந்திரி IV

5 comments:
 
பொருட்கள் மீது வெளிச்சம் விழுகிறது இல்லையா? வெளிச்சம் என்கிறது பல ஃபோட்டான்கள் அடங்கிய ஓடை. (ஃபோட்டான்ன்னா ஒளித்துகள்) அனேகமா பொருட்கள் நகருவதில்லை. அதனால வெளிச்சம்தான் செயலோட இருக்கிறதா நாம நினைக்கிறோம். இப்படி நினைக்கிறதால ஒரு காட்சியை சரியா பார்க்க தவறிடறோம்.

பொருட்கள் மேலே ஃபோட்டான்கள் படும் போது 3 விஷயம் நடக்கலாம்.


1. ‘ரைட் போலாம்’ ன்னு ஃபோட்டான்களை அதோட வழியில அனுப்பிடலாம். இது ஒளி ஊடுருவல். -ட்ரான்ஸ்மிஷன்.

2. ‘வாவா’ன்னு உள்ள வாங்கி வெச்சுக்கலாம். உள் வாங்கல் - அப்சார்ப்ஷன்.

3. . ‘எனக்கு வேண்டாம்’ ன்னு திருப்பி அனுப்பிடலாம். ரிஃப்லெக்ஷன்.

ஒளி ஊடுருவல் ஆச்சுன்னா அந்த பொருளோட போட்டோவை பார்க்கிறதுல அர்த்தமில்லை. ஏன்னா ஒண்ணுமே தெரியாது! ஒளி ஒரு பொருள் மேலே பட்டு சிதறி நம் கண்ணுக்கு வந்தாதான் அந்த பொருள் தெரியவே தெரியும். ஊடுருவின ஒளி நேரா போய்கிட்டே இருந்தா நம் கண்ணுக்கு வராது - அது நம் கண் முன்னாடியே இருந்தால் ஒழிய! அதனால போட்டோ சம்பந்தமா இதுக்கு முக்கியத்துவம் இல்லைன்னு ஒதுக்கிடலாம்.

ஒளி ஊடுருவல் பொருளுக்கு செங்குத்தா இருந்தா அது பாட்டுக்கு நேரா போயிடுது. ஒரு கோணத்துல விழுந்தா அது வளைக்கப்படும். 'சற்றே தாமதித்து செல்லும் பிள்ளாய்' ன்னு தாமதப்படுத்தறதால பின்னால் வர போட்டான்கள் மோதி கீழே தள்ளி வளைக்கும் (இதான் ரிப்ராக்ஷன்) . இந்த பொருளை விட்டு வெளியேறும்போது திருப்பி பழைய வேகம் /திசையிலேயே போக ஆரம்பிச்சுடும். இப்படி வளையறதை வைத்துதான் காமிராவோட லென்ஸ் செய்து இருக்காங்கன்னு நமக்குத் தெரியுமே! இப்படி ஒளி வளையும் போதும் வெளியேறும்போதும் 100% அப்படியே நடந்து கொள்ளாது. கொஞ்சம் சிதறிடும். அதனாலதான் நாம் இந்த மாதிரி பொருட்களை பார்க்க முடியுது.

அதிகமாகவே சிதறும்படியா ஒளியை ஊடுருவ அனுமதிக்கற பொருட்கள் ஒளியை பல கோணங்களிலேயும் திருப்பி விட்டுடும். மெலிதான காகிதம், வெள்ளை கண்ணாடி (ப்ராஸ்டட் க்ளாஸ்),வெள்ளை அக்ரிலிக்; இதெல்லாம் இப்படி நடந்துக்கும். இது ஒளி மூலம் பத்தி யோசிக்கிறப்ப முக்கியம். ஒரு சின்ன ஓளி மூலம் (light source) இருந்தாலும் இப்படிப்பட்ட பொருட்களை இடையே சொருகி ஒளி மூலத்தை பெரிசாகவும், அதனால் மென்மையாகவும் (ஸாப்ட் லைட்) ஆக்கலாம். ஸ்ட்ரோப் லைட் முன்னால வைக்கிற வெள்ளை டிப்யூஷன் ஷீட், சூரியனை மறைக்கிற வெள்ளை மேகங்கள் எல்லாம் இதுக்கு உதாரணங்கள்:

போட்டோ எடுக்கப்படுகிற பொருள் இது போல ஒளியை மடக்குகிறது சாதாரணமா பிரச்சினை இல்லை.

ஒளியை உள் வாங்கலாம்ன்னு சொன்னோம் இல்லையா? உள்வாங்கப்பட்ட ஒளி திருப்பியும் பார்க்கக்கூடிய ஒளியா நமக்கு கிடைக்காது. வழக்கமா இது சூடாக மாறிடும். அதனால இதை போட்டோ எடுக்க முடியாது. பக்கத்திலேயே இருக்கிற ஒளியை உள்வாங்காத ஒரு பொருளோட ஒப்பிட்டு பார்த்தாதான் இதை 'பார்க்க' முடியும்! அதாவது வித்தியாசத்தை மட்டுமே பார்க்கலாம்.

கருப்பு பொருட்கள் நிறைய ஒளியை உள்வாங்கிடும் என்பதால அவற்றை போட்டோ எடுக்கறது கடினம்! கருப்பு வெல்வெட், ஃபர் இவற்றை போட்டோ எடுத்து பாருங்க!

மற்ற பொருட்கள் கொஞ்சம் ஒளியை உள்வாங்கி மற்றதை வெளியே விட்டு விடும். சிலதுன்னா சில அலைவரிசை ஒளியை. அதான் வண்ணம் என்பதும். ஊதா முதல் சிவப்பு வரை இருக்கிற அலை வரிசைகளில எதை திருப்பி அனுப்புதோ அந்த வண்ணமாக அந்த பொருளை நாம் தெரிஞ்சுக்கிறோம். பச்சை அலைவரிசை தவிர மீதி எல்லா அலை வரிசையையும் உள்வாங்கிட்டா பச்சை அலைவரிசை ஒளி மட்டும் வெளியே வரும்; பொருளும் பச்சையா தெரியும்.

அதே போல எவ்வளவு திருப்பி அனுப்புது என்பதை பொருத்து அந்த பொருளோட சாயலையும் நாம் தெரிஞ்சுக்கிறோம். அதிகம் திரும்பினா வெளிரியும்
குறைவா திரும்பினா அழுத்தமாவும் சொல்கிறோம்:


படம் 1 - # திவாஜி
பிற படங்கள்: # ராமலக்ஷ்மி


காரமுந்திரி I.
காரமுந்திரி II
கார முந்திரி III

-திவா
‘சித்திரம் பேசுதடி’
http://chitirampesuthati.blogspot.com/


5 comments:

  1. படங்கள் நிறைவாகவும்,கண்ணுக்கு இதமாகவும் இருக்கின்றன.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. மேகங்கள் வெள்ளையா இல்லையே!
    நல்ல படத்தேர்வுகள்!

    ReplyDelete
  3. நன்றி திவா சார். நானும் அதே யோசனையுடனேயே அதை வெளியிட்டேன். வேறு கிடைக்கிறதா பார்க்கிறேன்:)!

    ஒளி பற்றிய விளக்கங்கள் அருமை. தொடருங்கள்.

    @ ராஜ நடராஜன்,
    மிக்க நன்றி.

    ReplyDelete
  4. நல்ல பதிவு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. வணக்கம், தங்களின் தமிழில் புகைப்பட கலை பதிவு பற்றி வலைச்சரத்தில் (http://blogintamil.blogspot.com/2011/11/blog-post_17.html) அறிமுகம் செய்து இருக்கிறேன். நேரம் கிடைக்கும் பொழுது சென்று பார்க்கவும்.

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff