என் கிட்ட பாயிண்ட் அண்ட் ஷூட் கேமரா தான் இருக்கு நல்ல ஜூம் இல்லை... என்னால நிலாவை எல்லாம் எடுக்க முடியுமான்னு கவலைப் படறவங்களா நீங்க... நான் வழக்கமா சொல்றது தாங்க. பென்சில் எது இருந்தாலும், அது நல்ல ஓவியங்களை தானா வரைவது இல்லை. அது யார் கையில் இருக்கிறது, அது எப்படி பயன்படுத்தப் படுகிறது என்பதில் தான் விஷயமே இருக்கிறது.
சரி இந்தப் பதிவு உங்களுக்காகத் தான். மேலே தொடர்ந்து படிங்க
இதுல ஆர்ச்சோட ட்யூப்லைட்டும் தெரியுற படம் இருக்கே அது ஜூம் இல்லாமலே அப்படியே எடுத்தது.
ட்யூப்லைட் பக்கத்துல இருக்கிறது 4 எக்ஸ் ஜூமோட எடுத்தது. சரிங்களா.
சரி. இப்ப வீட்ல பசங்க விளையாட வச்சிருப்பாங்களே பைனாகுலர் .. அதை சுட்டுக்கோங்க. அதன் ஒரு பகுதிய கேமராவோட விரிந்து நீளும் பகுதிமேல் இணைச்சு பிடிச்சுக்கோங்க. ஆச்சா.. இப்ப அப்படியே பாத்தீங்கண்ணா... வட்டமா நடுவில 11:35 காமிக்கிற படம் ஜூம் எதுவும் இல்லாம + பைனாகுலர் அட்டாச் பண்ணது.
10,9,8 அப்படின்னு நம்பர் காமிச்சுட்டு இருக்கிற படம் - 2 எக்ஸ் ஜூம்+பைனா குலர்ல எடுத்தது.
வெறும் கடிகாரத்தின் கைகள் மட்டும் காமிக்கிற படம் இருக்கில்லையா அது 4 எக்ஸ் ஜூம்ல + பைனாகுலர் அட்டாச்மெண்ட்டோட எடுத்தது.
இதோட ஜூம் அளவு என்னன்னு தெரியுமா? அப்ராக்ஸிமேட்டா 400 எம் எம் கணக்கு. :)
நான் நிலவை எடுத்தது 300 எம் எம் அளவு. http://www.flickr.com/photos/iyappan/6482039409/
முக்கியக் குறிப்பு. எஸ்.எல்.ஆர் அளவுக்கு அதே தரம் கிடைக்காதுன்னாலும் ஏற்கக் கூடிய தரத்தில் கிடைக்கும். அதை விட முக்கியமா படம் எடுக்கும் போது கை கொஞ்சம் அசங்கினாலே ப்ளர்ராகிடும். கடைசி படம் ( கடிகாரத்தின் கைகள் மட்டும் கொண்டது ) அதற்கு உதாரணம். கொஞ்சம் நல்ல குவாலிட்டி வேணும்னா 150 - 200 க்கு கிடைக்கும் பைனாகுலர் பர்மா பஜார்ல தேடி வாங்குங்க. ப்ளாஸ்டிக் லென்ஸ் இல்லாம கண்ணாடி லென்ஸா இருக்கும். குவாலிட்டியும் நல்லா வரும்.
இப்ப சொல்லுங்க. பாயிண்ட் அண்ட் ஷூட் வச்சும் நீங்க பட்டைய கிளப்ப முடியுமா முடியாதா ?
சூப்பர் டிப்ஸ்...
ReplyDeleteஅருமையா சொல்லி காட்டியிருக்கீங்க
ReplyDeleteசூப்பர்
ஆஹா.. ஜூப்பர் டிப்ஸுக்கு நன்றி.
ReplyDeleteஅருமை.
ReplyDeleteவாழ்த்துகள்.
Wow..!! Great Tip.!
ReplyDeleteஉங்களாலே முடியாதுன்னு ஒண்ணு உண்டாங்க!
ReplyDeleteஎங்களுக்கும் சொல்லிக்கொடுத்துட்டிங்களே
நன்றிங்க.
puthusa kathuka virumburavangaluku easy na valli ena etha pin patranum.satharane camera kuda vanga vasathi ilatha vanga epudi kathukarathu etachum vali iruka ethachum easya kathukura books iruka?
ReplyDeletei recently see this website it was superp i take 2,3 short film as a cinematographer.some peoples are appreciats the camera work in that film bt i am studying BE.i have not have technical knowledge about photography. how to i know about basic matters about photography
ReplyDeleteputhusa kathuka virumburavangaluku easy na valli ena etha pin patranum.satharane camera kuda vanga vasathi ilatha vanga epudi kathukarathu etachum vali iruka ethachum easya kathukura books iruka?
ReplyDeleteu great
ReplyDelete// பென்சில் எது இருந்தாலும், அது நல்ல ஓவியங்களை தானா வரைவது இல்லை. அது யார் கையில் இருக்கிறது, அது எப்படி பயன்படுத்தப் படுகிறது என்பதில் தான் விஷயமே இருக்கிறது//
ReplyDeleteWell said!
Yes Sir.same point and shoot thaan naangalum.:)
ReplyDeleteTry try try again.
Thanks for the good points.
பட்டைய கிளப்புற ஐடியா!!!
ReplyDeleteI've tried moon with an 25 mm telescope and got a nice picture. Now I'll try with a bino also.
ReplyDeleteI have 70-300mm Tamron Lens. But can't capture Moon to this much close. Athu eppadinga?
ReplyDelete@ Venkat,
ReplyDelete70-300mm லென்ஸுக்கு நிச்சயம் நல்லா வரணுமே. இந்தப் பதிவு உங்களுக்கு உபயோகமாகுதா பாருங்க:
http://photography-in-tamil.blogspot.in/2011/07/blog-post.html
nice intro
ReplyDelete