Tuesday, December 27, 2011

துகளா அலையா இரண்டுமா - ஒளி - காரமுந்திரி VIII

5 comments:
 
போலரைஸ்ட் டிரக்ட் ரிப்லக்ஷன் வெளிச்சம்..

இதுல எப்பவுமே படம் பொருளை விட வெளிச்சம் கம்மியாத்தான் வரும். ஏன்னு புரிய போலரைஸ்ட் வெளிச்சம் பத்தி புரியணும்.

ஒளி துகளா இல்லை அலையான்னு பெரிய சர்ச்சை பல நாட்கள் இருந்தது. அப்புறம் அது ரெண்டுமாவும் இருக்கும்ன்னு ஒத்துகிட்டாங்க! எந்த அலை போகும் திசைக்கு செங்குத்தா அதிருமோ அது போலரைஸ் ஆகும்.

ஒலி அப்படி இல்லை, அது போகும் திசையிலேதான் அதிருது. அதனால அது போலரைஸ் ஆகாது!

மேலே இது பத்தி படிக்கிற ஆர்வம் இருந்தா இங்கே போய் படிக்கலாம்: http://en.wikipedia.org/wiki/Polarised_light#Photography

ரெண்டு பசங்க ஒரு கயிறை வெச்சுச்கொண்டு விளையாடறாங்க. ஒரு பையன் கயித்தை சும்மா பிடிச்சுகிட்டு இருக்கான். இன்னொருவன் அதை சுழற்றிக்கிட்டே இருக்கான்.
கயிறு சுருள் சுருளா இருக்கிறதை பார்க்கலாம். இப்ப இவங்க நடுவில ஒரு கேட் இருக்கு. கேட்ல செங்குத்தா சட்டங்கள் இருக்கு. என்ன ஆகும்? கயிறு பக்க வாட்டிலே ஆடுறது கேட்டை தாண்டி நின்னுடும். மேலே கீழே மட்டும் கயிறு போய் வரும். குறுக்கு சட்டங்களும் இருந்தா? மேலே கீழே ஆடுவதும் நின்னுடும்.

இதே போல போலரைஸ்ட் வெளிச்சமும்.

முதல்ல போலரைஸ்ட் பில்டர் பத்தி பார்க்கலாம். ஒரு பில்டர் வழியா ஒரு பொருளை பார்க்க பில்டர் ஒரு திசையில் அதிரும் வெளிச்சத்தை மட்டும் அதன் வழியா அனுப்பும். மற்ற திசைகளில வரதை அனுப்பாம பிடிச்சு வெச்சுக்கும். இன்னொரு பில்டரை அதன் மேலே 90 டிகிரில வெச்சா ஒரு வெளிச்சமும் வராது. இது சட்டங்கள் வழியே கயிறு ஆடுகிறா மாதிரிதான். இருக்கட்டுமே, என்ன இப்ப? நான் இப்படி பில்டர் எல்லாம் உபயோகப்படுத்த மாட்டேன் னு சொன்னா... இயற்கையிலேயே சிலது இப்படிப்பட்ட வெளிச்சத்தை ரிப்லக்ட் பண்ணுது!

ஒரு ஏரி தண்ணீர் பரப்பு, பெயின்ட் பண்ண உலோகம், பிளாஸ்டிக் – இதெல்லாமே இப்படி செய்யக்கூடும்! நாம எடுத்த ஏரித்தண்ணீர் பரப்பு ஏன் டல்லடிக்குதுன்னு இப்ப தெரியுதா? (இதனாலேயோ என்னவோ வலையில உதாரணம் காட்ட படம் தேடினா கிடைக்கலை!)

எல்லா ரிப்லக்ஷன் மாதிரி இந்த போலரைஸ்ட் ரிப்லக்ஷனும் பெர்பெக்ட் இல்லை. கொஞ்சம் டிப்யூஸ் ரிப்லக்ஷன், கொஞ்சம் போலரைஸ் ஆகாத ரிப்லக்ஷன் எல்லாமும் இருக்கும். பளபள பரப்புகள் அதிக போலரைஸ்ட் ரிப்லக்ஷன் கொடுக்கும். அதுக்குன்னு சொர சொர பரப்பு கொடுக்காதுன்னு இல்லை.

பொருள் கருப்பாவோ இல்லை ஒளி ஊடுருவறதா இருந்தாலோ போலரைசெஷன் அதிகமா இருக்கும். பளபள கருப்பு பிளாஸ்டிக் ஷீட் போலரைஸ்ட் வெளிச்சத்துக்கு நல்ல உதாரணம். இது புரிஞ்சா நாம் தேவையானா பில்டரை சரியா பயன்படுத்த முடியும்.

போலரைஸ் ஆன டைரக்ட் ரிப்லக்ஷனும் போலரைஸ் ஆகாத டைரக்ட் ரிப்லக்ஷனும் ஒரே மாதிரி கூட தெரியலாம். போட்டோ எடுக்கிரவங்க பின்ன எப்படி வித்தியாசம் கண்டு பிடிக்கிரதுன்னு கேட்கலாம். முக்கியமான வித்தியாசம் போலரைஸ் ஆனது வெளிச்சம் குறைவா இருக்கும் என்கிறது. பொருள் மின்கடத்தியா இருந்தா அது போலரைஸ்ட் ரிப்லக்ஷனா இருக்காது. பொருள் மின் கடத்தாத இன்சுலேஷன் சமாசாரம்ன்னா அது போலரைஸ்ட் ஆ இருக்கும்.

உதாரணமா பிளாஸ்டிக், செராமிக், கண்ணாடி...
images black plastic ன்னு வலையில தேடி பாருங்க. எல்லாமே எவ்வளோ டல் அடிக்குதுன்னு தெரியும்!
சும்மா ஒரு உதாரணத்துக்கு:

பொருள் முகம் பார்க்கும் கண்ணாடி மாதிரி தெரிஞ்சா அது சாதா டைரக்ட் ரிப்லக்ஷன்.
பளபளப்பான பொருள் ஆனா முகம் பார்க்கிற மாதிரி இல்லை.... ம்ம்ம் பாலிஷ் பண்ண தோல், மரம் ... இது கொஞ்சம் தமாஷ்! காமிரா இதை ஒரு 40-50டிகிரி கோணத்துல பாத்தா அது போலரைஸ்டா இருக்கும்! மத்த கோணங்களில போலரைஸ் ஆகாத டிரக்ட் ரிப்லக்ஷன்! நிச்சயமான வழி போலரைஸ்ட் பில்டரை உபயோகிச்சு பாக்கிறது. வித்தியாசம் இல்லைன்னா அது போலரைஸ்ட் இல்லை.
முழுக்க பாலிஷ் செய்த ஷூ! பளபளப்பா தெரிவது டிரக்ட் ரிப்லக்ஷன். கோணம் மாறியதால டல்லா தெரியறது போலரைஸ்ட்!

வெளிச்சமே இல்லாம போச்சுன்னா அது போலரைஸ்ட்; வெளிச்சம் குறைஞ்சா அது போலரைஸ்ட் ப்ளஸ் போலரைஸ்ட் இல்லாத கலவை.

சிலர் வெளிச்சம் போலரைஸ்டா இருக்கணும், அதை உபயோகிச்சு தான் நினைத்தபடி படம் எடுக்கனும்ன்னு விரும்பலாம். அதுக்கு லென்ஸ் மேலே வைக்கிற பில்டரை நம்பி பிரயோசனம் இல்லை. அது வர வெளிச்சத்தைதானே மாத்தமுடியும்? பில்டரை வெளிச்சத்தின் மூலத்தில வைக்கலாம். இதன் வழியா வெளிச்சம் போய் பொருள் மேலே விழும் போது அது போலரைஸ் ஆகி இருக்கும். இதை லென்ஸ் மேலே வைக்கிற பில்டர் மாத்தும். ஆச்சரியமான விஷயம் என்னான்னா போலரைஸ்ட் வெளிச்ச மூலம் ஸ்டுடியோல மட்டும் இல்லை. இயற்கையாவே கிடைக்குது! மேகமே இல்லாத திறந்த வானம் அருமையான போலரைஸ்ட் ஒளி மூலம். வானம்ன்னு ஒண்ணுமே நிஜமா இல்லைதானே? அது ஒரு மாய தோற்றம். விண்வெளியில சிதறுகிற வெளிச்சம் இப்படி தெரிகிறது. அதனால இது ஒரு ஒளி மூலமா இருக்கிறது ஆச்சரியம் இல்லை. இப்படிப்பட்ட வானத்தை நோக்கி வைக்கிற பொருளை படம் எடுக்கும்போது போலரைஸ்ட் லைட் பில்டர் வேலை செய்யலாம்.

வலது பக்கம் போலரைஸ்ட் பில்டர் போட்டு எடுத்த படம். நன்றி: விக்கிமீடியா

தியரியை செயல்படுத்த...

நல்ல படப்பிடிப்பு காமிராவை சரியா போகஸ் செய்து சரியா எக்ஸ்போஸ் செய்யறது இல்லை. வெளிச்சத்துக்கும் படம் எடுக்கிற பொருளுக்கு ஒரு உறவு இருக்கு. இது சரியா அமையனும். நம்ம வாழ்க்கை போலவே! மேட் பார் ஈச் அதர். பொருளுக்கு தகுந்த வெளிச்சம் , வெளிச்சத்துக்கு தகுந்த சப்ஜெக்ட்! இந்த பொருத்தம் என்கிறது ஆளுக்கு ஆள் வேறுபடும். அது போட்டோக்ராபரோட கலைநயம். ஒளியையும் அது பொருட்களை எப்படி பாதிக்குது என்றும் அவர் சரியா புரிஞ்சு கொண்டு இருந்தார்ன்னா அது நல்லாவே அமையும்.
போட்டோ என்கிறது ரிப்லக்ஷனோட ஒரு பதிவு என்கிறதால எந்த மாதிரி ரிப்லக்ஷன் இந்த பொருளுக்கு வேணும்ன்னு முடிவு செய்து அதை சாதிக்கணும். ஸ்டூடியோ ன்னா இது ஒளியை சரி செய்வது. இல்லை வெளியே இயற்கையா எடுக்கறதுன்னா கொஞ்சம் பிரச்சினைதான். காமிராவை சரியான இடம் பாத்து வைக்கணும். சரியான நேரத்துக்கு காத்து இருக்கனும். சூரியன் வெளியே வருமா? மேகங்கள் இருக்கா? அது கருப்பா வெள்ளையா? இப்படி பல கேள்விகளுக்கு சரியான விடை வேணும். நம்ம வீட்டு எதிரே இருக்கிற பூங்காவில் இருக்கிற சிலைன்னா இப்படி நாள் கணக்கில காத்து இருக்கலாம். எப்பவும் சாத்தியப்படுமா? இது கஷ்டம்தான். அதனால் இருக்கிற ஒளி எப்படி இருக்கு, அது என்ன செய்ய முடியும்ன்னு கவனிக்கறவங்க நல்ல போட்டோ எடுக்கலாம்.




காரமுந்திரி I.
காரமுந்திரி II

5 comments:

  1. அருமையான தகவல்கள் :) நன்றி திவா ஜி

    ReplyDelete
  2. விரிவான விளக்கம். தொடருங்கள்.

    ReplyDelete
  3. அண்ணே ! என் உச்சி மண்டையில கிற்றுங்குது... UV FILTER -ஐ IN DOOR போட்டோக்களில் பயன் படுத்தலாமா? படம் மங்கியது போல் தெரிகிறது... Advice Please!

    ReplyDelete
  4. //அண்ணே ! என் உச்சி மண்டையில கிற்றுங்குது... UV FILTER -ஐ IN DOOR போட்டோக்களில் பயன் படுத்தலாமா? படம் மங்கியது போல் தெரிகிறது... Advice Please!///

    யுவி ஃபில்டர் போட்டா மங்காதே படம் ? நல்லா பாருங்க அது போலரைசரா இருக்கப் போகுது. யுவி ஃபில்டர்ங்கறது அல்ட்ரா லைட் வராம தடுக்க ப்ளைன் கிளாஸ் மேல கோட்டிங்க் குடுத்திருக்கிற ஃபில்டர் அவ்ளோ தான்.

    இண்டோர்ல அது வெறும் ப்ளைன் க்ளாஸ் தான்.

    ReplyDelete
  5. கமண்டிய எல்லோருக்கும் நன்றி! குறிப்பா தொ.நு தகவல் கொடுத்த ஜீவ்ஸ்க்கு!

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff