Wednesday, May 9, 2012

ஒரு ஒளிப்படக்கலைஞரின் மூன்று தகைமைகள் + ஒரு தகைமை

11 comments:
 
ஃபோட்டோகிராஃபருக்கு என்ன தகைமைகள் வேண்டும்? ஒரு காமிரா இருந்தா ஓகே. இதுதான் பலபேரின் நினைப்பு. காமிரா இருக்கிறவங்க எல்லாம் ஃபோட்டோகிராஃபராக முடியாது. சிலர் காமிரா வச்சிருப்பாங்க. ஆனாலும் எடுக்கிற படங்கள் மேல திருப்தி இல்ல. புதுசா பெரிய பட்ஜட்டுக்கு ஒரு காமிரா வாங்கினாலும் படம் திருப்தியாக வராது. ஏன்னா ஒரு ஃபோட்டோகிராஃபருக்கு மூன்று தகைமைகள் வேணும்.

பார்வை
நீங்க பார்க்கும் பார்வைதான் முக்கியம். பார்வை நல்லா இருக்கலாம். ஆனா விடயத்தை எப்படி பார்க்கிறிங்க என்பதுதான் முக்கியம். ஐந்து பேர் சுற்றுலாவுக்காக ஓர் அழகிய இடத்திற்கு செல்கிறார்கள். ஐந்து பேரும் போட்டோ எடுக்கிறாங்க.  ஒருவர் ஆட்களைப் பார்க்கிறார். இன்னுமொருவர் நீல வானத்தைப் பார்க்கிறார். மற்றவர் நெளிந்து செல்லும் சாலையைப் பார்க்கிறார். அடுத்தவர் சாலையில் போகும் வாகனத்தைப் பார்க்கிறார். ஐந்தாமவர் இந்த நான்கு பேரையும் பார்க்கிறார். யாருடைய போட்டோ நன்றாக வரும்?

உங்க நண்பர்களோட சேர்ந்து நீங்களும் போட்டோ புடிச்சிருக்கலாம். உங்க போட்டோ  மட்டும் "சபாஷ்" என்று மற்றவர்களால் பாராட்டப்பட்டிருக்கலாம். ஏன் பாராட்டப்பட்டது? காரணம் நீங்கள்  எல்லோரையும் போல் பார்க்காததுதான்.

ஓளிப்படத்துறையில் மேலானவர், குறைந்தவர் என்ற பேதம் இல்லை. ஆனால் தனித்துவமான ஒளிப்படக்கலைஞர்கள்தான் உள்ளனர். ஒளிப்படத்துறையில் பார்த்தல் என்பது இன்றியமையாதது. உங்கள் ஒளிப்படம் நீங்கள் யார் என்பதையும், நீங்கள் எப்படி உலகைப் பார்க்கின்றீர்கள் என்பதையும் தெரிவிக்கின்றது.

கருவிகள்

காமிரா ஓர் அருமையான கருவி. சிலவேளை உங்கள் கண்கள் காணாத அழகை காமிரா கண்டுவிடும். அதில் பாவிக்கப்படும் பலவித லென்சுகள் வெவ்வேறு காட்சிகளை காட்டக்கூடியன. வைட் அங்கிள் லென்ஸ் (wide angle lens), டெலிசூம் லென்ஸ் (telephoto lens), மக்ரோ லென்ஸ் (macro lens) என்ற வேறுபட்ட லென்சுகள் ஒரே விடயத்தை பலவிதத்திலும் அழகாகக் காட்ட வல்லன.

வெறுமனே கருவி உங்களை ஒரு சிறந்த ஃபோட்டோகிராஃபராக மாற்றாது. அதனைக் கையாளும் உங்கள் திறமை மற்றும் உங்கள் பரிசோதனை முயற்சிகள் உங்களை ஒரு சிறந்த ஃபோட்டோகிராஃபராக்கும்.

சென்றடைதல்
படம்: ராமலக்ஷ்மி

ஃபோட்டோ புடிக்கிறது பூட்டி வைப்பதற்கல்ல, மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு. பலவேளைகளில் இதனால் எந்த வருவாயும் கிடைக்கப்ப போவதில்லை. ஆனால் மகிழ்ச்சி, நான் கண்ட அழகை மற்றவர்களுடன் பகிர்வதிலுள்ள மகிழ்ச்சி, மற்றவர்கிடமிருந்து கிடைக்கும் பாராட்டினால் மகிழ்ச்சி. (திட்டு வாங்கினாலும் மகிழ்ச்சியாயிருங்கள். ஏனென்றால் அது திருத்திக் கொள்ள கிடைக்கும் மாத்திரை)

இன்றைய தொழில்நுட்ப உலகு பல வசதிகளைக் கொண்டது. வலைப்பூ, ஃப்ளிக்கர், பேஸ்புக் என ஏராளம் வசதிகள். பகிர்ந்து கொள்ளவும், மகிழ்ந்து கொள்ளவும், உங்கள் ஒளிப்பட அறிவை விருத்தி செய்து கொள்ளவும் உதவும்.

+1
இந்த மூன்று தகைமைகள்தான் அதிகம் பரிந்துரைக்கப்படும் விதிமுறைகள் என்று சொல்லாம். ஆனாலும் ஒன்று விடப்பட்டதாய் என்னுள் ஓர் எண்ணம். ஆகவே, நான் சேர்த்துக் கொண்டது ஆர்வம். என்னதான் இருந்தாலும் ஆர்வம் இருக்கனும். ஆர்வம் அதிகமாக அதிகமாக தேடலும், அதனோடு கூடிய புலமையும் ஏற்படும். நீ எதை நினைக்கின்றாயோ, நீ அதுவாகின்றாய்!


காமிராவ கையில எடுத்தவங்க அதைக் கைவிட்டதாக எனக்குத் தெரிஞ்ச சரித்திரமில்ல. இறைவன் அழகைப் படைத்திருக்கிறான். அதைக் காண இரண்டு கண்கள் கொடுத்திருக்கிறான். அதைப் பகிர்ந்து கொள்ள உங்களையும் என்னையும் காமராவோட அனுப்பியிருக்கிறான்.

எனக்கு மட்டுந்தான் +1 ஐடியா வரும் எங்கிர நிபந்தனையெல்லாம் கிடையாது. ஐடியா உள்ளவங்க காமன்ட் பெட்டியில பதிஞ்சிடுங்க.

Anton

11 comments:

  1. அந்த முதல் விஷயம் தவிர (அதுவும் இருக்குன்னு நினச்சிக்கிட்டுத்தான் இருந்தேன்.) மற்ற எல்லாம் இருக்குங்க! ஆனாலும் பார்வையில் ஏதோ ஒரு கோளாறு இருக்கும் போலும்!

    ReplyDelete
  2. உங்கள் தளத்தை தொடர்ந்து படித்து வருகிறேன்.இதை படித்தன் மூலம் எனக்கும் புகை படம் எடுக்க வேண்டும் என்ற ஆர்வம் வந்துள்ளது.ஒரு சந்தேகத்தை தெரிந்து கொள்ள விளைகிறேன்.தங்களால் முடிந்தால் இதை பற்றி ஒரு பதிவாக போட்டால் பயனாக இருக்கும்..

    அது என்னவென்றால் DSLR காமிர வாங்கும் போது அதற்கு தனியாக லென்ஸ் வாங்கும் போது எதை,எதை கவனத்தில் கொண்டு வாங்க வேண்டும் .அதில் உள்ள வகையை பற்றி ஒரளவு தங்கள் பதிவின் மூலம் அறிந்துள்ளேன்.ஆனால் அதில் AF, AFS போன்ற குறியீடுகள் உள்ளன அல்லது வேற ஏதாவது குறியீடுகள் உள்ளனவா ? .இந்த குறியீடுகள் எதை விளக்குகின்றன.எதை பார்த்து லென்ஸ் வாங்க வேண்டும்.இதன் விவரம் விளக்குங்கள்.

    ReplyDelete
  3. அருமையான கருத்துக்கள். அதிலும் குறிப்பாக +1 மிகமிக முக்கியமானது.

    ReplyDelete
  4. அருமையான பதிவு! என் கிட்ட பல பேர், நீங்க DSLR கேமரா வச்சிருக்கீங்க அதான் போட்டோ நல்லா வருதுன்னு சொல்லுவாங்க. சில விஷயத்துக்கு DSLR தேவைப்படும் ஆனால் நல்லா படம் எடுக்க DSLR தான் வேணும்னு இல்லை. இப்போவெல்லாம் நம்ம அலைபேசியிலேயே அற்புதமா படம் எடுக்க முடியுது. ஐயோ கேமரா எடுத்துகிட்டு வரலியேன்னு இப்போவெல்லாம் நினைக்கறதே இல்லை. கீழே உள்ள ஆல்பம்ல இருக்குற படம் எல்லாம் நான் அலைபேசியில எடுத்தது தான்:

    https://plus.google.com/photos/107126563387388206880/albums/5740905083710707345?banner=pwa

    ReplyDelete
  5. @arif.A.. நீங்கள் குறிப்பிட்டுள்ள AF , AF-S இதெல்லாம் nikon லென்ஸ்களில் தான் எழுதப்பட்டிருக்கும்..

    AF , AF- S இரண்டும் auto focus ஆகக்கூடிய லென்ஸ்கள்..ஆனால் எல்லா nikon கேமராக்களிலும் இல்லை...

    பொதுவாக ஒரு லென்ஸ் auto focus ஆக வேண்டுமென்றால், கேமராவில் ஒரு motor இருக்க வேண்டும். அந்த motor அமைப்பதற்கு சற்று செலவு ஆகும் என்கிற காரணத்தினால் பட்ஜெட் கேமராக்களில் அது இருக்காது..

    இதனால் AF என்று போட்டிருக்கும் லென்ஸ்களை, அந்த வகை பட்ஜெட் கேமராக்களில் பயன்படுத்தும் போது, அது auto focus ஆகாது.. அதில் manual focus தான் பயன்படுத்த முடியும்.

    இதில் AF-S என்று போட்டிருக்கும் லென்ஸ்கள் மட்டும் அனைத்து nikon DSLR லும் auto focus ஆகும்..அதே சமயம் silent ஆகவும் auto focus ஆகும்..இது ஏனென்றால்,auto focus ஆகக்கூடிய motor என்பது லென்ஸிலேயே வடிவமைக்கப்பட்டிருக்கும்.. இதனால் கேமராக்களில் auto focus motor இருக்க வேண்டிய தேவையில்லை.

    இதில் AFS என்று போட்டிருக்கும் லென்ஸ்கள் சற்று விலை கூடுதலாக இருக்கும் (AF lens களுடன் ஒப்பிடும் போது மட்டும்).

    இது தான் அவ்வகை லென்ஸ்களின் வித்தியாசம்..

    இப்பொழுது வருகின்ற அனைத்து லென்ஸ்களும் AF-S என்று தான் வருகின்றன.. எனவே புது லென்ஸ் வாங்கும் போது அது பற்றி அதிகமாக கவலைப்பட தேவையில்லை...

    -கருவாயன்

    ReplyDelete
  6. +1 டைமிங்.

    எல்லாமே சில சமயம் கண நேரத்தில் நடந்துவிடும். அந்த டைமிங்கில் ஷாட்டை முடித்திடனும். இது சிலசமயம் ஒத்துவராது என்றாலும் அந்த கணநேரத்திற்காக பல போட்டோ கிராபர்கள் நாட்கணக்கில் காத்திருப்பார்களாம்.

    ReplyDelete
  7. அருமையான பதிவு.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    நன்றி அம்மா.

    ReplyDelete
  8. அற்புதமான பதிவு.... என்னைப் போல் ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கு மிகவும் உபயோகமான தகவல்... நன்றி...

    ReplyDelete
  9. அருமையான பதிவு..நன்றி ...

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff