Saturday, November 3, 2012

நவம்பர் 2012 போட்டி அறிவிப்பு

17 comments:
 
நண்பர்களுக்கு வணக்கம்!

இம்மாத போட்டிக்கான தலைப்பு மரங்கள்/மரம் .

மண்ணிற்கும் மனிதர்களுக்கும் அளப்பரிய பலன்களை தரும் மரங்கள் இம்மாதம் உங்களுக்கு வெற்றியும் தரவிருக்கிறது. இயற்கையின் அழகுகளில் /அதிசயங்களில் ஒன்றான மரங்களை நீங்கள் அழகாக படம் பிடித்து அனுப்ப வேண்டும்.

மாதிரிப்படங்கள்:
#1 நவ்ஃபல்


#2 நவ்ஃபல்

#3 நவ்ஃபல்

#4 நவ்ஃபல்

#5 ராமலக்ஷ்மி


#6 ராமலக்ஷ்மி

#7 ராமலக்ஷ்மி

#8 ராமலக்ஷ்மி


#9 ஆன்டன் க்ரூஸ்

# 10 சர்வேசன்

போட்டி விதிமுறைகள் இங்கே. விதிமுறையில் கேட்டுக் கொண்டும் பலர் படங்களை பெரிய அளவுகளிலேயே அனுப்பி வருகிறீர்கள். இதனால் சென்ற முறை பல படங்கள் ஆல்பத்தில் தானாக அப்லோட் ஆக முடியாத சூழல் ஏற்பட்டது. விதிமுறையைக் கடைப்பிடிக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

படங்கள் அனுப்பக் கடைசித் தேதி 20 நவம்பர் 2012.

மாதமிருமுறை வெளியாகும் தமிழ் இணைய இதழ் அதீதம். ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதியையொட்டி வருகிற அதன் இரண்டாம் இதழின் ஃபோட்டோ கார்னரில், நம் PiT போட்டியில் வெற்றி பெறுகிற முதல் ஐந்து படங்கள் இனி (நவம்பர் போட்டியிலிருந்து) வெளியாகும். முடிவுகள் அறிவிப்பான PiT பதிவின் url-வுடன், அதீதத்தில் அவை தனித்தனிப் பதிவுகளாகவும் இதழ் முகப்பின் Header Slide Show-விலும் இடம் பெறும். வெற்றி பெறுகின்றவர்களுக்குத் தரும் இன்னொரு அங்கீகாரமாக இதைக் கருதுகிறோம்.*** 

17 comments:

 1. அனைத்தும் அருமை...

  பிடித்தது : 2,3 மற்றும் 8

  ReplyDelete
 2. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/7.htmll) சென்று பார்க்கவும்...

  நன்றி...

  ReplyDelete
 3. பங்கு பெறப் போகும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 4. ம்....... மரமா...? சுயேச்சை வேட்பாளர் மாதிரி மனம் தளராமல் வந்துவிட வேண்டியதுதான். :))

  ReplyDelete
 5. அருமையான படங்கள். நன்றி

  ReplyDelete
 6. அருமையான தலைப்பு.மரத்தைப் படம் எடுக்கலாம் .ஓடாது.வாழ்த்துகள்.

  ReplyDelete
 7. அழகான படங்களைக் கொடுக்கப்போகும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 8. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும்
  உங்களது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
  "தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"
  இனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள்
  எல்லாம் கைகூடி வந்து
  என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்..
  தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்

  ReplyDelete
 9. என்னப்பா நம்ம படத்த காணோம் !

  ReplyDelete
 10. நவம்பர் மாதத்துக்கான 'மரங்கள்' தலைப்புக்கான என்னுடைய பங்களிப்பை அனுப்பியுள்ளேன்!

  ReplyDelete
 11. நான் அனுப்பிய படம் இதுவரை ஆல்பத்தில் அப்டேட் ஆகவில்லையே?!

  ReplyDelete
 12. பலரும் தொடர்ந்து பெரிய அளவிலேயே படங்களை அனுப்பியிருப்பதால் இந்த முறையும் ஆல்பத்தில் சேர முடியாமல் நிறைய படங்கள் விட்டுப் போயிருக்கின்றன. விரைவில் பிரச்சனை சரி செய்யப்பட்டு இங்கே பின்னூட்டத்தில் தெரிவிக்கப்படும்.

  ReplyDelete
 13. நான் நேற்று படம் அனுப்பினேன். படத்தின் பெயர் Raveen.jpg. ஆனால் ஆல்பத்தில் இல்லை:(

  ReplyDelete
 14. பெரிய அளவுப் படங்களால் பிகாஸாவின் கொள்ளளவு நிரம்பி விடவே அனைத்து ஆல்பங்களும் தற்போது வேறு ஐடிக்கு மாற்றப்பட்டுச் சேமிக்கப்பட்டுள்ளன.

  இம்மாதப் போட்டிப் படங்கள் அனைத்தும் டவுன்லோட் செய்யப்பட்டு ஒவ்வொன்றாக மீண்டும் வலையேற்றம் செய்யப்பட்டுள்ளது குழுவினரால். மேலும் சேராதிருந்த 20 படங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

  யார் படமேனும் விட்டுப் போயிருப்பின் பின்னூட்டத்தில் இன்றிரவுக்குள் தெரிவியுங்கள்.

  படங்களுக்கு இதுவரை வந்த கமெண்ட்ஸ் முந்தைய ஆல்பத்துடன் சென்று விட்டது. விருப்பமானவர் மீண்டும் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்:
  https://picasaweb.google.com/111715139948564514448/201205#

  இந்த நிலை தொடராதிருக்க... உங்கள் கவனத்திற்கு:

  இருபது பேரின் படங்கள் இடம்பெறக் கூடிய அளவை ஒருவரது படமே எடுத்துக் கொள்கிறது பெரிய அளவில் அனுப்புவதால்.

  எப்படி அளவைக் குறைக்கலாம் என்பதையும் இந்தப் பதிவில் விளக்கியிருக்கிறோம்: http://photography-in-tamil.blogspot.in/2012/04/blog-post_15.html

  அதை வாசித்தபின்னரும் சிலருக்கு செய்யத் தெரியாது போகலாம். செய்யத் தெரிந்தவர்களேனும் சிரமம் பாராமல் அளவைக் குறைத்து அனுப்பலாம் அல்லவா?

  ஒரு வேண்டுகோளாகவே ஒவ்வொரு முறையும் இதை வலியுறுத்தி வருகிறோம்.

  தொடர்ந்தும் இதே போன்ற அளவுகளிலேயே போட்டிப் படங்கள் இருக்குமாயின், மூன்று மாதங்களுக்கொரு முறை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரியில் மாற்றம் கொண்டு வர வேண்டிய சூழல் ஏற்படும். பலர் கவனியாமல் பழைய முகவரிக்கே அனுப்ப நேரிடும். இதைத் தவிர்க்க உங்கள் ஒத்துழைப்பு அவசியமாகிறது.

  -PiT குழு.

  ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff