Tuesday, January 1, 2013

ஜனவரி 2013 - போட்டி அறிவிப்பு

18 comments:
 
PiT நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். PiTக்கு ஆதரவளித்து பங்களிப்பையும் அளிக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றீஸ்.

2012ல் உலகம் அழியவில்லை என்றாலும், நம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுளைப் பார்த்தால், நாம் அழிவை நோக்கி மெல்ல மெல்ல சென்று கொண்டிருக்கிறோம் என்றே தோன்றுகிறது. இயற்கை வளங்களை அழிப்பதில் துவங்கி, சம மனிதனை மதிக்காத சூழ்நிலை வரை, நாம் வாழ்வை அணுகும் முறை சீர்கேட்டை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறது.

இயன்றவரை, 2013ல், நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும், சுற்றுச் சூழலுக்கும் பங்கம் இல்லாதவரை, நம் அனைவரின் வாழ்விலும் சிறு சிறு மாற்றம் உண்டாக்குமாறு   கேட்டுக் கொள்கிறேன்.

இனி, இந்த மாதத்தின் போட்டிக்கு போவோமா?

தலைப்பு: பிடித்ததில் பிடித்தது
அதாகப்பட்டது, உங்கள் கைவசம் உள்ள படங்களில், உங்களுக்கும் மெத்தப் பிடித்த படத்தை போட்டிக்கு அனுப்பலாம். கைவசம் இருப்பது திருப்திகரமாய் இல்லையானால் புதிதாய் பிடித்தும் அனுப்பலாம்.
இதுவரை PiT போட்டிகளுக்கு அனுப்பப்படாத படமாய் இருக்க வேண்டும்.

கடைசித் தேதி: ஜனவரி 20.
மற்ற விதிமுறைகள்: இங்கே

1) சர்வேசன் (பழனி 2 கோடைகானல்)
Palaru? (near Palani Hills)


2) Ramalakshmi
ALERT


3) An&
1+1+1


4) MQNaufal


5) Anton


==============

நீங்கள் அனுப்பும் பெரிய அளவுப் படங்களால் பிகாஸாவின் கொள்ளளவு அடிக்கடி நிரம்பி விடுகிறது. இதனால் பலரது போட்டிப்படங்கள் தானாக ஆல்பத்தில் சேர இயலாது போகிறது. இருபது பேர்களின் படங்கள் இடம்பெறக் கூடிய அளவை ஒருவரது படமே எடுத்துக் கொள்கிறது. இது தொடர்ந்தால் மூன்று மாதங்களுக்கொரு முறை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரியில் மாற்றம் கொண்டு வர வேண்டிய சூழல் ஏற்படும். பலர் கவனியாமல் பழைய முகவரிக்கே அனுப்ப நேரிடும்.

இந்தக் குளறுபடிகள் நேராமல் தவிர்க்க.. உங்கள் ஒத்துழைப்பு அவசியமாகிறது.

ஆரம்ப நிலையில் இருக்கும் சிலர் தவிர்த்து செய்யத் தெரிந்தவர்கள் சிரமம் பாராமல் அளவைக் குறைத்து அனுப்புங்கள். இதைப் போட்டி விதிமுறையிலும் தெரிவித்திருக்கிறோம். ஒரு வேண்டுகோளாகவே வலியுறுத்தியும் வருகிறோம்.

எப்படி அளவைக் குறைக்கலாம் என்பதையும் இந்தப் பதிவில் விளக்கியிருக்கிறோம்: http://photography-in-tamil.blogspot.in/2012/04/blog-post_15.html

கற்றுக் கொள்ளுங்கள். கற்றதை செயல்படுத்திப் பழகுங்கள். ஏனெனில், PiT போட்டிகள் உங்களை மெருகேற்றிக் கொள்ளவும் பல சர்வதேசப் போட்டிகளில் கலந்து கொள்ள உதவும் பயிற்சிக் களமாகவும் இருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். அது போன்ற பெரிய போட்டிகளில் படத்தின் அளவு விதிமுறையில் குறிப்பிட்டபடி இருக்காவிட்டால் படங்கள் விலக்கப்பட்டு விடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்றுவதை ஒருவழக்கமாகக் கொள்வது உங்களுக்கே பயன் தரும்.

அன்புடன்
PiT குழு.


==============

18 comments:

 1. நல்ல முயற்சி வாழ்த்துக்கள்

  ReplyDelete

 2. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

  2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


  அன்புடன்
  மதுரைத்தமிழன்

  ReplyDelete
 3. Sent my picture for the contest

  ReplyDelete
 4. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

  ReplyDelete
 5. sent mine for the competiition

  ReplyDelete
 6. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

  ReplyDelete
 7. i sent my photo for this month contest..

  Wish you happy pongal to all Pit Friends..

  ReplyDelete
 8. @ Satishkumar,

  https://picasaweb.google.com/111715139948564514448/2013#

  PiT தளத்தின் வலப்பக்கம் முதலாவதாக இடம் பெற்றிருக்கும் slide show போட்டி ஆல்பமே.

  தங்களுக்கும் PiT குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்:)!

  ReplyDelete
 9. hi,
  I have sent my picture for the competition. but i couldn't see my pic? y? Shelton.jpg

  ReplyDelete
 10. இதுவரை கொடுத்த தலைப்புகளில் இந்த பிடித்ததில் பிடித்தது தான் உலக மகா கஷ்டம்:(

  காக்கைக்குத் தன் குஞ்சு பொன்குஞ்சு.

  நாங்கள் காக்கைகள்.

  ஒரு படம் அனுப்பியுள்ளேன் இருத்தலை உரைக்க:-)

  ReplyDelete
 11. நானும் அனுப்பினேன் சேந்துச்சோ சேரலையோ போட்டிக்கான படங்களிலே:) ரொம்பக் கஷ்டம்ப்பா. இந்தப் போட்டி:)

  ReplyDelete
 12. இம்மாதப் போட்டிக்கான என்னுடைய பங்களிப்பை அனுப்பியிருக்கேன்.

  ReplyDelete
 13. இந்த மாத போட்டிக்கு ஒரு புகைப்படத்தை அனுப்பியிருக்கிறேன் : Sridhar.jpg. இது என்னுடைய முதல் முயற்சி!

  ReplyDelete
 14. போட்டிக்கு படம் அனுப்பிய அனைவர்க்கும் நன்றி. டாப்10 கூடிய விரைவில்.

  ReplyDelete
 15. போட்டி முடிவுகளும், டாப்10ம் விரைவில் அறிவிக்கப்படும்.
  பங்கு பெற்ற அனைவருக்கும் நன்றீஸ்.

  ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff