Wednesday, January 22, 2014

Soft Light - Blend Mode (பாகம் 3)

6 comments:
 
வணக்கம்..

சென்ற பாகங்களில் புகைப்படக்கலைஞர்கள் அறிந்துகொள்ளவேண்டிய 3 Blend Modeகளைப்பற்றி பார்த்தோம்.பழைய இருபாகங்களை காணாதவர்கள் பாகம் 1 மற்றும் பாகம் 2 ஐ பார்த்துக்கொள்ளவும். நாம் ஏற்கனவே Multiply மற்றும் Screen Blend Mode களைப்பற்றி பார்த்தோம்.இன்று மூன்றாவது Blend Modeடைப்பற்றி பார்க்க இருக்கிறோம். அது Soft light/Overlay Blend Modeகளாகும். ஏன் நான் இவ்விரண்டையும் தனித்தனியாக குறிப்பிடாமல் ஒன்றாகவே குறிப்பிடுகிறேனென்றால் Soft light ன் சற்று அதிக்கப்படியான வெளியீடுதான் Overlay ஆகும்.உங்கள் புகைப்படங்களைப் பொறுத்து சிலஇடங்களில் Soft light ம் சில இடங்களில் Overlay யும் பயன்படும். எனவேதான் நான் இரண்டையும் ஒன்றாகவே குறிப்பிடுகிறேன்.

 சரி, Multiply வெள்ளை நிறத்தோடும்,Screen கருப்பு நிறத்தோடும் தொடர்புடையதாக விளக்கம் அளித்திருந்தேன்,அதேபோல இந்த Soft light ஆனது 50% Gray நிறத்துடன் தொடர்புடையது.கீழேயுள்ள படத்தைப்பாருங்கள் இந்த படத்தின் லேயரை நான் Soft light Blend Mode க்கு மாற்றும் போது என்ன ஆகிறது என பாருங்கள் 50% Gray நிறம் காணாமல் போகும்.ஆம் இது 50% Gray நிறத்தை இந்த Soft light மற்றும் Overlay Blend Modeகள் Transparent செய்கின்றது மேலும் Darkஐ இன்னும் Darkகாகவும் Bright ஐ இன்னும் Bright டாக காட்டும் தன்மையுடையது.
எனவே இதனை நம் புகைப்படங்களோடு ஒப்பிடுகையில் இந்த Soft light/Overlay பயன்படுத்தி படங்களில் எங்கு வெளிச்சம் தேவையோ அங்கு வெளிச்சத்தையும் எங்கு Darkness தேவையோ அங்கே Darkness ஐ கூட்டிக்கொள்ள பயன்படுகிறது. பொதுவாக புகைப்படக்கலைஞர்களுக்கு இந்த Soft light/Overlay ஒரு வரப்பரசாதமாகும்.ஆம், ஒரு முகத்தின் உணர்ச்சிகளை ஒரே மாதிரி flat_ஆக இல்லாமல் கொஞ்சம் இருளும் ஒளியும் கலந்து காட்டுவதற்கு இதனைப் பயன்படுத்துவார்கள்.அதற்குதானே போட்டோஷாப்பிலும்/கிம்ப்பிலும் Burn/Dodge டூல்கள் இருக்கின்றனவே என கேட்பதும் எனக்கு புரிகிறது எனினும் இந்த முறையில் நாம் பிரஷ் டூலைக்கொண்டே செய்வதுடன் Processம் Non-destructive ஆக நடக்கின்றது என்பதும் இதன் சிறப்பு. மேலும் நாம் செய்த Process பிடிக்கவில்லையென்றாலும் தனிப்பட்ட லேயரை மட்டுமே delete செய்துகொள்ளலாம் என்பதும் இதன் சிறப்பு. சரி கீழேயுள்ள படத்தைப்பாருங்கள் இது நான் கருப்புவெள்ளை யில் Highkey க்காக கேமராவிலேயே சற்று Overexposed ஆக எடுத்த படம்.
சரி இதனை எப்படி Soft lightல் சரி செய்யலாம் என பார்க்கலாம்.முதலில் இந்தப்படத்தை போட்டோஷாப்பில் திறந்துகொள்கிறேன்.பின்னர் புதிய லேயர் ஒன்றை உருவாக்குகிறேன்.பின்னர் இந்தலேயரை Soft light Blend Mode உடன் தொடர்புடைய நிறமான 50%Gray வர்ணத்தால் நிரப்புகிறேன்.

என்ன ஆயிற்று பாருங்கள் கீழேயுள்ள படத்தை 50%Gray நிறம் மறைத்துவிட்டது.

இனி,பிரஷ் டூலை தேர்வு செய்யவேண்டும்,அதாவது படத்தின் எந்த பகுதியை Dark செய்ய விரும்புகிறீர்களோ அங்கு கருப்பு நிற பிரஷை தேர்வு செய்ய வேண்டும்.எந்த பகுதியை வெளிச்சம் கூட்ட விரும்புகிறீர்களோ அந்த இடத்திற்கு வெள்ளை நிற பிரஷையும் தேர்ந்தெடுக்கவேண்டும்.இவ்வாறு பிரஷ் செய்யும் முன்னர் பிரஷின் Opacityயை 10 முதல் 30 சதவீதத்திற்க்கு மிகாமல் செட் செய்யவும்(இது உங்களது படத்தின் தன்மையை பொருத்தது). இவ்வாறு Soft light Blend Mode முறையில் சரிசெய்யப்பட்ட படத்தை பாருங்கள்.
 இந்த 3 பாகங்களும் தங்களின் பிற்சேர்க்கைக்கு மிக உதவியாக இருக்கும் என நம்புகிறேன். மீண்டும் மற்றுமொரு கட்டுரையில் உங்களை சந்திக்கிறேன்:)!
***

6 comments:

  1. தனிப்பட்ட லேயரை மட்டுமே delete செய்துகொள்ளலாம் என்கிற தகவலோடு விளக்கத்திற்கு நன்றி...

    ReplyDelete
  2. Happened to see a video demonstrating a photoshop makeover for a music video...Is it possible to do makeovers thru photoshop...if yes can u please demonstrate the same in your forthcoming post :))
    Here goes the video
    http://jezebel.com/singer-gets-a-major-photoshop-makeover-in-music-video-1505054990

    ReplyDelete
  3. @ R.Amudha Hariharan
    //Is it possible to do makeovers thru photoshop//


    போட்டோஷாப்பில் நிச்சயமாக செய்யமுடியும்,Magazines இல் வரும் மாடலிங் படங்கள் பொதுவாக போட்டோஷாப் போன்ற இமேஜ் எடிட்டிங் டூல்களைக்கொண்டே உருவாக்கப்படுகின்றன. சந்தர்ப்பம் அமையும்போது அதுகுறித்த கட்டுரையையும் தருகிறோம் :)

    ReplyDelete
  4. Video clipல makeover பண்ண முடியுமா???

    ReplyDelete
  5. @ Amudha Hariharan:

    மன்னிக்கவும் வீடியோ எடிட்டிங்கில் எனக்கு அவ்வளவாக தெரியாது :(

    ReplyDelete
  6. Vanakkam,
    Sir, I am one among the followers of PiT mail.
    I have not received mail during the past three months. But a new registrations says i am already a member in it.
    By the by " IPPODHU VASIPPAVARGAL" MAY BE TITLED AS "IPPODHU SUVASIPPAVARGAL".
    Because the people view pages on photography subject feel it to be their breath. So the title would be very apt for the persons viewing the page.
    thanks
    pasupathilingam.

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff