சாவல் குருவி என்றொரு குருவி. இதைப் பலரும் தவறாக மரங்கொத்தி என்று
அழைப்பதும் உண்டு. ஆனால் இது உண்மையான மரங்கொத்தி போல மரப் பட்டையைக்
கொத்தித் தன் இரையைத் தேடுவதும் இல்லை. மரத்தைக் கொத்தித் துளை செய்து தன்
கூட்டினை அமைப்பதும் இல்லை. தரையில் சருகுகளுக்கிடையில் கிடைக்கும் புழு
பூச்சிகளைதான் தேடி உண்ணும். ஏற்கெனவே உள்ள மரப் பொந்துகளிலோ அல்லது
சுவற்றில் உள்ள இடுக்குகளிலோதான் தன் கூட்டினை அமைக்கும்.
இந்தப் பறவைக்கு விஞ்ஞான ரீதியாக அளிக்கப் பட்ட பெயர் Upapa Epops. காரணம் இது கத்துவது “ஊப்...ஊப்...ஊப்............ ஊப்...ஊப்...ஊப்...” என்று.
#1
#2
#3
சாவல் குவியின் தலையில் கொம்பு போல இருப்பது கொம்பல்ல.
சிறகுகளே. தனக்கோ, தன் குஞ்சுகளுக்கோ பாம்பு, பூனை, மனிதர்கள் இவைகளால்
ஆபத்து என்று அதற்குத் தோன்றினால் தன் கொண்டைச் சிறகுகளை விசிறி போல
விரித்துக் கொண்டு “சர்...சர்...” என்று கத்தியபடி எதிரியைச் சுற்றி
சுற்றிப் பறக்கும், தாக்கிடும் பாவனையில்.
#4
படத்தில் உள்ள குருவியின் கொண்டை விரிந்திருப்பதின் காரணம் நான் அதனைப் படம் பிடித்திட கூட்டருகே நெருங்கியது தான்.
ஒரு உபரித் தகவல்: சாவல் குருவி இஸ்ரேல் நாட்டின் தேசியப் பறவை.
இந்தப் பறவைக்கு விஞ்ஞான ரீதியாக அளிக்கப் பட்ட பெயர் Upapa Epops. காரணம் இது கத்துவது “ஊப்...ஊப்...ஊப்............ ஊப்...ஊப்...ஊப்...” என்று.
#1
(தரையில் இரை தேடுது ஹூபோ – படம் இணைய தளத்தில் இருந்து) |
#3
(சுவற்றிடுக்கில் கூடு அமைத்த இரண்டு சாவல் குருவிகள்- படங்கள் #3,#4 நடராஜன் கல்பட்டு) |
#4
(மரப் பொந்தில் கூடு அமைத்த சாவல் குருவி – படம் #4: நடராஜன் கல்பட்டு) |
ஒரு உபரித் தகவல்: சாவல் குருவி இஸ்ரேல் நாட்டின் தேசியப் பறவை.
சாவல் குருவியின் இனிய கானத்தை இரசிக்க விருப்பமா?
இங்கே செல்லுங்கள்:
***
Legend Talks..
திரு கல்பட்டு நடராஜன்
-----------------------------------------------------------------------------------------------------------
தொடர்புடைய முந்தைய பதிவுகள்:
- தையல்காரக் குருவி - புகைப்பட அனுபவம் (11)
- “இந்தியாவின் பறவைகள் மனிதன்” டாக்டர் சாலிம் அலி - பறவைகளைப் படம் பிடித்தல் (II) - புகைப்பட அனுபவம் (12)
- பறவை உலகில் ஒரு நெசவாளி - புகைப் பட அனுபவங்கள் (13)
- “வண்ணாத்திக் குருவி” புகைப் பட அனுபவங்கள் (14)
- ஆள் காட்டிக் குருவி - ‘Did you do it bird’ - புகைப் பட அனுபவங்கள் (15)
- பிடித்தேன் நானும் ஆந்தைகள் படங்கள் - என் புகைப் பட அனுபவங்கள் (16)
- “அதோ பார் அங்கே ஒன்று..” - பூ நாரை - புகைப் பட அனுபவங்கள் (17)
- பக்கி என்றொரு பறவை - புகைப் பட அனுபவங்கள் (18)
- வானம்பாடிக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது தெரியுமா? - புகைப் பட அனுபவங்கள் (19)
அழகிய பறவை இனம் ,சிறு வயதில் பார்த்திருக்கிறேன் புகைப் படம் அருமை பாராட்டுக்கள்
ReplyDeleteசுவாரஸ்யமான தகவல்கள்.
ReplyDeleteஅழகு... தகவலுக்கும் நன்றி...
ReplyDeleteஅருமையான படங்கள்.... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
ReplyDelete