Thursday, April 30, 2015

மறுபக்கம் - 2015 ஏப்ரல் மாதப் போட்டி முடிவுகள்

3 comments:
 
அனைவருக்கும் வணக்கம்,

மறுபக்கம் காட்டும் படங்களில் முதற் சுற்றிலிருந்து இறுதி நிலைக்கு வந்துவிட்டோம். பல படங்களில் உள்ள கையெழுத்துக்கள் (signatures) உறுத்தலாக உள்ளன. படங்களில் இருந்து கவனத்தை திசை திருப்புவனவாகவும் இருந்தன. படத்தை உற்று நோக்கும் போது, கவன ஈர்ப்பை கையெழுத்துக்கள் பெறுவது தவிர்க்கப்படுவது நல்லது. எங்காவது ஓரத்தில் சின்னதாக, மங்கலாக இருப்பது நல்லது. இல்லாவிட்டாலும் நல்லதே. பொதுவாக, வெளியில் இடம்பெறும் போட்டிக்களுக்கு கையெழுத்துக்கள் முற்றிலும் தவிர்க்கப்படுகிறது.

பல படங்கள் நன்றாவிருந்தாலும் ஒருசில காரணங்களினால் வெற்றி பெறும் வாய்ப்பைத் தவறவிட்டுள்ளன. வெற்றி பெறும் படங்களை அறியுமுன், மற்றவை வெற்றி பெறாததன் காரணத்தைச் சுருக்கமாகத் தருகிறேன்.

#விஜய்
தலைப்புக்கு நல்ல கருத்தை வழங்குகிறது இப்படம். சுமையைக் கொண்டு செல்லும் முதியவர், மீண்டும் பார்க்க வைக்கும் ஆடை நிறம் என்பன சிறப்புக்கள். வெளிறிய வானம் படத்திற்கு எடுப்பாகவில்லை.





#கார்த்திக் பாபு
பின்புலம், ஒளி பயன்படுத்தப்பட்ட விதம், கருத்து என்பன நன்றாகவிருந்தாலும், படம் வெட்டப்பட்ட முறை (crop) சிறப்பாகவில்லை. நடனக்கலைஞர்களின் கால்கள் வெட்டப்படாது, சிறு இடவெளியுடன் இருந்திருந்தால் சிறப்புப் பெற்றிருக்கும்.


#தனராஜ் ரமேஸ்
நல்ல முயற்சி. Panning சிறப்பாக வந்துள்ளது. வண்டியின் பின்புறம் சேர்ந்து தெரிந்திருந்தால் மேலும் சிறப்பாக தலைப்புக்கு பொருந்தி இருந்திருக்கும். நுட்ப அளவில் நல்ல படம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், கவன ஈர்ப்புக் குறைவாகவுள்ளது.



#புகைப்பட காதலன்
ஓவியம் போன்ற படப்பிடிப்பு. ஆனாலும், கூட்டமைவு (Composition) சிறப்பாக அமைந்திருக்க வேண்டும். படத்திலுள்ள இருவரும் இடப்பக்கம் இல்லாது வலப்பக்கம் இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.



#மதன் மத்தியூ
வானம், நிலம், ஆட்கள் என குறைந்த உள்ளடக்கங்களுடன், ஆடம்பரமற்ற அழகான படம். ஆனாலும், கவன ஈர்ப்பு அதிகமாக இல்லை.



#ஜவாகர் ஜெயபால்
இதுவும் குறைந்த உள்ளடக்கங்களுடன், ஆடம்பரமற்ற அழகான படம். பச்சை வண்ணச்சாயல் (hue) அதிகமாகவுள்ளது. கூட்டமைவை (Composition) இன்னும் சிறப்பாக அமைத்திருக்கலாம். இடப்பக்கமும், கீழ்ப்பக்கமும் இடைவெளியைக் குறைத்திருக்கலாம். படம் வெட்டப்பட்ட (crop) விதமும் நன்றாக இல்லை. படத்தில் அகலம் அதிகமாகவும் உயரம் குறைவாகவும் உள்ளது. இதுவே கூட்டமைவில் (Composition) குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.

#தீபன் சுபா
வித்தியாசமாக, ஓர் ஒழுங்குடன் படம் உள்ளது. ஆனால், கவனயீர்ப்பு அதிகமில்லை.



#சிறி பிரபு
அழகான கருப்பு-வெள்ளைப்படம். வயது, சுமை, பொருளாதார நிலை என்பன மிக அழகாகக் காட்டப்பட்டுள்ளன. இடப்பக்கத்திலுள்ள கோடு, வலப்பக்கம் அரைகுறையாகத் தெரியும் பொருள் என்பன படத்தில் பலவீனங்கள். படம் வெட்டப்பட்ட (crop) முறையிலும் கூட்டமைவிலும் (Composition) சற்றுக் கவனமெடுத்திருக்கலாம். முறையாக வெட்டப்பட்டு, வலப்பக்கத்தில் சற்று இடைவெளியுடன், உருவம் இன்னும் சிறப்பாகத் தெரிய சற்று மாற்றமும் செய்திருந்தால் மிகச் சிறப்பாக வந்திருக்கும்.



3 ஆம் இடம்: பிரேம்நாத்
இயல்பாக, சின்னஞ்சிறார்களை படம் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள். இயல்பாக இருக்கும் சின்னஞ்சிறார்கள்தான் படத்தின் வெற்றிக்குக் காரணம். படம் சற்சதுரமாக காட்சியளிப்பது படத்திற்கு சிறப்பாக அமையவில்லை.



2 ஆம் இடம்: பிரேமிலா
சிறப்பான குவிவு (focusing), அளவான நிறங்கள், இயல்பான தன்மை என்பன சிறப்புக்கள். ஓவியம்போல் காட்சியைப்படமாக்கியதற்கு வாழ்த்துக்கள்.



1 ஆம் இடம்: கார்த்திக்
கூட்டமைவு (Composition), குறிப்பிட்ட சில நிறங்கள், இயல்புத் தன்மை என்பன படத்திற்கு அழகு சேர்க்கின்றன. அழகான படப்பிடிப்புக்கு வாழ்த்துக்கள்.


போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி! 
வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!
***

3 comments:

  1. PIT குழுவினருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்... எனது புகைப்படம் முதல் இடம் பெற்றதில் மிக்க மகிழ்ச்சி. வெற்றி பெற்ற சக நண்பர்களுக்கும், கலந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். நடுவர் குழுவிற்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்...

    ReplyDelete
  2. சிறப்பான படங்கள். வெற்றி பெற்ற அனைவருக்கும் பாராட்டுகள்.

    ReplyDelete
  3. சிறப்பான பட்ங்களை எடுத்த போட்டியாளருக்கும், குழுவிற்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff