Sunday, June 7, 2015

2015 ஜூன் போட்டி + முக்கிய அறிவிப்பு

8 comments:
 
முக்கிய அறிவிப்பு:

ம்மாதப் போட்டிக்கான தலைப்பு என்னவெனப் பார்க்கும் முன் போட்டி விதிமுறைகளில்.., போட்டிக்கான படங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரிகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தைக் கவனத்தில் கொள்ளும்படிக் கேட்டுக் கொள்கிறோம்.

பிகாஸா திடீரென மின்னஞ்சல் மூலமாக ஆல்பங்களுக்குப் படம் அனுப்பும் வசதியை நீக்கி விட்ட படியால் சென்ற மாதம் 15 தேதிக்கு மேல் பலரின் படங்கள் ஆல்பத்தில் தானாக அப்டேட் ஆகாமல் போனது. சிலர் இத்தகவலை பின்னூட்டமிட்டுத் தெரிவிக்கவும், அதன் பிறகு மற்றுமொரு மின்னஞ்சலுக்கு (CC) அனுப்பப்பட்டதில் இருந்து படங்கள் மீட்டெடுக்கப்பட்டு ஆல்பத்தில் சேர்க்கப்பட்டன.

இனி பிகாஸா மூலமாக நேரடியாகப் படங்கள் அப்டேட் ஆகமுடியாத சூழலில் ஃப்ளிக்கருக்கு மாறுகிறது PiT. ஆகையால் இனி படங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: hall84eyes@photos.flickr.com
CC அனுப்ப வேண்டிய முகவரி: photos_in_tamil@yahoo.in
[இங்கும் கவனியுங்கள். cc முகவரி முன்னர் அனுப்பியது போலவே இருக்கிறதே என உங்கள் Contacts_ல் update செய்யாது இருந்து விடாதீர்கள். இது யாஹூ ஐடி. முன்னர் பயன்பாட்டில் இருந்தது ஜிமெயில்.]

விதிமுறைகள் பதிவிலும் இந்த மாற்றத்தை அப்டேட் செய்துள்ளோம். மற்றபடி நீங்கள் அனுப்பும் படத்தின் ஃபைல் பெயரும், மின்னஞ்சலின் சப்ஜெக்டும் வழக்கம் போல உங்கள் பெயரில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

கவனக்குறைவாக பழைய முகவரிக்கு அனுப்பி விடாதீர்கள்.

2015 ஜூன் மாதப் போட்டி

Frame within a frame - சட்டத்துக்குள் சட்டம்

இதுதான் இம்மாதப் போட்டித் தலைப்பு. நாம் கட்டம் கட்டும் காட்சியின் ஆழத்தை அதிகரிக்கவும், சுவாரஸ்யம் கூட்டவும், சொல்ல வருவதை அழுத்தமாகக் காட்டவும் இந்த உத்தி கையாளப் படுகிறது. கேமரா பார்வையுடன் இரசனையான கூட்டமைவு(composition)ம் சேர்ந்து பார்ப்பவரை ஈர்க்கும் இந்த வகைப் படங்கள்.

அதுமட்டுமின்றி கேமரா வழங்கும் வழமையான செவ்வக வடிவ சட்டத்திலிருந்து விலகி விதம் விதமாக சட்டமிடும் வாய்ப்பை நம்மைச் சுற்றியிருக்கும் பல விஷயங்கள் நமக்கு வழங்குகின்றன.

வாகனத்தின் பக்கவாட்டுக் கண்ணாடி, பைக் கண்ணாடி, வண்ண மூக்குக் கண்ணாடி, ஸ்மார்ட் ஃபோன் ஆகியவற்றில் சப்ஜெக்டின் பிம்பங்களை கொண்டு வருதலும் ஒரு உத்தி. பயணத்தின் போது இவ்வகைக் காட்சிகளுக்கு ஏராளமான வாய்ப்புகள் உருவாகும். ஜன்னல் அல்லது நுழைவாயில் ஊடாகத் தூரத்தில் தெரியும் கட்டிடங்கள், மலைகள், மரங்களைப் படமாக்கலாம். பரந்த மரக்கிளைகளையே கூடச் சட்டமாக்கி விடலாம். உங்கள் கற்பனைக்கு வானம்தான் எல்லை!

எடுத்த படங்களிலிருந்து தேடி ஒரு சிலவற்றை மாதிரிக்காக இங்கே பகிர்ந்திருக்கிறேன். இதற்கென்றே நீங்கள் களத்தில் இறங்கும் போது சிந்தித்து அசத்தலான படங்களைத் தர முடியும்.

#1

#2


#3

#4

#5

#6

படங்கள் 1 to 6: ராமலக்ஷ்மி

படங்கள் 7 & 8: சர்வேசன்

#7

#8


படங்கள் வந்து சேர வேண்டிய கடைசித் தேதி: 20 ஜூன் 2015
போட்டி விதிமுறைகள் இங்கே.
***

ஜூன் 2015 போட்டி ஆல்பம் - ‘சட்டத்துக்குள் சட்டம்’ இங்கே!

8 comments:

  1. ரொம்ப நல்லா இருக்கு, இந்தா கிளம்பிட்டேன், புகைப்படம் எடுக்க ...

    ReplyDelete
  2. நான் எனது படத்தை அனுப்பியுள்ளேன்

    ReplyDelete
  3. I have sent a photograph for the contest - Frame within a frame

    ReplyDelete
  4. How to see the photography contest photos in Flickr?

    ReplyDelete
    Replies
    1. PiT தளத்தின் முகப்பிலேயே வலப்பக்கம் முதலாவதாக ஸ்லைட் ஷோவும், ஆல்பத்துக்கான இணைப்பும் உள்ளது.

      ---

      புதிதாக வருகிறவர்கள் தொடர்ந்து இந்தக் கேள்வியைக் கேட்டு வருவதால் இனி போட்டி ஆல்பம் தயாரானதும் அறிவிப்புப் பதிவிலேயே ஆல்பத்திற்கான இணைப்பும் தரப்படும்.

      Delete
  5. வணக்கம், என் பெயர் கார்த்திக், நான் இந்த மாத போட்டிக்கான பதிவை அனுப்பி உள்ளேன். ஆனால் இன்னும் Flickr பதிவேற்றம் ஆகவில்லை... எனது மின் அஞ்சல் ravikarthik55@gmail.com
    சற்று உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்..

    ReplyDelete
  6. My name is Asokan . my entry is also not appearing in flicker album. Please add my photo.

    ReplyDelete
  7. Thank you. I can able to see my photo now.

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff