போட்டியில் வென்ற படங்களைப் பார்க்கும் முன் வெளியேறும் படங்களைப் பற்றியும் கொஞ்சம் பார்க்கலாமா?
நல்ல காட்சி. கட்டம் கட்டிய சட்டத்துக்கு வெளியே இருக்கும் பகுதி கருப்பொருளின் மேல் முழுக் கவனத்தைக் கொண்டு போகாதது குறை.
தலைப்பை மனதில் இருத்தி இப்படி க்ராப் செய்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
வாட்டர் மார்க் பெரிய அளவில் இருப்பதும் உறுத்தல்.
கீழ்வரும் படத்துக்கும் மேல் சொன்னவை பொருந்தும். போட்டிக்கு சமர்ப்பிக்கும் படங்களில் இத்தனை பெரிய வாட்டர் மார்க் இடுவதைத் தவிருங்கள் நண்பர்களே.
கருப்பொருளை இன்னும் தெளிவாக முன் வைக்க, பல வட்டங்களைத் தவிர்த்து, கீழ்வருவது போல க்ராப்பிங் இருந்திருந்தால் சிறப்புக் கவனம் பெற்றிருக்கும்.
சட்டத்துக்குள் சட்டத்துக்குள் சட்டம் என அசத்தியிருந்தாலும் கிளி போதுமான அளவு ஷார்ப்பாக இல்லாதது குறை.
மற்ற படங்களில் பெரிய குறைகள் ஏதுமில்லை,வென்ற படங்கள் அவற்றை விடச் சிறப்பாக இருப்பது தவிர்த்து..
சிறப்புக் கவனம் பெறும் படங்கள்:
நரேந்திரன் & தேவேந்திரன் S
கதை சொல்லும் காட்சி. யாருமற்ற இல்லத்தில் ஒவ்வொரு கதவாகத் திறந்து விட்டு கடைசிக் கதவைத் திறந்து நிற்கும் மனிதனை நோக்கி இழுத்துச் செல்லும் கோடுகள்.. அதாவது Leading lines ஆக அறையின் சுவர்கள்...! நபரை silhouette ஆகக் காட்சிப் படுத்தியிருப்பதும் சிறப்பு.
கருப்பு வெள்ளைப் படங்களில் ஓரளவுக்கு இரைச்சல் அனுமதி என்றாலும் இதில் சற்று அதிகமாக இருப்பது சிறு குறை.
கச்சிதமான சட்டம். கருப்பொருளாக வானும் கடலும் நிலமும்!
மூன்றாம் இடம்: பிரபு & சதாசிவம்
சட்டத்துக்குள் தாஜ்மஹாலும் அங்கே குழுமியிருக்கும் மக்களும் மட்டுமின்றி, இந்த முனையில் silhouette ஆக மக்கள் அதைப் படப்பிடிக்கும் காட்சி படத்துக்கு உயிர்ப்பைத் தருகிறது.
சற்றே படம் tilt ஆகியிருப்பது குறை.
அத்தனை உறுத்தலாகத் தெரியாவிட்டாலும் இந்தப் படமும் சற்றே tilt ஆகி உள்ளது.
இருவருமே சாய்மானத்தை சரி செய்திருந்தால் முதலிரண்டு இடங்களில் பங்கு கிடைத்திருக்க வாய்ப்புகள் அதிகம்.
இரண்டாம் இடம்: ஆன்டனி சதீஷ்
அருமை. இயற்கைச் சூழலில் ஆந்தையை தெளிவாக, அழகாகப் பாறைகளால் சட்டமிட்டுக் காட்டியிருக்கிறார்.
முதலிடம்: கரிகாலன்
கம்போஸிஷனும் ஒளியைக் கையாண்ட விதமும் அற்புதம். தரையில் படிப்படியாகப் பரவியிருக்கும் வெளிச்சம் நம்மை மறுமுனைக்கு அழைத்துச் செல்கிறது.
அடுத்த மாதப் போட்டி விரைவில் அறிவிப்பாகும். போட்டிகளை திறனை மேம்படுத்திக் கொள்ளும் பயிற்சியாகவும் வாய்ப்பாகவும் எடுத்துக் கொண்டு தொடர்ந்து கலந்து கொள்ளுங்கள், நண்பர்களே:)!
நல்ல காட்சி. கட்டம் கட்டிய சட்டத்துக்கு வெளியே இருக்கும் பகுதி கருப்பொருளின் மேல் முழுக் கவனத்தைக் கொண்டு போகாதது குறை.
பாலா |
கீழ்வரும் படத்துக்கும் மேல் சொன்னவை பொருந்தும். போட்டிக்கு சமர்ப்பிக்கும் படங்களில் இத்தனை பெரிய வாட்டர் மார்க் இடுவதைத் தவிருங்கள் நண்பர்களே.
பாலமுருகன் |
சட்டத்துக்குள் சட்டத்துக்குள் சட்டம் என அசத்தியிருந்தாலும் கிளி போதுமான அளவு ஷார்ப்பாக இல்லாதது குறை.
# குமார் |
சிறப்புக் கவனம் பெறும் படங்கள்:
நரேந்திரன் & தேவேந்திரன் S
கதை சொல்லும் காட்சி. யாருமற்ற இல்லத்தில் ஒவ்வொரு கதவாகத் திறந்து விட்டு கடைசிக் கதவைத் திறந்து நிற்கும் மனிதனை நோக்கி இழுத்துச் செல்லும் கோடுகள்.. அதாவது Leading lines ஆக அறையின் சுவர்கள்...! நபரை silhouette ஆகக் காட்சிப் படுத்தியிருப்பதும் சிறப்பு.
# நரேந்திரன் |
**
கச்சிதமான சட்டம். கருப்பொருளாக வானும் கடலும் நிலமும்!
# தேவேந்திரன் S |
மூன்றாம் இடம்: பிரபு & சதாசிவம்
சட்டத்துக்குள் தாஜ்மஹாலும் அங்கே குழுமியிருக்கும் மக்களும் மட்டுமின்றி, இந்த முனையில் silhouette ஆக மக்கள் அதைப் படப்பிடிக்கும் காட்சி படத்துக்கு உயிர்ப்பைத் தருகிறது.
# பிரபு |
**
அருமையான ஒளி அமைப்பு. சட்டத்துக்குள் இருக்கும் பெண்ணும் சிறுமியும் இருளிலிருந்து ஒளியை நோக்கிச் செல்லும் உணர்வைப் பார்ப்பவருக்குக் கடத்துகிறது.# சதாசிவம் |
அத்தனை உறுத்தலாகத் தெரியாவிட்டாலும் இந்தப் படமும் சற்றே tilt ஆகி உள்ளது.
இருவருமே சாய்மானத்தை சரி செய்திருந்தால் முதலிரண்டு இடங்களில் பங்கு கிடைத்திருக்க வாய்ப்புகள் அதிகம்.
இரண்டாம் இடம்: ஆன்டனி சதீஷ்
அருமை. இயற்கைச் சூழலில் ஆந்தையை தெளிவாக, அழகாகப் பாறைகளால் சட்டமிட்டுக் காட்டியிருக்கிறார்.
முதலிடம்: கரிகாலன்
கம்போஸிஷனும் ஒளியைக் கையாண்ட விதமும் அற்புதம். தரையில் படிப்படியாகப் பரவியிருக்கும் வெளிச்சம் நம்மை மறுமுனைக்கு அழைத்துச் செல்கிறது.
வெற்றி பெற்றவர்களுக்கு நல்வாழ்த்துகளும் பாராட்டுகளும்!
அடுத்த மாதப் போட்டி விரைவில் அறிவிப்பாகும். போட்டிகளை திறனை மேம்படுத்திக் கொள்ளும் பயிற்சியாகவும் வாய்ப்பாகவும் எடுத்துக் கொண்டு தொடர்ந்து கலந்து கொள்ளுங்கள், நண்பர்களே:)!
**
மிக்க நன்றி. என்னைப் போன்ற ametures'க்கு இது கண்டிப்பாக நல்ல பயிற்சி. தொடர்ந்து கலந்து கொள்ள ஆவலாக உள்ளேன்.. முன்பெல்லாம் போட்டிக்கான படங்களை மற்ற போட்டியாளர்கள் பார்த்து comment கொடுப்பார்கள். இப்போதெல்லாம் அந்த வழக்கம் காணப்படுவதில்லை. இறுதித் தீர்ப்பு எதுவாயினும் இரசித்தப் படங்கள் பற்றி சில வரிகளைப் போட்டுத்தான் பார்ப்போமே... (என்னையும் சேர்த்து)...
ReplyDeleteஎனது புகைப்படம் முதலாவது வந்தது குறித்து மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது... நன்றி... தொடர்ந்து பங்குபற்ற ஆவலாக உள்ளேன்...
ReplyDeleteஅருமையான படங்கள். அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteஅருமையான வலைத்தளம்....புகைப்படத்துக்கான வலைத்தளம் தமிழில் இப்படி ஒன்று இருப்பது கண்டு பெருமையடைகிறேன்... நன்றி
ReplyDeleteவெற்றி பெற்றவர்களுக்கு நல்வாழ்த்துகளும் பாராட்டுகளும்!
all Picture ver Nice...suoer
ReplyDeleteall Picture ver Nice...suoer
ReplyDelete