Tuesday, January 22, 2008

ஜனவரி 2008 PIT புகைப்படப் போட்டி - முன்னேறிய 12 படங்கள்

21 comments:
 
ஜனவரி 2008ன் PIT புகைப்படப் போட்டிக்கான புகைப்படங்கள் 1ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை பெறப்பட்டு வந்தது.
போட்டிக்கான தலைப்பாக 'அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள் ('everyday artifacts') என்று வைத்திருந்தோம்.

போட்டியில் வெற்றி பெற்றவர்கள் யாரென்பது இம்மாதம் 25ஆம் தேதி அறிவிக்கப்படும்.

அதற்குமுன் ஒரு முன்னோட்டமாக, நடுவர்களாகிய எங்களின் (சர்வேசன், வற்றாயிருப்பு சுந்தர்) பார்வையில், வந்திருந்த 80 படங்களில், அடுத்த கட்டத்துக்கு நகர்ந்த 12 படங்களை கீழே கட்டம் கட்டி கொடுத்துள்ளோம்.

இம்முறை கலந்து கொண்டவர்களின் திறன் வியப்பைத் தந்தது. சில படங்களைப் பார்க்கும்போது 'பேசாம அவங்கள PIT உறுப்பினர் ஆக்கி, போட்டியில் கலந்து கொள்ள முடியாத மாதிரி செஞ்சிட வேண்டியதுதான்' என்று வில்லத்தனமாக எண்ணம் எழும் அளவுக்கு, சிறப்பாக இருந்தது.

கலந்து கொண்ட அனைவரின் படங்களும் அருமையாகவே இருந்தது.
ஒரு படத்தைப் பார்க்கும்போது, மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் ஒரு ஈர்ப்பு அவசியம்.
அந்த ஈர்ப்பை பெற்ற படங்கள் இம்முறை பல.
மிக அதிகமாய் ஈர்ப்பை பெற்ற படங்களே கீழே டாப்-12ல் உள்ளன.

அருமையான படங்களை அனுப்பிய அனைத்துப் பதிவர்களுக்கும் நன்றி.
உங்கள் ஒவ்வொருவரின் படத்தின் நிறை குறைகளையும், முடிவு அறிவித்ததும், எடுத்துக் கூற முயற்சிக்கிறோம்.

இனி படங்கள பாப்பமா? (வரிசைப் படுத்தவில்லை)

இளவட்டம்


ஒப்பாரிK4Karthik


சத்தியா


குட்டி பாலு


லக்ஷ்மணராஜா


எம்.ரிஷான் ஷெரீஃப்


வாசி


நந்து


Shiv


கைப்புள்ள


===== ------ ======= -------- ========
மேலே உள்ளவை டாப்-12 படங்கள், கீழே உள்ளது, டாப்-12ல் வரவில்லையென்றாலும், எங்கள் கவனத்தை ஈர்த்த படம். PITக்கு விளம்பரப் படம் மாதிரி இருக்கு. அருமை :)

ஆதியின்:


கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

:)

21 comments:

 1. முதல் சுற்றில் தேர்வான அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  நடுவர்ஸ்.. இனிமே தான் கஸ்டமான வேலைங்கோ...

  ReplyDelete
 2. அனைத்து புகை படஙலும் அருமை.
  மிக்க நன்றி யென்னுடைய படத்தை தேற்வு செய்தவைக்கு :)

  ReplyDelete
 3. எனது புகைப்படம் சிறந்த 12இல் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றமை பெரும் மகிழ்வைத் தருகிறது.
  மிகவும் நன்றிகள்.
  முடிந்தால் பெயரை மட்டும் திருத்திவிடுங்கள்.

  எம்.ரிஷான் ஷெரீப்.

  அல்லது

  M.RISHAN SHAREEF.

  ReplyDelete
 4. //தேர்வான அனைவருக்கும் வாழ்த்துக்கள். ///
  ரிபீட்ட் ... நடுவர்களுக்கு ரொம்ப கஷ்டம்ன்னு சொன்னாலும்... முத்துக்குளிக்கிரதுன்னா .. சும்மாவா... 12 முத்துக்கள் தந்திருக்காங்களே !! .. சபாஷ் !!

  ReplyDelete
 5. படங்கள் எல்லாம் பட்டைய கிளப்புது!!
  அனைவருக்கும் வாழ்த்துக்கள்!! :-)

  @ரிஷான்
  உங்கள் பெயரை சரி செய்து விட்டேன்.
  தவறுக்கு மன்னிக்கவும்! :-)

  ReplyDelete
 6. கடைசி பன்னிரெண்டில் என் படமுமா? பெரிய விஷயம் தான்...:))

  மிக்க மகிழ்ச்சி.

  ReplyDelete
 7. அனைவருக்கும் வாழ்த்துக்கள்!! :-)

  பல படங்கள் இங்கு தெரியவில்லை சரி செய்ய முடியுமா?

  ReplyDelete
 8. ஆத்தா, நான் அரை பரிட்சையில பாசாயிட்டேன்! பங்கு பெற்ற, தேர்வு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்! முக்கியமா நடுவர்களுக்கு 'Hats off';)

  ReplyDelete
 9. ஹையா !!! நானும் முதல் சுற்றில் தேறிட்டேன் :-)
  அனைவருக்கும் வாழ்த்துக்கள் !!!

  ReplyDelete
 10. குசும்பன்,

  //பல படங்கள் இங்கு தெரியவில்லை சரி செய்ய முடியுமா?//

  ஹ்ம். flickrல் சில படங்கள் இருப்பதால் உங்க ஊரில் தெரியாமல் இருக்கலாம்.

  இறுதிச் சுற்று அறிவிக்கும்போது, flickrல் இருப்பதை bloggerல் ஏற்றி அறிவிக்கிறோம்.

  ReplyDelete
 11. //பல படங்கள் இங்கு தெரியவில்லை சரி செய்ய முடியுமா?//

  குசும்பர் தான் அனுப்பிய படங்கள் எதுவும் முதல் சுற்றில் தெரியவில்லை என்பதைத்தான் இப்படி குசும்பாகச் சொல்கிறாரோ :-( அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

  பிகு: குசும்பா அதெல்லாம் "சரி செய்ய" முடியாது. எடுக்கும் போதே சரியா எடுக்கணும், ஆமா.

  ReplyDelete
 12. //இம்முறை கலந்து கொண்டவர்களின் திறன் வியப்பைத் தந்தது. சில படங்களைப் பார்க்கும்போது 'பேசாம அவங்கள PIT உறுப்பினர் ஆக்கி, போட்டியில் கலந்து கொள்ள முடியாத மாதிரி செஞ்சிட வேண்டியதுதான்' என்று வில்லத்தனமாக எண்ணம் எழும் அளவுக்கு, சிறப்பாக இருந்தது.//

  :-))))))))))))) சூப்பர் கமென்ட்!!!

  ReplyDelete
 13. naanum iruken...
  avvvvv.....

  ReplyDelete
 14. டாப் லிஸ்ட்ல நானுமா? நன்றி.நன்றி

  ReplyDelete
 15. beautiful pictures, best of luck to all.

  ReplyDelete
 16. Good ones. Second round will be more difficult for the judges :)

  ~Truth

  ReplyDelete
 17. தேர்வான படங்கள் எல்லாமே மிகவும் அருமை. அடுத்த போட்டியில் நானும் பங்கு பெற ஆசைப்படுகிறேன்.

  ReplyDelete
 18. படங்கள் அனைத்தும் அற்புதம். பங்கு பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். நானும் அடுத்த முறை கலந்துகொள்ள முயற்சிக்கிறேன்.

  ReplyDelete
 19. என் புகைப்படத்தை இரண்டாவது சுற்றுக்கு தேர்வு செய்தமைக்கு நன்றி.

  ReplyDelete
 20. Thanks everyone. Top3 will be announced soon in the next 24 hours :)

  ReplyDelete
 21. Special Mention'க்கு நன்றிகள் சர்வேசன்.

  ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff