Tuesday, March 4, 2008

ஒளியும் ஒளியும் - பாகம் 1 - ஜன்னல்

8 comments:
 
ஜன்னல் வெளிச்சத்தில் ஜாலங்கள் !

ஒரு நல்ல புகைப்படம் எடுக்க , நாம் நினைப்பது போல விலையுயர்ந்த கேமரா, அலங்கார விளக்குகள், அதி நவீன ஸ்டூடியோ போனறவை தேவையில்லை. வீட்டுக்குள் வரும் ஜன்னல், கதவு வெளிச்சத்தில், கொஞ்ச்ம வெள்ளைக் காகிதங்களை கொண்டு அழகான, தரமான படங்கள் எடுக்க முடியும். காசு செலவில்லாமல், இலவசமாய் வீட்டில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு என்ன செய்ய முடியும் என்று இங்கே கொஞ்சம் அலசலாம்


முதலில் தேவையான பொருட்களைப் பார்ப்போம்.

1. நல்ல குழைந்த சூரிய வெளிச்சம் வரக்கூடிய ஜன்னல் அல்லது கதவு. வடக்கோளத்தில் இருப்பவர்களுக்கு வடக்கு நோக்கிய ஜன்னல், தென்கோளத்தில் இருப்பவர்களுக்கு தெற்கு நோக்கிய ஜன்னல். இந்த திசையில் நாள் முழுவதும் சமமான அளவில் வெளிச்சம் நேரடியாக போட்டுத் தாக்காமல் சரியாய் கிடைக்கும்.

2. பிண்ணனியாக வெற்றுச் சுவர். வெளீர் நிறச் சுவர் இருப்பது உத்தமம். இல்லை வீட்டில் இருக்கும் துணிகளைக் கொண்டு திரை அமைத்துக் கொள்ளலாம்.

3. வெளிச்சத்தை பிரதிபலிக்க வெள்ளை அட்டைகள். வீட்டில் இருக்கும் அலுமினியத்தாள், கண்ணாடி எது வேண்டுமானலும். வெளிச்சம் நன்றாக இதில் பட்டு பிரதிபலிக்க வேண்டும். வெள்ளை அட்டை பெரும்பாலும் போதுமானது.


பொதுவாக மூன்று வகையான விதத்தில் முகங்களை படமெடுக்கலாம்.

1. முழு முகம் .
2. பக்கவாட்டுத் தோற்றம்
3. சாய்வுக் கோணம்.
இவற்றுக்கு எந்த முறையில் கேமராவை, பின்னணியை , வெள்ளை அட்டைகளை பொருத்த வேண்டும், என்று பார்க்கலாம் .



முதலில் நமக்கு போஸ் கொடுப்பவரை ( கீழே படங்களில் இருப்பதுப் போல நமீதா, அஸின், பாவனா, இவர்கள் கிடைக்கவில்லை என்றால் வீட்டு அம்மிணி, அவங்களும் கோவித்துக் கொண்டார்கள் எனில் கரடிப் பொம்மை ) கிட்டத்தட்ட 45 கோணத்தில் ஜன்னல் வெளிச்சம் வரும் திசையில் நிறுத்திக் கொள்ளுங்கள். வெளிச்சத்திற்கு ஏற்ற முறையில் கொஞ்சம் அப்படி, இப்படி மாற்றிக் கொள்ளலாம்.




1. முழுத் தோற்றம்.



இது பாஸ்போர்ட் படம். அனைவரிடமும் இந்த முறைப் படம் கண்டிப்பாக இருக்கும். முழு முகத்தையும் , படத்தில் காட்ட வேண்டும்.








2. பக்கவாட்டுத் தோற்றம்.


அரசியல் தலைவர்களில் போஸ்டரில் தோன்றுவதுப் போல முகத்தின் ஒருப் பக்கத்தை மட்டும் படத்தில் காட்ட வேண்டும்.














3. சாய்வுக் கோணம்.



இது இரண்டுக்கும் இடைப் பட்டது. முகத்தின் ஒருப் பகுதி மட்டும் முழுமையாகவும், மீதிப் பகுதியில் , பாதி, பாதிக்கும் குறைவாகவும். பெரும்பாலான முகப் படங்கள் இந்த முறையில்தான் அமைந்து இருக்கும்.






படங்கள் புரிந்ததா ? முயற்சி செய்துப் பாருங்கள். இந்த முறைகள் கூடிய விரைவில் , மாதாந்திரப் போட்டிக்கு(ம்) உதவலாம்.

8 comments:

  1. //தென்கோளத்தில் இருப்பவர்களுக்கு தெற்கு நோக்கிய ஜன்னல்//

    எங்களை மாதிரி தென்கோளத்தின் கட்டக்கடைசியில் இருக்கறவங்களுக்கு எப்படி?

    இங்கே தெற்கே பார்த்த ஜன்னலில் அரை இருட்டுதான்.
    (மணிரத்தினம் படம் மாதிரி)

    ReplyDelete
  2. டாப் வியூ கொஞ்சம் குழப்பிடுத்து (எனக்கு)
    வெள்ளை அட்டை!! அது ரெடிமேடாக கிடைக்குமா?

    ReplyDelete
  3. Very informative article. Thanks !!!!!

    ReplyDelete
  4. //வடுவூர் குமார் said...

    டாப் வியூ கொஞ்சம் குழப்பிடுத்து (எனக்கு)
    வெள்ளை அட்டை!! அது ரெடிமேடாக கிடைக்குமா?//



    குமார் - தெர்மோகோல் கிடைக்குமுங்களே!!!

    ReplyDelete
  5. மிக நல்ல பதிவு.கண்டிப்பாக முயற்சித்துப் பார்க்கிறேன்.
    நன்றி நண்பரே.

    ReplyDelete
  6. Very informative. Keep it up!

    ReplyDelete
  7. hi brother. i always surf net and i watch tamil blogs. this is the first time im seeing very useful tamil blog on net. god bless you brother. keep doing it.

    ReplyDelete
  8. பயனுள்ள பதிவு

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff