Thursday, March 13, 2008

Exposure modes - ஒரு அறிமுகம்

12 comments:
 
மு.கு:
இந்த பதிவில் வரும் aperture,shutter speed போன்ற கலைச்சொற்களுக்கு அர்த்தம் தெரியவில்லை என்றால் சைடுபாரில் உள்ள பதிவுகளில் பார்த்துத்தெரிந்துக்கொள்ளுங்கள்.

நமது கேமராக்களில் பார்த்தீர்கள் ஷட்டர் பொத்தானிற்கு பக்கத்திலேயே ஒரு dial பொருத்தப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள்.அதில் Av,Tv என்று வெவ்வேறு வகையான modes குறியிடப்பட்டிருக்கும்.ஆனால் நாம் அதை பற்றியெல்லாம் அவ்வளவாக கண்டுக்கொள்வது கிடையாது.எப்போதும் auto mode-இல் கேமராவை பொருத்திவிட்டு அதிலேயே எல்லா படங்களையும் எடுத்துக்கொண்டிருப்போம்.
எனக்கு தெரிந்து ஒருவர் தனது DSLR கேமராவிலும் கூட auto mode மட்டுமே பயன்படுத்தி படங்களை எடுப்பார்!!!
Auto mode பயன்படுத்துவதாக இருந்தால் அவர்களுக்கு SLR எதற்கு?? சாதாரண point and shoot கேமரா மட்டுமே போதுமே என்று நான் நினைத்துக்கொள்வேன்.
இவ்வளவு காசு கொடுத்து வாங்கிவிட்டு நம் கேமராவின் பெரும்பாலான பயன்பாடுகளை இப்படி பயன்படுத்தாமல் இருந்தால் எப்படி??
வாங்க இந்த modes ஒவ்வொன்றாக என்னவென்று பார்க்கலாம்.
கேமரா என்றாலே ஒரு துளையின் விட்டத்தையும் அது திறந்திருக்கும் நேரத்தையும் கட்டுப்படுத்தி ஒளியை சேமிக்கும் கருவி என்று சுருக்கமாக சொல்லிடவிடலாம்.இப்பொழுது வரும் எல்லா கேமராக்களிலும் கண்டமேனிக்கு பல modes இருந்தாலும் ஒளியின் அளவை நேரிடையாக கட்டுப்படுத்தும் சில அடிப்படையான modes-ஐ பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

Auto Mode:
உங்கள் கேமராவில் Auto என்றோ அல்லது ஒரு சிறிய சதுரம் கொண்டு இந்த வகை குறியிடப்பட்டிருக்கும்.பேருக்கேற்றார்போல் இந்த வகையில் அனைத்தும் கேமராவின் கையில்.துளையின் விட்டம்,ஷட்டர் வேகம்,ISO,White balance,ப்ளாஷ் உபயோகிக்கலாமா வேண்டாமா இப்படி சகலமும் கேமராவே தீர்மானித்துக்கொள்ளும்.நீங்கள் காட்சியை நோக்கி க்ளிக் செய்தால் மட்டும் போதும்.ஷட்டரை பாதி அழுத்தும்போதே காட்சியில் எவ்வளவு ஒளி இருக்கிறது என்று தீர்மானித்து அதற்கேற்றார்போன்ற அளவுகளை கேமரா தானே ஊகித்து படம் எடுத்துவிடும்.ஒளி கம்மியாக இருக்கும் பட்சத்தில் ப்ளாஷை தானாக பயன்படுத்திக்கொள்ளும்.
இந்த mode தவிர மற்ற எல்லா mode-களிலும் ISO,White balance,ப்ளாஷ் உபயோகிக்கலாமா வேண்டாமா போன்றவற்றை நீங்களே முடிவு செய்துக்கொள்ளலாம்.
நீங்கள் SLR வைத்திருக்கும் பட்சத்தில் இந்த வகையை உபயோகித்தால் SLR வைத்திருப்பதற்கே அர்த்தம் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால் ஒளியின் அளவு நமது விருப்பத்திற்கேற்க கூட்டவோ குறைக்கவோ பிரத்தியேகமாக உருவாக்கப்படுவது SLR கேமராக்கள்!! அதை வாங்கி வைத்துக்கொண்டு முழுவதுமாக தானியங்கி முறையில் உபயோகித்தால்,ஐந்து கியர் கொண்ட ஒரு காரை வாங்கிவிட்டு ஆட்டோகியரில் ஓட்டுவது போல!


Program Mode:(P)
இந்த வகையில் காட்சிக்கு ஏற்றார்போல் aperture மற்றும் ஷட்டர் வேகத்தை மட்டும் கேமரா முடிவெடுத்துக்கொள்ளும்.மற்றபடி ISO,whitebalance போன்றவற்றை நீங்களே நிர்ணயித்துக்கொள்ளலாம்.காட்சியை பார்த்து பொத்தானை பாதி அழுத்திய உடனேயே ஒளியின் அளவை கணித்து aperture மற்றும் ஷட்டர் வேகத்தை கேமராவே நிர்ணயித்து விடும். ஒளி குறைந்திருந்தால் அதற்கேற்றார்போல் ஷட்டர் வேகத்தை குறைத்துக்கொள்ளுமே தவிர ப்ளாஷ் உபயோகிக்கப்பட மாட்டாது.
முழுவதுமாக auto mode-இல் உபயோகிப்பதை விட இந்த முறை சற்றே தேவலாம். கேமரா வாங்கிவிட்டு புகைப்படக்கலையை கற்க ஆரம்பிக்கும் ஒருவர்,தொடக்கத்தில் manual mode பழக்கமாவதற்கு முன் இந்த வகையை உபயோகிக்கலாம்

Av mode:
பெரும்பாலான SLR பயனர்கள் அதிகமாக பயன்படுத்தும் வகை இது என்று சொல்லலாம்.
உங்கள் கேமராவின் aperture எனப்படும் துளையின் விட்டத்தை நீங்களே முடிவு செய்ய வேண்டும் என்று விரும்பினால் நீங்கள் இந்த வகையை பயன்படுத்தலாம்!!aperute-ஐ பொருத்தவரை அதன் அளவை பொருத்து படத்தில் பெருமளவு மாறுதல் ஏற்படும்.உதாரணத்திற்கு துளையின் விட்டம் குறைவாக இருந்தால் அப்பொழுது தூரத்தில் இருக்கும் பொருள் கூட நன்றாக தெளிவாக பதியுமாறு wider depth of field(DOF)-உடன் படம் எடுக்கப்படும்.கேமராக்களில் இருக்கும் Landscape mode-ஐ நீங்கள் தெரிவு செய்தால் இருக்கும் ஒளிக்கு ஏற்ற மிக குறிகிய துளையின் விட்டத்தை கேமரா தெரிவு செய்துக்கொள்ளும்.ஏனென்றால் அப்பொழுது தான் நீங்கள் எடுக்கும் காடு,நாடு,மேடு மலை ஆகிய எல்லாமும் சரியான தெளிவோடு கேமராவில் பதிவாகும்.
aperture-இன் விட்டம் அதிகமாக அதிகமாக கேமராவின் f-number குறைவாகிக்கொண்டே போகும் என்பதை மறக்க வேண்டாம்.
இதே போல் துளையின் விட்டம் அதிகமாக இருந்தால் காட்சியின் ஒரு சிறு தூரத்திற்கு மட்டும் focus set ஆகுமாறு DOF shallow-வாக அமைந்துவிடும்.கேமராக்களில் உள்ள portrait mode-ஐ நீங்கள் தேர்ந்தெடுத்தால் அது காட்சியின் ஒளிக்கு ஏற்ப முடிந்த வரை அதிகமான துளையின் விட்ட அளவை தெர்ந்தெடுத்துக்கொள்ளும் அப்பொழுதுதான் நீங்கள் எடுக்கும் மக்கள் பிண்ணனியில் இருந்து பிரிந்து பளிச்சென்று தெளிவாக தெரிவார்கள்.
இப்படி துளையின் விட்டத்தை மாற்றுவதால் படத்தின் போக்கே மாறிவிடும் என்பதால்,பலர் இந்த Av mode-ஐ உபயோகிக்கிறார்கள்.இந்த வகையில் துளையின் விட்டத்தை நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்,அதற்கு ஏற்ப ஷட்டரின் வேகத்தை கேமரா தேர்ந்தெடுத்துக்கொள்ளும்.







Higher fnumber - shorter aperture - wider DOF(f/13.0)

Lower fnumber - wider aperture - shallow DOF(f/1.8)

Tv Mode:
இந்த வகையில் கேமராவின் ஷட்டர் வேகத்தை நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ள,அதற்கேற்ப துளை விட்டத்தை (aperture) கேமரா கணித்துக்கொள்ளும். பல சமயங்களில் நமக்கு ஒரு சில மணித்துளிகளில் ஒரு காட்சி பதிவு செய்யவேண்டியிருக்கும்(உதாரணத்திற்கு தண்ணிர் தெரிக்கும் காட்சி,ஒரு நீச்சல் வீரர் நீரில் குதிக்கும் காட்சி போன்றவை) சில வேறு நேரங்களில் நமக்கு ஷட்டர் குறைவான வேகத்தில் இருக்க வேண்டி வரும்.(இரவில் வாகனங்கள் விட்டுச்செல்லும் ஒளியை கோடு போல படம் பிடிக்க,அருவியில் விழும் நீரை படம் பிடிக்க,இரவில் படம் பிடிக்க.... போன்றவை)
இப்படி ஷட்டர் வேகத்தை நமக்கு மாற்ற வேண்டிய சந்தர்ப்பம் வரும் நேரங்களில் இந்த வகையான mode-ஐ பயன்படுத்திக்கொள்ளலாம்.துளையின் விட்டத்தின்(aperture) அளவை கேமரா பார்த்துக்கொள்ளும்.








Faster shutter speed(1/100s) - capturing action

Slower shutter speed(30s) - Traffic trails

Manual mode:(M)
இது முழுக்க முழுக்க நாமாகவே எல்லாவற்றையும் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு வகை.இதில் ஷட்டரின் வேகம்,துளையின் விட்டம் என எல்லா அளவையும் நாமே நிர்ணயித்துக்கொள்ளலாம்.புகைப்படக்கலையின் தொடக்கநிலையில் இருக்கும் ஒருவருக்கு இந்த வகையில் படம் பிடிப்பது குழப்பத்தையும்,அயற்சியையும் தரலாம் என்பதால்,சற்றே இந்த கலையை பழகிவிட்ட பின் இதை உபயோகப்படுத்த எல்லோரும் விரும்புவார்கள்.அதிலும் படம் எடுப்பதற்கு முன் நாமே அளவுகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதால் இதை உடனடியாக படம் எடுக்க வேண்டிய சந்தர்ப்பங்களில(பறவை,மிருகம் போன்ற அசைந்துக்கொண்டிருக்கும் பொருட்கள்)் உபயோகப்படுத்த முடியாது.நல்ல ஆற அமர நேரம் இருக்கும் சமயங்களில்(அசையாத பொருட்கள்) இதனை பயன்படுத்தலாம்!!
ஆனால் நல்ல அனுபவமுள்ள புகைப்படக்கலைஞர்கள் இந்த முறையையே உபயோகிக்க விரும்புவார்கள்!!தனக்கு வேண்டியவாறு படத்தின் தன்மையை நுணுக்கமாக மாற்றியமைக்க முடியும் என்பதால் இந்த முறை அவர்களுக்கு பிடிக்கும்.பழக்கம் காரணமாக பெரிதாக நேரம் எடுத்துக்கொள்ளாமல் கண நேரத்தில் எல்லா அளவுகளையும் நிர்ணயித்து பட்டென படம் எடுத்துவிடுவார்கள்!! :-)

இப்படியாக நமது கேமராவில் வெவ்வேறு Exposure mode-கள் உள்ளன.உங்கள் கருத்துக்களையும் கேள்விகளையும் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.கலந்தாலோசிக்கலாம்.
அப்படியே நீங்கள் உங்கள் கேமராவில் வழக்கமாக எந்த mode-இல் படம் எடுப்பீர்கள் என்று பின்னூட்டத்தில் தெரிவித்து விட்டு செல்லலாமே!!
வரட்டா??? :-)


பி.கு:இது தவிர கேமராவில் auto focussing,manual focussing என்று ஒரு சங்கதி உண்டு.அதை இத்துடன் போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம்!

12 comments:

  1. விவரமாக சொல்லியிருக்கிறீர்கள்,இனிமேல் தான் என்னுடைய கேமிராவில் என்னென்ன இருக்கு என்று பார்க்கனும். :-))

    ReplyDelete
  2. நல்ல விளக்கங்கள்.

    நானும் 99% ஆட்டோலதான் எடுக்கறேன். சோம்பேரித்தனம் ஒரு காரணம்னு நெனைக்கறேன்.

    ReplyDelete
  3. //நானும் 99% ஆட்டோலதான் எடுக்கறேன்.//


    சர்வேசு,

    நீ இருக்கிற ஊர்ல ஆட்டோ எல்லாம் இருக்கா என்ன? இந்தியாவுல மட்டும் தான்னு நினைச்சேன்.

    போட்டோ ஏன் ஆட்டோலயே எடுக்கனும்? கார்ல, பைக்ல கூட எடுக்கலாமே ?

    ReplyDelete
  4. CVR,

    விளக்கத்திற்கு நன்றி. ஒரு சின்ன ரிக்கொஸ்ட் :) ஒரே காட்சியை வெவ்வேறு மோட்களில் சுட்டு விளக்கினால் மேலும் பயனுள்ளதாக இருக்கும். எங்கள மாதிரி ஆட்களுக்கு அப்பத்தான புரியும் =;)

    ReplyDelete
  5. @வடுவூர் குமார்
    செஞ்சு பாத்துட்டு சொலுங்க அண்ணாச்சி!! :-)

    @சர்வேசன்!!
    அடடா!!
    என்ன அண்ணாச்சி இப்படி சொல்லிட்டீங்க!!!
    அட்லீஸ்ட் ப்ரொக்ராம் மோட்லையாவது எடுக்க பாருங்க!! :-)

    @ஜீவ்ஸ்
    பாத்து அண்ணாச்சி ,உங்க வூட்டுக்கு ஆட்டோ வந்துர போகுது!!
    அதுல மக்கள்ஸ் வந்து கண்டமேனிக்கு சுட்டுத்தள்ளிருவாய்ங்க!! கேமராவுல!! :P

    @சதங்கா
    ////ஒரே காட்சியை வெவ்வேறு மோட்களில் சுட்டு விளக்கினால் மேலும் பயனுள்ளதாக இருக்கும். எங்கள மாதிரி ஆட்களுக்கு அப்பத்தான புரியும் =;)/////
    எந்த மோடில் எடுத்தாலும் எனது ஷட்டர் வேகம் மற்றும் அபெர்ச்சரை பொருத்து தான் எந்த காட்சியும் அமையும்!!
    எல்லா மோட்லையும் கடைசியில ஒரே மாதிரி aperture மற்றும் shutter speedதான் set செய்வேன் என்பதால்,எல்லா மோட்லையும் சரியா எடுத்தா படம் ஒரே மாதிரி தான் இருக்கும்!!
    ஒவ்வொருவருக்கு எந்த அளவுக்கு ஒரு குறிப்பிட்ட மோடில் படம் எடுத்து பழக்கம் என்பதற்கேற்ப மட்டுமே படம் மாறுபடலாம்!
    :-)

    ReplyDelete
  6. nice post cvr.good.
    just definition mattum kodukama
    best practise paRRiyum sonnathukku..

    ReplyDelete
  7. அருமையான விளக்கங்கள்..
    இம்புட்டு மேட்டர் இருக்கா இதுல :)
    சூப்பரு...

    ReplyDelete
  8. //Blogger Jeeves said...

    //நானும் 99% ஆட்டோலதான் எடுக்கறேன்.//


    சர்வேசு,

    நீ இருக்கிற ஊர்ல ஆட்டோ எல்லாம் இருக்கா என்ன? இந்தியாவுல மட்டும் தான்னு நினைச்சேன்.

    போட்டோ ஏன் ஆட்டோலயே எடுக்கனும்? கார்ல, பைக்ல கூட எடுக்கலாமே ?//

    :))))))))))

    ReplyDelete
  9. 11:59 வரைக்கும்னு time போட்டுட்டு 11:32'கே comments'ஐ close பண்ணிட்டா எப்படிங்க? :-( ஏதாவது பாத்து footboard'லயாவது கூட்டிட்டு போங்கன்னேன்...

    பதிவு: http://luvathi.blogspot.com/2008/03/for-mar-2008-pit-competition.html

    படம் 1: http://www.flickr.com/photos/ursathi/2335563828/

    படம் 2: http://www.flickr.com/photos/ursathi/2331767962/

    ReplyDelete
  10. vanakkam
    naan puthithaka photography padikkaporan
    iththalaththin mulam pala vidayankalai arinthukonden inthaththalaththukkum asiriyarkalukkum enathu nanrikal

    ReplyDelete
  11. இதை விட தெளிவாக யாராலும் விளக்கி தமிழில் சொல்ல முடியாது.

    உங்கள் பணி மேலும் தொடர வேண்டும்

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff