Monday, December 22, 2008

டிசம்பர் 2008 போட்டி - முன்னேறிய பத்து நிழல்கள்

22 comments:
 
வழக்கம் போல் இம்மாதமும், ஆவலுடன் பலர் புகைப்படப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார்கள்.

மொத்தம் 49 படங்கள்.

நிழல்கள் என்ற தலைப்புக்கு பொருந்துமாறு பலவிதமா யோசிச்சு கட்டம் கட்டியிருக்காங்க.
ஆனா, ஒரு சில படங்களில், நிழல் எங்கேருக்குன்னு, டார்ச் அடிச்சு பாத்தும் கண்ணுல படலை. :)

போட்டியாளர்களுக்கு உதவும் வகையில் அமைந்த, An&ன் நிழல் பாடமும், Deepaவின் நிழல் படங்களும் இம்மாதப் போட்டியின் போது கிட்டிய போனஸ் பதிவுகள். CVRம் தனது hibernationஐ முடித்துக் கொண்டு, போட்டியில் வெற்றி பெற ஒரு கோனார் நோட்ஸ் பதிவைப் போட்டிருந்தார்.

இந்த மாத போட்டிக்கான அறிவிப்பில் இடம்பெற்ற, உதாரணப் படங்கள் சில, ஏற்படுத்திய குழப்பமான்னு தெரியல, சில படங்கள், silhoutteஆக அமைந்திருந்தன.

நிழல் = shadow
silhoutte = பிம்பம்

ரெண்டுத்துக்கும் வித்யாசம் இருக்கு.

வாரணம் ஆயிரம் படத்தில், கடைசி காட்சியில், 'வாரணம் ஆயிரம்'னு டைட்டில் வச்சதுக்காக, சிம்ரன் அக்கா அதுக்கு ஏதோ ஒரு பெயர் காரணம் சொல்லி ஒப்பேத்துவாங்க.

அந்தளவுக்கு ஒப்பேத்தலன்னாலும், ஒரு பொட்டளவு நிழலாவது படத்துல இருந்திருந்தா, திருப்திகரமா இருந்திருக்கும். சிலர் அதைச் செய்யலை ;)

சிலர், நிழலை படம் பிடித்திருந்தாலும், தேவையான வெயில் படத்தில் இல்லாததால், நிழலின் சிறப்பு படத்தில் புலப்படவில்லை. உ.ம். ஸ்வாமி ஓம்காரின் 'தூங்கும் நாய்' படம்.

தலைப்புக்கு ஏற்றவாரு அருமையா பல படங்கள் வந்துள்ளன.

கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்.

இனி, இம்மாத, டாப் பத்து பாப்பமா?
(in no particular order)

அ. Rasena


ஆ. Amal


இ. MQN


ஈ. Vennila Meeran


உ. Truth


ஊ. Anand


எ. Pradeep


ஏ. Jayakumar


ஐ. Thiva


ஒ. Surya


எல்லா படங்களையும் பார்த்து, உங்க விமர்சனத்தைச் சொல்லிட்டுப் போங்க. போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு உபயோகமா இருக்கும்.

அனைத்துப் படங்களையும் பாக்க இங்கே செல்லவும்.

22 comments:

  1. பறக்கும் நிழல்- பலே பலே!

    அமலின் நீண்ட நெடிய நிழல்-ஹைக்கூ.

    MQN-ன் துதுக்கும் நிழல்-கவிதை.

    வெண்ணிலா பிடித்த நிழல்-வியப்பு!

    ட்ரூத் ஆனந்த் ஜெயக்குமார்
    இதய வடிவை தத்ரூபமாய் தந்து
    உள்ளங்களைக் கொள்ளை கொண்டனர்.

    ப்ரதீப்பின் பாடும் நிழல் காவியம்.

    திவாவின் கதவு நிழல் பெர்ஃபக்ட்.

    சூர்யாவின் மணல் வெளியில் படர்ந்த நிழல்களும் வானும் மேகமும் ஓவியம்.

    பத்து பேருக்கும் பாராட்டுக்கள்.
    முன்னேற இருக்கும் மூவருக்கு
    அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. கலக்கறாங்க போல எல்லாரும் நிழல் போட்டில...வெரி நைஸ் போட்டோகிராப்ஸ்
    வெரி பெர்பெக்ட் ஜெயக்குமாரோட நிழல் படம்.அந்தப் புக்ல இருக்கற சமந்தகமணி (சியமந்தகமணி) கிருஷ்ணர்,சத்யபாமா கதை துல்லியமா பதிவாகி இருக்கு.என்னவோ எங்க அறிவுக்கு எட்டின வரை கருத்து சொல்லியாச்சு!

    ReplyDelete
  3. எல்லாமே நல்லாருக்கு. அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்!!
    முதல் மூவர் தேர்வு...? சற்று சிரமம்தான் உங்களுக்கு!!

    ReplyDelete
  4. முன்னேறிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. அருமையானா தேர்வு.

    அனைவருக்கும் வாழ்துக்கள்.

    ReplyDelete
  6. அருமையான போட்டொக்கள்.
    அனைவரும் நல்ல யோசித்துப் படம் எடுத்டிருக்கிறார்கள்.
    சரியான புரிதல்.
    அனைவருக்கும் வாழ்த்துகள். மூன்று பேரை எப்படித் தேர்ந்தெடுப்பீர்களோ!!சிரமம்தான்.

    ReplyDelete
  7. Congrats to top 10 pictures and they all look very professional and fantastic shots.

    ReplyDelete
  8. நடுவர்களுக்கு நன்றி!! முன்னேறிய மற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்..!!!

    ReplyDelete
  9. என்னுடைய "நிழல்கள்" படத்தை நீங்கள் பார்க்கவே இல்லையா? பார்த்து உங்கள் கமென்ட் சொல்லுங்களேன்
    சகாதேவன்

    ReplyDelete
  10. சகாதேவன்,

    உங்க படம் எது?

    ReplyDelete
  11. கார்க்கி,

    //thanks. very 'good' slection//

    'good' ?

    உள்குத்து ஒண்ணும் இல்லையே? :)

    ReplyDelete
  12. போட்டியில் வெற்றிபெற்ற நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். வெற்றி பெற வில்லையென்றாலும் போட்டியில் கலந்து கொண்டதும்,எனது புகைப்படமும் வெளிவந்ததும் எனக்கு அளவுகடந்த மகிழ்ச்சியை தருகிறது.
    அடுத்த போட்டியை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  13. கார்க்கீஸ் நிழல் எப்படி மிஸ் செய்தது?

    அருமையான படங்கள்... அடுத்த ரிசல்ட் எப்ப?

    ReplyDelete
  14. பத்து பேருக்கும் பாராட்டுக்கள்.
    முன்னேற இருக்கும் மூவருக்கு
    அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
    Pmt

    ReplyDelete
  15. top3 on Monday :)

    going out over the weekend.

    ReplyDelete
  16. பத்து பேருக்கும் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  17. டாப் 3 படங்கள் என் கருத்தில்:

    இறகுப் பந்து, புத்தகத்தில் வளையல், இரும்புக் கதவும் நிழலும்.

    வாழ்த்துகள்!

    ReplyDelete
  18. 10க்கு முன்னேறியவர்களுக்கு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  19. எல்லா படங்களும் அருமையாக உள்ளது. முயற்ச்சிக்கு நிச்சயம் வெற்றியுண்டு என்பதை மீராண் படத்தைப்பார்த்து தெரிந்து கொண்டேன்.

    வெற்றிப்பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துகள்.

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff