Sunday, May 31, 2009

வணக்கம். காலச் சக்கரம் சுத்தர வேகத்த பாத்தா முழி பிதுங்குது.
திங்கக்கெழம சோம்பலா கொட்டாவி விட்டுக்கிட்டே தொடங்கனா, கண்ண மூடி கண்ண தொறக்கரதுக்குள்ள ஜாலியா வெள்ளி வந்துடுது.
ஆர அமர வீக் எண்ட கழிக்கலாம்னா, சனியும் ஞாயிறும் வரதும் தெரீல போறதும் புரீல.

வயசாவுதுங்க க்ளிக்கர்ஸ்.


வயசாவரதுல இருக்கர ஒரே சௌகர்யம், நமக்கு வயசாவர விஷயம் நமக்குத் தெரியாது. நாளொரு மேனி, பொழுதொரு வண்ணமுமாக நம் உடம்பில் இருக்கும் ஒவ்வொரு செல்லுக்கும் வயசாவுது. ஆனா, அது நமக்குத் தெரியாது. நம்ம கூடவே இருக்கரவங்களுக்கும் தெரியாது.

ஆனா, வருஷத்துக்கு ஒரு தடவ நம்மள பாக்கர நண்பர்கள்/அன்பர்கள் கண்ணுக்கு மட்டும்தான் பளிச்னு தெரியும்.
"இன்னாடா மச்சி, கிரவுண்ட் வாஙகுது"?
"அடப்பாவி, வெள்ள முடியா அது"?
"ஃபேஸ் முத்திப் போச்சுடா"

அது இதுன்னு வெந்த புண்ணுல கண்டதையும் ஊத்தர கிராதகப் பயலுவ தொல்லை, எல்லாருக்கும் 30+ ஆச்சுன்னா வர ஆரம்பிச்சிடும்.

ஊர்ல இருக்கர நோய் நொடியெல்லாம் பாத்தா, 30+ வந்தாச்சுன்னா, பாதி கிணறு தாண்டிய மாதிரி.
லைஃப் இஸ் டூ ஷார்ட்.

ஸோ, ஒவ்வொரு கணமும் சந்தோஷமா அடுத்தவனுக்கு டார்ச்சர் கொடுக்காம வாழப் பழகிக்கோங்க.
கண்ண மூடி கண்ண தொறக்கரதுக்குள்ள, கடைசி ஸ்டேஷன் வந்துடும்.

ஹலோ, ஹோல்ட்-ஆன்.
இன்னாடா, PiT க்கு வரலாம்னு க்ளிக்கினா, பதிவு மாறி வேற எங்கையாச்சும் போயிட்டோமான்னு பாக்கறீங்களா?
இல்ல இல்ல. சரியாதான் வந்திருக்கீங்க.

நான் தான், கொஞ்சம், போட்டித் தலைப்பு தந்த மயக்கத்துல வார்த்தைகளை அள்ளித் தெளிச்சுட்டேன்.

இனி போட்டிக்கு போகலாம்.

அதாவது, ஜூன் 2009க்கு PiT புகைப்படப் போட்டியின் தலைப்பு: "முதுமை".

முதுமைன்னவுடன், உங்க வீட்ல இருக்கர தாத்தா பாட்டியின், வெள்ளை முடியையோ சுருக்கமான தோலையா தேடி அவங்கள ரொம்ப துன்புறுத்தாதீங்க.
முதுமை, மனுஷங்களுக்கு மட்டுமில்லை, மிருகங்களுக்கும் வரும். (வயசான நாய் கிட்ட உஷாரா போங்க. கடிச்சு வச்சிடும், ஜாக்கிரதை. மருந்து மாத்திரைக்கு கொம்பேனியார் பொறுப்பு கெடையாது).
மரங்களுக்கும் வயதாகும்.
உயிருள்ளது எல்லாத்துக்கும் முதுமை வரும்.
உயிரில்லாத கட்டடங்கள், கார், பஸ்ஸுக்கும் முதுமை வரும்.

ஸோ, முதுமையை ப்ரதிபலிக்கும் எந்த விஷயமானாலும், பளிச்னு க்ளிக்கி, போட்டிக்கு அனுப்புங்க.

படத்த பாத்ததும் முதுமை தெரியணும். அலசி ஆராஞ்சு பிரிச்சு மேஞ்சாதான் முதுமை தெரியுங்கர மாதிரி உள்குத்து/நுண்ணரசியல் எல்லாம் வச்சு, வயசான காலத்துல சுத்த விட்றாதீங்கப்பு :)

போட்டியில் கலந்து கொள்ளும் விதம், மற்றும் விதிமுறைகள் இங்கே.

க்ளிக்குங்க! அசத்துங்க!

இந்த மாச நாட்டாமை நான் தான்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்வி, "வெற்றிப் படங்களை எந்த அடிப்படைல தேர்வு செய்யறீங்க?" என்பது.
என்னைப் பொறுத்தவரை, போட்டிப் படம், பார்வையாளனாகிய என்னை, எந்த அளவுக்கு, 'இழுக்குதோ', அந்த அளவுக்கு பட்டியலில் முன்னேறும்.

நல்ல புகைப்படத்துக்கு அடிப்படையில் அழகு சேர்ப்பவை,
*சரியான காட்சியை, நேர்த்தியான விதத்தில் கட்டம் கட்டுதல்
*காட்ட வரும் காட்சியை, துல்லியமாய் காட்டும் விதம், படத்தில் போதிய வெளிச்சம் இருத்தல்
*வழ வழா கொழ கொழான்னு, அவுட்-ஆஃப்-ஃபோக்கஸ் இல்லாமல், 'நச்'னு எடுத்தல்.
* இதில் ஏதாவது கூடியோ குறைந்தோ வந்திருந்தால், பிற்சேர்க்கையின் மூலம், படத்தை மெருகேற்றல்

அடிப்படை விஷயங்களில் கவனம் வைத்து எடுத்தாலே, பாதிக் கிணறு தாண்டிய மாதிரிதான்.

சாம்பிள்ஸ் பாக்கரதுக்கு முன்னாடி, போட்டியில் கலந்து கொள்ளும் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்.
கைவசம் இருக்கும் ஏதோ ஒரு படத்தை போட்டிக்கு அனுப்பாமல், தலைப்புக்கு பொருந்தும் வகயில், இதுவரை கற்ற/கேட்ட/கண்ட பாடங்கள்/படங்கள் எல்லாவற்றையும் மனத்தில் கொண்டு, கொஞ்சம் அலைந்து திருந்து, புதிய சப்ஜெக்ட்டை தேடிப் பிடித்து, க்ளிக்கி, மெருகேற்றி, போட்டிக்கு அனுப்பினால், அனைவருக்கும் நன்மை உண்டாகும் :)


இனி கொஞ்சம் முதுமை'ஸ் பாப்போம்.

source: http://www.abc.net.au/news/stories/2009/04/30/2557450.htm


என்னை வெகுவாய் கவர்ந்த முதுமை. இங்கே க்ளிக்கி பார்க்கவும்.

source: Surveysan


source: an&


source: cvr




source: http://www.flickr.com/photos/bigdeb/2622526292/


source: Looth


source: iyappan's photo http://www.flickr.com/photos/iyappan/2762881360


ஜமாய்ங்க!

Saturday, May 30, 2009

வணக்கம் மக்கள்ஸ்,

சில தவிர்க்க முடியாத்த காரணத்தினால் எனக்கு ஊருக்கு போகவேண்டிய கட்டாயம். ஆதான் முடிவுகள் அறிவிக்க தாமதமாயிடுச்சு.



இது எல்லாமே என் தனிப்பட்ட தேர்வு தான். பட்டுன்னு பார்த்ததும் மனசுக்கு சட்டுன்னு பிடிச்சுப்போச்சு.

ஒவ்வொரு படத்துக்கும் என் தனிப்பட்ட கருத்தை பிகாசாவிலே பார்க்கலாம்!

Thursday, May 28, 2009

பிற்சேர்க்கையில் முதலில் செய்ய வேண்டியது, படத்தின் நிழல் ( கருப்பு) மற்றும் வெளிச்சப் புள்ளிகளை தெரிவு செய்வது. உதாரணதிற்கு இந்தப் படத்தை எடுத்துக் கொள்வோம்.



படம் ஏகத்துக்கு டல்லடிக்கிறது. சொல்லிக் கொள்ளும் படியாக ஒன்றும் இல்லை. காரணம் படத்தில் நிழல் பகுதிக்கும் வெளிச்சப்பகுதிக்கும் வித்தியாசம் அதிகம் இல்லை.
Rooms என்ற எழுத்துக்களும்,விளக்கும் வெள்ளை நிறத்தில் இல்லாமல் சாம்பல் நிறத்தில் இருக்கு. படத்தில் முழுமையான கருப்பு பகுதிகள் ஏதும் இல்லை.
தூயத் தமிழில் கூறவேண்டும் என்றால், காண்ட்ராஸ்ட் கம்மியாக இருக்கு. இதை எளிதாக கிம்பில் சரி செய்வது பற்றி பார்க்கலாம்


படத்தை கிம்பில் திறந்து முதலில் படத்தின் Histogram எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம். Histogram பற்றிய விரிவான இடுகை இங்கே.



படத்தில் வலது புறத்தில் ( வெளிச்சப் பகுதி) நிறைய வெற்றிடம் இருக்கு. அதே போல இடது புறம்( நிழல் பகுதி ) சிறிய வெற்றிடம் இருக்கு. இதை சரி செய்வதன் மூலம் , படத்தை மெருகேற்றலாம்.

வழக்கம் போல ஒரு Duplicate layer செய்துக் கொள்ளுங்கள். உங்களின் பிறசேர்க்கைகளை Duplicate layerல் செய்வதால் , அசல் படம் மாறாமல் இருக்கும். தவறு நேர்ந்தால் நகலை மட்டும் அழித்து விடலாம்.



அடுத்து Colors -> Levels.



இதில் கவனிக்க வேண்டிய விஷய்ங்கள் பல.
படத்தின் Histogram மீண்டும் இதில் தெரியும். அதன் கீழே மூன்று முக்கோணங்கள் இருக்கும். இடது புறம் கருப்பு நிற முக்கோணமும் அதன் கீழே 0 என்ற அளவும் இருக்கும். இது படத்தின் நிழல் பகுதிக்கு.

வலது புறம் வெள்ளை முக்கோணமும் 255 என்ற அளவும் இருக்கும். இது படத்தின் வெளிச்சப் பகுதிக்கு. நடுவில் ஒரு சாம்பல் நிற முக்கோணமும் 1 என்று அளவும் இருக்கும். இது படத்தின் நடுப் பகுதிக்கு ( mid tones ).

Histogram ல் தூய கருப்பின் அளவு 0 மற்றும் தூய வெள்ளையின் அளவு 255.




முதலில் கருப்பு பகுதியை மாற்றலாம். இடது முக்கோணத்தை அமுக்கி, histogram வரைபடம் ஆரம்பிக்கும் இடத்துக்கு வலது புறமாய் நகர்த்துங்கள். 0 வில் இருந்து கருப்பு பகுதி 17 என்று மாறி இருக்கும். படம் கொஞ்சம் கருப்பாய் மாறும்.




அடுத்து வலது வெள்ளை முக்கோணத்தை இடது புறமாய், வெற்றிடம் இல்லமால் , Histogram முடியும் இடத்துக்கும் நகர்த்துங்கள். 255 வில் இருந்து வெளிச்சப் பகுதி 97 என்று மாறி இருக்கும். படம் நிறையவே மாறி இருக்கும்.



அடுத்து நடு முக்கோணம். அதை வலது புறம், வெள்ளை முக்கோணத்தை நோக்கி நகர்த்தினால், படம் கருப்பாகும்



இடது புறம், கருப்பு முக்கோணத்தின் புறம் நகர்த்தினால் வெளிச்சமாகும்


உங்களுக்கு தேவையான அளவிற்கு மாற்றிக் கொள்ளுங்கள்



இரண்டு படத்தின் Histogram க்கும் உள்ள வித்தியாசத்தை பாருங்கள். இப்போது Histogramல் வலது/இடது புறத்தில் எந்த இடைவெளியும் இல்லை. ஆனால் Histogram வெட்டுப்பட்டுள்ளது.



படத்தின் Contrast அழகாக மாறி , ஒரு நிமிடத்தில் டல்லடிக்கிற படத்தை டாலடிக்க வைத்து விடலாம்.


Thursday, May 21, 2009



இந்த 15 படங்களும் முதல் சுற்றில் தேர்வானவை. போட்டி முடிவுகள் விரைவில்

Monday, May 11, 2009

உங்களில் பல பேர் கவனிச்சிருப்பீங்க... மலர்கள் & செடி-கொடி, சாலைகள், பொருள்கள், கட்டிடங்கள் etc etc எல்லாம் படம் எடுப்பது ஸ்லேட்டிலே பல்பம் வச்சு வரையரா மாதிரி. சரியா வரலைன்னா.. அழிச்சுட்டு இன்னும் பல முறை அதையே திரும்ப திரும்ப ( ஒரே மாதிரி ) செய்தால் ஒரு கட்டத்தில் பர்பெக்ட்டா வரும். இதுக்கு காரணம் என்ன தெரியுமா, சித்திரமும் கைப்பழக்கம்-செந்தமிழும் நாப்பழக்கம் மட்டும் இல்லை, மேலே சொன்ன எதுவுமே சலிக்காம போஸ் குடுகுக்கும். நீங்க எவ்வளவு தான் இடம், நேரம், அமைப்பு மாற்றி மாற்றி எடுத்தாலும், முறைக்காது, முகம் சுளிக்காது, மறுத்து ஒரு வார்த்தை பேசாது.

ஆனால், ஒரு ஆளை கூப்பிட்டு " உன்னை போட்டோ எடுக்கப் போறேன், கேஷுவலா இருங்க" ன்னு சொல்லிப்பருங்க.. அப்படியே ஸ்டிப்பா கஷ்டப்பட்டு போஸ் குடுப்பாரு. " இப்படி நில்லுங்க – இப்படி பாருங்க – இங்க உட்காருங்க" ன்னு அரை மணி நேரம் சொல்லிப்பாருங்க.. மூஞ்சி எல்லாம் ரோஸ்பவுடர் இல்லாமலே ஜிவ்வுன்னு சிகப்பாய், மனுஷன் கடுப்பாய் போட்டொவும் வேணாம், ஒண்ணும் வேணான்னு கிளம்பிடுவார்.
இதிலே முதலில் சொன்னவை எல்லாம் நம்ம கிட்டே முறைச்சுக்காது, இருந்த இடத்தை விட்டு நகராது. ரெண்டாவது சொன்னதிலே நாசூக்காகவோ – கோபமாகவோ நாலு வார்த்தையிலே திட்டி தீர்த்துடா ஒருமாதிரி பிரச்சனை இல்லாம உடல் - பொருள் சேதாரமில்லாம தப்பிச்சுக்கலாம்.

ஆனால், விலங்குகளை படம் புடிக்கும்போது, கதையே வேறே! விலங்கின் தன்மைக்கேற்ப்ப ( பறவைகளும் தான்), இருந்த இடத்தை விட்டு கிளம்பிப்போகிரது மட்டும் இல்லை, கொஞ்சம் அசால்டா இருந்தாலோ, ரொமப்வே நொய்-நொய்ன்னு தொந்ததரவு பண்ணினாலோ நம்ம மேலே பாய வாய்ப்பிருக்கு. உடலுக்கும், பொருளுக்கும் சேதாரம் ஏற்படும் வாய்பு மிக மிக அதிகம்.

அதனாலே விலங்குகளை படம் எடுக்கரதுக்கு முன்னே சில விஷயங்களை நினைவில் வச்சுகிட்டா.. ஒரு அற்புதமான படம் மட்டும் இல்லை, சில ரம்யமான தருணங்களும் உங்களுக்கு கிடைக்க வாய்ப்பிருக்கு





  1. எந்த காரணத்துக்காகவும் விலங்குகளை துன்புறுத்தக்கூடாது. ( குச்சியால குத்தறது – குர்ர்ன்னு சவுண்ட் விடரது – சாக்லேட் கவரிலே கல்லை சுத்தி குடுக்கிரது)
  2. ஜூ அல்லது safari போகும்போது, சொல்லப்பட்டிருக்கும் விதிமுறைகளை மீறக்கூடாது ( பாப்க்காண் , பழம் குடுப்பது, உறக்க கத்தி பேசறது, பிளாஸ்டிக் கவரிலே பலூண் பண்ணி டமார்ன்னு உடைக்கிறது)
  3. மூக்கை துளைக்கிரா மாதிரி ஸெண்ட் போடறதை தவிர்க்கவும்.
  4. விலங்குகள் கிட்டே இருக்கும்போது 15 நிமிஷமாவது சும்மா இருங்க ( Let them get used to your presence). இதை முயர்ச்சி பண்ண சூப்பர் இடம் உங்க / நண்பர் வீட்டு நாய் , பூனை கிட்டே போய் எதுவும் செய்யாம சும்மா இருக்கிரது.
  5. கண்டிப்பா பிளாஷை வீட்டிலே வச்சுட்டு போங்க. ( ரொமப் கிட்டே இருந்து எடுக்கும்போது பிளாஷ் வெளிச்சத்தால் startle ஆகும், ரொம்ப தொலைவில் இருந்தால் பிளாஷ் பிரயோஜனப்படாது).
  6. கேமேராலே க்ளிக் பண்ணும்போதோ – ஜூம் பண்ணும்போது " க்ளிக் – ஜூஊஉ" ன்னு sound settings இருந்தால், மறக்காம எல்லா சவுண்லையும் கேன்சல் பண்ணுங்க. விலங்குகளுக்கு நம்மை விட கேட்க்கும் திறன் அதிகம்.
  7. Viewfinder வழியா கவனமா பார்த்துகிட்டே இருங்க..முடிஞ்ச வரைக்கும் விலங்கின் கண்கள் மீது focus பண்ணுங்க... மற்ற details எல்லாம் தானா அமையும்.
  8. விலங்கின் eye-level ஐ கவனத்தில் கொண்டு, அதே லெவெலில் படம் எடுத்தா அட்டகாசமா இருக்கும். It will give a dramatic feeling.
  9. Memmory card லே கஞ்சத்தனம் பண்ணாம க்ளிக் பண்ணுங்க.. கண்டிப்பா 10 படமாவது அருமையா இருக்கும்.
  10. Never be afraid to try, Never frighten the animals.

PiT போட்டில் சேர தகுதியுள்ள விலங்குகளின் பட்டியலை பார்ப்போமா







































விலங்குகள்
முதுகெலும்பு உள்ளவை
முதுகெலும்பு இல்லாதவை
Amphibian - ஈரூடக வாழிகள்

ஷோகான பார்டி, நீர் நிலம் ரெண்டிலேயும் ஜாலியா காலம் தள்ளும்.


Molluscs - நத்தை, சிப்பி இனத்தை சேர்ந்தவை.

இவங்களுக்கு உடல் ரெம்பவே மிருதுவாக இருக்கும் அதை பாதுகாக்கத்தான் இந்த
ஸ்ட்ராங்கா கூடு

snail
Birds - பறவைகள்
bird
Worms - புழு

நெளிஞ்சு நூடூல்ஸ் மாதிரி இருக்குமே.. அதே தான்
Worm
Reptiles - ஊர்வன

பாம்பு- பல்லி எல்லாம் இந்த பேமலிதான்

lizard
Arthropods- பூச்சி

கரப்பான்பூச்சி, பட்டாம்பூச்சி, எட்டுகால்பூச்சி, etc etc

insect
Fish - மீன்கள்

Fish-fry படம் எல்லாம் அனுப்பக்கூடாது. விலங்கு விழுங்கும்படி ஆச்சுன்னா
அது போட்டிக்கு இல்லை

(திமிங்கலம் - டால்பின் எல்லாம் மீன்கள் அல்ல)

fish
Echinoderms - இதுகளுக்கு உடல்வாக்கு Scale / Compass
வச்சு படைச்சா மாதிருக்கும்

star fish, Brittle Star, Sea cucumber etc

starfish
Mammals - பாலூட்டிகள்

அணில்,மாடு, நாய்,திமிங்கலம், டால்பின், குரங்கு

மனுஷனும் உண்டு.. ஆனால் போட்டியில் சேர்க்கப்படமாட்டாது

Ape
Coelenterates (Cnidaria and Ctenophora)-

ரொமப்வே மிருதுவான உடல்வாகு - translucent body

jellyfish வகைய்யை சார்ந்தது

jelly fish

Monday, May 4, 2009

உசரமான கட்டங்கள் புகைப்படத்தில் கொஞ்சம் கவனமாக எடுக்காவிட்டால் பெரும்பாலும் சாய்ந்து காணப்படும். அதை கிம்பில்( GIMP) சரி செய்ய ஒரு முயற்சி இங்கே.
உதாரணத்திற்கு நாதஸ் அண்ணாச்சியின் இந்த பச்சை ஆறு படம்.
இதை

இப்படி மாத்தப் போறோம்.






படத்தை கிம்பில் திறந்து , லேயரை நகலெடுத்துக் கொள்ளுங்கள்.






Shift + p அமுக்கினால் Perspective Tool திறக்கும். படத்தில் உள்ளவாறு மேலே இருக்கும் இரண்டு மூலைகளயும் வெளி நோக்கி இழுத்து, உங்களுக்குத் தேவையான கட்டடம் நேரே இருக்குமாறு மாற்றிக் கொள்ளுங்கள்.




கிட்டத்தட்ட 99% இதுவே போதுமானதாய் இருக்கும். சில சமயங்களில் கட்டடம் நேராகி மற்றப்பகுதிகள் நசுங்கினால் போல தோன்றக் கூடும்.உதாரணதிற்கு, இந்தப்படத்தில் ஆற்றை ஒட்டி இருக்கும் பாதைகளும் மரங்களும் சரியாக இல்லாதது போல எனக்குத் தோன்றியது.

அதை சரி செய்ய. முதலில் படத்தின் நீளத்தை Image ->Canvas size மூலம்



கொஞ்சம் அதிகப்படுத்திக் கொள்ளுங்கள்.



படத்தின் கீழே இந்த மாதிரி வெற்றிடம் வந்து இருக்கும்.








அடுத்து shift + t அமுக்கினால Scale tool வரும். படத்தின் மையப்பகுதி மற்றும் கீழ் பகுதிகளை உங்களின் வசதிக்கு ஏற்ப நேராக வரும்படியும், நசுங்கினது தெரியாமலும் மாற்றிக் கொள்ளுங்கள்.



கடைசியில் Crop Tool கொண்டு உங்களுக்குத் தேவையானப் பகுதியை மட்டும் கத்தரித்துக் கொள்ளுங்கள்.



அவ்வளவுத்தான்.




Friday, May 1, 2009

இந்த மாசம் பூரா உங்களுக்கு ஜூவாலஜி (Zoology) கிளாஸ், காரணம் இந்த மாத தலைப்பு - விலங்குகள் (பறவைகள் மற்றும் மிருகங்கள்)

எந்த உள்குத்தும் இல்லாமல்.. நிஜமான பறவைகள் மிருகங்களை தான் எதிர்ப்பார்க்கிறோம். ஏன் சொல்லறேன்னா.. நீங்க எல்லாருமே கோடு போட்டா ரோடு போட்டுவீங்கன்னு எல்லாருக்குமே தெரியும். மனுஷப்பயலுவ படத்தை போட்டு இவனை மாதிரி மிருகம் உண்டா! ன்னு பிலாசபி எல்லாம் சொல்லக்கூடாது.

காக்காய், குருவி எலி, பூனை நாய், மாடுன்னு எதை வேணும்ன்னாலும் அனுப்புங்க (படத்தை தான் சொன்னேன்) . கரப்பான்பூச்சியிலிருந்து திமிங்கலம் வரை உங்களுக்கு தோணினா மாதிரி படம் புடிச்சு அனுப்புங்க. ஆனா இந்த கசாப்பு கடையிலே தொங்க விட்டிருக்கிர ஆடு, நாலு நாய் பெருச்சாளிய்யை கொதறிகிட்டு இருக்கிரது, லாறி டயரிலே அடிபட்ட தவக்களை மாதிரி படங்களை தயவுசெய்து போட்டிக்கு அனுப்பரதை தவிர்க்கவும். அந்த அளவுக்கும் மனசு இன்னும் பக்குவப்படலை

PiT மாதாந்திர போட்டி விதிமுறைகள்


இது உங்கள் பார்வைக்கு
An&



Jeevs




Naths



CVR



Deepa

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff