Wednesday, November 3, 2010

எந்த கேமரா நமக்கு சிறந்த கேமரா பாகம் - 11, அட்வான்ஸ்டு கம்பேக்ட் கேமரா...

7 comments:
 
வணக்கம் நண்பர்களே..

இது தீபாவளி நேரம்,போனஸ் வந்திருக்கும் ,பல பேர் புதுசா கேமரா வாங்கலாம்னு இருப்பீங்க.. அதற்கு இந்த பாகமும்,இதற்கு முந்தைய பாகமும் ,சிறிய கேமராக்களை தேர்ந்தெடுப்பதற்கு கொஞ்சம் உதவியா இருக்கும்னு நினைக்கின்றேன்..


அட்வான்ஸ்டு கம்பேக்ட் கேமரா(ADVANCED COMPACT CAMERA) என்பது இதற்கு முன்னர் பகுதியில் பார்த்த பேசிக் கேமரா வகையில் பயன்படுத்தப்படும் சென்சார் வகையை சேர்ந்தது தான்.. ஆனால் பல்வேறு வகைகளில் FEATURES என்பது அட்வான்ஸாக இருக்கும்..

அவைகள்,
control features
lens speed
advanced zoom range
quality features

என்று நான்கு வகையாக பிரிக்கலாம்..

control features



control features என்பது நாம் manual ஆக பல விசயங்களை பயன்படுத்திக்கொள்ளும் வகையில் இருக்கும்..

அதாவது aperture, shutter speed , exposure,external flash,white balance,etc போன்றவற்றை நம் விருப்பத்திற்கேற்ப பயன்படுத்தலாம்..

மேலும் பல்வேறு வகையில் control modeகள் கொடுக்கப்பட்டிருக்கும் உதாரணமாக sports mode , landscape mode , macro mode ,etc.. போன்றவற்றை நம் தேவைக்கேற்ப பயன்படுத்தும் வகையில் இருக்கும்.



சில சமயம், optical viewfinder ம் பயன்படுத்தி படம் எடுக்கும் வகையில் கேமராக்கள் இருக்கும்.. ஆனால் இதன் அளவு கண்டிப்பாக சிறியதாக தான் இருக்கும்.. அதாவது நாம் viewfinderல் பார்ப்பதற்கும், படத்தின் ரிசல்ட்டும் வித்தியாசப்படும்.. அதாவது படத்தின் ரிசல்ட்டில் 80-90 % தான் நாம் viewfinder ல் பார்க்கமுடியும்.

இதில் வீடியோ என்பது HD(high definition) குவாலிட்டியில் எடுக்கும் அளவுக்கு வந்து விட்டன...

இது பெரிய screen size உள்ள TV வைத்திருப்பவர்களுக்கு,(40inch screen size ற்கும் மேல்) குவாலிட்டி குறையாமல் வீடியோவை பார்ப்பதற்கு உதவும். அதே சமயம் HD quality என்பது சிறிய சைஸ் TV யிலோ,computer monitorலோ பார்ப்பதால் நார்மல் வீடியோவிற்கும் , HD வீடியோவிற்கும் வித்தியாசம் தெரியாது.

பொதுவாக இவ்வகை கேமராக்கள் கொஞ்சம் வெயிட் அதிகமாக இருக்கும்,அளவிலும் கொஞ்சம் பெரியதாக இருக்கும்.

உதாரணமான கேமராக்கள்,
canon g 11
canon g 12
nikon p 7000


லென்ஸ் speed features

speed features என்பது, படத்தை நாம் வேகமாக எடுப்பதற்கு தேவையான fast aperture கொண்ட lensகள் உடைய கேமராக்கள் ஆகும்..



இதன் aperture என்பது f 2.8 மற்றும் அதை விட வேகமான f2 , f1.9 போன்ற aperture கொண்ட லென்ஸ்கள் ஆகும்..

இந்த மாதிரி கேமராக்களின் விலை கொஞ்சம் அதிகம் இல்லை, அதிகம் அதிகமாக தான் இருக்கும்.

இப்போதைக்கு samsung ல் f1.8 வரை fast aperture உள்ள கேமரா தான் அதி வேகமான கேமரா..

உதாரணமான கேமராக்கள்

canon s 90
canon s 95
panasonic LX 5
panasonic LX 4
ricoh GR digital 111
samsung EX 1


இந்த வகை கேமராக்களில் zoom range என்பது குறைவாக தான் இருக்கும் .. உதாரணமாக 24-60mm , 28-105mm என்கின்ற கொஞ்சம் குறுகிய அளவில் தான் இருக்கும்.. ஆனால் நமது பொதுவான பயன்பாட்டிற்கு இந்த zoom range என்பதே போதும்..

அதே சமயம் இதன் வேகம் , picture quality என்பது மற்ற சிறிய கேமராக்களை விட கண்டிப்பாக நன்றாக இருக்கும்..

zoom range features

பொதுவாக பட்ஜெட் வகை சிறிய கேமராக்களில் பார்த்தால் 32mm ற்கு கீழே wide angle என்பது இருக்காது..அதாவது 28mm,24mm என்கிற மாதிரி இருக்காது (இப்போதைக்கு ஒரு சில கேமராக்களில் வர தொடங்கி விட்டன)..
இந்த மாதிரி வரும் போது நமக்கு landscape படங்களை நல்ல wide angleல் படம் எடுக்க முடியாது..



ஆனால் அட்வான்ஸ்டு காம்பேக்ட் கேமராக்களில் 28mm,24mm என்று wide angle இருக்கும்..

அதே சமயம் tele zoom என்பதும் பட்ஜெட் கேமராக்களில் குறைவாக தான் இருக்கும்..
அதாவது அதிகபட்சம் 105mm,125mm என்று இதற்கு மேல் போகாது. இந்த மாதிரி zoom range என்பது நமது நடைமுறைக்கு போதும் என்றாலும் சில சமயம் பத்தாது..

advance compact கேமராக்களில் இப்போதைக்கு கிட்டதட்ட 400mm வரையில் வரத்தொடங்கி விட்டன.

wide angleம் , tele zoom ம் ஒரு சேர வருவதே இந்த features ன் சிறப்பு..
அதாவது, 24-240mm , 28-390mm என்று கேமராவிற்கு தகுந்த மாதிரி zoom வகைகள் கிடைக்கும்.

zoom range அதிகம் விரும்புகின்றவர்கள்,அதே சமயம் சிறிய கேமராவாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றவர்கள் இந்த வகை கேமராக்களை வாங்கலாம். ஆனால் பட்ஜெட் கேமராவை விட அளவில் சற்று பெரியதாக தான் இருக்கும்..

இவ்வகை கேமராக்களை COMPACT TRAVEL ZOOM கேமரா என்றும் கூறுவர்..

உதாரணமான கேமராக்கள்
panasonic tz 7
panasonic tz 10
panasonic zr 1
sony dsc h 55
sony hx-5
samsung wb 500
ricoh cx 1
richo r 7
richo r 8
olympus u 9010
nikon L 110
fuji f 80 exr
casio h10
casio fh 100
canon sx 210 IS

quality features
இதற்கு என்று தனியாக கேமராக்கள் வருவதில்லை.. மேலே சொன்ன கேமரா வகைகளில் இது கலந்திருக்கும்.. அது என்னென்னவென்றால்,

build quality..இது பட்ஜெட் கேமராக்களை விட நன்றாக இருக்கும்.. அதாவது பட்ஜெட் கேமராக்கள் plastic அதிகாமாக இருப்பதால் கீழே விழுந்தால் உடையவோ,எளிதில் பழுதடையவோ வாய்ப்பு உள்ளது.. ஆனால் இவ்வகை கேமராக்களில் build quality என்பது நல்ல உறுதியாக இருக்கும்.

erogonomics .. இது நமக்கு உடனடி தேவையான settings பட்டன்கள் அதிகமாக இருக்கும்..ஒவ்வொரு தடவையும் menu வை open செய்து settings செய்ய அவசியம் இல்லாமல், எளிதாக பயன்படுத்துவதற்காக தனிதனி பட்டன்கள் கொடுக்கப்பட்டிருக்கும்..
அதாவது ISO , white balance , play button , flash button போன்றவகளுக்கென்று தனி தனி பட்டன்கள் கொடுக்கப்பட்டிருக்கும். இதனால் நாம் வேகமாகவும்,எளிதாகவும் செட்டிங்ஸை மாற்றலாம்.

பட்ஜெட் கேமராக்களில் அவ்வாறு இருக்காது, ஒவ்வொரு தடவையும் menuவிற்குள் போக வேண்டும்.

zoom lever .. நாம் அதிகமாக பயன்படுத்தும் zoom lever என்பது வேகமாக இயங்கும், அதே சமயம் கொஞ்சம் பெரியதாகவும் பயன்படுத்துவற்கு எளிதாக இருக்கும்.. பட்ஜெட் கேமராக்களில் சிறிது மந்தமாக தான் இயங்கும்.

raw mode.. சில சமயம் எடிட்டிங் செய்வதற்காக நமக்கு raw formatல் படங்களை பதிவு செய்வதற்கு அவசியம் வரும்.. இந்த features ஒரு சில கேமராக்களில் வரும்..

battery .. இவ்வகை கேமராக்களில் battery என்பது அதிக நேரம் பயன்படும் படி கொடுக்கப்பட்டிருக்கும்.. ஆனால் பட்ஜெட் கேமராக்களில் குறைவான நேரம் மட்டுமே பயன்படும்படியோ,அடிக்கடி மாற்ற வேண்டிய AA battery வகைகளை பயன்படுத்தும் படியோ தான் இருக்கும்..

இவ்வகை கேமராக்களில் நாம் LCD finderஐ அதிகாமாக பயன்படுத்த வேண்டியிருப்பதால் விரைவில் battery தீரும்.. எனவே சிறிய கேமராக்களை வாங்கும் போது எந்த வகை battery ஐ பயன்படுத்த முடியும் என்பதை கவனிக்க வேண்டும்..

movie recording time .. சிறிய பட்ஜெட் கேமராக்களில் வீடியோவை பயன்படுத்தும் வசதி இருந்தாலும் குறைவான நேரம் மட்டுமே பதிவு செய்ய முடியும்.. அதாவது ஒரு தடவை வீடியோ பதிவு செய்தால் உதாரணமாக 10 நிமிடம் வரை மட்டுமே பதிவு செய்ய முடியும்.. ஆனால் advance compact கேமராக்களில் 30 நிமிடம் வரை பதிவு செய்யலாம்..

LCD SCREEN .. நாம் படம் எடுப்பதற்கு LCD screenஐ தான் பயன்படுத்த முடியும்.. எனவே இதன் sizeம், resolutionம் முக்கியம்.. சில சமயம் நாம் வெயில் எடுக்கும் போது LCD screen ல் படம் தெளிவாக தெரியாது.. இதற்கு காரணம் குறைவான lcd screen resolution தான்.. இவ்வகை கேமராக்களில் screen resolution என்பது சற்று அதிகமாகவும்,அதே சமயம் LCD screen சைஸ் என்பது 3.0 இன்ச் என்று பெரிதாக இருக்கும்.இதுவும் நாம் முக்கியமாக கவனிக்கவேண்டியது ஆகும்.

focus selctor நாம் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் focus செய்ய விரும்பினால் அது பட்ஜெட் கேமராக்களில் வாய்ப்பு இல்லை..எல்லாமே auto தான்.. auto focus இருந்தாலும் focus எந்த பகுதியில் படம் எடுக்க வேண்டும் என்பதையும் கேமரா தான் முடிவு செய்யும்.

ஆனால் ACD கேமராக்களில் நாம் focus செய்ய விரும்பும் பகுதியை நாமே செலக்ட் செய்யும் வசதி இருக்கும்..

மேலே சொன்னதெல்லாம் ஒரே சமயத்தில்,ஒரே கேமராக்களில் கிடைக்காது.. விலைக்கு தகுந்த மாதிரி ஒரு சில features இருக்கலாம், இல்லாமலும் வரும்.. உங்களுக்கு எது முக்கியமோ அந்த features இருக்கும் கேமராவை பார்த்து வாங்கவும்..

பட்ஜெட் கேமராவிற்கும் , ACD கேமராவுக்கும் வித்தியாசம் என்பது இந்த மாதிரி features தான்.. மற்றபடி சென்சார் என்பது இரண்டும் ஒரே அளவு தான்.

இதில் வேறு ஏதாவது சந்தேகங்கள் இருப்பின் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்..

குறிப்பு: மேலே சொன்ன மாடல்கள் எல்லாம் ஒரு குறிப்புக்காக தான் கொடுக்கப்பட்டுள்ளன.. அதே சமயம் இப்பொழுது சந்தையில் ஒரு சில மாடல்கள் இல்லாமலும் போகலாம் அல்லது அதன் updated மாடல்களும் வந்திருக்கலாம்.. எனவே, இதனால் வரும் விளைவுகளுக்கு பிட் பொறுப்பாகாது....


நன்றி,
கருவாயன்.

7 comments:

  1. which one is best battery...? lithium or normal cell battery?

    ReplyDelete
  2. @mohamed faaique.. எனக்கு பேட்டரியை பற்றி அவ்வளவாக தெரியாது.. இருந்தாலும் எனக்கு தெரிந்த வரையில் normal பேட்டரியை விட lithium பேட்டரி சிறந்ததே..

    -கருவாயன்

    ReplyDelete
  3. Ganesh said..

    Could you please sort list end to end steps to buy a camera? and

    Could you please sort list end to end steps to take a picture(including adjustment details thro camera)?

    stating as Tips-to buy a camera/Tips - to take good picture from all your 1 to 11 Parts....

    I need link for you part - 9 ,please provide that link too(i did not studied the 9th part yet).

    ReplyDelete
  4. Dear sir

    Please suggest best basic Point & Shoot Camera below Rs.5000. I want to buy for my Daughter.
    Reply needed Urgently.

    Muralidharan

    ReplyDelete
  5. i want to talk can i have ur number?

    ReplyDelete
  6. please suggest best camera? DSLR below 10000

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff