Wednesday, December 8, 2010

எந்த கேமரா நமக்கு சிறந்த கேமரா - பாகம்-12.. ப்ரொஸ்யூமர் கேமரா..

24 comments:
 

வணக்கம் நண்பர்களே..

prosumer
camera என்பது proffessional தேவை மற்றும் consumer தேவை, இவ்விரண்டு கேமராக்களின் கலவை என்பதால் இதை prosumer கேமரா என்று கூறுகின்றனர்..
அதாவது proffessional கேமராவில்(DSLR) இருக்கும் control வசதிகளும்,consumer கேமராவில் இருக்கும் எளிமைகளும் ஒரு சேர இந்த வகை கேமராவில் இருக்கும்.




இந்த வகை கேமராக்கள் பார்ப்பதற்கு பெரியதாக இருந்தாலும் இதில் பயன்படுத்தப்படும் சென்சார் என்பது பட்ஜெட் மற்றும் advance compact கேமாராக்களில் வரும் சென்சாரின் அளவுகளோ அல்லது கொஞ்சம் அதிக அளவு சென்சார்களை தான் பயன்படுத்துகின்றனர்.

இதன் நன்மைகளை பார்ப்போம்,

1.பெரிய அளவிலான zoom range

இவ்வகை கேமராக்களில் zoom range என்பது மிக அதிகமாக இருக்கும்.. அதாவது 24-600mm,28-700mm என்று அதிக அளவில் இப்பொழுது வரத்தொடங்கி விட்டன.

இந்த மாதிரி zoom range DSLR ல் வாங்க வேண்டும் என்றால் சில சமயம் நாம் சொத்துக்களை விற்க வேண்டியது வரலாம்..
இதனால் அதிக zoom range விரும்புகின்றவர்கள்,பெரிய பெரிய லென்ஸ்களை வாங்கமுடியாத பட்ஜெட் காரணங்களினால் இக்கேமராக்களை வாங்கி பயன் பெறலாம்..

டீசெண்ட்டான wide angle(24mm) முதல் மிக அதிகமான tele end(675mm) வரை ஒரே லென்ஸில் சிறியதாக அமைக்கப்பட்டிருக்கின்றன.

இது, பல DSLR லென்ஸ்களை எடுத்து சென்று மிகுந்த சிரமப்படுவதை போல் இல்லாமல் எளிதாகவும்,வெயிட் குறைவாகவும் இருக்கும்.. travelling செல்லும் போது இதன் பயன்பாடு நன்றாக புரியும்.

எனவே இவ்வகை கேமராக்களை super zoom camera என்றும் கூறுகின்றனர்..

2.DSLR மாதிரியிலான கையாலுதல்


சிறிய கேமராக்களில் நாம் படம் எடுக்கும் போது கேமராக்கள் சிறியதாக இருப்பதால் ஆடாமல் எடுக்க சற்று சிரமாக இருக்கும்.

prosumer கேமராக்கள், சிறிய கேமராக்களை போல் சிறியதாக இல்லாமலும் அதே சமயம் பெரிய DSLR வகைகளைப்போல் பெரிதாக இல்லாமலும் இருக்கும்.

இது கிட்டதட்ட DSLR மாதிரி தான் handling இருக்கும்.. இதன் ஷேப் மற்றும் grip இதெல்லாம் ஒரு DSLR மாதிரியே இருக்கும்..

ஒரு சில கேமராக்களில் DSLR லென்ஸ்களை போன்றே நாம் manual ஆக zoom செய்யலாம்.. இதனால் நாம் துள்ளியமாக zoom ஐ பயன்படுத்தலாம்..

இதை ஒரு குட்டி DSLR வகை என்று சொல்லலாம்..

3.DSLR மாதிரியிலான பயன்பாடுகள்


இவ்வகை கேமராக்களில் DSLRல் இருப்பது போல் அததெற்கென deticated பட்டன்கள் இருக்கும். அதாவது exposure , ISO , white balance போன்றவற்றை நாம் மெனுவிற்குள் சென்று மாற்றாமல் உடனடியாக பட்டன்களை பயன்படுத்தி மாற்றிக்கொள்ளலாம்....


நாம் live view ஐ பயன்படுத்தி (மேலே உள்ள படம் மாதிரி)படம் எடுக்கும் போது நமது shoulder தான் நமக்கு துணை.. ஆனால் இந்த மாதிரி நமது shoulder ன் துனையோடு படம் எடுக்கும் போது கண்டிப்பாக படம் ஆடாமல் எடுப்பதும், சில சமயம் சரியாக compose செய்யவும் சிரமமாக இருக்கும்..
ஆனால் இக்கேமராக்களில் DSLR ல் இருப்பது போல் நாம் கண்களை கேமராவுடன் ஒட்டி எடுப்பதற்கு வசதியாக EVF( electronic view finder) வசதியும் உண்டு..


இதனால் நாம் DSLR ல் எடுப்பது போல் ஒரு gripஆக இந்த கேமராவிலும் steady யாக படம் எடுக்கலாம்..


4.பெரிய லென்ஸ்கள்..


இதன் லென்ஸ் என்பது சிறிய கேமராக்களை விட சற்று பெரியது ஆகும்.. இதனால் optical quality என்பது சிறிய கேமராக்களை விட சற்று நன்றாக இருக்கும்.. அதே சமயம் ஒரு சில கேமராக்களில் நாம் DSLR லென்ஸ்களை போல் manual ஆகவும் zoom ஐ பயன்படுத்தலாம்.. இதனால் நாம் சரியான zoom அளவை எளிதாகவும் , வேகமாகவும் பயன்படுத்த முடியும்.
சிறிய கேமராக்களில் உள்ள electronic zoom adjustment ஐ பயன்படுத்தும் போது ஏற்படும் அசெளகர்யங்கள் இதில் (manual zoom) இல்லை..

5.பிற நன்மைகள்

  • • aperture range என்பது வேகமாகவும் கிடைக்கும்..
  • • raw formatல் படங்களை பதிவு செய்யும் வசதிகள் உண்டு. இதனால் post processing பிரச்சனையில்லாமல் பன்னலாம்
  • • external flash சிறிய கேமராக்களின் ஃப்ளாஷ் என்பது மிகவும் குறைவாக தான் இருக்கும்.. பெரிய ஃப்ளாஷ் பயன்படுத்த முடியாது,இவ்வகை prosumer கேமராக்களில் பெரிய external flash களை பயன்படுத்துவதற்கு external hot shoe வசதி கொடுக்கப்பட்டிருக்கும்


  • • low noise சிறிய கேமராக்களுடன் ஒப்பிட்டு பார்த்தால் noise என்பது குறைவு.. இதனால் ISO வை பயமில்லாமல் அதிகப்படுத்தி படம் எடுக்கலாம்..
  • • macro வில் படமெடுப்பது என்பது இவ்வகை கேமராக்களில் மிகவும் நன்றாக depth of field கிடைக்கும்.subjectற்கும் லென்ஸிற்கும் 3cm வரை ஃபோகஸ் ஆகும். பெரிய macro lensல் கூட இவ்வசதி கிடையாது..

இதை தவிர சிறிய கேமராக்களின் நன்மைகளும்( சைஸை தவிர) உண்டு.

குறைகள்

  • • இவ்வகை கேமராக்களை பொறுத்த வரையில் zoom range என்பது அதிகமாக தான் இருக்கும். இதனால் கண்டிப்பாக zoom அதிகமாக,அதிகமாக optical quality என்பது கண்டிப்பாக soft ஆக தான் இருக்கும்..
  • • DSLR உடன் ஒப்பிட்டு பார்த்தால் prosumer கேமராக்களில் அதிக ISOவை பயன்படுத்தும் போது noise என்பது அதிகமாகவும் , details குறைவாகவும் இருக்கும்
  • • நாம் கண்களை ஒட்டி படம் எடுக்கக்கூடிய EVF(electronic view finder) என்பது ஒரு குட்டி LCD finder தான்.. நாம் live viewவில் எப்படி பார்த்து படம் எடுக்கின்றோமோ அதே மாதிரி தான் வேகம் குறைவாக இருக்கும்.. அதே சமயம் அதிக சூரியஒளியில் EVF பயன்படுத்தி படம் எடுப்பதற்கு சற்று சிரமமாக இருக்கும்.. DSLR ல் இருக்கும் optical view finder என்பது இவ்வகை கேமராக்களில் கிடையாது.
  • • சிறிய கேமராக்களை விட பெரியதாக இருப்பதாலும்,electrical பயன்பாடு அதிகமாகவும் இருப்பதாலும் பேட்டரி life சற்று குறைவு.
  • • என்ன தான் DSLR மாதிரி இருந்தாலும்,இதன் சென்சார் என்பது சிறியது..இதனால் அதிக பிக்ஸல்களை பயன்படுத்தும் போது smudging,artifacts போன்ற திரித்தல்கள் அதிகம் இருக்கும்..post processing என்பது சற்று கடினமே..
  • • Auto Focus என்பது வேகம் குறைவாக இருக்கும் (DSLR உடன் ஒப்பிடும் போது).. வெளிச்சம் குறைவான நேரத்தில் சற்று தடுமாறும்.
  • • இதன் விலை என்பது கிட்டதட்ட DSLR கேமராக்களின் விலைக்கு இனையாக வரும்.
  • • லென்ஸ்களை நம் விருப்பத்திற்கேற்ப மாற்றுவதற்கு வழியே கிடையாது. fixed lens தான்..

தற்போதைக்கு சந்தையில் இருக்கும் சில சிறந்த prosumer கேமராக்கள்:

1.panasonic fz 35 ,2.canon sx 20 IS,
3.nikon P100



மீண்டும் அடுத்த பகுதியில் சந்திப்போம் நண்பர்களே..

நன்றி
கருவாயன்



24 comments:

  1. அருமை.

    தோராயமா விலை சொல்லுங்க. பட்ஜெட் போடச் சரியா இருக்கும்.

    பெண்களுக்கு ஹேண்ட்பேக்லே வச்சுக்கிட்டுகொண்டு போகும் வசதிக்காக எது நல்ல கேமெரான்னும் சொல்லுங்க.

    ReplyDelete
  2. Thanks for the information. This series is really useful. I am suggesting this site to many of my friends. Keep going... :-)

    ReplyDelete
  3. @ dinesh ramakrishnan...
    மிக்க நன்றி..

    @துளசி கோபால்..
    நன்றி.. பில்லுடன் என்றால் ரூ.25,000 வரும் பில் இல்லாமல் க்ரே மார்க்கெட்டில் ரூ.17,000 வரும் என்று நினைக்கின்றேன்.. அவ்வளவு துல்லியமாக தெரியவில்லை..

    உங்களுக்கு பெரிய சைஸ் பிரச்சனையில்லை மற்றும் மிக அதிக zoom தேவையிருந்தால் மட்டும் இவ்வகை கேமராக்களை வாங்கவும்.. மற்றபடி சிறிய கேமராக்களும் இதன் சென்சார்களும் கிட்டதட்ட ஒன்று தான்.. எனவே picture quality என்பது வித்தியாசம் பெரிதாக இருக்காது..

    உங்களுக்கு ஹேண்ட்பேக்கில் வைத்துகொண்டு போகும் வசதியென்றால் advanced compact cameraவே போதும்..அதில் ஒரு சில கேமராக்கள் மிக சிறந்ததாகவும் இருக்கின்றன..

    உங்களுடைய முக்கிய தேவை(wildlife,family,landscape etc.இந்த மாதிரி) மற்றும் பட்ஜெட் என்ன என்பதை கூறினால் என்ன கேமரா வாங்கலாம் என்பதை எளிதாக கூறமுடியும்..

    wildlife என்றால் இவ்வகை கேமராக்கள் சிறிது பயன்படும்.. மற்ற பயன்பாட்டிற்கு advanced compact கேமராக்களே சிறந்ததாக இருக்கும்.

    நன்றி
    கருவாயன்

    ReplyDelete
  4. பதிலுக்கு நன்றிங்க .

    பட்ஜெட்டுன்னு ஒன்னும் பெருசா இல்லை. ஆயிரம் டாலர் (நியூஸி) ஓக்கே.

    மாடலும் ப்ராண்டும் தெரிஞ்சா சிங்கப்பூரில் வாங்கிக்கலாம்.

    இப்போ ஒரு samsung WB 500 வச்சுருக்கேன்.

    ReplyDelete
  5. Sir
    Nikon L21 available for 3600/- in rediff shopping.
    Can i go for it for simple use (say picnic / tour)
    regards anand

    ReplyDelete
  6. prosumer வகை கேமரா பற்றிய இக்கட்டுரைக்கு மிக்க நன்றி...தொடரட்டும் உங்களது சேவை.....

    ReplyDelete
  7. @ anonymous...

    nikon l21 அந்த விலைக்கு நல்ல கேமரா தான்.. ஆனால் கொஞ்சம் wide angle மட்டும் கம்மி.. இதனால் ஒரு சில landscape படம் எடுப்பதற்கு சற்று பத்தாது.. மற்றபடி அந்த விலை உங்களுக்கு o.k. என்றால் தாராளமாக வாங்கலாம்..

    ReplyDelete
  8. @துளசி கோபால்.. ஆயிரம் நியுசி.டாலர் என்றால் கிட்டதட்ட 35000 ரூபாய் வரும் போல் தெரிகின்றது.. இந்த விலைக்கெல்லாம் நீங்கள் சின்ன கேமராக்கள் வாங்க தேவையில்லை..

    நீங்கள் ஏற்கனவே வைத்திருக்கின்ற samsung WB 500 கேமராவே ஒரு நல்ல advanced compact கேமரா தான். முடிந்த வரை அதிலேயே பயன்படுத்துங்கள். அதற்கும், நீங்கள் புதிதாக வாங்க நினைக்கும் கேமராக்களுக்கும் picture quality என்பது பெரிய வித்தியாசம் எதுவும் கண்டுபிடிக்கமுடியாது.. ஒரு சில technical quality வித்தியாசம் மட்டும் வரலாம்..அவ்வளவு தான்.. இதற்காக புதிதாக எதுவும் செலவு செய்ய வேண்டாம்..

    அப்படி புதிதாக கேமரா வாங்க நினைத்தால், நீங்கள் தெரிவித்திருக்கும் பட்ஜெட்டிற்கு,நீங்கள் அடுத்த கட்டமாக ஒரு நல்ல DSLR கேமரா வாங்குங்கள்.. இதில் தான் உங்களால் picture quality வித்தியாசம் கண்டுபிடிக்க முடியும்..

    மற்றபடி நீங்கள் உங்களது samsung WB 500 ஐ மாற்ற தேவையில்லை..

    அப்படி கேமராவை மாற்ற ஆசைப்பட்டால், கீழே உள்ள மாடல்களை தாராளமாக உங்கள் பட்ஜெட்டிற்கு குறைவாகவே கிடைக்கும்..

    1. PANASONIC LX 5.
    2. CANON S95 OR S90.

    மேலே சொன்ன இரண்டு கேமராக்களும் சிறிய கேமராக்களில் ஒரு சிறந்த கேமராக்களாகும்.. வேகமான aperture,controls key,நல்ல picture quality..இருக்கும்.. ஆனால் telephoto zoom range கம்மி..உங்களுக்கு இந்த telephoto zoom range முக்கியம் இல்லையென்றால் மேலே சொன்ன கேமராக்களில் ஏதாவது ஒன்றை வாங்கலாம்..

    மற்றபடி நீங்கள் வைத்திருக்கும் கேமராவே போதும்..

    -கருவாயன்

    ReplyDelete
  9. ஷ்ராவ்யன்December 11, 2010 at 2:01 PM

    @ கருவாயன்

    கேனான் 400 டி வாங்க உள்ளேன் அதன் சிறப்புகள்
    என்னவென்று கூற முடியுமா

    நன்றி
    ஷ்ராவ்யன்

    ReplyDelete
  10. @ஷ்ராவ்யன்..

    canon 400d ன் சிறப்பை பற்றி சொல்ல வேண்டுமென்றால் அது பழைய மாடல் ஆகி ரொம்ப நாள் ஆகிவிட்டது.. எனவே இது வேண்டாம்..

    விலை குறைவாக கிடைக்கின்றது என்றால் வேண்டுமானால் வாங்கலாம்.. புதிதாக வேண்டாம்..

    இப்போதைக்கு புதிதாக canon 550 d சந்தையில் கிடைக்கின்றது,மிகவும் அருமையான canon கேமரா..உங்கள் பட்ஜெட்டிற்கு ஒத்து வந்தால் இதை தாராளமாக வாங்கலாம்..இல்லையென்றால் இதற்கு முந்தைய மாடலான canon 500 d ஐ ட்ரை பன்னுங்கள்.. அதுவும் ஒத்து வரவில்லையென்றால் விலை குறைவான canon 1000 d ஐ வாங்கலாம்..இது கிட்டதட்ட ரூ.20000/= க்குள் கிடைக்கும் என்று நினைக்கின்றேன்.

    நன்றி
    கருவாயன்

    ReplyDelete
  11. ஷ்ராவ்யன்December 11, 2010 at 4:00 PM

    @ கருவாயன்

    கேனான் 400டி உடன் கிட் லென்ஸ் 18-55

    விலை 18500 என நண்பர் மூலம் பர்மா பஜாரில் வருகிறது இந்த விலையில் வாங்காலாமா

    நன்றி
    ஷ்ராவ்யன்

    ReplyDelete
  12. @ஷ்ராவ்யன்..

    அந்த விலைக்கு புதிது என்றால் தாராளமாக வாங்கலாம்..நல்ல கேமரா தான்..

    பயன்படுத்தியது என்றால் கண்டிப்பாக வேண்டாம்.. ஆனால் அது தாயாரிக்கப்பட்டு இரண்டு வருடத்திற்கும் மேல் கண்டிப்பாக இருக்கும் என்பது எனது எண்ணம்..

    நம்பகமான விற்பனையாளர் என்றாலும் எச்சரிக்கையாகவே வாங்கவும்.. எனக்கு கொஞ்சம் சந்தேகமாக தான் இருக்கின்றது..

    உங்களால் பட்ஜெட் சேர்க்க முடியுமென்றால் nikon D 3100 வாங்கவும்.. புது மாடல்,சில வகைகளில் 400d ஐ விட சிறந்தது.. அதன் விலையையும் விசாரிக்கவும்.. வித்தியாசம் குறைவாக இருந்தால் இந்த மாடலை வாங்கவும்..

    இல்லையென்றால் canon 400d ஐயே அந்த விலைக்கு புதியது என்றால் வாங்கலாம்..

    எதற்கும் எச்சரிக்கை..

    -கருவாயன்

    ReplyDelete
  13. ஷ்ராவ்யன்December 11, 2010 at 9:13 PM

    @ கருவாயன்

    தங்களின் ஆலோசனைக்கு மிகவும் நன்றி கருவாயன்
    எதற்கும் எச்சரிக்கையுடன் விசாரிக்கிறேன்

    மிக்க நன்றி
    ஷ்ராவ்யன்

    ReplyDelete
  14. ரொம்ப நன்றிங்க கருவாயன். உங்க பதில் பார்த்ததும் கோபாலுக்கு கொண்டாட்டம் கூடிப்போச்சு. செலவு பண்ண வேணாமுல்லே அதுக்குத்தான்:-))))

    இந்த சாம்சங்லே ஒரு தொந்திரவு .சட்னு ஓப்பன் ஆறதில்லை. பயணத்துலே ஒரு சீன் பார்த்துட்டு கெமெராவை ஓப்பன் செஞ்சா அது ரெடியாகறதுக்குள்ளே கார் அந்த இடத்தைவிட்டு அட்லீஸ்ட் 100 மீட்டர் போயிரும்:(

    அதுதான் பெரிய குறையா இருக்கு எனக்கு.

    உங்க பதிலுக்கும் நேரத்துக்கும் மீண்டும் ஒருமுறை என் நன்றிகள்.

    ReplyDelete
  15. புதியதாக வந்திருக்கும் micro four third காம்பாக்ட் வகை காமெராக்கள் sony NEX3, NEX 5 மற்றும் PANASONIC Micro four third குறித்து நிறை குறைகளை ஆராய்ந்து ஒரு பதிவிடும்படி கேட்டுகொள்கிறேன் . ஏனெனில் சோனி காமெராவில் (nex3,nex5) DSLR இல் உள்ள APS-C சைஸ் சென்சர் உள்ளது .OPTICAL VIEW FINDER இல்லை . வாங்கலாமா ? . இன்னும் DSLR இல் EXTERNAL FLASH உபயோக படுத்தி எப்படி படம் எடுப்பது என்பது குறித்தும் பதிவிடவும் . TECHNICAL விஷயங்கள் குறித்து தொடர்ச்சியாக பதிவிட்டால் மிகவும் உபயோகமாக இருக்கும் .நன்றி எழில் மாறன் -பெங்களூர்

    ReplyDelete
  16. Hi Karuvayan,
    today only i get to see ur blog and is very informative.Right now i am planning to buy a camera. My priorities are good and sharp pic,good optical zoom range (min 10x), HD movie recording, comapct size and stable imgaging. Can u suggest me the good one available in the market. I will get it in US or malasia since the price there is very cheap(i see rs 6000 diffrence for any camera).My budget is Rs15000.

    right now i am thinking of canon sx210is. Do u have any suggestion.

    ReplyDelete
  17. @எழில்மாறன்..

    four third , micro four third மற்றும் DSLR குறித்த விளக்கமான பதிவுகள் இதன் அடுத்த பகுதியில் விரைவில் பதிவு வரும்..

    அதே சமயம் external flash பற்றிய தனி பகுதியும் விரைவில் வரும்..

    உங்களுக்கு சைஸ் சிறியது வேண்டுமென்றால் மட்டும் micro four third வாங்கலாம்..

    ஆம்,இதில் optical viewfinder வசதியில்லை.. seperate optical viewfinder வேண்டுமானால் உண்டு..அல்லது electronic view finder தான் வழி.

    -கருவாயன்

    ReplyDelete
  18. நான் Sony DSC H50 கேமரா ( 9.1MP & 15X Zoom) உபயோகிக்கிறேன்.இது தற்ச்சமயம் மார்க்கெட்டில் வருவதில்லை. Failure Model என்று கடைகளிலே சொல்கிறார்கள். அப்படி என்ன பிரச்சனை. நானும் இரண்டு ஆண்டுகளாக இதை உபயோகிக்கிறேன். சற்று கூறினால் நிவர்த்தி செய்ய உதவியாய் இருக்கும்.நன்றி - காளிராஜ்

    ReplyDelete
  19. @raja...

    தாமத்திற்கு மன்னிக்கவும் ..உங்களோட கேள்வியை இன்று தான் கவனித்தேன்..

    உங்களோட கேள்விகள் அனைத்திற்கும் இந்த சுட்டி மிகவும் பயன்படும் என்று நினைக்கின்றேன்..
    http://www.dpreview.com/reviews/Q210grouptravelzoom/..

    இதில் நீங்கள் தெரிவித்திருக்கும் கேமரா மற்றும் அதற்கு இனையான கேமராக்களை full detailஆக review செய்துள்ளனர்..

    மேலும் சந்தேகம் இருப்பின் தகவல் தெரிவிக்கவும்

    -கருவாயன்

    ReplyDelete
  20. @காளிராஜ்..

    ஒரு கேமராவை பற்றி நல்லது கெட்டது என்று தீர்மானிப்பதற்கு பல technicalஆன விசயங்கள் உள்ளன.. அதில் சில குறிப்பிட்ட விசயங்கள் ,

    1.picture sharpness (vs soft)
    2.distortion control ( barrel and pincushion)..இது ஒரு படத்தை wide angleல் எடுக்கும் போது குண்டாக இருப்பத ஒல்லியாக காட்டும், அதே சமயம் telephoto zoom பயன்படுத்தி படம் எடுக்கும் போது ஒல்லியாக இருப்பதை குண்டாக காட்டுதல்..
    3. chromatic abbrrations.. இரு வேறு அதிக காண்ட்ராஸ்ட் உள்ள இடத்தில் வேறு கலர்கள் தோன்றுதல்..
    4.noise performance.. இது ஒரு படத்தை எடுக்கும் போது வரும் noise ன் செயல்பாடுகளை பற்றியதாகும்.

    sony h50 ல் இந்த குறைகள் வருவாதாக தெரிகின்றது


    இதை தவிர கேமாரக்களின் அமைப்பு, பட்டன்கள்,எளிதாக பயண்டுத்துதல்... இந்த மாதிரி பற்பல விசயங்களை ஆராய்ந்து பார்ப்பார்கள்..

    இதில் சில முக்கியமான விசயங்களில் குறை வரும் போது அதை கேமராக்களின் குறைகாளாக கூறுவார்கள்..

    இதெல்லாம் நமது சாதாரண பயன்பாட்டில் கண்டுபிடிப்பது சிரமமே.. அதெல்லாம் technical சமாச்சாரங்கள்..

    எனவே இதை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்..நீங்கள் வைத்திருக்கும் கேமராவில் இக்குறைகளை தவிர பற்பல நல்ல விசயங்கள் உள்ளன..

    அதே சமயம் இன்றைய போட்டியில் புதுபுது மாடல்கள் விரைவாகவே வந்துவிடுவாதால் போட்டிகளை சமாளிக்க ஒரு மாடல் என்பது விரைவில் பழைய மாடல் ஆகிவிடுகின்றது.. இதனால் தான் ஒரு சில மாடல்கள் மார்க்கெட்டில் கிடைக்காது.. இதற்கு பதிலாக அதே மாதிரி ஒரு சில மாற்றங்களுடன் வேறு மாடல் பெயரில் மார்க்கெட்டில் கிடைக்கும்.. கடைக்காரர்கள் புதிதாக விலை அதிகம் இருப்பதைதான் விற்க விரும்புவார்கள்..

    -கருவாயன்

    ReplyDelete
  21. விளக்கத்துக்கு நன்றி!!!

    ஒன்றை வாங்குவதற்க்கு முன்பை விட, அதை வாங்கி பயன்படுத்திய பின்தான் அதைப்பற்றிய அடிப்படை அறிவே கிடைக்கிறது.

    நண்பர் கேமரா வாங்கச்சென்றபோது அவருக்கு துணையாகச்சென்ற நான் அவரை விட 2-மடங்கு பட்ஜெட்டில் கேமரா எடுத்தேன்.வாங்கிய பின் நாம் சும்மா இருந்தாலும் நம் நண்பர்கள் விமர்சனம் அதிகம். “ அதைப்போய் ஏன் வாங்கினாய், Canon எடுக்கலாமே?” என்று. - காளிராஜ்

    ReplyDelete
  22. Very Good Review by Karuvaayan. Though these cameras are only a little less to the price of DSLR cameras, the picture quality is as same as Normal PandS cameras, apart from manual options in shutter speed and aperture. That too in aperture the range is too less. And they are no way better in noise level of a normal PandS. The looks, the Price and few options are like DSLR, but the price what we pay is too high for these cameras and i feel they will come down to that of normal PandS cameras which will be replaced.

    ReplyDelete
  23. தொழில் துறையில் பயன்படுத்துவதற்கு (திருமணவிழா, போன்ற...) ஒரு கமரா வாங்கலாம் என்று இருக்கின்றேன். எந்த கமரா எனக்கு மிகவும்உபயோகமானதாக இருக்கும். canon 550D வாங்கலாம் என இருக்கிறேன் உபயோகமாக இருக்குமா? இதுவரை நான் ஒரு dslr வகை கமரா உபயோகித்தது இல்லை.
    canon eos 500D = 520 euro
    +18-55 =629 euro
    +18-135 =799 euro

    canon eos 550D = 669 euro
    +18-55 =739 euro
    +18-135 =949 euro

    இங்கே இப்போது இந்த விலையில் இவை கிடைக்கின்றன... எது வாங்கினாஇ மிகவும் உபயோகமானதாக இருக்கும்.

    உங்கள் பதிலை எதிர்பார்த்திருக்கும்!!! ...சாய்....

    ReplyDelete
  24. @ சாய்... canon 550 d கேமரா தற்போதைய DSLR ல் ஒரு சிறந்த கேமரா... அதை தைரியமாக வாங்கலாம்..திருமணவிழாவிற்கு இது perfect கேமரா..

    லென்ஸ் என்று பார்த்தால் நீங்கள் தெரிவித்திருக்கும் 18-55mm மற்றும் 18-135mm lens இரண்டையும் சேர்த்து வாங்க தேவையில்லை.. அப்படி வாங்க வேண்டாம்..

    உங்களுக்கு இரண்டு options...

    ஒன்று, உங்களுக்கு லென்ஸை அடிக்கடி மாற்றிக்கொள்ள பிரச்சனையில்லை என்றால்,

    canonன் 18-55mm + 55-250mm இந்த இரண்டும் சேர்த்து வாங்கவும்.. இந்த இரண்டு combinations தான் நல்லது.. விலையும் குறைவு.. 18-135mm lens இதில் வேண்டாம்..

    இரண்டாவதாக,உங்களுக்கு அடிக்கடி லென்ஸ் கழற்றி மாற்றுவதற்கு ஒத்து வராது என்று நினைத்தால்

    canon ன் 18-135mm லென்ஸை மட்டும் வாங்கவும் மற்ற லென்ஸ்(18-55mm,55-250mm) எதுவும் வேண்டாம்.

    திருமணவிழாக்களுக்கு இதுவே போதும்..

    canon 550 d + 18-55mm + 55-250mm

    or

    canon 550 d + 18-135mm lens

    இதில் உங்களுக்கு எது நல்லதோ நீங்களே முடிவு பன்னிக்குங்க..

    இரண்டிலும் தவறு இருக்காது..தைரியமாக வாங்குங்கள்..

    அதே சமயம் , 550 d கேமராவிற்கும் , 500 d கேமராவிற்கும் வித்தியாசம் பெரிய அளவில் இல்லை..ஆனால் சில டெக்னிக்கல் வித்தியாசம் கொஞ்சம் மட்டுமே உண்டு.. இது பெரிய பாதிப்பு கிடையாது..

    உங்களுக்கு பட்ஜெட் பிரச்சனை என்றால் canon 500 d யே வாங்கலாம்.. பட்ஜெட் பிரச்சனை இல்லையென்றால் 550 d யே வாங்கவும்..

    -நன்றி
    கருவாயன்

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff