படத்தினுள் கோடுகளா? அப்படி என்றால்?
சில சமயம் நீங்கள் பிடிக்கும் படத்தினுள் உள்ள மனிதர்களோ, பொருட்களோ ஒரு கோடு போன்று அமையலாம். அது வரிசையாக நிற்கும் மரங்களாக இருக்கலாம்.
அல்லது ஒரு சாலையாக இருக்கலாம். சாய்ந்த கம்பமாக இருக்கலாம். அல்லது இரவில் வரிசையாக நின்று வெளிச்சம் தரும் விளக்குகளாக இருக்கலாம். அல்லது ஓடும் கார்களின் முன் விளக்குகளும் பின் விளக்குகளுமாக இருக்கலாம். அல்லது விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகள் கூட்டமாக இருக்கலாம். வயல் வெளிகளில் வேலை செய்து கொண்டிருக்கும் விவசாயிகளாக இருக்கலாம். அல்லது ஒருவர் பின்னர் ஒருவராக ரயில் வண்டி விளையாடும் குழந்தைகளால் ஏற்படும் கோடாக இருக்கலாம். அப்படிப் பட்ட கோடுகள் வரும் போது கவனிக வேண்டிய சிலெ விதிகள் உள்ளன.
கடிகார விளம்பரங்கள் பார்த்திருக்கிறிகள் தானே? அதில் உள்ள கடிகாரம் என்ன மணி காட்டும்? 10-10. ஏன் தெரியுமா? இதோ கீழே உள்ள மூன்று படங்களைப் பாருங்கள்.
படம் - 1
படம் - 2
படம் – 3
இந்த மூன்று படங்களில் உங்கள் கண்களை உறுத்தாமல் இருக்கும் படம் எது? அதே காரணத்திற்காகத் தான் கடிகார விளம்பரங்கள் 10-10 என்ற மணியைக் காட்டுகிறது.
‘சரி’ என்று சொல்வதற்கான குறியீடும் அது தானே?
அதனால்தான் உங்கள் படங்களில் உள்ள ‘கோடு’ சரி என்று சொல்லும் குறியீட்டினைப் போல அமைந்தால் அழகாயிருக்கும்.
‘கோடுகள்’ பற்றி சில விதிகள் உள்ளன என்று சொன்னேன். அவை என்னவென்று பார்க்கலாம்.
1. கோடுகள் ஒரு போதும் பட்த்தின் எல்லைகளைத் தொடக் கூடாது.
2. கோடு வளைவாக இருத்தல் நலம், கடிகாரத்தின் 10-10 போல.
3. கோடு ஒன்று வெளி எல்லையில் இருந்து உள்ளே சென்று முடிந்தால், அந்தக் கோடு முடியும் இடத்திலே உங்கள் படத்தின் முக்கியப் பொருள் இருக்க வேண்டும். அல்லது அங்குள்ள பொருள் உங்கள் கண்களை மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே கொண்டு செல்வதாக இருக்க வேண்டும். அதாவது அந்தக் கோடு உங்கள் கண்களை படத்திற்குள்ளேயே கட்டிப் போட வேண்டும்.
இந்த விதிகள் ஏன் என்று பார்ப்போம்.
‘கோடு’ படத்தின் உள்ளிருந்து ஆரம்பித்து எல்லை தாண்டிச் சென்றால் அதன் கூடவே உங்கள் கண்களும் சென்று விடும். பின் அவை படத்திற்கு மிண்டும் திரும்பி வர விருப்பப் படாது. “அடுத்த படம்?” என்று கேட்டிடும்.
கடிகாரத்தின் 10-10 மணி காட்டுதல் போல மைந்திருந்தால் அந்தக் ‘கோடு’ பார்ப்பவர் கண்களுக்கு இதமாகாக இருக்கும்.
மூன்றாம் விதியின் ஒரு சிறு மாற்றம் தான் ‘படத்தினுள் முக்கோணம்’ விதி என்பது.
கிழே உள்ள படத்தில் ஒரு முக்கோணம் உள்ளது. அது மூன்று கோடுகளால் ஆனது.
படத்தைப் பார்த்தவுடன் நம் கண்களை இழுத்திடுது ஹரிகேன் விளக்கு. அந்த விளக்கும் பெரியவரின் இடது கையும் அதன் நிழலும் சேர்ந்து முதல் கோடு. இரண்டாவ்து கோடு பெரியவரின் வலது கையும் அதன் நிழலும். மூன்றாவது கோடு சிறுவனும் அவன் கையில் உள்ள புத்தகமும். இதில் மூன்றாவது கோடு மீண்டும் முதல் கோட்டினைப் பார்த்தே இருப்பதால் உங்கள் கண்கள் மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே வந்து சேர்ந்து படத்தையே சுற்றிச் சுற்றி வரும்.
-நடராஜன் கல்பட்டு

PiTல் வரும் பதிவுகளை, ஈமெயிலில் பெற, வலது மூலையில் உள்ள பெட்டியில் உங்கள் முகவரியை போட்டு, Submit அமுக்கவும்.
ReplyDeleteநன்றி.
thanks Natarajan sir. Very useful and legends photography tips :) thanks again
ReplyDeleteஅருமையான, தெளிவான விளக்கம். அந்த கடிகார விளம்பர மேட்டர் இப்போ தான் தெரிஞ்சி கிட்டேன். ரொம்ப நன்றி!
ReplyDeleteஅருமை! தொடருங்க சார்!
ReplyDeleteஅற்புதம்!
ReplyDeleteநன்றி. நல்ல பணி. என் போன்ற புகைப்படக் கலை பயில ஆர்வமுடயவர்களுக்கு பயன் மிக்க பதிவுகள்.
ReplyDeletesir 10:10 time varuvadu.. andha kadikaarathai kandupidithavarudaya marana neram apdinu naan school padikum podhu enga sir solli kuduthadu.. ithula edu unmai??
ReplyDelete