Wednesday, May 11, 2011

பளிச்னு உடை - சில குறிப்புகள்

9 comments:
 
ரு புகைப்படத்தில் இருப்பவர் பளிச்சுன்னு தெரிய புன்னகைக்கு அடுத்து போட்டிருக்கும் உடையும் பெரும்பங்கு வகிக்கும் என்பதை யாராலும் மறுக்க முடியாதுதானே?

உடைகளுக்கு என படம் எடுக்க இருப்பவர்களுக்கு மட்டுமின்றி பொதுவாக படங்களுக்கு எந்தவிதமான உடைகள் அட்டகாசமாக அம்சமாக அமையும் என்பது குறித்து ஒரு சில குறிப்புகள்.

மீடியம் மற்றும் டார்க் பின்னணியில் படம் எடுக்க டார்க் கலர் உடைகள் என்றைக்கும் பொருத்தம். டார்க் பின்னணி என்பது ஒரு கராஜ் முன்னாலோ வீட்டு சன்னலின் வெளிப்புறம் நிற்க வைத்தோ எடுக்கலாம். அதுவுமில்லாமல் டார்க் ஷேட்ஸ் ஒருவரை இன்னும் ஸ்லிம்மாகவும் காட்டும்!

அழுத்தமான வண்ணத்துக்கும் 'அடிக்க வரும்' வண்ணத்துக்குமான வித்தியாசத்தையும் நினைவில் நிறுத்திடுங்கள். ப்ரைட் கலர்களை புகைப்படங்களுக்குத் தவிர்த்திடுங்கள்.

டையில் வாசகங்கள் படத்துக்கு அழகூட்டாது. உடையின் சிறப்பை.. முகத்தின் பூரிப்பை.. கவனிக்க விடாது.

முழுக்கை உடைகள் பிரமாதமாகத் தெரியும்.
[படம்: 1 # கருவாயன்]

க்ளோஸ் நெக், ஹை நெக் இன்னும் அழகுன்னு படங்களே சொல்கின்றன.[படம்: 2 # ராமலக்ஷ்மி]

கையற்ற மற்றும் அரைக்கால் உடைகளை தவிர்த்தல் நலம். உடல் பாகங்களே கவனத்தைப் பெறுவதாகி விடும். ஆனால் சின்னஞ்சிறு தவழும் மற்றும் நடை பயிலும் குழந்தைகளைப் பொறுத்தவரை சில விஷயங்கள் ரிவர்ஸ். அவர்களது உடல் அதிகம் தெரியுமாறு, பிரகாசமான ப்ரைட் கலர்கள் அணிவித்து எடுக்கலாம். பேட்டர்ன், எழுத்துக்கள், படங்களுடனும் உடைகள் இருக்கலாம். படம்:4_ல் கவனிங்க.

ஒரு உடையில் எடுக்கும் போது க்ளோஸ் அப், முழுப்படம், இரண்டுக்கும் நடுவிலாக என பலவாறாக எடுத்து சிறப்பானதை தேர்வு செய்திடலாம்.

மெயின் உடை, கச்சேரி போல களை கட்ட, பக்க வாத்தியங்களிலும் அக்கறை காட்டணும். பெல்ட், ஜாக்கட், காலணி, தொப்பி, ஸ்கார்ஃப் போன்றவை மேலும் அழகூட்டும், பெரியவர் சிறியவர் பேதமின்றி. (படம்_2-ல் பாப்பாவின் ஹேர் பேண்ட்).

உடையின் காண்ட்ராஸ்ட் கலரில் ஸ்கார்ஃபை குழந்தைகள் கழுத்தில் கட்டி படம் எடுத்துப் பாருங்களேன். சொக்கிப் போகலாம் ஒரு பூங்கொத்தைப் பார்க்கிற மாதிரி:)!
[படம்:3 # இணையம்]

குழந்தைகளை எடுக்கையில், அவர்கள் நமக்கு ஒத்துழைக்கும் இதமான சூழலை உருவாக்கித் தரணும். அவுட் டோரில் எடுப்பது இயற்கையான பின்னணிகளுடன் அருமையான படங்களைத் தரும் என்பதோடு குழந்தைகள் தங்களைப் படமெடுக்கிறார்கள் எனும் உணர்விலிருந்து விடுபட்டு சுற்றுப்புறத்தில் லயித்து இயல்பாக போஸ் கொடுப்பார்கள். நீங்களே பாருங்க:)!படம்: 4 # கருவாயன்
அவுட் டோர் படங்களை காலை பத்தரை மணிக்கு முன்பாகவும், மாலை என்றால் ஐந்து மணிக்கு மேலும் எடுத்தால் சூரிய வெளிச்சம் அழகாய் ஒத்துழைக்கும்.

லைட் பின்னணிக்கு லைட் கலர்கள் பரவாயில்லை. மெலிந்த உடலமைப்பு கொண்டவராயின் லைட் கலர் உடையில் டார்க் பின்னணியிலும் தோன்றி அசத்தலாம் இப்படி:
[படம்:5 # ஜீவ்ஸ்]

அறிவிப்புப் பதிவில் பகிர்ந்த படமே. மிதமாக ஒரு சீராகப் பரவி நிற்கும் இப்படத்தின் லைட்டிங் என்னைக் குறிப்பாகக் கவர்ந்த ஒன்று. [நான் பொதுவாக இரண்டு பக்கமும் டேபிள் லாம்ப் வைத்து ஒளியூட்டுவேன். ஒரு சில இடங்களில் அதீத ஒளி விழுந்து போவதைத் தவிர்க்க முடிந்ததில்லை.] எனவே இப்படம் குறித்து ஜீவ்ஸிடம் கேட்டதும், எடுத்த விதத்தை ஒரு படமாக அனுப்பி வைத்து விட்டார். நன்றி ஜீவ்ஸ்!

வீட்டுக்குள்ளே மினி ஸ்டூடியோவும் ‘எதிரொளி’யும்:

விளக்கப்படம்: ஜீவ்ஸ்
ஒரு கயிறு கட்டி தேவையான வண்ணத்தில் ஒரு புடவை அல்லது துப்பட்டாவை இப்படிப் பின்னணியில் தொங்க விடுங்கள். இங்கே இவர் லைட் கலர் உடையை எடுப்பாகக் காட்ட கருப்பு வண்ணத்தை தேர்ந்தெடுத்துள்ளார். இடப்பக்கம் ஒரு ட்ரைபாடில் எக்ஸ்டர்னல் ஃப்ளாஷை பொறுத்தி கூரையைப் பார்த்து வைக்க, ஒளி கூரையில் பட்டு சிறுமியின் மேல் விழுந்து மீண்டும் ரிஃப்ளெக்ட் ஆகி வலப்பக்கமிருக்கும் தெர்மகோல் ஷீட்டின் மேல்பட்டுத் தெறித்து ‘எதிரொளி’யாய் தேவதையைக் குளிப்பாட்டியிருக்கிறது:)!

பெண்கள் உடைக்கேற்ற இயல்பான ஹேர் ஸ்டைல் இருக்குமாறு பார்த்துக் கொள்வது அவசியம். ஆண்கள் ஓரிருநாள் முள்ளுத் தாடிகள் இல்லாமல் க்ளீன் ஷேவ்ட் ஆக இருப்பது உடைக்கும் பிரகாசத்தைத் தரும்.

நம்ம ஊர் உடையான புடவை உலகெங்கும் கொண்டாடப்படுவதன் காரணம், முழுநீளத்தில் விதவிதமாய் உடுத்தும் வகையில் வியக்க வைப்பதால்தான் என்பது சொல்லியா தெரியணும்:)? புடவை மட்டுமில்லாமல் பாரம்பரிய உடையான வேட்டியும் ஒவ்வொரு மாநிலத்தில் ஒவ்வொரு கலாச்சாரத்தில் ஒவ்வொரு விதமாக அணியப் படுகிறது. உழைப்பாளிகள், கிராம நகர மக்கள் தங்கள் செளகரியத்துக்கேற்ப வேட்டியை மடித்துக் கட்டுவதும், புடவையை இழுத்துச் செருகிக் கொள்வதும் ஒரு ஸ்டைல். கருப்பு வெள்ளையிலும் கவனத்தை உடை மேல் செலுத்த வைக்க கருவாயனால் மட்டுமே முடியும்:[படம்:6 # கருவாயன்]

அற்புதமான காட்சிகள் கண்ணுக்கு கிட்டும் போது உச்சி வெயில் எல்லாம் பார்க்க முடியாதில்லையா:)? அந்த வெயிலும் கூட இந்தத் தம்பதியரை ஆசிர்வதிப்பது போல அழகாய் ஒத்துழைத்திருக்கிறது!

நம்மைச் சுற்றி ரசனையான உடைகளுக்கா பஞ்சம்:)?

பதினைந்தாம் தேதிக்குள் படம் எடுத்து சீக்கிரமா அனுப்பி வையுங்க:)!

9 comments:

  1. டீச்சரம்மா , விளக்கங்கள் பேஷ் பேஷ்,

    நன்றி. மனசில் குறிச்சு வச்சுக்கிட்டேன்.

    ReplyDelete
  2. அது எப்படிங்க கொழந்தங்களுக்கு எந்த துனியா போட்டாலும் நன்னா இருக்கு?

    நானும் நல்லவிதமாய் உடுத்தலாம் என்றால் நம்ம நிறத்துக்கு அதுவும் ஒத்தே வருவதில்லை..

    ReplyDelete
  3. போட்டி தலைப்பு பற்றிய விளக்கமும்
    படம் எடுக்கும் ஆலோசனையும் அருமை.
    மே மாத போட்டோ போட்டி
    போட்டா போட்டிதான்.
    சகாதேவன்

    ReplyDelete
  4. நானும் யோசித்துக்கொண்டேதான் இருக்கிறேன்....இன்னும் 3 நாள் பாக்கி இருக்கே....

    ReplyDelete
  5. நன்றிங்க!!! ஆமா இதெல்லாம் போட்டி தலைப்பு அறிவிக்கிறதுக்கு முன்னாடி விளக்கியிருந்தால் நாங்களும் ஜீவ்ஸ் சார் மாதிரி அசத்தியிருப்போம்ல்ல...

    PIT குழுமத்திற்க்கு ஒரு சிறிய வேண்டுகோள்!!! முன்பெல்லாம் கேள்வி‍‍-பதில் பகுதியில கேட்கப்படும் camera & technical சம்மந்தப்பட்ட கேள்விகளுக்கு பதில் உடனடியாக எனக்கு கிடைக்கும் குறிப்பாக திரு.கருவாயன் சார். ஆனால் சமீபகாலமாக PIT குழுவினர் தாமதமாக பதில் அளிப்பதாக எனக்கு படுகிறது... தவறாக இருந்தால் மன்னிக்கவும்.

    நித்தி கிளிக்ஸ்

    ReplyDelete
  6. ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம் ! வாழ்த்துக்கள் !

    கடந்த சில மாதங்களாய் , போட்டி பற்றிய பதிவுகள் மட்டுமே வெளி வந்தன,

    இந்த பதிவைப் போல், மேலும் பல பதிவுகள் வந்தால் மகிழ்ச்சி!

    ReplyDelete
  7. @ துளசி மேடம்,
    மகிழ்ச்சியும் நன்றியும்:)!

    @ மனோவி, குறிப்புகளைப் பயன்படுத்துங்கள்! ஒத்து வரும்.

    @ சகாதேவன்,
    மிக்க நன்றி:)!

    @ கோமா,
    தங்கள் படம் வந்து சேர்ந்து விட்டது:)!

    @ Nithi Clicks,
    Blogger தந்த பிரச்சனையால் காணாமல் போன உங்கள் கருத்துக்கு நன்றி:)!

    ReplyDelete
  8. நல்ல தலைப்பு மற்றும் அருமையான விளக்கங்கள் :-)

    ReplyDelete
  9. எல்லா படங்களும் அருமையா இருக்கு... ஆனாலும் அந்த 4-ஆவது படம் சான்ஸே இல்ல... மிக அருமை... எவ்வளவு நேரம் வேணும்னாலும் ரசிக்கலாம் :-)

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff