Wednesday, May 25, 2011

உள்ளங் கவர்ந்த உடைகள்- மே போட்டி - வெற்றிப் படங்கள்

12 comments:
 
முதலிடம்: # அரவிந்த் நடராஜ்

கேட் வாக் ஸ்டைலில் போஸ் கொடுக்கும் அழகி. சற்று தள்ளி கவுன் மேல் கவனம் ஈர்த்து அன்ன நடை பயிலும் சிறுமி. வலப்பக்கம் இரு சுடிதார் யுவதிகள். இடப்பக்கம் தோளோடு தோள் கோர்த்து மூன்று ட்ரவுசர் பாண்டிகள்.

மஞ்சள் மிடி அணிந்த மலர் முகம் தவிர்த்து மற்றவர் முகங்களில் ஒரு அந்நியத் தன்மை. அதே நேரம் அனைவர் கண்களும் காமிராவில்.

அவர்கள் ஒத்துழைப்புடன் எடுத்தாரோ அல்லது அதிர்ஷ்டவசமாக அமைந்ததோ தெரியாது. வெகு இயல்பாகவும், பலவித உடைகளைக் காட்டித் தலைப்புக்குப் பொருத்தமாகவும் அமைந்து விட்டுள்ளது.

அந்திமாலையோ அதிகாலையோ, சாய்ந்த சூரியனின் கதிர்கள் பாய்ச்சிய ஒளியில் உடைகள் மிளிர, இப்படம் முதலிடம் பெறுகிறது.

இரண்டாவது இடம்: # லாரி

பள்ளிக் குழந்தைகளின் துள்ளும் உற்சாகம். கருப்பு மஞ்சள் இறக்கைகளை விரித்துப் படபடத்து வரும் பட்டாம்பூச்சிகளைப் பார்த்தது போல் ஒரு பரவசம்.

மூன்றாவது இடம்: சித்தா ட்ரீம்ஸ்

ஹிமாச்சல் பாரம்பரிய உடையில் அசத்துகிறாள் சிறுமி. அழுத்தமான சிகப்பு வண்ணம் அதற்கேற்ற பின்னணி. இடப்பக்கம் ஸ்பேஸ் குறைத்து வலப்பக்கம் கூட்டியிருந்தால் இன்னும் பிரமாதமாக இருந்திருக்கும் என்றாலும் ப்ளஸ் ப்ளஸ் ப்ளஸ்கள் மைனஸை பின் தள்ளியதில் படம் மூன்றாம் இடத்தில்.

ஆயினும் திருத்தத்தை இங்கு காட்டி விடுகிறேனே..
சப்ஜெக்ட் படத்தின் மையத்தில் இருக்குமாறே கம்போஸ் அல்லது க்ராபிங் செய்ய வேண்டும் என்றே நானும் பலகாலம் நினைத்திருந்தேன். பின்னரே ஆக்‌ஷன் சப்ஜெக்டுகளுக்கு அவை நகரும் இடம் நோக்கி இடம் விடுவது போல, ஸ்டில் சப்ஜெக்டுகளுக்கும் அவற்றின் பார்வை செல்லும் இடத்தில் அதிக இடம் விட வேண்டும் என்பதையும், அதனால் படத்தின் நாடகத் தன்மையை அதிகரிக்கும் என்பதையும் கற்றேன்.

இந்த படத்தில் சிறுமி காமிராவைப் பார்த்தாலும் கூட சப்ஜெக்ட் வலப்பக்கமாகத் திரும்பி இருப்பதால் அங்கே அதிக இடம் வருமாறு கம்போஸ் செய்வதே அழகு. பின்புறம் அவர் விட்டிருந்த அளவுக்கு அதிகமான இடம் டெட் ஸ்பேஸ் ஆகிறது.

ஆக்டிவ் ஸ்பேஸ் குறித்து எப்போதேனும் ஒரு பதிவு இடுகிறேன்.

முதலிடம் பெற்ற மூவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.





சிறப்புக் கவனம்:
# ஷ்ருதி

# ஆன்டன்


செலக்டிவ் கலரிங்கில் இருவருமே பிரமாதப் படுத்தியிருக்கிறார்கள். ஆன்டன் படத்தில் லைட்டிங் குறைவு. ஷ்ருதியின் படத்தில் இடப்பக்கம் இன்னும் இடம் விட்டிருக்கலாம். மற்றபடி உடையை எடுத்துக்காட்டிய விதத்தில் இரண்டுமே பாராட்டைப் பெறும் படங்கள்.

வாழ்த்துக்கள் ஷ்ருதி, ஆன்டன்!





ஆன்டன் படம் லைட்டிங் அதிகரித்து என் ரசனையில் ஆன பிற்தயாரிப்பில்..


இறுதிச் சுற்றில் வெளியேறும் படங்களில் சிலவற்றைப் பார்ப்போம்.

# விஜய் ப்ரகாஷ்

உடையும் அதை மெருகூட்டிக் காட்டும் தலை அலங்காரமும் ஆக நேர்த்தியான படம். ஆயினும் சிறுமி பார்க்கும் இடத்தில் இன்னும் சற்றேனும் இடம் விட்டிருந்திருக்க வேண்டும். உதாரணத்துக்கு ஆன்டன் சிறுவன் பார்க்கும் இடத்தில் எப்படி அதிக ஸ்பேஸ் அளித்திருக்கிறார் எனக் கவனியுங்கள்.

ஒருவேளை படம் எடுத்த சமயத்தில் அரங்கின் பிற காட்சிகள் குறுக்கே வந்ததால் சாத்தியப் படாமல் போயிருந்திருக்கலாம். ஆனால் நம்மிடம் இருக்கும் விளக்கம் படத்தோடு சேர்ந்து பேசாது. படம் மட்டுமே பேசும்.
***

நேரமின்மையால் படங்களை அப்படியே பதிபவர் ஒரு வகை என்றால் “எடுத்த படங்களை அப்படியே கொடுப்பதே எனக்குப் பிடிக்கும். அதுவே இயல்பானதாய் தோன்றுகிறது” என சொல்கிறவர்கள் இன்னொரு வகை. அவர்களுக்கு ஒரு சில வார்த்தைகள். ஒரே பூவை என் இரண்டு காமிராக்களால் எடுக்கையில் ஒவ்வொன்றிலும் வண்ணங்கள் வேறுவிதமாக வந்திருந்தது கண்டு ‘அப்போ எதுதான் இயல்பு?’ என்ற கேள்வி எழுந்திருக்கிறது என்னுள்:)!

அதுவுமில்லாமல், இது டிஜிட்டல் காலமுங்க. படங்களைப் பிற்தயாரிப்பு (Post Processing) செய்ய விதம் விதமாய் சாஃப்ட்வேர்கள் இணையத்தில். அவசியமான சின்னத் சின்னத் திருத்தங்களைச் செய்ய பெரிய விஷய ஞானம் எதுவும் தேவையில்லை. பிட் பாடங்களில் தேடினாலே சுலபமாகச் செய்திடும் வகையில் வேண்டிய விவரங்கள் கிடைக்கும்.

# நித்தி க்ளிக்ஸ்


அருமையான அரண்மனைக் காட்சி. சற்றே லைட்டிங், காண்ட்ராஸ்ட் கூட்டி இருந்திருக்கலாமோ இப்படி...

# மெர்வின் ஆன்டோ


தெருக்கூத்துக் கலைஞர்களை ஆவணப்படுத்தியிருப்பதற்கு எத்தனை பாராட்டினாலும் தகும்தான். காலில் கட்டைகளைப் பொருத்தி உயர்ந்து நிற்பவர்களின் நீள உடைகளை லோ ஆங்கிளில் அற்புதமாகப் படமாக்கியிருக்கிறார் சாலை நெரிசல்களுக்கிடையே. ஆயினும் படம் இப்படி இருந்திருக்கலாம்.
எந்த இடத்தில் லைட்டிங், காண்ட்ராஸ்ட், ஷார்ப்நெஸ் போன்றவற்றை நிறுத்த வேண்டும் என்பது ரசனையைப் பொறுத்ததே என்றாலும் சரியான ஜட்ஜ்மெண்டும் அவசியம். அதற்கு நிறைய படங்களை தொடர்ந்து கவனித்தபடி இருப்பதே சிறந்த வழி.

வெளியேறிய மீதப் படங்களை விடச் சிறப்பாகத் தேர்வான படங்கள் அமைந்து விட்டுள்ளன என்பதைத் தவிர அவற்றில் பெரிய குறைகள் ஏதுமில்லை.

இதுகாலமும் நடுவர்கள் படங்களை அலசும் போது, படிப்பினையை எடுத்துக் கொண்டாலும் ‘ஆனாலும் ரொம்பத்தான் அக்கு வேறு ஆணி வேறாய் பிரித்துப் போடுகிறார்கள்’ என நொந்து கொண்டதை நேர்மையுடன் ஒத்துக் கொள்கிறேன். இப்போது நடுவர் நாற்காலியில் அமர்ந்ததும் தானாக ஒரு பொறுப்புணர்வு, அக்கறை அதே பாணியை என்னையும் பின்பற்ற வைத்து விட்டது. பொறுத்தருள்க:)! சரி வாங்க, அடுத்த போட்டிக்குத் தயாராகலாம். நன்றி. நன்றி.
*** *** ***

12 comments:

  1. வெற்றி பெற்ற மூவருக்கும் வாழ்த்துக்கள் :-) வாழ்த்துக்கள் ஆன்டன் :-)

    ஒவ்வொரு படத்திற்க்கும் அருமையான விளக்கங்கள்...ஆன்டன் படம் பார்த்து தான் selective coloring பத்தியே படிக்க ஆரம்பிச்சிருக்கேன் :-)

    சித்தா ட்ரீம்ஸ்-ன் selective blurring-ம் அழகா வந்திருக்கு :-)

    நன்றி :-)

    ReplyDelete
  2. நாம் ஒரு டிஜிட்டல் கேமரா வாங்கல்ம்னு இருக்கன் சார் எனோட பட்ஜெட் 10000 canon நல்ல இருக்குமா சார் ... எதோ ஒன்னு நீங்க அட்வைஸ் பன்னநீங்க அப்டின சரி .. outing , டூர் இந்த மாதிரி purpose .. அப்புறம் முடிஞ்சா அளவு FULL HD வீடியோ ரெகார்டிங் options ..iruntha best சார் ... சில போடோஸ்ல background எல்லாம் fade ஆகி face மட்டும் cleara தெரியும் backgrounde தெரியாது அந்த மாதிரி picture எப்டி சார் எடுக்கறது ,, அந்த options இருக்கற மாதிரி camerava recommend பண்ணுங்க சார் . canon ixus 130 modela background defocus options இருக்கா சார்... sony wx 7 பெஸ்ட் modela சார்...

    ReplyDelete
  3. தேர்வும் தேர்வு செய்த விதமும் நன்று.

    புதிதாக படம் எடுப்பவர்களுக்கு நல்ல ஆலோசனை தந்துள்ளீர்கள். நன்றி.

    //‘ஆனாலும் ரொம்பத்தான் அக்கு வேறு ஆணி வேறாய் பிரித்துப் போடுகிறார்கள்’ என நொந்து கொண்டதை நேர்மையுடன் ஒத்துக் கொள்கிறேன்.//

    உண்மையை ஒத்துக் கொண்டதற்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  4. ஜட்ஜ் மென்டின் சிரமங்களை மீறி அழகாய் சொல்லி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் நீங்கள் சொன்னது எனக்கும் தகும்
    //நேரமின்மையால் படங்களை அப்படியே பதிபவர் ஒரு வகை என்றால்.....//

    ReplyDelete
  5. வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!!!முத்தான மூன்று வெற்றி படங்களை தேர்ந்தெடுத்த பிட் குழுவினருக்கும் மனமார்ந்த நன்றிகள் பல!!!!

    //"எந்த இடத்தில் லைட்டிங், காண்ட்ராஸ்ட், ஷார்ப்நெஸ் போன்றவற்றை நிறுத்த வேண்டும் என்பது ரசனையைப் பொறுத்ததே என்றாலும் சரியான ஜட்ஜ்மெண்டும் அவசியம். அதற்கு நிறைய படங்களை தொடர்ந்து கவனித்தபடி இருப்பதே சிறந்த வழி."//

    ஏற்றுக்கொள்கிறேன்...

    என்றும் அன்புடன்
    நித்தி கிளிக்ஸ்...

    ReplyDelete
  6. வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

    ReplyDelete
  7. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ராமலக்‌ஷ்மி - குட் ஜட்ஜ்மெண்ட். நல்ல குறிப்புக்கள். நன்றீஸ் :)

    ReplyDelete
  8. வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்! குறிப்புகள் தந்து திருத்திய நடுவருக்கு நன்றி!

    ReplyDelete
  9. வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்....

    இந்த முறை இங்கு முன்னேறிய அனைத்து படங்களும் அருமையே...

    நல்ல முடிவுகள்..

    -கருவாயன்

    ReplyDelete
  10. வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. Congratulation winners! Congratulation Sruthi!
    Thanks judge for your selection and comments!

    Good luck Sruthi for your learning

    ReplyDelete
  12. அனைவருக்கும் நன்றி:)!

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff