வணக்கம்.
இன்றைய நம் கட்டுரையில் பிற்சேர்க்கையில் புகைப்படக்கலைஞர்கள் அவசியம் அறிந்திருக்கவேண்டிய விஷயங்கள் சிலவற்றைப்பற்றி சற்று விளக்கமாக பார்க்கலாம்.இவ்விளக்கமானது போட்டோஷாப்/கிம்ப் பயனாளர்களுக்கு பொருந்தும். போட்டோஷாப்போ,கிம்போ இரண்டில் எதுவாக இருந்தாலும் இவற்றில் Blend Mode கள் சில இருக்கும். இதனை ஒருசிலர் பயன்படுத்துவார்கள் ஒருசிலருக்கு இது என்னவென்றே தெரியாமல் இருப்பார்கள். சரி இந்த Blend Mode கள் நமக்கு அவசியம் தேவையா? அல்லது எந்த சூழ்நிலைகளில் இந்த Blend Mode நமக்கு பயனளிக்கின்றன என்பதை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
போட்டோஷாப்/கிம்பில் நிறைய Blend Mode கள் இருந்தாலும் புகைப்படக்கலைஞர்கள் மத்தியில் அதிகமாக பயன்படுவது மொத்தம் 3 Blend Mode களேயாகும்.காரணம் இந்த 3 Blend Mode கள் தான் Darken,Brighten,மற்றும் Contrast டுடன் தொடர்புடையது. மேலும் இம்மூன்று Blend Mode கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிறத்தோடு தொடர்புடையதாகும்.மூன்று முக்கிய Blend Mode ல் முதலில் நாம் பார்க்க இருப்பது Multiply Blend Mode ஆகும். Multiply Blend Mode பொதுவாக வெள்ளை நிறத்தை transparent டாக மாற்றும் தன்மையுடையது. கீழேயுள்ள படத்தில் மொத்தம் மூன்று நிற கட்டங்களை உருவாக்கியுள்ளேன்.
இந்த லேயரின் Blend Modeடை நான் Multiply க்கு மாற்றும் போது என்ன நடக்கிறது பாருங்கள்.வெள்ளை நிறக்கட்டம் மறைந்துபோவதை காணலாம்.
ஆக Multiply ஆனது வெள்ளை நிறத்தை transparent ஆக மாற்றும் தன்மையுடையது எனவே Brightடாக இருப்பது Darkகாக வாய்ப்புள்ளது.எனவே நம் புகைப்படங்களுடன் இந்த Multiply Blend Mode ஐ ஒப்பிடுகையில் Overexposure படங்களை இந்த Multiply Blend Mode ஐ பயன்படுத்தி ஓரளவுக்கு சரிபடுத்திக்கொள்ளலாம் என்று தெரிகிறது. சரி கீழேயுள்ள படமானது நான் Paris Disneylandல் Program Modeல் எடுத்தேன்.எனவே ISO வை தவிர்த்து மற்ற செட்டிங்குகளை கேமராவே பார்த்துக்கொண்டது, இதில் வானமும் கட்டிடமும் சற்று Overexpose ஆகி இருப்பதைக்காணலாம் எனவே கட்டிடத்தின் நிறமானது சற்று மங்கி இருக்கிறது.சரி இதுபோன்ற படங்களை இந்த Multiply Blend Mode கொண்டு எவ்வாறு சரி செய்யலாம் எனப்பார்க்கலாம்.
முதலில் படத்தினை போட்டோஷாப்/கிம்பில் திறந்துகொள்ளவும்.பின்னர் படத்தினை டூப்ளிகேட் செய்துகொள்ளவும்.டூப்ளிகேட் செய்த லேயரின் Blend Modeஐ Multiply க்கு மாற்றவும்.வித்தியாசத்தை பாருங்கள்.
குறிப்பு: இவ்வாறாக Multiply Mode இல் Dark செய்யப்பட்ட படத்தில் ஏற்கனவே இருந்த Dark ஏரியாக்கள் இன்னும் அதிகமாக Darkகாக மாறும். இந்த பிரச்சனையை சரி செய்ய லேயர் மாஸ்க் ஆப்ஷனை பயன்படுத்தி சரிசெய்துகொள்ளவும்.
என்ன வாசகர்களே இந்த கட்டுரையில் Multiply blend Mode ஐ பற்றி தெரிந்துகொண்டீர்கள் சரி மற்றொரு Blend modeஐ பற்றி அடுத்த பாகத்தில் சந்திக்கிறேன்.

நித்தி ஆனந்த்
மிக அழகான பதிவு
ReplyDeleteClean explanation anna
ReplyDeleteClean explanation - layer mask explanation light ah solindra nala irundhurukum
ReplyDelete@ Gokul nath:
ReplyDeleteலேயர் மாஸ்க் குறித்த பதிவு ஏற்கனவே செலெக்டிவெ கலரிங் பற்றிய கட்டுரையில் கிம்ப்பில் எவ்வாறு செய்வது என குறிப்பிட்டிருக்கிறோம்.இதனை பார்த்து போட்டோஷாப்பில் செய்துகொள்ளுங்கள்.முடிந்தால் லேயர் மாஸ்க் குறித்த கட்டுரையும் பதிவிடுகிறோம்.
http://photography-in-tamil.blogspot.com/2011/08/selective-coloring-in-gimp.html
அருமையானதொரு பகிர்வு.
ReplyDeleteஆசிய அழகைக் கண்டுபிடிப்பது பற்றிய நிழற்படம்-காணொளிப் போட்டிhttp://tamil.cri.cn/301/2013/11/19/1s134379.htm
ReplyDelete