Thursday, January 16, 2014

பழைய Vintage லென்ஸுகளில் புதிய அனுபவம்

9 comments:
 
வணக்கம் நண்பர்களே,

இந்த பதிவு ஒரு அனுபவ பதிவேபிட்டில் பொதுவாகவே அனுபவப்பூர்வமான விஷயங்களை வாசகர்களோடு பகிர்ந்துகொள்வதுண்டுஅதுபோலவே சமீபத்தில் இங்கு பிரான்ஸ் நாட்டில் ஒரு சில புகைபடக்கலைஞர்கள் தாங்கள் பயன்படுத்திய பழைய Vintage lensகளை தங்களது புதிய DSLR கேமராக்களில் பயன்படுத்துவதை பார்த்தேன்.

ஏன்? எதற்கு? என்கின்ற ஆர்வம் என்னைத்தொற்றிக்கொள்ள அவர்களிடம் விசாரித்ததில் அவர்கள் கூறியது “ஒரு ஆர்வத்தினாலேயன்றி மற்றபடி புதிய லென்ஸுகளைவிட பழைய லென்ஸுகள் சிறந்தது என்றெல்லாம் கூறமுடியாது.மேலும் இதனைக்கொண்டு மேனுவல் போக்கஸ் மற்றும் மேனுவல் மோடில் தான் படம் பிடிக்க இயலும்,பழைய வகை லென்ஸுகள் என்பதால் அப்பச்சர் மட்டும் நம்மால் லென்ஸிலேயே தேர்வு செய்துகொள்ள இயலும்” எனவும் "மேனுவலாக படம் பிடிக்க விரும்பும் புகைப்பட கலைஞர்களுக்கு இது பொருத்தமாகும்" எனவும் மேலும் "இதனை வைத்து நிதானமாகவே படம் பிடிக்க இயலும். அவசரமாக நடக்கும் நிகழ்வுகளை படம் பிடிக்க இந்த லென்ஸுகளை பயன்படுத்த வேண்டாம்" எனவும் எனக்கு அவர்கள் புரிய வைத்தனர் (உதாரணம் : நடனம்,Street photography,Moving objects etc..).

ஆனால் இந்த Vintage லென்ஸுகளில் அதிக அப்பர்சர்களில் எடுக்கும் படங்களானது நல்ல ஷார்ப்னஸுடனும் மேலும் இவைகள் உருவாக்கித்தரும் Bokehவும் அருமையாக இருக்கும் எனவும் என்னிடம் கூறினார்கள். Portrait,Macro மற்றும் Product photographyக்கு இந்த வகை லென்ஸுகளை பயன்படுத்தலாம் எனவும் கூறினார்கள்.

கடைசியாக அவர்கள் கூறியது "Cost factor" குறைந்தவிலையில் இந்த லென்ஸுகளை தயாரித்து பயன்படுத்த முடியுமெனவும் கூறினார்கள்.


அதாவது இந்த பழைய Vintage M42 வகை பிலிம் ரோல் மாடல் லென்ஸுகள்(1960,70,80,90களில்) e-bayயில் மிக குறைந்த விலையில் வாங்கலாம் என்றும் சில நபர்கள் இலவசமாகவே கொடுத்துவிடுவார்கள் இதற்கு ஒரு Converter ring  மட்டும் வாங்கினால் போதுமெனவும் கூறினார்கள்.


M42 to canon adapter:

M42 to Nikon adapter:
ஒரு பழைய M42 வகை 50mm லென்ஸை சுமார் 20 டாலர்களுக்கு  வாங்கலாம்,அதனுடன் ஒரு converterஅதாவது M42 to DSLR adapter ஒரு 4 டாலர்களிலிருந்து 10 டாலர்களுக்குள்ளாக கிடைப்பதாகவும் ,ஆக 30 டாலர்களில் ஒரு 50mm லென்ஸ் ரெடி …..இந்த 50mm லென்ஸை cropped sensor கேமராவில் 65mm ஆக வெலைசெய்யும் என கூறி முடித்தனர்.
அப்படியென்றால் என்னிடம் இன்றும் இருக்கும் 1980 களில் என்னுடைய மாமா பயன்படுத்திய ஜெர்மானிய தயாரிப்பான Pentacon f2.4 50mm pancake லென்ஸையும் மற்றும் ரஷ்யா தயாரிப்பானHelios 58mm போன்ற லென்ஸுகளை ஏன் நான் என்னுடைய Canon DSLR bodyயில் பயன்படுத்திப்பார்க்ககூடாது என முடிவு செய்தேன்.இதுகுறித்த விளக்கங்களை நட்பு வட்டத்தில் கேட்க என்னுடைய Pentacon lens M42 லென்ஸ் மவுண்ட் கிடையாது எனவே பயன்படுத்த இயலாது என கூறிவிட்டனர்.


அதன்பிறகு நான் இந்த எண்ணத்தை விட்டுவிட்டேன்,ஆனால் சமீபத்தில் FLICKR தளம் மூலமாக அறிமுகமான என்னுடைய சொந்த ஊரான பாண்டிச்சேரியை சேர்ந்த நண்பர் திரு.கருணாகரன் அவர்களிடம் பேசிய போது, அவர் இதுபோன்ற நிறைய லென்ஸுகளை அவரது Canon மற்றும் Nikon பாடிக்கு அவராகவே (M42 வகை அல்லாத மாடல்களுக்கும்)லென்ஸ் மவுண்ட் உருவாக்கி வைத்திருப்பதாக கூற இந்தியா வந்தவுடன் அவரை என்னுடைய நண்பன் விக்கியுடன்  சென்று ந்தித்தேன்.
             Vicky and Mr.Karunakaran(Canon EOS 500D+Helios 58mm M42 Vintage lens(f4,1/600,ISO200).

என்னுடைய பழையலென்ஸுகளை பார்த்த அவர் ஒரு வாரம் அவகாசம் கேட்ட அவர் ஒரு வாரத்தில் சரியாக என்னுடைய பழைய லென்ஸ்களான Pentacon 50mm f2.4 Pancake மற்றும் Helios 58mm f2.0 லென்ஸுகளை என்னுடைய Canon bodyக்கு தயார் செய்து கொடுத்துவிட்டார். மேலும் இந்த Pentacon Vintage லென்ஸை வைத்து அவர் எடுத்திருந்த சில Product Photos களையும் எனக்கு மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார்.

F4,1/13,ISO200 settings இல் Tripodன் உதவியுடன் எடுத்த படங்கள்:


ஆக நான் நினைத்தபடி என்னுடைய பழைய லென்ஸுகள் என்னுடைய கேமராவிற்கு  தயாராகி விட்டது. இனி,லென்ஸை பயன்படுத்தி படமெடுத்து பார்க்கவேண்டும் என்ற எண்ணம் எழ முதலில் Pentacon 50mm f2.4 இல் முயற்சி செய்தேன். இந்த லென்ஸில் focus distance 0.6m எனவே Portrait களைக் காட்டிலும் மேக்ரோ மற்றும் Product போட்டோக்களுக்கு பயன்படும் என முடிவு செய்தேன்.

சரி வெளியே சென்று படம்பிடிக்க நேரமில்லையென்பதால் என் வீட்டு தோட்டத்தையே தேர்வு செய்தேன்.அவ்வாறாக Pentacon 50mm f 2.4 இல் Spot Meteringல் F2.4,1/3200,ISO200 இல் எடுக்கப்பட்ட macro  சாமந்திப் பூ:
பிறகு தோட்டத்தில் மலர்திருந்த ரோஜா பூவை Kenko Extension Tube 12mm ஐ கொண்டு f2.4,1/500,ISO 200 இல் எடுத்த படம்:
பின்னர் f4 இல் 1/80,ISO 200 இல் எடுக்கப்பட்ட பச்சை மிளகாய் படம்:
அடுத்ததாக என் நண்பன் விக்கியை மாடலாக்கி f4,1/320,ISO 400 Exposure compensation +1/3 மற்றும் White Balance,Daylightல் செட் செய்து எடுத்த படம்:

ஒருவழியாக Pentacon லென்ஸை  சோதித்தப்பின்னர் அடுத்ததாக Helios 58mm என்னுடைய Canonல் சோதிக்க விரும்பினேன் இந்த Helios 58mm லென்ஸானது எனது Cropped Sensorல் 72mm ஆக வேலை செய்வதால் இந்த லென்ஸை நான் பெரும்பாலும் Portraitக்கு பயன்படுத்தலாம் என முடிவு செய்தேன்.

எனவே மீண்டும் என் நண்பன் விக்கியை மாடலாக்கி சில ஷாட்டுகளை எடுத்தேன் f2 இல் இந்த பழைய லென்ஸுகள் உருவாக்கித்தரும் ஷார்ப்னஸ் மற்றும் Bokeh உண்மையில் அருமையாக இருக்கின்றது.

f2 இல் இந்த பழைய லென்ஸுகள் உருவாக்கித்தரும் வண்ணங்கள், ஷார்ப்னஸ் மற்றும் போக்கே உண்மையில் அருமையாக இருக்கின்றது என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன்.

சரி அனுபவத்தினை பகிர்ந்தாகிவிட்டது, இதனை வைத்து வாசகர்களுக்கு என்ன நன்மைகள் என்ன சிரமங்கள் இருக்கின்றது என்பதை தெளிவுபடுத்தியாக வேண்டுமல்லவா?

இது குறித்து பிட் குழுவின் சக அட்மின்களான திரு.கருவாயன் சார்மதிப்பிற்குரிய ராமலக்ஷ்மி ஆகியோரிடம் தொலைபேசியினூடாக பேசி ஒருமித்த கருத்துக்களுடன் சில விஷயங்களை உங்களுக்கு தெளிவு படுத்துகிறோம்.

நன்மைகள்:

1.பழைய Vintageலென்சுகள் விலை மலிவாக கிடைக்கின்றது ,உதாரணமாக 85mm ,135mm Macro லென்சுகள்,Wide angle,Fisheye போன்ற புதிய லென்சுகளின் விலை மிக அதிகம்,ஆனால் இந்த M42 வகை பழைய Vintageலென்ஸுகள் விலை மலிவாக கிடைக்கின்றது.

2. Takumar,Rrevuenon, Jupiter போன்ற அந்த காலத்து கனவு லென்ஸுகள் புதிய லென்ஸுகளைக் காட்டிலும் மலிவாக கிடைப்பதால் இதன் மீது பற்று கொண்டவர்கள் வாங்கி பயன்படுத்தலாம்,மேலும் இந்தவகை லென்ஸுகள் உருவாக்கித்தரும் Swirly bokeh பிற லென்ஸுகளில் காண்பது அரிது.

3.புகைபடக்கலையை ஆர்வமுடம் பழக விரும்புவோர்கள் இதனை பயன்படுத்திப்பார்கலாம்.

4.Manual focus பழக நினைப்பவர்களுக்கு ஏதுவாக இருக்கும்.

சிரமங்கள்:

1.இந்த வகை லென்ஸுகளைக்கொண்டு சுப நிகழ்ச்சிகளையும் Moving objectகளை படம் பிடிப்பது மிகவும் சிரமம்.

2.ஆட்டோ போகஸ் ஆகாததால் மேனுவல் போக்கஸிங் கடினமாக இருக்கும்.

3.Meter Reading வேலை செய்யாததால் உங்களின் அப்பச்சர் மற்றும் ஷட்டர் வேகத்தினை  நீங்களே தான் செட் செய்யவேண்டும்.

4.Nikon  பயனாளர்கள்  infinity focus correction உடன் கூடிய கன்வர்டர்களைத்தான் பயன்படுத்தமுடியும்.

5.நிறைய படங்கள் out of focusஆக வாய்ப்புகள் அதிகம்.

மேற்கண்ட சிரமங்கள் இருப்பினும் Portrait,Macro,Product புகைப்படக்கலையில் ஆர்வம் இருப்பவர்கள் இந்தவகை M42 Vintage Lensகளை மேனுவல் மோடில் கட்டாயம் பயன்படுத்தலாம்.

அன்புடன்,
நித்தி ஆனந்த்

9 comments:

  1. Nalla padhivu....... pagirndhamaikku nandri........

    ReplyDelete
  2. Very nice info sharing, Thanks for your work :)

    ReplyDelete
  3. புதிய லென்ஸில் எடுத்த படங்கள் அற்புதம்... சிரமங்களையும் பகிர்ந்து கொண்டது சிறப்பு... நன்றி...

    ReplyDelete
  4. hello boss pls update my photo this m,month contest name karthikrajaj.pj

    ReplyDelete
  5. பயனுள்ள பதிவு நித்தி. படங்கள் அனைத்தும் அருமையாக வந்துள்ளன. குறிப்பாக விக்கி-ஐ வைத்து எடுத்த படத்தில் "பொக்கே" அருமை. கஷ்டங்களையும் குறிப்பிட்டதற்கு நன்றி.

    ReplyDelete
  6. நிறைவான பதிவு. அருமை சகோ!

    ReplyDelete
  7. அருமையான தகவல். நன்றி நண்பர்களே...

    ReplyDelete
  8. மிகவும் அருமையான பதிவு.. தொடரவும்

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff