Tuesday, September 18, 2007

புகைப்பட போட்டியில் பரிசு பெறுவது எப்படி??

12 comments:
 
வணக்கம் மக்களே!
எல்லோரும் எப்படி இருக்கீங்க??
செப்டெம்பெர் மாத போட்டி சிறப்பா நடந்து முடிந்திருக்கிறது. ஒவ்வொரு தடவை போட்டி நடக்கும் போதும் எனக்கு தோன்றும் சில விஷயங்களை இந்த சமயத்திலே பகிர்ந்துக்கொள்ளலாம் என்று எண்ணம்.
போட்டிக்கு வரும் படங்கள் எப்படியெல்லாம் தேர்ந்தெடுக்கப்படுகிறது என்பதை நடுவர்களின் பார்வையில் இந்த பதிவில் முன்பே சொல்லியிருந்தேன்.
ஆனால் சில சமீபத்திய உதாரணங்களோடு திரும்பவும் உங்கள் முன்னால் இதை பற்றி அலசலாம் என்று ஒரு சிறிய ஆசை. போன தடவை எழுதியிருந்த போது போட்டிக்கு வந்திருக்கும் படங்களை வைத்து உதாரணங்களை கொடுத்தால் வசதியாக இருக்கும் என்று நீங்கள் கூறியிருந்தீர்கள். அதனால் இந்த முறை உங்களிடமிருந்தே உதாரணங்களை எடுத்திருக்கிறேன். யாரும் வீட்டுக்கு ஆட்டோ அனுப்பி விடாதீர்கள். :-)

படங்களின் பிக்சல் தரம்:


படம் தெளிவாக இல்லாமல் சொர சொரவென்று grainy-ஆக இருந்தால் ,உங்கள் படங்கள் எவ்வளவு அழகாக இருந்தாலும் காண்பவறை கவராது. அதுவும் 50-100 படங்கள் பரப்பி உங்கள் படங்களோடு ஒப்பிட்டு பார்க்கையில்,உங்கள் படம் சற்றே சிறப்பு குறைந்து காணப்படும்.பொதுவாக உங்கள் கோப்பின் அளவு குறைந்திருந்தால் அந்த படத்தின் பிக்சல் தரமும் குறைந்து போகும்.
படம் எவ்வளவுக்கெவ்வளவு பெரிதாகவும்,அதிக பிக்சல்களோடு இருக்கிறதோ அந்த அளவு பார்ப்பதற்கு தெளிவாக இருக்கும்.

தலைப்பு:
இதை முந்தைய பதிவிலே கூட சொல்லியிருக்கிறேன். படம் எவ்வளவு சிறப்பாக இருந்தாலும் தலைப்பு எந்த அளவுக்கு பொருந்தியுள்ளதோ அந்த அளவுக்கு தான் பரிசு கிடைப்பதற்கு சந்தர்ப்பம் அதிகம்.இந்த போட்டியின் தலைப்பு வண்ணங்கள் என்பதால் படங்களை பார்த்தவுடன் வண்ணங்கள் மட்டுமே பள்ளிச்சென தோன்றுமளவுக்கு இருக்கும் படங்களை எதிர்பார்த்திருந்தோம்.
போட்டிக்க்கு வந்த சில படங்கள் நன்றாக இருந்தாலும் போட்டியின் தலைப்புக்கு பொருந்தாது போன்று எனக்கு பட்டது.
உதாரணத்திற்கு முகவை மைந்தனின் இந்த படம் "Perspectives" அல்லது புதுமையான கோணங்கள் போன்ற தலைப்புகளுக்கு நன்றாக பொருந்தும் என்று தோன்றியது.


அதே சமயம் மஞ்சு அவர்களின் இந்த படம் மேகங்கள் எனும் தலைப்புக்கு சரியாக பொருந்தக்கூடியது.




பிற்தயாரிப்பு:
பிற்தயாரிப்பின் முக்கியத்துவத்தை முதல் போட்டியின் முடிவில் நான் நன்றாகவே தெரிந்துக்கொண்டேன்.அதுவும் செல்லாவின் இந்த பதிவை பார்த்தாலே உங்களுக்கு அதன் பலன் புரிந்து போகும். அடிப்படையான பிற்தயாரிப்பு செய்வதற்கான சுலபமான மென்பொருளான பிக்காஸாவை பற்றி இந்த பதிவில் நீங்கள் காணலாம். இதில் அடிப்படையான contrast adjustment மற்றும் cropping மிகச்சுலபமாக பண்ணலாம்.
Contrast adjustment,cropping,bordering,naming இப்படி பல விஷயங்களையும் சிறப்பாக செய்யவல்ல இன்னொரு இலவசமான மென்பொருள் Gimp.
இதில் நாம் செய்ய முனையும் சிறு சிறு மாற்றங்களை கற்றுக்கொள்வது மிகவும் சுலபம். வேண்டுமென்றால் சொல்லுங்கள் அதுக்கும் பதிவு போட்டு விடலாம்!! :-)

இப்படி போட்டிக்கு வந்திருந்த சில படங்கள் நான் செய்த பிற்தயாரிப்பு மாற்றங்கள் உங்கள் முன்னே.
படத்தில் பிக்சல்கள் அதிகமாக இருந்தால் contrast adjustment செய்தால் படம் தாங்கும்.இல்லைனா ஏதாச்சும் பண்ணா படத்தின் தெளிவு குறைய வாய்ப்பு உண்டு.

போட்டி அறிவிப்பு பதிவில் கூட ஒரு அன்பர் பின்னூட்டமிட்டிருந்தார். கலர் படங்கள் போட்டிக்கு படங்கள் அனுப்ப டிப்ஸ் தருமாறு. எல்லா போட்டிக்களுக்குமே இந்த பிற்தயாரிப்பு செய்தாலே படங்கள் பல மடங்கு professional ஆகி விடும்.பிற்தயாரிப்பு பற்றிய எங்களது அறிமுக பதிவை காண இங்கே சுட்டவும்.


















































இப்படி சற்றே நேரம் செலவழித்தால் பல படங்கள் மிக வித்தியாசமாக தெரிகிறது பாருங்கள். சும்மா கையில் கிடைத்த படங்களை ஏனோ தானோ என்று சிறிது வேலை செய்தாலே இந்த கதி என்றால்,போட்டிக்காக அக்கறையுடன் நீங்கள் கொஞ்சம் மாற்றங்கள் செய்தால் பாடங்கள் எவ்வளவு சிறப்புரும் என் நீங்களே யோசித்து பாருங்கள்.

ஆனாலும் சும்மா சொல்லக்கூடாது,போட்டிக்கு வந்த பல படங்கள் நான் மேற்சொன்ன விஷயங்கள் எல்லாவற்றையும் கவனித்து அனுப்பப்பட்டவையாகவே இருந்தது!! பகிர்தல் மற்றும் கூடி பேசுதல் மூலம் இந்த கலையை பற்றி மேலும் மேலும் தெரிந்து கொள்வதே நமது லட்சியம் என்பதால் படம் தேர்ந்தெடுக்கபடாமைக்கு வருந்த வேண்டாம்.
மேலும் மேலும் நண்பர்களை கூட்டிக்கொள்வோம். ஒத்த கருத்துடைய மற்றும் கலையார்வம் உள்ளவர்காளோடு இந்த குழுவின் மூலம் விவாதிப்போம்,அரட்டை அடிப்போம்,எண்ணங்களை பரிமாறிக்கொள்வோம்.
அதற்கு, மாதாமாதம் நடைபெறும் இந்த போட்டி தொடர்ந்து ஒரு சிறந்த அரங்காக விளங்கட்டும்.
வாழ்த்துக்கள்!! :-)

12 comments:

  1. thanks for the info..
    btw, can we use Photo shop for editing the pics?

    ReplyDelete
  2. படத்துடன் கூடிய விளக்கங்களுக்கு நன்றி!

    ReplyDelete
  3. After Effects படங்களில் உள்ள வித்தியாசம் நன்றாக உள்ளது.

    ReplyDelete
  4. @இளா
    காலையில் வேறு ஒரு இடுகையில் தீபாவின் கேள்விக்கு பின்னூட்டத்தில் அளித்த பதில்.
    "
    இந்த போட்டிக்கு பொருந்தவரை as long as the reality of the scene is preserved பிற்தயாரிப்பு நுணுக்கங்களை பயன் படுத்தலாம்.
    Morph செய்வது ஆட்களை,பொருட்களை சேர்ப்பது/குறைப்பது/மாற்றுவது போன்ற விஷயங்கள்தான் எங்கும் அவ்வளவாக அனுமதிக்கப்பட மாட்டாது.

    எதற்கும் ஒரு போட்டிக்கு அனுப்புவதற்கு முன் அந்தந்த நடத்துனர்களிடம் பிற்தயாரிப்பு செய்யலாமா என்று கேட்டுக்கொள்வது நலம். :-)"

    @மஞ்சு
    வாழ்த்துக்களுக்கு நன்றி மஞ்சு

    @வடுவூர் குமார்
    நன்றி குமார்.
    நாம் கொஞ்சம் முயற்சி செய்தால் படங்களில் எவ்வளவு மாற்றங்கள் தெரிகின்றது பார்த்தீர்களா?? :-)

    ReplyDelete
  5. உங்களுக்குப் பொறுமை ஜாஸ்தி :)

    டிப்ஸுக்கு நன்றி

    ReplyDelete
  6. நல்ல பதிவு.

    நண்பர்கள் யாராவது,
    ஃபோட்டோ ஷாப் பற்றி ஒரு சின்ன பதிவு போட்டா நல்லா இருக்கும்.

    ReplyDelete
  7. I would suggest for basic editing, Photo shop is heavy and also license fee for the software. You can use some free software unless you want very high end photo editing .

    here i am listing few free software.

    For windows user (Top 5 IMHO ) :

    http://www.gimp.org/
    http://www.picasa.com/
    http://www.vicman.net/vcwphoto
    http://www.cursorarts.com/ca_imffw.htm
    http://www.eecs.wsu.edu/paint.net


    For *nix users ( any Linux /Unix )

    http://www.gimp.org
    http://digikam.sourceforge.net/

    --jeeves

    ReplyDelete
  8. தங்கள் நேரத்தை செலவழித்து பிறருக்கு உற்சாகமூட்டும் உங்கள் குழுவினரை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

    எவரும் நோவதற்கு வாய்ப்பே இல்லாத வலைப்பூ. முந்தைய பதிவுகளைப் படித்து விரைவில் கடின போட்டியை கொடுத்துட்டா போச்சு.

    சரி, சரி 'வேறுபட்ட (அ) பிறழ் கோணங்களில்' போட்டி எப்போ? படம் ஆயத்தமா இருக்குங்கறேன்!

    ReplyDelete
  9. சூப்பர் போஸ்ட்...

    ReplyDelete
  10. //நண்பர்கள் யாராவது,
    ஃபோட்டோ ஷாப் பற்றி ஒரு சின்ன பதிவு போட்டா நல்லா இருக்கும்.//

    ஒரு போஸ்ட் இங்க இருக்கு...

    http://k4karthik.blogspot.com/2007/09/photoshop-magic-wand.html

    பார்த்துட்டு சொல்லுங்க...

    ReplyDelete
  11. அடுத்த மாசப் போட்டி அறிவிப்புக்கு நாங்க தயார்... நீங்க ரெடியா :)

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff