Friday, November 16, 2007

படம் செய்ய விரும்பு- 6 இரவு புகைப்படக்கலை - பாடம் 2

11 comments:
 
இரவு புகைப்படக்கலையில் முதல் பாடத்தை படிச்சி இருப்பீங்க. இப்ப இரண்டாவது பாடத்திற்கு போகலாமா? இந்த முறை சொந்தமாக கற்றுக்கொண்டதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். இந்த தீபாவளிக்கு எப்படியும் நல்ல படங்கள் எடுத்துவிட வேண்டும் என்ற ஒரு ஆவலில் இருந்தேன். மொட்டை மாடிக்கு சென்று வானத்தில் அழகாக மின்னிய நடசத்திரங்களுடன் தானும் சில நொடிகள் மின்னிய பட்டாசுகள் கண்ணை கவர்ந்து இழுத்தது. எப்படியும் பிடித்துவிடலாம் என்று இருந்த எனக்கு ஏமாற்றம் தான் மிச்சம். ஒரு படம் கூட சரியாக பதியவில்லை. சுமார் முக்கால் மணி நேரம் சொடுக்கி சொடுக்கி வெறுத்தே போனது.
முக்காலியில் அவசியம் அப்போது தான் உறைத்தது. வீட்டின் முன்னே அழகான composition. ஆனால் கைகளில் வைத்து சொடுக்கிய போது நிறைய ஷேக்குகள் படத்தில் தெரிந்தது. பின்னர் கைப்பிடி சுவரில் மீது வைத்து சொடுக்கினேன். கொஞ்சம் ஆபத்தான செயல் தான். கொஞ்சம் தவறினாலும் கிளிக்கிற்கு பதில் டமால் தான்.
Mode : Manual : F/4 : Exposure Time : 5 sec

இரவுப்புகைப்படக்கலையில் முக்காலியின் அவசியம் இப்போது உணர்ந்திருப்பீர்கள். மிக நல்ல படங்களை தவறவிட்டுவிடுவோம்.


சிறிது நேரம் கழித்து இரவு பட்டாசுகளை வீட்டில் வெடிக்க ஆரம்பித்தார்கள். பட்டாசுகளை முதல்முறை படம் பிடிப்பதால் எப்படி எங்கு படம் பிடிப்பது என்று தெரியவில்லை. ஆனால் அந்த வெளிச்சத்தில் தெரியும் முகங்கள் பார்க்க அழகாக இருக்கும். அடுத்த முறை முயற்சித்து பாருங்கள். Program மேடில் இருந்து Manual மோடிற்கு மாறினால் இரவு புகைப்படங்கள் பிரமிக்கும் வகையில் கிடைக்கும். அப்படி கிடைத்தது தான் கிழே உள்ள புகைப்படங்கள். அனைத்தும் Manual Modeல் எடுக்கப்பட்டது. எடுக்கும் படத்திற்கு ஏற்ப Exposure நேரத்தை மாற்றிக்கொள்ளவும். Prolonged Exposure என்று இதனை சொல்கிறார்கள்.


எங்கோ ஓரு புத்தகத்தில் வேகமாக செல்லும் பேருந்து, வாகனத்தின் பாதையை (trail) இந்த மோடில் எடுக்கலாம் என்று சொல்லி இருந்தார்கள். அந்த படிப்பினையை கொண்டு எடுத்த படங்கள் இவை.


இப்படிப்பட்ட படங்களுக்கு புகைப்படிப்பவருக்கு இணையாக அந்த பட்டாசுகளை வைத்து வடிவங்கள் கொடுப்பவரின் பங்களிப்பும் அவசியமானது.

-விழியன்

11 comments:

  1. Breathtaking fotos!!!

    can you please post the shutter speed for each of the photos?? :-)

    ReplyDelete
  2. Good photos. adding exif details would help more

    ReplyDelete
  3. படங்கள் - குறிப்பாக அந்த எரிந்து பொழியும் நட்சத்திரம் - நன்றாக விழுந்திருக்கின்றன

    ReplyDelete
  4. அட்டகாசமான படங்கள்.

    படங்களைப் பார்க்கப் பார்க்க புகைப்படக்கலையின் எல்லையற்ற சாத்தியங்கள் கண்முன் விரிகிறது.

    பாடத்திற்கு ரொம்ப நன்றி.

    ReplyDelete
  5. சீவியார்,சுந்தர் போன்ற புகைப்படம் பற்றி அறிந்தவர்கள் மறுமொழி இட்ட பின்னர், நானும் இடுகிறேன்.

    புகைப்படங்கள் அருமை. கம்பி மத்தாப்பூவில் இது மாதிரி மாஜிக் எழுத்தெல்லாம் காட்ட முடியுமா ??

    ReplyDelete
  6. ரொம்ப நல்லா வந்திருக்கு. குறிப்பா முதல் இரண்டு படங்கள்.

    ReplyDelete
  7. Dhool!

    nakshathiram super.

    indha F mode, shutter speed, manual mode pathi konjam vilaavariya pottaa prayojanama irukkum. ;)

    ReplyDelete
  8. I was going thru various other posts on photography. You ve been explaining things very good. I just read about DoF. I have shot few photos explaning DoF. Here it is.
    http://picasaweb.google.com/kirankumar.gosu/ExplainingDoF

    Contests are also good. Contests on topics is good. Cant we have contests on technics. Say photos explaining "Leading Lines Rule" etc

    ReplyDelete
  9. Cooool!!
    The first two shots have a very good shallow dept of field with the focus on a specific objects in the frame.
    This isolates the subject nicely blurring out the other objects around it!
    This is one very important technique in photography to portray your subject!
    Really glad you found our posts,and very interesting topics suggestion too!!
    Thanks for the interest and comment! :-)

    ReplyDelete
  10. என்னது?கம்பி மத்தாப்பா?நான் என்னமோ ரெடிமேடா தமிழ் எழுத்துப் பட்டாசுகள்ன்னு நினைத்தேன்.அம்மாடியோவ்!

    ReplyDelete
  11. கலக்கிட்டீங்க!

    மோகன்

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff