Tuesday, November 27, 2007

DSLR vs Point and shoot

24 comments:
 
இந்த பதிவை எந்த கேமரா வாங்கலாம் என்ற எமது முந்தைய பதிவின் தொடர்ச்சியாக கொள்ளலாம்.
கேமரா வாங்க முடிவெடுக்கும் பல பேரிடம் ஏற்படும் குழப்பங்களில் "DSLR வாங்கலாமா அல்லது Point and shoot வாங்கலாமா" என்ற குழப்பம் முதன்மையானது. போன பதிவில் சொன்னது போல இதற்கான முடிவை உங்களுக்கான ஆர்வம்,திறமை,புகைப்படக்கலையை கற்றுக்கொள்ள நீங்கள் எவ்வளவு நேரம்/முயற்சி எடுக்க தயாராக இருக்கிறீர்கள் என்பதை பொருத்து நீங்களே தான் எடுக்க வேண்டும். இதற்கான முடிவை என்னாலேயோ அல்லது உங்கள் நண்பர்களிலாயோ எடுக்க முடியாது. DSLR கேமராக்களின் விலை மற்றும் அதை பராமரிக்க/உபயோகிக்க தேவைபடும் பொறுமை/கூடுதல் முயற்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டு, நான் என்னிடம் ஆலோசனை கேட்பவர்களிடம் High end point and shoot -ஐயே வாங்க சொல்லி விடுவேன்.உங்களிடையே ஏற்கெனவே கேமரா உள்ளதா???அதில் உள்ள பயன்பாடுகள் என்னென்ன?? உங்களுக்கு புகைப்படக்கலை குறித்த அடிப்படை விஷயங்கள் தெரியுமா?? என்பதெல்லாம் தான் நீங்கள் யோசிக்க வேண்டிய விஷயங்கள்.

இருந்தாலும் DSLR-க்கும் point and shoot-க்கும் உள்ள அடிப்படை வித்தியாசங்கள் என்ன என்பதை விளக்குவதற்காக எழுதப்பட்ட பதிவு தான் இது.
இது பொதுவாக இருக்கும் SLR மற்றும் point and shoot கேமராக்களை கருத்தில் கொண்டு எழுதப்பட்டது.இப்பொழுதெல்லாம் கன்னா பின்னாவென்று high end point and shoot கேமராக்கள் சந்தையில் வருவதால் சில விஷயங்கள் இந்த கேமராக்களுக்கு பொருந்தாமல் போகலாம்! :-)

முதலில் SLR கேமரா என்றால் என்ன என்பதை தெளிவாக தெரிந்துக்கொண்டு விடலாம் வாருங்கள். SLR என்பது single lens reflex என்பதன் சுருக்கம். இதற்கு முன் ஒரு Digital-ஐ சேர்த்து விட்டால் DSLR. கேமராக்களில் உள்ள னெல்ஸ்களை கழட்டி மாற்றி போட்டுக்கொள்ள முடியும் என்பது தான் SLR கேமரக்களில் உள்ள அடிப்படை சிறப்பு.Point and shoot-இல் அப்படி கிடையாது. ஒரே லென்ஸை தான் கட்டிக்கொண்டு அழ(சிரிக்க) வேண்டும்.அதுவுமில்லாமல் SLR-இல் லென்ஸில் நுழையும் ஒளியை நேரடியாக view finder-இல் பார்த்து படத்தை எடுப்போம். ஆனால் point and shoot கேமராவில் லென்ஸ் வழியாக வரும் ஒளி பிரதிபலிக்கப்பட்டு LCD-இல் தனியாக காண்பிக்கப்படும். அதனால் SLR கேமராக்களில் படம் எடுக்கும் போது தெரியும் காட்சி தான் நம் சென்சரில் விழும் ஒளி . இதுதான் SLR-க்கும் point and shoot-க்கும் உள்ள அடிப்படை வித்தியாசம்.இப்பொழுது இந்த கேமராக்களில் உள்ள மற்ற வித்தியாசங்களை பார்க்கலாம்.

படங்களின் தரம்:
படங்களின் தரம் என்று வரும்போது கேமராவின் megapixel (MP) என்பது மிக முக்கிய அளவுகோலாக கருதப்படுகிறது.இப்பொழுதெல்லாம் பல point and shoot கேமராக்களில் அதிக அளவிலான (8-10 MP) MP ரெசல்யூஷன்கள் வர ஆரம்பித்து விட்டன. ரெசல்யூஷன் ஒரே அளவாக இருந்தாலும் சென்ஸரில் உள்ள புள்ளிகளின்(pixels) அளவை (size) பொருத்து படங்கள் பதியப்படும் திறனும் மாறுபடும். Point and shoot கேமராக்களில் உள்ள சென்சர்களில் உள்ள புள்ளிகள் SLR-களில் உள்ளதை விட சிறியதாக இருப்பதால் அவற்றால் அவ்வளவாக ஒளியை பதிய வைக்க முடியாது. அதனால் ஒரு 10MP point and shoot கேமராவில் எடுக்கப்பட்ட படம் ஒரு 8MP SLR கேமராவில் எடுக்கப்பட்ட படத்தை விட தரத்தில் அதிகமாக இருக்கும் என்று சொல்ல முடியாது.ஆனால் நீங்கள் படத்தை பிரிண்ட் செய்யப்போவதில்லை என்றால் அதிகபட்ச ரெசல்யூஷனால் பெரிதாக ஒன்றும் வித்தியாசம் வந்து விடாது.ரெசல்யூஷன் அதிகமாக அதிகமாக கோப்புகளின் அளவும் அதிகமாகிக்கொண்டு போகும் என்பதை மறக்க வேண்டாம்!! :-)

லென்ஸ்கள்:
SLR கேமராவில் உள்ள லென்ஸ்களின் தரம் point and shoot கேமராக்களில் உள்ள லென்ஸ்களை விட தரத்தில் சிறந்ததாக இருக்கும். இதனால் SLR கேமராக்களில் குறைந்த ஒளியிலும் focus செய்யும் திறனும் ,ஒளியை திறட்டும் திறனும் சிறந்து காணப்படும்.இதனால் படங்கள் சிறப்படைய வாய்ப்பு உள்ளது. DSLR லென்ஸ்களில் எடுக்கும் படங்களில் point and shoot கேமராக்களை விட அதிகமான DOF கிடைப்பதையும் நீங்கள் கவனித்திருப்பீர்கள்.
அதுவுமில்லாமல் SLR-களில் உங்கள் தேவைக்கேற்ப லென்ஸ்களை மாற்றிப்போட்டுக்கொண்டு விதவிதமான ரகமான(landscape,sports,macro) படங்களை எடுக்கலாம். இதில் ஒரு பிரச்சினை என்னவென்றால் நீங்கள் லென்ஸ்களை மாற்றி மாற்றி போடும் வேளைகளில் கேமராவுக்குள் தூசி புகுந்து சென்சரில் படிந்துக்கொண்டால் நிறைய காசு செலவு செய்து சுத்தம் செய்ய வேண்டும்.

கையாளுமை:
SLR கேமராக்களோடு ஒப்பிடும் போது point and shoot கேமராக்கள் சிறியதாகவும் எடை குறைவாகவும் இருக்கும். அதனால் அவசரமான சமயத்தில் கூட சட்டென பையில் இருந்து வெளியே எடுத்து பட்டென படம் பிடித்து விடலாம்!! ஆனால் SLR-களின் அளவும் பெரியது,எடையும் அதிகம். புகைப்படக்கலை மேல் தீவிரமான ஆர்வம் இல்லாத பட்சத்தில் இரண்டு மூன்று மாதங்களில் அதை வெளியே எடுத்து படம் பிடிப்பதே அலுப்பாகி விடும்.ஆர்வம் மட்டும் இல்லையென்றால் ஆசையாக இருக்கிறதே என்று பணம் கொடுத்து வாங்கி விட்டு பிறகு ஏனடா வாங்கினோம் என்று ஆகிவிடும்.
அதுவும் தவிர point and shoot கேமராக்களில் படம் எடுக்கும் போது காட்சி LCD திரையில் தெரியும் என்பதால் view finder-இல் பார்த்து்பார்த்துபாபாபார்த்து தான் படம் எடுக்க வேண்டுமென்பது இல்லை.இதனால் உங்களால் SLR கேமராக்களில் எடுக்க முடியாத பல கோணங்களில் உங்கள் point and shoot கேமரா மூலம் எடுக்கலாம்.

சத்தம் மற்றும் வேகம்:
நீங்கள் SLR கேமராக்கள் உபயோகிக்கும் போது கவனித்தீர்கள் என்றால் ஒவ்வொரு படம் எடுக்கும் போதும் "கிரக்" என்று ஒரு விதமான சத்தம் எழும். SLR கேமராக்களின் உள்ளே நடக்கும் செயல்பாடுகளால் உருவாகும் சத்தம் தான் அது.இந்த சத்தம் point and shoot கேமராக்களில் வராது. சில point and shoot கேமராக்களில் செயற்கையாக ஒரு விதமான சத்தம் சேர்க்கப்பட்டிருக்கும்.சில பேருக்கு இந்த சத்தம் இருப்பது பிடிக்கும்.படம் எடுக்கும் போது ஏதோ ப்ரொபெஷனல் புகைப்படக்காரரை போல "கெத்தாக" இருக்கும் என்று நினைப்பார்கள்.ஆனால் இது அவரவர் விருப்பத்தை பொருத்தது.
டிஜிட்டல் கேமராக்களில் நீங்கள் படம் எடுக்கும் போது,நீங்கள் பொத்தானை அழுத்தி சிறிது நேரம் கழித்து தான் படம் எடுக்கும்.இதற்கு ஆங்கிலத்தில் "shutter lag"என்று கூறுவார்கள்.அதுவும் இல்லாமல் கேமராவை ஆன் செய்த வுடன் கேமரா தயாராகி நாம் உபயோகிக்க சில நேரம் ஆகும். படம் எடுத்த பின் அதை மெமரி அட்டையில் எழுத சிறிது நேரம் பிடிக்கும்.இந்த பிரச்சினைகள் எல்லாம் SLR கேமராக்களில் மிகக் குறைவு. அதுவும் shutter lag அறவே இருக்காது என்றே சொல்லலாம்.

பயன்பாடுகள்:
SLR கேமராக்கள் உருவாக்கப்படும் போதே அதை பயன்படுத்துபவர் புகைப்படக்கலை பற்றிய அடிப்படை அறிவு உடையவர் என்று அனுமானித்துக்கொண்டு உருவாக்குகிறார்கள். இதனால் ஒரு படத்தை பாதிக்கும் வெவ்வேறு அம்சங்களையும் தனியே மாற்றி படத்தை நமது இஷ்டம் போல் இதில் பதிய வைக்க முடியும். என்னதான் இப்பொழுதுள்ள high end point and shoot கேமராக்களில் வித விதமான mode-கள் வந்திருந்தாலும் SLR கேமராக்களில் இருப்பது போன்று இதில் எல்லா அம்சங்களையும் நமது இஷ்டம் போல் மாற்ற முடியாது. ஆனால் இந்த கலையை கற்றுக்கொள்ள அவ்வளவாக ஆர்வமில்லாதவருக்கு SLR கேமராவின் எக்கச்சக்கமான கண்ட்ரோல்கள் சலிப்பை தரலாம்.
அதுவுமில்லாமல் புகைபடக்கலையின் வெவ்வேறு அம்சங்களான ISO,shutter speed போன்றவை SLR கேமராக்களில் கொஞ்சம் அதிகமாகவே ஏற்றி இறக்கிக்கொள்ள முடியும்.ஆனால் ISO,shutter speed இவையெல்லாம் என்னவென்றே தெரியாதவர்கள்/தெரிய விருப்பமில்லாதவர்கள் இதை பற்றி எல்லாம் கவலை படாமல் point and shoot கேமரா வாங்கிக்கொள்ளலாம்.

பதிவு ரொம்ப பெருசாயிட்டே போகுது,அதனால இத்தோட நிறுத்திக்கறேன். POint and shoot கேமராக்களை விட SLR கேமராக்கள் விலையிலும் அதிகம் என்பது நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமென்றில்லை.அதுவுமில்லாமல் point and shoot போன்று இல்லாமல் SLR கேமராக்களில் லென்ஸ்,பில்ட்ர்,லொட்டு லொசுக்கு என்று கண்ணுக்கு தெரியாத கூடுதல் செலவுகள் பல உண்டு.
இப்படி SLR-க்கும் point and shoot-க்கும் வித்தியாசங்கள் நிறைய உண்டு.அதனால் பொறுமையாக பதிவை படித்து விட்டு உங்களுக்கு எந்த கேமரா வேண்டும் என்று முடிவு செய்துக்கொள்ளுங்கள்.
தவிர உங்களுக்கு இந்த தலைப்பை பற்றி வேறு எதுவும் தோண்றினால் பின்னூட்டமிடுங்கள்,கதைக்கலாம்!! :-)
வரட்டா??? :-)

படம் மற்றும் வழிகாட்டுதல்:
http://digital-photography-school.com/blog/should-you-buy-a-dslr-or-point-and-shoot-digital-camera/

24 comments:

  1. :)))

    vaangittene.. ippa enna seiyya?? :(((

    ReplyDelete
  2. தல

    பிரயோசனமுள்ள தகவல்கள், நன்றி

    ReplyDelete
  3. //
    அதுவும் தவிர point and shoot கேமராக்களில் படம் எடுக்கும் போது காட்சி LCD திரையில் தெரியும் என்பதால் view finder-இல் பார்த்து்பார்த்துபாபாபார்த்து தான் படம் எடுக்க வேண்டுமென்பது இல்லை.இதனால் உங்களால் SLR கேமராக்களில் எடுக்க முடியாத பல கோணங்களில் உங்கள் point and shoot கேமரா மூலம் எடுக்கலாம்.
    //





    இப்போது புதியாய் வரும் DSLR களிலும் பிடிக்கப் போகும் காட்சியை view finder LCDலும் பார்க்கலாம்.
    உதாரணதிற்கு canon 40D .

    ReplyDelete
  4. படம் பிடிப்பதே வேலை என்றால் எஸ் எல் ஆர்.
    வீட்டுக்காக என்றால் பாயிண்ட் அன்டு ஷூட் தான் சரியாக வரும் என்பது எண்ணம்.

    ReplyDelete
  5. DSLR=ல் வீடியோ எடுக்க முடியாது!!! அவுட் டோரில் FOCUS செய்வதற்குள் தாவு தீர்ந்துவிடும்!!! POINT & SHOOT-ற்கே என் ஓட்டு!!!!!

    ReplyDelete
  6. @ஜி
    என்சாய் மாடி!! :-D

    @கானா பிரபா
    நன்றி தல!! :-)

    @AN&
    உண்மைதான் அண்ணாச்சி!! இப்பொழுது வரும் பல கேமராக்களில் SLR மற்றும் point and shoot இன் எல்லைகள் மாறிக்கொண்டே இருக்கின்றன்.

    @வடுவூர் குமார்
    நீங்க சொல்லுறதும் சரிதான் தல!! நான் இவ்வளவு பெரிய பதிவு எழுதினா,நீங்க ஒரே வரியில முடிச்சிட்டீங்க!! :-D

    @அனானி
    //DSLR=ல் வீடியோ எடுக்க முடியாது!!! அவுட் டோரில் FOCUS செய்வதற்குள் தாவு தீர்ந்துவிடும்!!! POINT & SHOOT-ற்கே என் ஓட்டு!!!!///

    i believe in specialisation.
    வீடியோ வேணும்னா காம்கார்டர் வாங்குங்கன்னு நான் சொல்லுவேன். :-)

    வெளிப்புற படப்பிடிப்பு கூட நீங்கள் சொல்லும் அளவிற்கு அவ்வளவு கஷ்டமாக எனக்கு பட்டது இல்லை!! :-)

    ReplyDelete
  7. தல

    நல்ல தகவல்கள்...

    ReplyDelete
  8. I got a DSLR. But sometimes, I felt I must also have Point and Shoot for the following reasons
    1) compact
    2) need not read books to understand wat they are
    3) point and shoot :-) name says.

    But, to make your camera act as you want, DSLR is the best. With Point n Shoot we have to live with what we get. With DSLR, we live with what we want

    ~Truth

    ReplyDelete
  9. //DSLR=ல் வீடியோ எடுக்க முடியாது!!! அவுட் டோரில் FOCUS செய்வதற்குள் தாவு தீர்ந்துவிடும்!!! POINT & SHOOT-ற்கே என் ஓட்டு!!!!!//


    Myths..

    For videos, why do you want take video on a photo device. Can you take a video on Film camera? so never expect video on a GOOD photo CAMERA. it is like trying to take photo with video camera. both ways.. you loose quality.

    Outdoor focus ? difficulties ?

    If some one feels that they are not "FIT" to take photograph.


    Camera is a device, not a magic box. it doesnt do wonders with out proper operators.


    Photo "Pazani"

    ReplyDelete
  10. நல்ல தகவல்களுக்கு நன்றிகள்...!

    ReplyDelete
  11. மேலும் சில பயனுள்ள தகவல்கள்.அப்புறம் டிசம்பர் பூக்கள்ங்கிற மாதிரி ஏதாவது அடுத்த மாசத்துக்கு தலைப்பு ரெடியா இருந்தா என்கிட்ட மட்டும் இப்ப சொல்லுங்க!இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பொட்டிய ரெடி பண்ணனுமில்ல.

    ReplyDelete
  12. Blue looks good.
    "Blues" is the next topic? Hey topic looks good is it?

    ~Truth

    ReplyDelete
  13. பயனுள்ள தகவல்கள்.

    என்கிட்ட இருக்கிறது 'Point and Shoot' கேமராதான். இதுல இருக்குற ஒரு பிரச்சனை என்னன்னா, குறைந்த வெளிச்சத்துல எடுத்தா, படத்துல noise அதிகமாயிடுது. (உதாரணத்துக்கு இந்த படம்) இது கேமரா பிரச்சனையா? இல்ல -ல எடுத்தாலும் இப்படித்தானா?

    ReplyDelete
  14. நல்லா சொல்லியிருக்கீங்க! கேமரா என்பது குதிரை மாதிரி. உங்களால ஆளுமை செலுத்த முடியுமின்னா; கேமராவை கருவியா மட்டும் வச்சிட்டு, நீங்க முதலாளியா மாற முடிஞ்சா; experimentationக்கு நேரமிருந்தா; கண்டிப்பா DSLR. இல்லன்னா Point and Shoot is more than enough. :-)

    ReplyDelete
  15. @ஜே.கே
    நன்றி தல!! :-)

    @Truth
    Rightly said :-)
    BTW,Blue is not the next topic!! ha ha ha!! :-)

    @போட்டோ பழனி
    இதேதான் நானும் நினைக்கிறேன்!! :-)

    @நிமல்
    நன்றி நிமல் (ஒன்லி விமல்-னு மனசுல ஒலிக்கறத கட்டுப்படுத்த முடியல!! :-) மன்னிச்சுக்கோங்க!! :-D)

    @நட்டு
    ரெண்டு நாளைக்குள்ளார என்ன அவசரம்.நல்லா 15 நாள் நேரம் தரோம்.ஆற அமர படம் புடிச்சு போடுங்க!! :-)

    @வீர சுந்தர்
    point and shoot கேமராக்களின் லென்ஸ்களின் போகஸ் செய்யும் திறன் படத்தின் தரத்தை பாதிக்கும் என்றாலும். கேமராவின் ISO,பொதுவான ஒளி அளவு போன்ற பல விஷயங்களாலும் படத்தில் noise வருவதற்கு வாய்ப்பு உண்டு!! :-)

    @காட்டாறு
    சரியா சொன்னீங்க அக்கா!! :-)

    ReplyDelete
  16. @Veera Sundar:
    The concept is simple, when taking pics in dark, set high to be ISO [800 or 1600] when taking pics in bright sun light, we can have less ISO say 200. For a medium ambience, we go for ISO = 400. This can be set in SLR, but for a Point and Shoot, this is programmed. Its because you took a pic in dark, the Point and Shoot had automatically opted for a high ISO say 800 or 1600. And, the point is for a high ISO, the pic apears grainy [noise as you mentioned], as seen in your pic. While taking a pic in mobile camera, with night mode switched ON, we get pics grainy, for the reason mentioned above.
    So this is not a problem with the camera. Its working as it is supposed to work:-)

    ~Truth

    ReplyDelete
  17. // வீர சுந்தர said...

    பயனுள்ள தகவல்கள்.

    என்கிட்ட இருக்கிறது 'Point and Shoot' கேமராதான். இதுல இருக்குற ஒரு பிரச்சனை என்னன்னா, குறைந்த வெளிச்சத்துல எடுத்தா, படத்துல noise அதிகமாயிடுது. (உதாரணத்துக்கு இந்த படம்) இது கேமரா பிரச்சனையா? இல்ல -ல எடுத்தாலும் இப்படித்தானா?///



    Here is the details abt how that photo was taken. ::


    it was focussed at 5.4 mm distance actually that camera macro focus range is 1 cm.

    when there is a low light, and you set auto ISO ( which is default in point shoot most of the time ) you get noisy picture.

    Yes. some time camera also matters. here in this case i would say it was the way it taken. keep the camera bit away from the object and then try taking macro. ( i could sense bit of handshake ). you were too close to the object for macro.

    - IMHO -

    Jeeves

    ReplyDelete
  18. //இந்த பிரச்சினைகள் எல்லாம் SLR கேமராக்களில் மிகக் குறைவு. அதுவும் shutter lag அறவே இருக்காது என்றே சொல்லலாம்.//


    Range finders dont have this shutter log issue. that is the reason why range finders are still loved by photographer even today. but it has its own disadvantages. SLR the best

    ReplyDelete
  19. //வடுவூர் குமார் said...

    படம் பிடிப்பதே வேலை என்றால் எஸ் எல் ஆர்.
    வீட்டுக்காக என்றால் பாயிண்ட் அன்டு ஷூட் தான் சரியாக வரும் என்பது எண்ணம்.

    //


    right. again it depends on the interest. If i am taking my kids photo, i would always love to take it in my SLR.

    ReplyDelete
  20. //DSLR=ல் வீடியோ எடுக்க முடியாது!!! அவுட் டோரில் FOCUS செய்வதற்குள் தாவு தீர்ந்துவிடும்!!! POINT & SHOOT-ற்கே என் ஓட்டு!!!!!//


    Anony :


    As surveysan said, i would go with specialisation of product. I cant buy Palmpad and expect PC quality in it right ?.


    High end point and shoot cameras comes with very good Video capturing and Still capturing abilities.


    Well well... it is based on your need and interest.

    ReplyDelete
  21. //Truth said...

    I got a DSLR. But sometimes, I felt I must also have Point and Shoot for the following reasons
    1) compact
    2) need not read books to understand wat they are
    3) point and shoot :-) name says.

    But, to make your camera act as you want, DSLR is the best. With Point n Shoot we have to live with what we get. With DSLR, we live with what we want

    ~Truth//



    well said. i do feel some time point and shoot is must on few times. but SLR is the best :) having point and shoot is optional

    ReplyDelete
  22. //Camera is a device, not a magic box. it doesnt do wonders with out proper operators.


    Photo "Pazani"//



    i agree with you. :)

    ReplyDelete
  23. கேமரா வாங்குவது பற்றி அறிவுரை கேட்கும் நண்பர்களுக்கு பண வசதி, பயன்பாடு (எதற்கு, எங்கே, எப்போது), புகைப்படக் கலையில் உள்ள ஆர்வம், நீண்ட காலத்திட்டம், ஏற்கனவே கேமரா பாவித்திருந்தால் அதுபற்றிய விபரம், விருப்பப்படும் பருமனும் நிறையும், கேமராவில் எதிர்பார்க்கும் வசதிகள் (feature set), எனப் பல விடயங்களை கேட்டறிந்த பின்பே எனது கருத்தைக் சொல்லுவேன்.

    மேலும் எனது பார்வையில் டிஜிட்டல் கேமராக்களை மூன்று வகையாக வகுக்கலாம்.
    1. DSLR Cameras
    2. High zoom (/Advanced) Point and Shoot Cameras
    3. Snapshot Cameras (/Pocket size Point and Shoot Cameras)
    ஒவ்வொன்றினதும் வசதிகளையும் மட்டுப்பாடுகளையும் பற்றிக் கூறி வாங்குபவர் இவற்றில் தனக்கு பொருத்தமானது எது என்பதனை முதலில் தெரிவு செய்ய விட்டுவிடவேண்டும். அதன் பின்பு குறிப்பாக ஏதாவது ஒரு கேமராவை (make and model) தெரிவு செய்யலாம்.

    எப்போதுமே கேமரா வாங்குபவர் தெரிவு செய்த கேமராவை சில தடவையாவது கையாண்டு பார்த்து (கடையில் / அல்லது ஏற்கனவே வைத்திருக்கும் நண்பர்களிடம்), சில படங்களை எடுத்து திருப்தியாயிருந்தால் மட்டுமே வாங்க வேண்டும்.

    ReplyDelete
  24. I have read this entry and comments several times. I think i shall prefer PS camera now since, i have to learn more.
    - GADHA..-

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff