Tuesday, November 4, 2008

இந்தப் படம் எடுப்பது எப்படி? - அமல்

12 comments:
 
PiT போட்டியின் வெற்றிப் படத்தை க்ளிக்கியவர்கள், அந்தப் படத்தை எப்படி எடுத்த்தார்கள் என்று சிறு குறிப்பு வரையச் சொல்லியிருந்தோம்.
அந்த வரிசையில், சென்ற மாத போட்டியில் வெற்றி பெற்ற, அமல், தனது 'விளம்பர' புகைப்படம் எடுக்கப்பட்ட முறையை கீழ சொல்லியிருக்காரு.

அவர் பக்கத்தில் வெளியிடப்பட்ட பாடத்தின் மீள் பதிவு இது.

-------- ~~~~~~~~~~ -------- ~~~~~~~~~~ -------- ~~~~~~~~~~
இந்த மாத போட்டி அறிவிப்பு வந்த உடனேயே, நம்ம விளம்பர மாடல் மது பாட்டில்தான் என்று முடிவாகிருச்சு. இந்த வகை விளம்பரங்கள் அனைத்துமே diffused lighting பயன்படுத்தித்தான் எடுப்பாங்க, ஆனால் அந்த மாதிரி சமாச்சாரம் எதுவும் நம்ம கிட்ட இல்ல. என்ன பண்ணலாம்னு வலையில் மேய்ந்ததில் சில பயனுள்ள தகவல்கள் கிடைத்தது. கடைசியாக bounce lighting பயன்படுத்தலாம் என்று ஒரு வெள்ளை அட்டையை build-in flash-ற்கு முன்னால் 45 டிகிரி கோணத்தில் பிடித்து எடுத்ததால் lighting நன்றாகவே diffuse ஆகி வந்தது. அது மட்டும் இல்லாமல் அறையின் ஓர் மூலையில் படம் எடுத்ததால் சுவர்களில் ஒளி நன்றாக bounce ஆனது.


ஒரு மேசையை சுவற்றிலிருந்து 4 அடி தள்ளி நகர்த்தி, கறுப்பு நிற விரிப்பு விரித்து, அதன்மேல் ஒரு கண்ணாடி பலகையை வைத்து (அப்படித்தான் அனைத்துச்சாமான்களின் பிரதிபலிப்பு கீழே கிடைத்தது), மது பாட்டில், மார்ட்டினி க்ளாஸ், ஆரஞ்சு, செர்ரி, ஐஸ்கட்டிகள் எல்லாவற்றையும் நோக்கத்திற்கு பரப்பி வச்சாச்சு. கீழே இருக்கின்ற வரைபடத்தில் உள்ளதுபோல், கறுப்புப் பின்னணிக்கு இரண்டு கறுப்பு பனியன்களைத் தொங்கவிட்டாச்சு.



இப்பப் படம் எடுத்துப் பார்த்தா ஏதோ குறையிற மாதிரி ஒரு எண்ணம். அதனால் செர்ரிய மேலே இருந்து தூக்கிப்போட ஆள் தயார் செய்து தூக்கிப்போட சொல்லிகிட்டே இருக்கவேண்டியதுதான். நீங்க செர்ரி நீரைத்தொடும் கணத்தில் க்ளிக்கிகிட்டே இருக்க வேண்டியதுதான். Multiple Exposure கூட பயன்படுத்தலாம். என்ன ஒரு விசயம்னா, நமக்கு வேண்டிய நீர்த்தெறிப்பு முதல் ஷாட்டிலயும் வரலாம் இல்ல கொஞ்சம் நேரங்கழிச்சும் வரலாம். எனக்கு ஒரு 4 மணி நேரம் கிடைத்து வந்தது:-)

அதில் சில.



முதலில் வோட்கா என்றதும் அதன் நிறம் இல்லாத தன்மை நினைவிற்கு வந்ததால் வெள்ளைப் பின்னணியில் எடுக்கலாம் என்று ஆரம்பித்து கடைசியில் கறுப்புப் பின்னணியாகிவிட்டது. போட்டிக்கு அளித்த படம் எடுத்ததிலேயே கடைசி படம்.

-------- ~~~~~~~~~~ -------- ~~~~~~~~~~ -------- ~~~~~~~~~~

நீங்களும், உங்கள் PiT வெற்றிப் படத்தின், செய்முறையை, பதிவேற்றினால், பலருக்கும் பயனுடையதாய் இருக்கும். நன்றி.

அமல், பாடத்துக்கு நன்றி!

12 comments:

  1. டாப்புடக்கரு அமல்! நன்றி :)

    ReplyDelete
  2. பொறுமையா எடுத்து செஞ்சதுக்கான பலன் அமல்.


    உங்களின் அசாத்திய பொறுமைக்கு எங்கள் வணக்கங்கள்.

    ReplyDelete
  3. இன்னாது? நாலு மணி நேரமா? இருந்தாலும் ரொம்ப பொறுமைங்க உங்களுக்கு;) உங்களை விட அந்த செர்ரிய மேலே இருந்து தூக்கிப்போட்ட ஆளுக்கு பொறுமை ஜாஸ்தி;)

    நீங்க பட்ட கஷ்டத்துக்கு பலன் கிடைச்சிடுச்சு! ரொம்ப அருமையா விளக்கி இருக்கிறீர்கள். நன்றி!

    ReplyDelete
  4. இதுக்கு பரிசு கெடைச்சே ஆகணும். இவ்வளவு professional-a எடுத்ததற்கு பலன் கெடைச்சிருக்கு

    ReplyDelete
  5. படம் மிக அருமை. படம் எடுக்கப்பட்ட விதத்தை விவரித்து இருப்பதும் அருமை. ஆனால், தங்கள் விபரத்தில் படம் எடுக்கப்பட்ட அறையின் வெளிச்சம் பற்றி விபரம் இல்லை என்பது சிறு வருத்தம். அறையின் வெளிச்சம் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி தகவல் தந்தால் பாராட்டுக்குரியதாக இருக்கும்.

    நண்றி,
    வெண்ணிலா மீரான்.

    ஒரு கேள்வி: இந்த தளத்தில் நானும் பதிவுகள்/படங்கள் அனுப்ப வேண்டுமென்றால் என்ன/எப்படி செய்ய வேண்டும்..?
    my id: meera2801@gmail.com

    ReplyDelete
  6. ////இந்த தளத்தில் நானும் பதிவுகள்/படங்கள் அனுப்ப வேண்டுமென்றால் என்ன/எப்படி செய்ய வேண்டும்..?
    ////

    Meera, when we conduct contests, we will post instructions for sending pics.

    If you want to write 'content', please let us know the details by emailing photos.in.tamil at gmail.com .

    ReplyDelete
  7. I'm more interested in drinking that vodka, than looking at this photo!

    oh btw, the photo was awesome! ;-)

    ReplyDelete
  8. அமல் சார்,

    படம் அருமை.நான்கு மணிநேரம் ஐஸ் கரையாமல் இருக்க என்ன செய்தீர்கள்?

    எங்களது பதிவை அனுப்ப என்ன செய்ய வேண்டும்?
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  9. அமல் சார்,

    புகைப் படம் மிக அருமை. நான்கு மணிநேரம் ஐஸ் கரையாமல் இருக்க என்ன செய்தீர்கள்.

    நாங்களும் புகைப்படம் அனுப்ப என்ன செய்ய வேண்டும்.
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  10. படம் நன்றாக உள்ளது.

    கேமரா பற்றி சொல்லுங்கள். என்ன கேமரா - எஸ்-எல்-ஆர்?, ஆபர்சர் மற்றும் ஸட்டெர் ஸ்பீட் என்ன வைத்தீர்கள்?

    நன்றி.

    ReplyDelete
  11. good narration. Let me try

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff