Genius is 99% perspiration and 1% inspiration அப்படின்னு ஆங்கிலத்தில் ஒரு சொல்லாடல் இருக்கிறது. அப்படி சொன்னவரு விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன். இந்த கருத்து புகைப்படக்கலை கத்துக்கறவங்களுக்கும் பொருந்தும்ங்க. என்ன ஒரே ஒரு வித்தியாசம் புகைப்படக்கலையில் வெற்றி இல்ல தேர்ச்சி என்பது 99 சதவீதம் ஊக்கத்தினாலும்(inspiration) 1 சதவீதம் உழைப்பினாலும்(perspiration) ஆனது. புகைப்படக்கலையில் வெற்றி பெற உழைப்பை விட ஊக்கம் தான் மிக முக்கியமான காரணிங்கறது என்னோட எண்ணம். இங்கே வெற்றி என்று சொல்றது, படிக்கிறவங்க எப்படி எடுத்துக்கறாங்கங்கிறதை பொறுத்தது. அந்த விவாதம் இப்போ நமக்கு வேணாம். இந்த ஊக்கம் எங்கேருந்து எப்படி கெடைக்கும்? ரொம்ப சுலபம்ங்க. நம்மளை நாமே ஊக்கப்படுத்திக்க வேண்டியது தான். அட போங்க பாஸ்! உபயோகமா எதோ சொல்லப் போறீங்கன்னு பார்த்தா புகைப்படக்கலை கத்துக்க சுயமா ஊக்கப்படுத்திக்கனுமாமில்ல? சொந்தமா ஊக்கப்படுத்திக்கனும்னா இவ்வளோ நாளைக்கு நாங்களே பண்ணியிருக்க மாட்டோமா? எவ்வளவு முயற்சி பண்ணாலும் நான் எடுக்கற படம் எனக்கே திருப்தியா அமைய மாட்டேங்குது...ஒரு போட்டியில பங்கெடுத்துக்கிட்டேன்னா எத்தனை முறை முயற்சி செஞ்சாலும் முதல் பத்துல கூட என் படம் வர மாட்டேங்குது. நீங்க சொல்றதெல்லாம் வெறும் jargon மாதிரி தான் தெரியுது. சுயமா ஊக்கப்படுத்திக்கிறதை தவிர எதாவது வேலைக்காவற உருப்படியான வழியைச் சொல்லுங்க அப்படின்னு படிக்கிற நீங்க சொல்லலாம். அப்படி சொன்னீங்கன்னா அப்போ கண்டிப்பா மேல படிங்க. நம்மளை மாதிரி ஆளுங்களுக்காகத் தான் இந்த பதிவு.
பாஸ்! நீங்க நினைக்கிறது எல்லாமே நியாயம் தான். நம்மள்ல பல பேர் ஒரு நிமிஷத்துல எதோ ஒரு ஆசையில ஒரு உந்துதல்ல புதுசா எதையாச்சும் ஒன்னை ஆரம்பிப்போம். அதுக்கப்புறம் அதை தொடர முடியாம தவிப்போம். ஆரம்பிச்ச விஷயத்துக்கு காசும் நெறைய செலவழிச்சிருப்போம். காசையும் செலவழிச்சிட்டு தொடரவும் முடியலையேன்னு குற்றவுணர்வால் தவிப்போம். உதாரணத்துக்குச் சொல்லனும்னா உடம்பு குண்டாவுது, நாளை காலையிலிருந்து ஜாக்கிங் போகலாம்னு ஒரு உந்துதல்ல 3000 ரூபாய்க்கு டிராக் சூட், 2000 ரூபாய்க்கு ரீபாக் ஷூ, ஜாக்கிங் பண்ணும் போது களைப்பு தெரியாம இருக்க பாட்டு கேக்கலாம்னு ஒரு ஐயாயிரத்தைப் போட்டு ஐபாட் இதெல்லாத்தையும் வாங்கி வச்சிட்டு காலைல அஞ்சரை மணிக்கு அலாரம் அடிக்கும் போது அதை ஒவ்வொரு பதினஞ்சு நிமிஷத்துக்கும் அணைச்சிட்டு இழுத்து போத்திட்டு தூங்குவோம். வரிக்கு வரி சேம் ப்ளட் சொல்லறீங்களா? வெல்கம் டு தி சுய முன்னேற்ற புத்தகத்தைத் தலைக்கு வச்சு தூங்குவோர் க்ளப். இதே உதாரணம் ஒரு விஷயத்தைத் தொடங்கிட்டு அதை தொடர முடியாம தவிக்கிறவங்க எல்லாத்துக்கும் பொருந்தும். ஆனா மத்த விஷயங்களை விட புகைப்படக்கலையைக் கத்துக்கறதுக்குச் சொந்தமா ஊக்கம் கொடுத்துக்கறது அதாவது inspire ஆகறது ரொம்ப சுலபம். இதையெல்லாம் சொல்லறதுக்கு எனக்கு என்ன தகுதி இருக்குன்னு கேக்கலாம். ஏன்னா பேசிக்கலி ஐ ஆம் எ சோம்பேறி. இந்தப் பதிவை எழுதறதுக்கே பல நாள் எடுத்துக்கிட்டேன். அதோட மேல சொன்ன எல்லா விஷயமும் எனக்கும் பொருந்தும். இன்னும் கத்துக்குட்டியான என்னை மாதாமாதம் நடக்கும் புகைப்படப் போட்டியில் பங்கெடுத்துக் கொள்ள முடியாத படி ஆப்பு வைத்து PiT ஆசிரியர் குழுவில் சேர்த்துக்கிட்ட காரணம் இதையெல்லாம் நான் எடுத்துச் சொல்லுவேன்னு தான் இருக்குமாக்கும் :). நான் இதுவரை புகைப்படக்கலையில் கத்துக்கிட்டதெல்லாம் An&, ஜீவ்ஸ் என் கல்லூரி நண்பன் திருமுருகன் இவங்களெல்லாம் குடுத்த ஊக்கத்தின் காரணமாகத் தான்.
புகைப்படக்கலையில் சீனியர்கள் சிலரின் ஊக்கத்தினால் நான் கத்துக்கிட்ட சில விஷயங்களைப் பத்தி இந்தப் பதிவுல சொல்லறேன். புகைப்படம் எடுக்கற டெக்னிக்கைப் பத்தி நான் ஒன்னும் சொல்லப் போறதில்லை.
1. நல்லது எதுன்னு தெரிஞ்சிக்கனும்
திரைப்பட இசையமைப்பாளர்களைப் பேட்டி எடுக்கும் போது "உங்களுக்கு எந்த இசையமைப்பாளரின் இசை பிடிக்கும்"னு கேட்டா என்ன பதில் சொல்லுவாங்கன்னு கவனிச்சிருக்கீங்களா? "முன்னோர்களின் இசை"ன்னு ஒரு politically correct பதிலையோ "நான் அடுத்தவங்க இசையைக் கேக்கறதில்லை"ன்னு ஒரு ஓப்பனான பதிலோ வரும். அதுக்கு காரணம் அடுத்தவங்க இசையைக் கேட்டா அந்த இசையோட தாக்கம் நாம உருவாக்கப் போற இசையில வந்துடுமேங்கிற எண்ணம் தான். ஏனென்றால் இசையமைப்பது creativeஆன ஒரு வேலை. புகைப்படம் எடுப்பதும் creativeஆன வேலை தான். ஆனா நல்ல புகைப்படம் எடுக்க கத்துக்கனும்ங்கிற ஆர்வம் உள்ளவர்கள் இசையமைப்பாளர்களோட உதாரணத்தைப் பின்பற்றுனா வேலைக்காகாது. "நல்ல புகைப்படம்"னு சொல்றேனே அதை அடையாளம் கண்டுகொள்வது எப்படி? ஏற்கனவே மத்தவங்க எடுத்து வச்சிருக்கற புகைப்படங்கள் இருக்குமில்லையா அதை பாக்கனும். இதனால் பலன் இருக்குமான்னு கேட்டீங்கன்னா என் அனுபவத்துலேருந்து கண்டிப்பா உண்டுன்னு தான் சொல்வேன். மற்ற புகைப்படங்களோட தொடர்ச்சியா நம்ம படங்களை ஒப்பிட்டுப் பாத்துக்கிட்டே இருந்தோம்னா நம்மளோட லெவல் என்னன்னு நமக்கு தெரியும், அதோட கண்டிப்பா நாளடைவுல நாம எடுக்கிற படங்கள்ல நல்ல மாற்றம் தெரியும். நிற்க. புதுசா புகைப்படம் எடுக்க வந்தாலும் ஏற்கனவே படம் வரையற ஆற்றல் இருக்கறவங்களோட புகைப்படங்களைப் பாத்தா ரொம்ப சூப்பரா இருக்கும். ஏன்னா புகைப்படக்கலையில் மிக முக்கியமான கூறுகளில் ஒன்றான காட்சியமைப்பு பத்தி அவங்களுக்கு ஏற்கனவே தெரிஞ்சிருக்கும். எந்த காட்சியை எப்படி படமா வரைஞ்சா நல்லாருக்கும்ங்கிற அனுபவம் அவங்களுக்கு ஏற்கனவே இருக்கும். அதையே சுலபமா உபயோகிச்சு அருமையான படங்களா எடுப்பாங்க. நான் மேல சொல்லிருக்கற உத்தி இந்த மாதிரியானவங்களுக்கில்லை. நம்ம படம் நல்லாருக்கா நல்லாருக்கான்னு எப்பவும் ஒரு சந்தேகம் இருக்கும் பாருங்க சில பேருக்கு? என்னைப் போல் ஒருவனான அந்த மாதிரியானவங்களுக்குத் தான்:) சரி. அடுத்தவங்க எடுத்து வச்சிருக்கற நல்ல படங்களைப் பார்ப்பது எப்படி? www.flickr.com னு ஒரு வலைதளம் இருக்கு கேள்விபட்டுருக்கீங்களா? உலகின் தலைசிறந்த புகைப்படக்கலை வல்லுநர்கள் பலரின் படங்களும் அங்கே இருக்கு. ஒரு யாஹூ ஐடி இருந்தா போதும், நீங்க கூட அதுல இலவசமா ஒரு கணக்கைத் துவங்கிடலாம். ஒரு நாளிலேயே பல லட்சம் படங்கள் அத்தளத்தில் வலையேற்றப்படுகின்றன. அவ்வளவு படங்களிலிருந்து ஒரு நாளைக்கு 500 படங்களைத் தேர்வு செய்து அவற்றை ஆர்வத்தைத் தூண்டும் புகைப்படங்கள் என்று வகைப்படுத்துகிறார்கள். இத்தகைய படங்களை வகைப்படுத்துவதற்காக(Categorising) அவர்கள் பயன்படுத்தும் சொல் "Interestingness" என்பது. இப்படங்களை 'Explore' எனும் பக்கத்தில் நமது பார்வைக்கு வைக்கிறார்கள். அந்தப் படத்தின் மீது க்ளிக் செய்தால் அப்படத்தினை எடுத்தவரின் சொந்த ஃப்ளிக்கர் வலைப்பக்கத்துக்கு நம்மை இட்டுச்செல்லும். கீழே எக்ஸ்ப்ளோர் பக்கத்தில் இடம்பிடித்த ஒரு அருமையான சில்லுவெட் படம்.
http://www.flickr.com/explore
ஒரு நாளைக்கு 500 படங்களைத் தேர்ந்தெடுப்பார்கள் என்று சொன்னேன் இல்லையா? ஃப்ளிக்கர் தளத்தில் 'Last 7 days interesting' என்ற சுட்டியைச் சுட்டினால் கடந்த 7 நாட்களில் "Interestingness"இல் பகுக்கப்பட்ட, 500 Explore படங்களில் தேர்வு செய்யப்பட்ட ஒரு சிலதை நமது பார்வைக்குத் தருவார்கள். அதில் கீழே இருக்கும் 'Reload' எனும் பொத்தானை அழுத்தினால் ரேண்டமாக வேறு சில படங்கள் வலைப்பக்கத்தில் தெரியும்
http://www.flickr.com/explore/interesting/7days
இப்படங்களில் ஒரு சிலவற்றின் தேர்வு குறித்து ஒரு சிலருக்கு மாற்று கருத்துகள் இருக்கலாம். அதாவது இந்தப் படம் 500இல் ஒன்னா தேர்வாகற அளவுக்கு ஒன்னும் அவ்வளவு சிறப்பா இல்லையேன்னு. ஃப்ளிக்கர் காரர்கள் இப்படங்களை ஒரு அல்காரித்தத்தைக் கொண்டு ஆட்டோமேட்டிக்காகத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனாலும் பெரும்பாலான படங்கள் உயர்தரமான படங்களாகத் தான் இருக்கும். நான் தினமும் ஒரு பத்து நிமிஷம் Last 7 days interesting படங்களைப் பார்ப்பேன். எந்த மாதிரி படங்கள் எடுக்கலாம் என்று வெகுவாக ஐடியாக்கள் கிடைக்கும். இந்த மாதிரியான படங்கள் எடுத்தது எப்படி? எப்படிங்கிற தேடல் கண்டிப்பா ஆரம்பமாகிடும்.
2. உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்
Explore படங்களைப் பாத்தாச்சு. பாத்துட்டு அப்படியே வுட்டுடறதா? அந்த மாதிரி படங்களை நாமும் எடுக்க முயற்சி செய்யனும். Eiffel Tower படத்தைப் பாத்தேன், அந்த மாதிரி படம் எடுக்க நான் எப்படி பாரிசுக்குப் போறதுன்னு லந்து பண்ணப்பிடாது. Eiffel Tower படத்தை பல பேரும் எடுத்துருப்பாங்க. ஆனா அது Exploreஇல் இடம்பிடிக்குதுன்னா அதுக்கு எதாச்சும் ஒரு காரணம் இருக்கும். அது என்னன்னு கண்டுபிடிக்கனும். அதிகம் பேர் பார்த்திராத கோணத்தில் ஈஃபிள் கோபுரத்தை அவர் படம்பிடித்திருப்பார். அதே மாதிரி நம்ம கோயில் கோபுரங்களில் ஒன்றை எடுத்தா எப்படி இருக்கும்னு முயற்சி செஞ்சி பாக்கணும். அப்புறம் இன்னொரு முக்கியமான குறிப்பு. ஒரு காட்சியை ஒரே ஒரு படம் எடுத்துட்டு விட்டுடக் கூடாது. பல கோணங்களிலும் பல படங்கள் எடுக்க வேண்டும். ஒரு படத்துல ஃபோகஸ் சரியா இருக்காது, இன்னொன்னுல வெளிச்சம் அதிகமா விழுந்துருக்கும், இப்படின்னு பல படங்கள் சொத்தையா தான் வரும். ஆரம்ப காலங்களில் ஒரே காட்சியை இருபது படம் எடுத்தா அதுலே ஒன்னு தான் கொஞ்ச சுமாரா வரும். அதனால மனம் தளரப் படாது. எல்லாருக்கும் ஆரம்பத்துல அந்த பிரச்சனை இருக்கும் தான். ஆனாலும் ஊக்கம் இருந்துச்சுன்னா இந்த ஒரு சதவீத உழைப்பு பெருசாத் தெரியாது.
"ஐ நல்லாருக்கே" அப்படின்னு மேல சொன்ன மாதிரி எக்ஸ்ப்ளோர் படங்களை க்ளிக் செய்து படம் எடுத்தவரின் வலைப்பக்கத்துக்குப் போனீங்கன்னா அவர் எந்த கேமராவை உபயோகிச்சு படம் எடுத்துருக்காருன்னு தெரிஞ்சிக்கலாம். இதுவும் படமெடுத்தவர் காட்ட விருப்பப்பட்டாத் தான் தெரியும். ஆனா பெரும்பாலானவங்க அதை மறைச்சிருக்க மாட்டாங்க.
நீங்க ரொம்ப ஆசையா பாத்த படம் Nikon D80 அல்லது Canon EOS 50D மாதிரியான உயர் ரக DSLR கேமராக்களைக் கொண்டு எடுக்கப்பட்டது எனத் தெரிந்து விரக்தியின் உச்சத்துக்கே போயிட்டீங்களா? DSLRஇல் எடுக்கப்பட்ட படங்களை நம்முடைய பாயிண்ட் அண்ட் ஷூட் கேமராவிலேயே எடுக்க முயற்சி செய்ய வேண்டும். அப்போ தான் நம்ம கேமராவால் என்ன முடியும் என்று தெரிந்து கொள்ள முடியும். DSLRஆல் மட்டும் தான் இத்தகைய படங்கள் எடுக்க முடியும், நம்ம கேமராவால் இதெல்லாம் எடுக்க முடியாது என நாமாகவே முடிவு செஞ்சிக்கக் கூடாது. உங்க கேமராவால் என்ன முடியும் என்பதையும் கண்டு கொள்ளவும் ஃப்ளிக்கர் தளம் உதவி செய்கிறது. Camera Finder என்ற பக்கத்தில் உங்களிடம் உள்ள கேமரா மாடல் ஃப்ளிக்கர் தளத்தில் எத்தனை பேரால் உபயோகிக்கப்படுகிறது என்றும் தெரிந்து கொள்ளலாம். உதாரணத்திற்கு உங்களிடம் Canon கேமரா இருக்கிறதென்றால், Canon மாடல்களிலேயே உங்கள் மாடலுடைய ரேங்க் என்னன்னும் தெரிஞ்சுக்கலாம்.
http://www.flickr.com/cameras
Canon Powershot A100 என்ற மாடல் 2002ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு மாடல். 175 கேனான் மாடல்களில் இக்கேமரா 143ஆம் இடம் தான் பிடித்துள்ளது.
http://www.flickr.com/cameras/canon/powershot_a100
இக்கேமராவைக் காட்டிலும் அதிக உபயோகங்களையும்(features) உயர்ந்த தொழில்நுட்பத்தையும் கொண்ட கேமராக்கள் இப்போது சந்தைக்கு வந்து விட்டன. ஆயினும் இக்கேமராவால் எடுக்கப்பட்ட Interesting படங்களைப் பாருங்கள். இந்த மாதிரியான படங்களையாச்சும் நாம எடுத்துருக்கோமான்னு நம்மளை நாமளே கேட்டுக்கனும். ஆம்னு பதில் வந்துச்சுன்னா, நீங்க புகைப்படம் எடுக்க ஆரம்பிச்சு நல்லா வளர்ந்துட்டீங்கன்னு அர்த்தம். DSLR எனும் அடுத்த கட்டத்துக்கு நீங்க தாராளமாகப் போகலாம். இல்லைங்கிற பதில் வந்துச்சுன்னா நீங்க உங்க கேமராவோட முழு பலத்தையும் சரியாத் தெரிஞ்சுக்கலைன்னு அர்த்தம். முதல்ல உங்க கேமராவோட மேனுவல் புத்தகத்தைப் படிங்க. உங்க கேமராவோட முழுத் திறனையும் கண்டு கொள்ளுங்கள். நிறைய படங்களை எடுங்கள். டிஜிட்டல் தானே? காசா பணமா? புடிக்கலைன்னா சுலபமா டெலீட் செஞ்சிடலாம். 100 படம் எடுத்து ஒன்னு தான் உங்க மனசுக்குப் புடிச்ச மாதிரி வந்திருக்கிறது என்றாலும் கவலை படாதீங்க. அதுவும் ஒரு நல்ல துவக்கம் தான். பத்தாயிரம்-பதினைஞ்சாயிரம் போட்டு கேமரா வாங்கி வேஸ்டா போச்சேங்கிற குற்றவுணர்வுலேருந்து முதல்ல விடுபடுங்க.
இன்னும் சில குறிப்புகளோட இன்னொரு பதிவுல உங்களைச் சந்திக்கிறேன். வணக்கம்.

நன்றி கைப்புள்ள உங்களின் தன்னம்பிக்கையோடு அமைத்திட்ட வரிகள் அனைத்து ஒவ்வொன்றும் சர்க்கரையாய் இறங்கியது மனதில்...
ReplyDeleteசில புத்தகங்கள் சாதிக்காததது சில வரிசாதிக்கும் என்று கூற்றுக்கேற்ப உங்களின் மிக அழுத்தமான உரை மிக அற்புதமாக எங்களுள் புதிய விதை விதைத்திருக்கிறது...
அது நிச்சயம் மரமாகி பூ பூத்து காய்காய்த்து காயாகி கனியாகும் நேரம் வரும்...
அதற்கு சில காலம் பிடிக்கும் நானும் இது போல உபயோகமான தொழில்நுட்பத்துடன் அனைவருக்கும் அளிப்பேன் உறுதியான நம்பிக்கையுடன்
தன்னநம்பிக்கையுடனும்
கமலகண்ணன்...
//வரிக்கு வரி சேம் ப்ளட் சொல்லறீங்களா? வெல்கம் டு தி சுய முன்னேற்ற புத்தகத்தைத் தலைக்கு வச்சு தூங்குவோர் க்ளப்./
ReplyDeleteஉள்ளேன் அய்யா! :)
// ஒரே காட்சியை இருபது படம் எடுத்தா அதுலே ஒன்னு தான் கொஞ்ச சுமாரா வரும். அதனால மனம் தளரப் படாது. எல்லாருக்கும் ஆரம்பத்துல அந்த பிரச்சனை இருக்கும் தான். ஆனாலும் ஊக்கம் இருந்துச்சுன்னா இந்த ஒரு சதவீத உழைப்பு பெருசாத் தெரியாது. /
ReplyDeleteஎடுத்த படங்களை வைத்து பார்த்ததில் உணர்கிறேன்!
இன்னும் நிறைய எடுக்கவேண்டும் ஒரெ காட்சி பொருளானாலும் பலவேறு விதமான காம்போசிஷனில் அப்படின்னு ஒரு எண்ணம் வந்திருக்கு!
ஊக்கம் அதிகம் கொடுக்கும் உங்களின் பதிவுக்கு நன்றி பாஸ் :)
Nice start
ReplyDeletesame blood same blood same blood.
ReplyDeletegood post :)
அந்த perspiration/inspiration வாக்கியத்தை சொன்னது எடிசன் :)
ReplyDelete//அதற்கு சில காலம் பிடிக்கும் நானும் இது போல உபயோகமான தொழில்நுட்பத்துடன் அனைவருக்கும் அளிப்பேன் உறுதியான நம்பிக்கையுடன்
ReplyDeleteதன்னநம்பிக்கையுடனும்
கமலகண்ணன்...//
மிக்க நன்றி கமலக்கண்ணன் சார். உங்களோட வார்த்தைகள் நான் தெரிஞ்சிக்கிட்டதை எல்லாரோடயும் பகிர்ந்துக்கனும்ங்கிற ஊக்கத்தை எனக்கு கொடுத்தது. வாழ்த்துகள்.
//எடுத்த படங்களை வைத்து பார்த்ததில் உணர்கிறேன்!
ReplyDeleteஇன்னும் நிறைய எடுக்கவேண்டும் ஒரெ காட்சி பொருளானாலும் பலவேறு விதமான காம்போசிஷனில் அப்படின்னு ஒரு எண்ணம் வந்திருக்கு!
ஊக்கம் அதிகம் கொடுக்கும் உங்களின் பதிவுக்கு நன்றி பாஸ் :)//
அதே தான் பாஸ். ஜீவ்ஸ் போன்ற பெரிய தலைகளோட டிரெய்னிங்ல பட்டை தீட்டப் பட்டுக் கொண்டிருப்பவர்கள் நம்ம ரெண்டு பேரும்...அது நம்ம பாக்கியம்.
:)
//Nice start//
ReplyDelete//same blood same blood same blood.
good post :)//
நன்றி An& மற்றும் சர்வேசன்.
:)
//அந்த perspiration/inspiration வாக்கியத்தை சொன்னது எடிசன் :)//
ReplyDeleteசுட்டிக் காட்டியமைக்கு நன்றி CVR. இப்போது திருத்திவிட்டேன்.
:)
நல்ல சொல்லியிருக்கிறிர்கள் பாஸ். நம்ம http://www.flickr.com/photos/rspl பார்த்துட்டு உங்க கருத்தை சொல்லுங்க.
ReplyDeleteஉங்க படங்கள் எல்லாம் ரொம்ப அருமையா இருக்குங்க. குறிப்பா இந்த படம் ரொம்ப அழகு.
ReplyDeletehttp://www.flickr.com/photos/rspl/3817158199/
இரவு காட்சிகள் பலவும் ரொம்ப அழகா இருக்கு.
// வெல்கம் டு தி சுய முன்னேற்ற புத்தகத்தைத் தலைக்கு வச்சு தூங்குவோர் க்ளப்.//
ReplyDeleteநானும் அதுல ஒரு மெம்பருங்க
தூங்குவோர் கிளப்
ஈரோடு கிளை
அருமையான ஆரம்பம் கைப்ஸ். அடுத்த பகுதிக்கு ஆவலுடன் காத்திருக்கோம்.
ReplyDelete