இந்த மாதம் சில்லவுட் ன்னு அறிவித்திருந்தோம். கல்லாவுலே மொத்தம் 58 படம் சேர்ந்திருக்கு. அதென்னமோ தெரியலை.. பரீஷைக்கு முந்தின வாரம் தான் எல்லார் வீட்டிலேயும் (படிக்கிர வயசிலே பசந்த இருக்காங்கன்னு சொல்லரா மாதிரி) சொல்லி வச்சா மாதிரி ராத்திரி 2 – 3 மணிக்கெல்லாம் அலாரம் கேக்கும். அதே மாதிரி பிட்டிலேயும் கடைசீ 72 மணி நேரத்திலே தான் அதிகப்படியான சப்மிஷண் வந்திருக்கு. இதிலே இருந்து என்ன தெரியுதுன்னா.. போட்டி அறிவிச்சதும், பரண்லே இருந்து தூசு தட்டாம, எல்லாரும் ரூம் போட்டு யோசிச்சு, வேலை மெனக்கெட்டு க்ளிக்கி அனுப்பியிருக்கீங்கன்னு. பிட் போட்டியிலே பிரைஸ் வாங்கிரது ஒரு பக்கம் இருந்தாலும்.. போட்டிக்கு படம் அனுப்பணும்ன்னு வரும் போது.. தனிப்பட்ட முயர்ச்சி எடுக்கறீங்க பாருங்க.. இதிலேயெ நம்ம பசங்க ஜெயிச்சிட்டாங்க.
இன்னையோட போட்டிக்கான படம் அனுப்ப வேண்டிய கெடு முடியுது. இந்த முறை அனுப்ப மறந்து போனவங்க அடுத்த 1 – 15 தியதியை செல்பேசியில் ரிமைண்டர் போட்டு வச்சுக்குங்க. ( நோட்டு புக்கை நாய் கவ்விடுச்சுன்னு சொல்லரா மாதிரி செல் பேசி இல்லங்கிர கதை எல்லாம் இங்கே செல்லாது ).
போட்டிக்கு படம் அனுப்பின 58 பேருக்கும் ஒரு வேண்டுகோள். உங்களுக்கு நேரம் இருக்கும் போது, படத்தை எங்கே & எப்போ & எந்த கேமேரா ( Location , Time & Camera Model ) எடுத்தீங்கன்னு சொன்னா நல்லா இருக்கும். ' நல்ல' கேமரால தான் "சூப்பர்" படம் எடுக்கலாம்ங்கிர எண்ணம் பல பேருக்கு இருக்கு. " சூப்பர் " படங்களில் கேமராவின் பங்கு இருந்தாலும், குறிப்பிட்ட காட்சியை பார்ப்பவர் கண்களிலே தான் படத்தின் அம்சம் நிறைஞ்சு இருக்கு. இவர் பார்ப்பதை நமக்கெல்லாம் எடுத்துக்காட்டும் கருவி தான் கேமரா.
மத்தபடி எதுவும் சொல்லரதுக்கில்லை. எல்லாரும் ஆன்ஸர் ஷீட்டை சப்மிட் பண்ணிட்டீங்க. பரீஷை முடிஞ்சுதுன்னு எல்லாரும் ஜாலியா ஏதாவது படத்துக்கு போங்க.. (நானெல்லாம் அப்படித்தான், செமிஸ்டர் முடிஞ்சதும் அடுத்த ரெண்டு நான் சினிமா கட்டாயம் உண்டு).. இன்னும் ரெண்டு வாரத்திலே எல்லா சப்மிஷனையும் கரெக்க்ஷண் பண்ணி நோட்டீஸ் போர்டிலே போடுவோம். அது வரை என்ஜாய் !
இந்த மாத போட்டியில் பங்குபெறும் படங்களின் அணிவகுப்பை இங்கே பார்க்கலாம்.

//படத்தை எங்கே & எப்போ & எந்த கேமேரா//
ReplyDeleteஆகா, சொல்லிடலாமே!
கேமரா மாடல் Sony-DSC-W80. படம் சரியாக ஒருவருடம் முன்னே [அப்போது டேட் சரியாக செட் செய்யவில்லை, ஹி] என் வீட்டு பால்கனியிலிருந்து எடுத்தது.
அந்திமழை பொழிந்து முடித்த வேளையில், வானம் ஆரஞ்சு வண்ணத்தில் குழைந்து நிற்க.. மசூதியும், பக்கத்தில் மறைந்தபடியே இருந்த சூரியனும் அற்புதமாய் தோன்றிய தருணத்தில் ‘க்ளிக்’கியது. உடனடியாகவே அடுத்த ஷாட் முயற்சித்த போது அதில் சூரியன் இல்லை. அதற்குள் உள்ளே போய் விட்டார்:(!
அப்புறம் ‘பிட்’டில் படித்த பாடத்தை வைத்தே GIMP மூலமாக வண்ணத்தை மெருகேற்றினேன்.
____________________________________
போட்டி அறிவிப்புப் பதிவில் நீங்கள் கேட்டிருந்தது. அங்கே பின்னூட்ட பெட்டியை மூடினாலும் விட மாட்டோம்ல:)!
//@ராமலக்ஷ்மி
ஏற்க்கனவே உங்க பேரிலே ஒரு படம் இருக்கே ! பின்னூட்டத்திலே சொல்லியிருக்கிறது ரெண்டாவது படமா?//
நான் கொடுத்தது நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அதே படம்தான். ஆல்பத்திலும் வேண்டுகோள் வைத்ததால் உங்களுக்கு முன்னே நந்து மாற்றியிருப்பார் என நினைக்கிறேன்.
//போட்டிக்கு ஒரு படம் தான் அனுமதிக்கப்படும் ++ ஒரு முறை படத்தை அனுப்பிடா அதை மாத்த முடியாது.//
ஹி.. போட்டி விதிமுறையெல்லாம் இப்போ எங்களுக்கு அத்துப்படியாகி விட்டதுங்க:)!
______________________________________
தமிழ்மணத்தில் இன்னும் நீங்கள் இந்தப் பதிவை இணைக்கவில்லை போலிருக்கிறதே? கவனியுங்கள்.
@ராமலெட்சுமி
ReplyDelete//கேமரா மாடல் Sony-DSC-W80. படம் சரியாக ஒருவருடம் முன்னே///
படிக்கர புள்ளன்னு பார்த்தாலே தெரியுதே!!
ஸ்கூலிலே முதல் பென்ச் சீட்டுக்கு சண்டை போடுவீங்களோ ??
GIMP வேலை நல்லா இருக்கு. படம் அருமை.
நீங்க பின்னூட்டத்திலே Dawn & Dusk (http://tamilamudam.blogspot.com/2009/09/dawn-and-dusk-silhouette-sep-pit.html) ன்னு படம் போட்டிருந்தீங்க. தென்னை மரமா - மசூதியான்னு கண்பூஷண்
//தமிழ்மணத்தில் இன்னும் நீங்கள் இந்தப் பதிவை இணைக்கவில்லை போலிருக்கிறதே? கவனியுங்கள்.//
நன்றி.. இனைத்தாகிவிட்டது.
நன்றி உங்களுக்கு... பரிச்சை நெருங்க நெருங்க பதட்டம் மட்டுமல்ல நாம் எடுப்பது நல்ல அமைய வேண்டும் என்பது ஒரு பக்கம் துடித்துக் கொண்டே இருந்தது உண்மை... தேர்வு முடிந்து விட்டது முடிவுக்காக காத்திருக்க்கிறோம்... ஆவலுடன்...
ReplyDeletesome brilliant shots this time! amazing!
ReplyDeleteHi PIT group,
ReplyDeleteI took my photo on 04-Sep-2009 at Santa Monica Beach at Los Angeles using my friend's small Canon Point & Shoot Camera since i did not take my camera to beach.
Sorry to type in english.
Thanks
Iravu Kavi