Monday, September 28, 2009

சின்னஞ்சிறு உலகம் ( MACRO ) - வழிமுறைகள் பகுதி 1

8 comments:
 
வணக்கம் மக்கா, நான் ஏற்கனவே சொல்லியபடி மேக்ரோ படங்களை நம்முடைய சாதாரன லென்ஸின் மூலம் கூட எடுக்கலாம். குறிப்பாக நம்முடைய லென்ஸின் "Minimum Focusing Distance" மாற்றி அமைக்க முடிந்தால், பொருட்களின் மிக அருகில் போகஸ் செய்து மேக்ரோ படங்கள் எடுக்க முடியும். சில வழி முறைகளை கீழே. 1.) Diopters(க்ளோஸ் அப் லென்ஸ்) இந்த முறை மிகவும் எளியது. உங்களுடைய லென்ஸின் பில்டர் அளவிற்கு(52mm, 58mm, 62mm, 68mm, 77mm etc) ஏற்ப ஒரு க்ளோஸ் அப் லென்ஸ் வாங்கி நம் லென்ஸின் முன்னால் பொருத்தி விட வேண்டும் அவ்வளவு தான். இப்படி செய்வதால் நம் லென்ஸின் "Minimum Focusing Distance" அருகில் மாறி அமைந்து விடும். ஆட்டோ போகஸ் கூட வேலை செய்யும். மேலும் மற்ற காமிரா உற்பத்தியாளர்களின் க்ளோஸ் அப் லென்சை கூட பயன் படுத்தலாம். எடுத்துக்காட்டாக நிகான் லென்சில் கானான் க்ளோஸ் அப் லென்சை பொருத்தலாம். 2). Extension Tubes (எக்ஸ்டன்சன் டுயுப்): இந்த முறையில் உங்கள் லென்ஸின் இறுதிக்கும், காமிராவில் லென்ஸ் மாட்டும் இடத்திற்கும் இடைவெளியை உண்டாக்க வேண்டும். எக்ஸ்டன்சன் டுயுப்களில் வெறும் ஓட்டை தான் இருக்கும், கண்ணாடி பகுதி எதுவும் இருக்காது. இவற்றின் மூலம் இடைவெளியை ஏற்படுத்தலாம். இடைவெளி அதிகரிக்க, அதிகரிக்க பொருட்களின் அளவு காமிரா சென்சாரில் பெரிதாக இருக்கும். இந்த முறையில் "Minimum Focusing Distance" மாற்றம் இருக்காது. இந்த எக்ஸ்டென்சன் டுயுப்கள் பல அளவில் கிடக்கும் (12mm, 20mm, 36mm etc). இவற்றை ஒன்றாக கூட சேர்த்து மாட்டலாம். எல்லா எக்ஸ்டென்சன் டுயுப்களிலும் ஆட்டோ போகஸ் வேலை செய்யாது. "Kenko" எக்ஸ்டென்சன் டுயுப்களில் ஆட்டோ போகஸ் வேலை செய்யும், மற்ற டுயுப்களை பார்க்கும் பொது விலையும் குறைவு. (எக்ஸ்டென்சன் டுயுப்களின் குறை என்னவென்றால், வெறும் லென்சை பயன் படுத்தும் பொது கிடைக்கும் ஒளி அளவை விட கம்மியாக இருக்கும், இதனால் ஷட்டர் வேகம் கொஞ்சம் குறையும்.) மற்ற வழி முறைகள் விரைவில்...

8 comments:

  1. நாதஸ் டயாப்டரும், ட்யூபும் வச்சிருக்கீங்களா? இருந்தா, ஒரே காட்சியை ரெண்டிலும் எடுத்து போட்டீங்கன்னா, பேஷா இரூக்கும் :)

    ReplyDelete
  2. 1:1 மேக்ரோவில் எக்ஸ்டென்சன் ட்யூப் யூஸ் பண்ணும்போது எந்த அளவு படத்தில் டீடெய்ல்ஸ் மாறாமல் வருகிறது?.

    பொதுவாக எக்ஸ்டென்ஷன் ட்யூப்புகள் செமி மேக்ரோ லென்சுக்குத்தான் செட்டாகுமா அல்லது 1:1 மேக்ரோ லென்சுக்கும் செட்டாகுதா?

    டெலிகன்வர்ட்டரில் 2Xஐ விட 1.4X ல் குவாலிட்டி வருவது போல எக்ஸ்டென்ஷன் ட்யூப்பில் எது நல்லா இருக்கும்?

    ReplyDelete
  3. /// பொதுவாக எக்ஸ்டென்ஷன் ட்யூப்புகள் செமி மேக்ரோ லென்சுக்குத்தான் செட்டாகுமா அல்லது 1:1 மேக்ரோ லென்சுக்கும் செட்டாகுதா? ///


    எனக்கு தோன்றிய சந்தேகத்தை நந்து கேட்டவிட்டார் பதிலை ஆவலுடன் எதிர்பாரத்து...

    ReplyDelete
  4. @Nandu: I think there won't be any picture quality loss when using Macro Extension Tube since the Extension tube doesn't have any optics unlike Tele-Converter.

    @Anyone: Correct me if I am wrong.

    ReplyDelete
  5. இருக்கு சர்வே :)
    அடுத்த பகுதியின் ஆரம்பத்தில் எடுத்து காட்டு படங்களை போட்டு விடுகிறேன்.

    ReplyDelete
  6. //1:1 மேக்ரோவில் எக்ஸ்டென்சன் ட்யூப் யூஸ் பண்ணும்போது எந்த அளவு படத்தில் டீடெய்ல்ஸ் மாறாமல் வருகிறது?. //
    எக்ஸ்டென்சன் டுய்பில் எந்த கண்ணாடியும் இல்லாததால் படத்தின் க்ளாரிட்டி கம்மி ஆகாது :)

    //பொதுவாக எக்ஸ்டென்ஷன் ட்யூப்புகள் செமி மேக்ரோ லென்சுக்குத்தான் செட்டாகுமா அல்லது 1:1 மேக்ரோ லென்சுக்கும் செட்டாகுதா?//
    எக்ஸ்டென்ஷன் ட்யூப்புகள் எல்லா வகையான லென்ஸ்களிலும் பயன் படுத்தலாம்.

    //டெலிகன்வர்ட்டரில் 2Xஐ விட 1.4X ல் குவாலிட்டி வருவது போல எக்ஸ்டென்ஷன் ட்யூப்பில் எது நல்லா இருக்கும்? //
    இடைவெளி அதிகம் ஆக ஆக வியு பைண்டர்ல காட்சி கொஞ்சம் இருட்டா தெரியும் (ஒளி கம்மியா சென்சார்ல பட்ரதால). மத்தபடி பிரச்சனை ஒன்னும் இல்லை.

    ReplyDelete
  7. சாதாரணமான மேக்ரோ வசதி இல்லாத டிஜிட்டல் கேமராவில் எடுக்க முடியுமா?

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff